WELCOME TO OUR HOME PAGE அப்பாக்குட்டி மருத்துவம் <>தற்போதைய செய்திகள்:........சூடாக ஒரு கப் டீ<><>கருசிதைவு சில அறிகுறிகள்<><>இயற்கை வயாகரா முருங்கை பற்றி உங்களுக்கு தெரிந்ததும்... தெரியாததும்.<><>கர்ப்பப் பை பலம் அடைய உழுத்தங்களி சாப்பிடுங்க..!<><>பெண்கள் பயன்படுத்தும் “நாப்கின்” ஆல் உடல் நலத்திற்கு கேடு! ஆய்வில் அதிர்ச்சி தகவல்! »<><>குளிர் நீரை விட சுடு நீர் தான் பெஸ்ட்! லேட்டஸ்ட் தகவல்!<><>அதுல கிரேட்டா இருக்கணுமா? சில உணவுகளை சாப்பிடாதீங்க!<><>தூக்கம் குறைந்தால் கேன்சர் தாக்கும் : டாக்டர்கள் எச்சரிக்கை<><>மன உளைச்சலா, மாரடைப்பா? தலைமுடியை ஆராய்ந்தால் உடல்கண்டிஷன்தெரியும்<><>ஆஸ்டியோபொரோசிஸ் எனும் அசுரப் பிரச்னை<><>பக்கவாதம் என்றும் பாhpசவாயு என்றும் கூறப்படும் கை, கால், முகம், வாய் போன்றவற்றின் செயலிழப்பு எல்லா வயதினரையும்...;குட்டீஸ்க்கு மூக்கில் ஒழுகுதா? வீட்டு மருந்து கொடுங்க!<><>பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துணவுகள்!<><>பட்டினி கிடந்தா உடல் மெலியாதா?<><>வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்<><>;ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு <><>இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்‏<><>தொண்டையில் கழலை இல்லை, தைரொயிட் நோயா ?<><>நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்<><>ஹாய் நலமா-2 மூட்டு வலிகளா?‏<><>முட்டையின் மகத்துவம் - ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு<><>தூக்கம் இல்லாத பிரச்சனைக்கு சிறந்த மருந்து சப்போட்டா பழம்! <><>17 குணங்கள் கொண்ட‌ வெற்றிலை<><>குழந்தை மருத்துவம்: 3 முதல் 8 வயது வரை..<><>உடற்பயிற்சியின்றி அதிகரிக்கும் மரணங்கள்.<><>அல்சரை குறைக்க மன அமைதி தேவை.<><>புற்றுநோய் என்ன செய்யும்?, மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? : 3டி அனிமேஷனின் பதில் <><>பசுவின் பால், குழந்தைகளுக்கு நல்லதல்ல - அதிர்ச்சி தகவல்<><>தூக்கம் இன்றி 15 கோடி இளைஞர்கள் தவிப்பு<><>முகப்பரு மறைய<><>தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க!<><>சிறுநீரகக்கல் இருக்கா? கவலையை விடுங்க...<><>ஏலக்காய்’ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா!! <><>ஹீமோகுளோபின் அதிகரிக்க வழிகள்<><>மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி!<><>தைராய்டு பற்றிய விழிப்புணர்வும் அவற்றுக்கான தீர்வும்!<><>வயாக்கிராவுக்கு பதில் மாதுளம்பழம்!<><> உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வெள்ளரிக்காய்<><>தைரியமாக சொல்லுங்க: ”தொட்டுக்க ஒரு டபுள் ஆம்லெட் போடுங்க.. மனையாளே!”<><>புற்று நோய் பற்றிய விழிப்புணர்வும் விரிவான தகவல்களும்!<><>விஷ ஜந்துக்கள் கடித்து விட்ட‌தா? என்ன முதலுதவி செய்யலாம்? தெரிந்து கொள்ளுங்கள்…<><>மாரடைப்பைத் தடுக்கும் ரத்தப் பரிசோதனை <><>பகலில் தூங்காதீங்க மன அழுத்தம் வரும் – ஆய்வில் தகவல் <><>சிறு தானியங்களின் மருத்துவக் குணங்கள்!<><>சீரகத்தின் குணங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.<><>மன அழுத்தத்தை போக்கும் வாழை இலை! <><>ரத்த சோகையை தடுக்கும் வழிகள்<><>தூங்காமல அவதிப் படுகிறீர்களா! <><>இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம்! ஆய்வு தகவல்!<><>குழந்தை பெற்ற பின்னும் உடல் சிக்கென்று இருக்க<><>மார்பகப் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு தரும் வைட்டமின் C! <><>கிராம்பின் மருத்துவ குணங்கள்! <><> இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது வேர்க்கடலை<><>அல்சர் இருக்கா கவனம் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்! <><>புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களா நீங்கள்? நிறுத்த 7 வழிகள்!<><>அதிகாலையில் தண்ணீர் பருகுங்கள் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும்.<><>நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!!<><>பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்குமாம்... உங்களுக்குத் தெரியுமா?<><>குழந்தை வேண்டுமா? மணல்தக்காளி சாப்பிடுங்கள்!<><>சில நோய்களுக்கான அறிகுறிகளும் தப்பிக்கும் வழிகளும்.. <><>நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செக்ஸ் : ஆய்வில் நிரூபணம்<><>செக்ஸ் வாழ்க்கையில ஈடுபட முடியலையே!<><>மாரடைப்பு <>

ஞாயிறு, 17 ஜூன், 2012

நீரிழிவு நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவைகள்!நீரிழிவு நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவைகள்!

· மூச்சு இரைக்க நடக்கக்கூடாது.

· காலை, மாலை நடந்தால் மிகவும் நல்லது.

· நடக்கும்போது நடையில் மட்டும்தான் கவனம் இருக்க வேண்டும். மனம் அமைதியோடு இருக்க வேண்டும்.

· நடக்கும் பொழுது பாதம் முழுக்க ஒரே சீராக அழுத்தம் கொடுத்து நடக்க வேண்டும். நிதானமாக நடக்க வேண்டும்.

· தினசரி நடப்பது அவசியம்.

· நடக்கும்போது நடையைத் தடுக்காதவாறு தொளதொளப்பான ஆடைகளை அணிய வேண்டும்.

· கால்களில் மென்மையான அதிக இறுக்கம் இல்லாத காலணியை அணியவேண்டும்.

உடற்பயிற்சி : நடைப்பயிற்சி செய்ய இயலாதவர்கள் அதாவது உடல் பருமன், மூட்டுகளில் வலி உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்து நீரிழிவு நோயின் கடும் தாக்குதலில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு முன்பு டாக்டரை கலந்து ஆலோசித்து என்ன மாதிரியான உடற்பயிற்சி எவ்வளவு நேரம் செய்யலாம் என்பதை தீர்மானிக்க வேண்டும்.

உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு போன்ற எல்லாவற்றையும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் கடைப் பிடித்து இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க முயற்சிக்க வேண்டும். இந்த கட்டுப் பாடுகளுடன் இருந்தால் நீரிழிவு நோய் இருந்தாலும் வெகு நாட்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் சுகமாக வாழலாம். நிதானமான நடை உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.

சர்க்கரை நோயைப் போக்கும் துளசி இலைகள்-ஆய்வு


துளசி இலையில் உள்ள முக்கியமான சத்து ஒன்று சர்க்கரை நோயைக் குணப்படுத்துவதாக ஆந்திர மாநில குண்டூர் மாவட்டத்தில் உள்ள விக்னன் பல்கலை மாணவர்கள் குழு ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளனர்.
துளசி இலையில் உள்ள ‘ஆசிமம் சாங்டம்’ என்ற சத்து சர்க்கரை நோயைக் குணப்படுத்தவல்லது என்பதை ஆய்வு பூர்வமாக நிரூபித்துள்ளனர்.
சர்க்கரை நோயால் இந்தியாவில் சுமார் 4 கோடி பேர் பாதிப்படைந்துள்ளனர். சர்க்கரை நோய் அதன் உச்சத்தில் இருதயம், கண்கள், கிட்னி, நரம்புகள் மற்றும் பாதம் ஆகியவற்றில் மோசமான விளைவுகளை ஏற்பத்தக்கூடியது.
விக்னன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜி. முரளிகிருஷ்ணன் தலைமையிலான இந்த ஆய்வுக்குழுவினர் துளசி இலையின் சில அபூர்வ சக்திகளைக் கண்டு பிடித்துள்ளனர்.
துளசி இலை ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவைக் குறைக்கவல்லது என்று இந்த ஆய்வாளர்கள் ஆய்வு பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளனர்.
ஆய்வில் எலிகளைப் பயன்படுத்திய இந்த ஆய்வுக்குழு முதலில் ‘ஸ்ட்ரெப்டோசோசின்’ என்ற ரசாயனத்தைப் பயன்படுத்தி எலிகளுக்கு சர்ர்க்கரையின் அளவை அதிகரித்தனர். பிறகு துளசி இலையின் இவர்கள் கண்டுபிடித்த இந்த முக்கியமான மருந்தை நாளொன்றுக்கு ஒரு முறை 30 நாட்களுக்கு கொடுத்து வந்தனர்.
இந்த ஆய்வின் முடிவில் சர்க்கரையின் அளவு குறக்கப்பட்டதிருந்ததோடு, முக்கிய உடலுறுப்புகளான கிட்னிக்கள், மற்றும் லிவர் ஆகியவை இந்த துளசி மருந்தால் பாதுகாக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
துளசி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியப் புராணங்களில் பத்ம புராணம் துளசியின் பலன்கள் பற்றி நிறைய பேசியுள்ளது.
ஆயுர்வேத சிகிச்சையில் துளசி பல்வேறு நோய்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. துளசியில் உள்ள யூஜினால் என்ற எண்ணெய் சத்து அழற்சியிலிருந்து பாதுகாக்கிறது. மூச்சுக் குழல் தொடர்பான நோய்களுக்கு துளசி இலையின் பலன்கள் ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதில் உள்ள ‘அர்சாலிக்’ அமிலம் ஒவ்வாமை நோயைத் தீர்க்க பயன்படுகிறது.
அலர்ஜி, மற்றும் ஆஸ்த்மா, உடல் நோய் தடுப்புச் சக்திகளில் துளசி இலைகள் முக்கியப் பங்காற்றுவதும் ஏற்கனவே அறியப்பட்டவைதான்.வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்


வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள்.இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம்,பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது.விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.


35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து சிறுநீரக கல் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு


உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மனித குலத்துக்கு பல்வேறு நோய்களை பரிசாக தந்து கொண்டு இருக்கின்றன.


மனநிலை பாதிப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. 


முன்பு 40 வயதுக்கு மேல் ஏற்பட்ட சர்க்கரை நோய் இப்போது குழந்தை பருவத்திலேயே வந்த விடுகிறது.  மன அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில்,சென்னையில் சிறுநீரக கல் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. 


சிறுநீரக கல் பாதிப்பு பொதுவாக கோடை காலத்தில்தான் அதிகமாக ஏற்படுகிறது.சிறுநீரக கல் என்பது கால்சியம் மற்றும் யூரிக் அமிலத்தின் கூட்டு கலவை ஆகும். அறிகுறி இருக்காது இந்த கல் கிட்னியில் அதாவது சிறுநீரக பையில் இருக்கும் வரை,அது தோன்றி இருப்பதற்கான எவ்வித அறிகுறியும் தெரியாது. 


சிறுநீரக பாதையில் அது பயணிக்கும்போது தான் குழாயில் அடைப்பு ஏற்பட்டு கடுமையான வலி உண்டாகிறது.


சிலரால் அந்த வலியை தாங்க முடியாது. அப்போதுதான், சிறுநீரகத்தில் கல் உருவாகி இருப்பது தெரிய வரும். 


சிறுநீரக கல்லை அகற்ற இரண்டு விதமான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.


சிலருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும்.


சிலருக்கு மருந்து- மாத்திரை மூலம் குணப்படுத்திவிடலாம்.  


 சிறுநீரக கல் பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதில் புகழ்பெற்ற சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையின் டாக்டர் பாரி கூறியதாவது:- 

சென்னை நகரில் சிறுநீரக கல் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 2 மடங்காக உயர்ந்துள்ளது. நகரமயமாக்கப்பட்ட வாழ்க்கை முறைகள், நகரத்தில் அதிகரித்துள்ள வெப்பநிலை, அதிகப்படியான குளிர்ச்சி போன்றவைதான் இதற்கு காரணம்.


ஏர்-கண்டிஷன் செய்யப் பட்ட அலுவலகங்களில் நாள் முழுவதும் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு, அவர்கள் உணராமலேயே ஆண்டு முழுவதும் சிறுநீரகத்தில் கல் இருந்து வரும்.   


 ஏர்-கண்டிஷன் அறையில் இருப்பதால், இவர்களுக்கு தாகம் எடுப்பதில்லை. இதனால் உடலுக்கு தேவையான தண்ணீரை இவர்கள் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் உடலில் உப்புச் சத்து அதிகரிக்கிறது. இது சிறுநீரக கல் உருவாக வாய்ப்பாகி வருகிறது.


 எங்களிடம் வரும் நோயாளிகளில் அதிகமானோர் 25 முதல் 45 வயதினர் ஆவார்கள்.


அவர்களில் பெரும்பாலானோர் தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிபவர்கள்.இளம் வயதினர் அதிக உப்புச்சத்து கொண்ட உணவு வகைகளை விரும்பி சாப்பிடுகின்றனர்.


 துரித உணவுகளில் உப்பு, காரம் அதிகமாக காணப்படும்.  பால் சாப்பிட்டால் சிறுநீரகத்தில் கல் உருவாகும் என்று நம்புகின்றனர்.இதற்கு ஆதாரம் எதுவும் கிடையாது.உண்மையில் பால் அதிகம் குடித்து வந்தால், கிட்னியில் கல் உருவாவதை தவிர்க்க முடியும்.  இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நோய் உள்ளாவார்கள் இதெல்லாம் சாப்பிடலாம்


அனைத்து வகைப் பச்சை இலைக் காய்கறிகள், சாலட் வகைகள், கொத்தமல்லி, புதினா, கீரை வகைகள், முட்டைக்கோசு, வெள்ளரிக்காய், நீர்ச்சத்துள்ள காய்கறி புடலங்காய், சுரைக்காய், பாவற்காய், காளிஃப்ளவர், சௌ சௌ, நூல்கோல், முருங்கைக்காய், தக்காளி,

முள்ளங்கி, முளைகட்டிய தானிய வகைகள், வெங்காயம், வாழைப்பூ, வாழைத் தண்டு, மோர், ஆடை எடுக்கப்பட்ட பால், காய்கறி சூப். அளவுடன் சாப்பிடலாம்!

தானிய வகைகள், பருப்பு வகைகள்.

காய்கறிகளில் பச்சைப் பட்டாணி, பீட்ரூட், பீன்ஸ், வாழைக்காய், காரட், சுண்டைக்காய்.

பழவகைகளில் தர்பூசணி, திராட்சை, கொய்யா, ஆரஞ்சு, பப்பாளி, ஆப்பிள், எலுமிச்சை, ப்ளம்ஸ், வாழைப்பழம், சப்போட்டா, அன்னாசி மற்றும் உலர் பழ வகைகள்.

ஆடை எடுக்கப்பட்ட பால் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்பட்டவை. முட்டையின் வெள்ளைக்கரு, கோழி இறைச்சி, மீன், சுத்தமான சூப் வகைகள்.

பழங்களானால் ஒரு சில துண்டுகள் (ஒரு நாளில் 100 கிராம் அளவு) பால் ஒரு நாளைக்கு 1/2 லிட்டருக்கு மேற்படக்கூடாது. (மோர், தயிர் மற்றும் இதர பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களைச் சேர்த்து) தொடக்கூடாது!

சர்க்கரை, வெல்லம், தேன், இனிப்பு பிரெட், ஜாம், குளூக்கோஸ், கஸ்டர்ட் கலந்த இனிப்பு வகைகள், கேக் வகையறாக்கள்.

பால் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகள்.

கொழுப்புச் சேர்ந்த எண்ணெய், பாலாடைக் கட்டி, ஐஸ்க்ரீம் மற்றும் லட்டு, பர்ஃபி, பாயாசம் போன்ற வகைகள்.

கார்ன்ஃப்ளவர், ஆரோரூட் மாவு, ஜவ்வரிசி, வேரிலிருந்து விளையக்கூடிய கிழங்கு வகைகள்.

பருப்பு, எண்ணெய் வித்துக்கள், வியாபார ரீதியில் தயாரிக்கப்படும் பானங்களான ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா போன்றவை.

குறிப்பு: முழுமையான கோதுமை மாவு ஒரு நாளைய மெனுவில் இருக்கவேண்டும். ஒரு உணவிற்கும் மறுமுறை உட்கொள்ளும் உணவிற்கும் குறிப்பிட்ட இடைவெளி அவசியம் இருக்க வேண்டும்.

எந்த நோய் என்று சொல்லவே இல்லை என்று யோசிக்கிறீர்களா அதாங்கே வேறண்ணே நீரிழிவுதான் இன்னுமா புரியலை ? (Sugar).


கண் பார்வை பற்றி தெரிந்து கொள்வோம்
லக சுகாதார நிறுவனம், அக்டோபர் 13-ம் தேதியை உலக பார்வை தினமாக அறிவித்துள்ளது.
உலக பார்வை தினம் என்று அறிவிப்பதன் முக்கிய நோக்கம், பொதுமக்கள் மத்தியில் கண் நலம் பற்றிய விழிப்பு உணர்வை மேம்படுத்துவதேயாகும்.

இதனைக் கருத்திற்க்கொண்டு உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளின் கண் மருத்துவர்கள், மருத்துவ சமூகவியலாளர்கள் மற்றும் கண்ணியாலாளர்கள் கண் நலம் பற்றிய செய்திகளை பொதுமக்களுக்கு வழங்குகிறார்கள்.

உலக சுகாதார நிறுவனத்தின் 2010 வருட ஆய்வின்படி உலகம் முழுவதிலும் 285 மில்லியன் பேர் கண் பார்வைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 246 மில்லியன் பேர் 'லோ விஷன்' என்று சொல்லக்கூடிய மிகக்குறைந்த பார்வை என்னும் குறை பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
உலகில் பார்வையிழப்பு என்னும் சுமையை மிக அதிக அளவில் தாங்கிக் கொண்டிருக்கும் தேசம் நமது பாரத தேசம்.
உலக பார்வை தினத்தையொட்டி கண் நலம் பற்றிய சில முக்கியமான செய்திகளைத் தெரிந்து கொள்வோம்:

1. கண் புரை: 

இந்தியாவைப் பொறுத்தமட்டில் மிக அதிகமான பார்வையிழப்புக்குக் காரணம் கண் புரை.கண்புரை என்பது வயோதிகம் காரணமாக நமது கண்ணில் உள்ள லென்ஸின் ஊடுருவும் தன்மை குறைவதேயாகும். கண்புரை விபத்துகளினாலும், நீரிழிவு காரணமாகவும் மேலும் சில காரணங்களாலும் வரலாம். கண் புரை என்பது முற்றிலும் குணப்படுத்தகூடிய குறைபாடே.

மேலும் கண்புரையை ஒரு சிறிய அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும். அறுவை சிகிச்சை மட்டுமே கண் புரைக்கான தீர்வு. மேலும் கண் மருத்துவத் துறையில் தற்போது பயன்படுத்தப்படும் முன்னேறிய மிகச்சிறந்த தொழில் நுட்பம் கண் புரையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த வரப்பிரசாதமாக உள்ளது.

கண்புரை ஆபரேஷன்  செய்வதற்க்கு மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை. சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் ஏழை எளியவர்களுக்கு இலவசமாகவே சிகிச்சை அளிக்ப்படுகிறது. மாதம் ரூபாய் 8,500-க்கு குறைவான குடும்ப வருமானம் உள்ளவர்களுக்கு கட்டணச் சலுகைகளில் கேட்டராக்ட் ஆபரேஷன் செய்யப்படுகிறது.

2. க்ளகோமா எனப்படும் கண்நீர் அழுத்த நோய்: 

'க்ளாக்கோமா' என்பது கண்ணின் பார்வை நரம்பைப் பாதித்து, பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஆபத்து நிறைந்த கண் பிரச்னைகளின் தொகுப்பு. உலக அளவில், கண் பார்வை இழப்புக்கான காரணிகளில், 'க்ளாக்கோமா' இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

நம் கண்ணின் முன்பகுதியில் உள்ள அறையில் சுரக்கும் நீரின் அழுத்தம், சாதாரண நிலையிலிருந்து படிப்படியாக அதிகரிக்கும்போது ஏற்படும் பிரச்னை இது. கண்ணின் உள் நீர் அழுத்தமானது, பார்வை நரம்பினால் தாங்கக் கூடிய அளவை தாண்டும்போது, 'க்ளாக்கோமா’ ஏற்படுகிறது.  "ஆரம்பக்கட்ட நிலையிலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சையை வழங்கினால், குணம் பெறலாம். ஆனால், படிப்படியாகவே இதன் பாதிப்பு ஏற்படுவதால், தங்களுக்கு இந்நோய் இருக்கிறது என்பதே தெரியாதவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். அதனால் தான் மருத்துவர்கள் 'க்ளாக் கோமா'வை 'நமக்கே தெரியா மல் நம் கண்ணுக்குள் மறைந்திருந்து தாக்கும் கள்வன்' என்கிறார்கள். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மரபுக் காரணங்களால், ஏற்கெனவே 'க்ளாக்கோமா’ நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த சொந்தங்களுக்கும், சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் மற்றும் அதிக கிட்டப்பார்வை உள்ளவர்களுக்கும் 'க்ளாக்கோமா’ பாதிப்பு ஏற்படலாம்.

தலைவலி, கண்வலி, சிவந்த கண்கள், குமட்டல், பக்கவாட்டுப் பார்வை பாதிப்பு, படிப்படியான பார்வை இழப்பு போன்ற கண் பிரச