WELCOME TO OUR HOME PAGE அப்பாக்குட்டி மருத்துவம் <>தற்போதைய செய்திகள்:........சூடாக ஒரு கப் டீ<><>கருசிதைவு சில அறிகுறிகள்<><>இயற்கை வயாகரா முருங்கை பற்றி உங்களுக்கு தெரிந்ததும்... தெரியாததும்.<><>கர்ப்பப் பை பலம் அடைய உழுத்தங்களி சாப்பிடுங்க..!<><>பெண்கள் பயன்படுத்தும் “நாப்கின்” ஆல் உடல் நலத்திற்கு கேடு! ஆய்வில் அதிர்ச்சி தகவல்! »<><>குளிர் நீரை விட சுடு நீர் தான் பெஸ்ட்! லேட்டஸ்ட் தகவல்!<><>அதுல கிரேட்டா இருக்கணுமா? சில உணவுகளை சாப்பிடாதீங்க!<><>தூக்கம் குறைந்தால் கேன்சர் தாக்கும் : டாக்டர்கள் எச்சரிக்கை<><>மன உளைச்சலா, மாரடைப்பா? தலைமுடியை ஆராய்ந்தால் உடல்கண்டிஷன்தெரியும்<><>ஆஸ்டியோபொரோசிஸ் எனும் அசுரப் பிரச்னை<><>பக்கவாதம் என்றும் பாhpசவாயு என்றும் கூறப்படும் கை, கால், முகம், வாய் போன்றவற்றின் செயலிழப்பு எல்லா வயதினரையும்...;குட்டீஸ்க்கு மூக்கில் ஒழுகுதா? வீட்டு மருந்து கொடுங்க!<><>பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துணவுகள்!<><>பட்டினி கிடந்தா உடல் மெலியாதா?<><>வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்<><>;ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு <><>இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்‏<><>தொண்டையில் கழலை இல்லை, தைரொயிட் நோயா ?<><>நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்<><>ஹாய் நலமா-2 மூட்டு வலிகளா?‏<><>முட்டையின் மகத்துவம் - ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு<><>தூக்கம் இல்லாத பிரச்சனைக்கு சிறந்த மருந்து சப்போட்டா பழம்! <><>17 குணங்கள் கொண்ட‌ வெற்றிலை<><>குழந்தை மருத்துவம்: 3 முதல் 8 வயது வரை..<><>உடற்பயிற்சியின்றி அதிகரிக்கும் மரணங்கள்.<><>அல்சரை குறைக்க மன அமைதி தேவை.<><>புற்றுநோய் என்ன செய்யும்?, மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? : 3டி அனிமேஷனின் பதில் <><>பசுவின் பால், குழந்தைகளுக்கு நல்லதல்ல - அதிர்ச்சி தகவல்<><>தூக்கம் இன்றி 15 கோடி இளைஞர்கள் தவிப்பு<><>முகப்பரு மறைய<><>தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க!<><>சிறுநீரகக்கல் இருக்கா? கவலையை விடுங்க...<><>ஏலக்காய்’ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா!! <><>ஹீமோகுளோபின் அதிகரிக்க வழிகள்<><>மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி!<><>தைராய்டு பற்றிய விழிப்புணர்வும் அவற்றுக்கான தீர்வும்!<><>வயாக்கிராவுக்கு பதில் மாதுளம்பழம்!<><> உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வெள்ளரிக்காய்<><>தைரியமாக சொல்லுங்க: ”தொட்டுக்க ஒரு டபுள் ஆம்லெட் போடுங்க.. மனையாளே!”<><>புற்று நோய் பற்றிய விழிப்புணர்வும் விரிவான தகவல்களும்!<><>விஷ ஜந்துக்கள் கடித்து விட்ட‌தா? என்ன முதலுதவி செய்யலாம்? தெரிந்து கொள்ளுங்கள்…<><>மாரடைப்பைத் தடுக்கும் ரத்தப் பரிசோதனை <><>பகலில் தூங்காதீங்க மன அழுத்தம் வரும் – ஆய்வில் தகவல் <><>சிறு தானியங்களின் மருத்துவக் குணங்கள்!<><>சீரகத்தின் குணங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.<><>மன அழுத்தத்தை போக்கும் வாழை இலை! <><>ரத்த சோகையை தடுக்கும் வழிகள்<><>தூங்காமல அவதிப் படுகிறீர்களா! <><>இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம்! ஆய்வு தகவல்!<><>குழந்தை பெற்ற பின்னும் உடல் சிக்கென்று இருக்க<><>மார்பகப் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு தரும் வைட்டமின் C! <><>கிராம்பின் மருத்துவ குணங்கள்! <><> இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது வேர்க்கடலை<><>அல்சர் இருக்கா கவனம் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்! <><>புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களா நீங்கள்? நிறுத்த 7 வழிகள்!<><>அதிகாலையில் தண்ணீர் பருகுங்கள் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும்.<><>நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!!<><>பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்குமாம்... உங்களுக்குத் தெரியுமா?<><>குழந்தை வேண்டுமா? மணல்தக்காளி சாப்பிடுங்கள்!<><>சில நோய்களுக்கான அறிகுறிகளும் தப்பிக்கும் வழிகளும்.. <><>நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செக்ஸ் : ஆய்வில் நிரூபணம்<><>செக்ஸ் வாழ்க்கையில ஈடுபட முடியலையே!<><>மாரடைப்பு <>

சனி, 8 செப்டம்பர், 2012

பெண்கள் பயன்படுத்தும் “நாப்கின்” ஆல் உடல் நலத்திற்கு கேடு! ஆய்வில் அதிர்ச்சி தகவல்!



“உடல் ஆரோக்கியத்தைக் காக்க வேண்டும் என்று நாம் விலை கொடுத்து வாங்கும் பொருட்களே, நமக்கு ஆரோக்கிய கேட்டினை ஏற்படுத்தும் காரணியாக இருந்தால்…? அதுதான் நடக்கிறது பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் “நாப்கின். விடயத்தில்’ அதிர்ச்சியான தகவல் சொல்கிறார் பேராசிரியர் முகமது ஷாபீர்.
“பயோடெக்னோலஜி’ துறையில் ஆய்வு செய்துவரும் இந்தியாவை சேர்ந்த ஷாபீர் அதன் ஒரு பகுதியாக “நாப்கின்‘ பற்றி தான் மேற்கொண்ட ஆய்வுச் செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்
.
“இன்று சந்தையில் கிடைக்கும் சில நாப்கின்களை ஆய்வு செய்தபோது பல உண்மைகள் புரிந்தது. இந்த நாப்கின்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பஞ்சு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மறுசுழற்சிக்கு அவர்கள் பயன்படுத்துவது பிளாஸ்டிக் வகைப் பொருட்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுவாக நான்கு லேயர்களைக் கொண்ட நாப்கினில் முதல் லேயர்… சுத்திகரிப்பு செய்யப்படாத பிளாஸ்டிக் பொருளாலானது. இரண்டாவது லேயர், மறுசுழற்சி செய்யப்பட்ட அச்சடிக்கப்பட்ட டிஷ்யூ பேப்பர், முன்றாவது லேயர் ஜெல் (பெட்ரோலியப் பொருளால் தயாரானது) கீழ் லேயர்… பொலிதீன். நாப்கினை உள்ளாடையுடன் ஒட்ட வைப்பது.

தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் பசை வகை. இரண்டாம் லேயரில் உள்ள அச்சடிக்கப்பட்ட டிஷ்யூ பேப்பரில் டையிங் இரசாயனம் இருப்பதுடன் ஹைப்போ குளோரைட் என்ற வேதிப்பொருளாலும் அந்த பேப்பர் பிளீச்சிங் செய்யப்படுகிறது. பெண்கள் இதைப் பயன்படுத்தும் போது நுண்ணிய துகள்களாகப் படிந்திருக்கும் இந்த இரசாயனங்கள், ஈரப்பதத்தின் காரணமாக டையாக்ஸேன் ஆக மாறுபாடடைகிறது. புற்று நோய்க்கான மூலக் காரணிகளில்… இந்த டையாக்ஸேனும் ஒன்று. தவிர இத்தனை இரசாயனங்களால் ஆன இந்த நாப்கின்களைப் பயன்படுத்துவதால் பிறப்பு உறுப்பில் அலர்ஜி, சிறுநீர் பாதையில் பிரச்சினை, வெள்ளைபடுதல், அதிகமான உதிரப்போக்கு, கர்ப்பவாய் புற்று நோய் என்று பல பிரச்சினைகள் வரிசை கட்ட நேரிடுகிறது.
நாப்கின் தயாரிப்புக்குப் பிறகு அவை பேக்கிங் செய்து அனுப்பப்படுவதிலும் போதுமான சுத்தம் இருப்பதில்லை என்பதும் கவலைக்குரிய விடயமே! அதிக விலை கொடுத்து வாங்கும் முன்னணி நிறுவன நாப்கின்களில் கூட தயாரிக்கப்படும் திகதிதான் இருக்குமே தவிர, காலாவதி நாள் என்பது குறிப்பிடப்படுவதில்லை. சில கம்பனி தயாரிப்புகளில் “தயாரிக்கப்பட்ட திகதியில் இருந்து மூன்று மாதங்களுக்குள் பயன்படுத்தினால் நல்லது’ என்று போட்டிருக்கிறார்கள்.
“இன்று பெண்களின் பூப்படையும் வயது 13 என்றாகிவிட்ட நிலையில், அதிலிருந்து மெனோபாஸ் ஏற்படும் 45 வயது வரை மாதத்தில் மூன்று நான்கு நாட்கள் என கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக அவர்கள் மாதவிடாய் சமயங்களில் நாப்கின் உபயோகிக்க நேரிடுகிறது. இரசாயனக் கலவைகளால் உருவான நாப்கினைத் தொடர்ந்து உபயோகிக்கும் போது, அதன் பக்கவிளைவுகள் தவிர்க்க முடியாததாகிறது’ என்று நிறுத்தினார்.
“இதற்குத் தீர்வுதான் என்ன?’ என்று அவரிடமே கேட்டபோது, “வாங்கும் காசுக்குத் தரமான நாப்கின்களைத் தயாரித்துக்கொடுக்கும்’ மனசாட்சி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இருக்க வேண்டும். இதோ… இந்த நாப்கின் ஹொங்காங்கில் தயாரிக்கப்பட்டது. இதில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படவில்லை. பிரின்ட் எதுவும் செய்யப்படாத துணிதான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஜெல் என்பது மக்காச்சோளத்தின் தண்டிலிருந்து எடுக்கப்பட்ட ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்ட ஜெல். மேலும் இந்த நாப்கினில் பயன்படுத்தப்பட்டுள்ள “அனியன்ஸ் சிப்’ கிருமி நாசம் செய்யும் தன்மை கொண்ட பொருள். மேலும் இதில் இருந்து வெளியாகும் இன்ஃப்ரா ரெட் கதிர்கள் இரத்த ஓட்டத்தைத் தூண்டுவதுடன் அதை சமன் செய்ய வல்லது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள டிஷ்யூ பேப்பரும் தீங்கு விளைவிக்காதது.
வெளிநாட்டு நாப்கின் என்பது பெண்களின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பொருள் என்று அக்கறைப்படுவதால் அதன் தரக்கட்டுப்பாட்டு சோதனையை வலுவாக்கி இருக்கிறார்கள். விளம்பரங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை அதன் தர மேம்பாட்டுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கொடுக்காத்து நம் பெண்களின் ஆரோக்கியத்தில் அவர்களும் அரசும் கொண்டுள்ள அலட்சியத்தைத்தான் காட்டுகிறது’ என்று சாடிய ஷாபீர், “மாதவிடாய்க் காலங்களில் தரமான நாப்கின்கள் உபயோகிக்க வேண்டும். அல்லது மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை கட்டாயம் நாப்கினை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இதுதான் பெண்களை பல பிரச்சினைகளில் இருந்தும் பாதுகாக்கும்’ என்று வலியுறுத்தினார்.
மகப்பேறு மருத்துவர் டாக்டர் சாதனாவிடம் இதுபற்றி கேட்டபோது, “ஷாபீர் சொல்கின்ற தகவல்கள் அத்தனையுமே சரி என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் சில உண்மைகள் இருக்கவே செய்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. நீங்கள் இதுபற்றி என்னிடம் போனில் கேட்டதுமே… பிரபல கம்பனிகள் தயாரிக்கின்ற சில நாப்கின்களை வாங்கிப் பார்த்தேன். அவற்றின் உள்ளே இருக்கின்ற பொருட்கள் பற்றியோ, எப்படி சுத்தமானதாக தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பது பற்றியோ எந்த விபரங்களும் அதில் இல்லை. அதேசமயம், எத்தனை மாதத்துக்குள் பயன்படுத்த வேண்டும் என்கிற தகவல் இடம்பெற்றிருக்கிறது.

முன்பெல்லாம் நாப்கின்களுக்கு பதில் துணியை பயன்படுத்தினார்கள். ஆனால், அதில் உள்ள சுத்தம் சந்தேகத்துக்குரியதே. அப்படி பார்க்கும் போது நாப்கின்கள் நான்கு மணி நேரத்துக்கு பிறகு தூக்கி எறிந்து விடப் போகிறோம் என்பதால் பிரச்சினை இல்லை. பொதுவாக இன்ஃபெக்ஷன் ஆவதற்கு இரண்டு நாட்கள் பிடிக்கும். அதுகூட, தொடர்ந்து ஒரே நாப்கினை பயன்படுத்தும்போதுதான் ஏற்படும். ஆனால், அப்படி யாரும் செய்வதில்லை. மற்றபடி எந்த முறையில் சுத்திகரிக்கிறார்கள் என்பது கேள்விக்குரியதுதான். நாப்கின்களைப் பொறுத்தவரை ஐ.எஸ்.ஐ.முத்திரை அவசியம் என்பதை நானும் வலியுறுத்துகிறேன்’ என்று அக்கறையோடு
சொன்னார் டாக்டர்.


.pagejaffna. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக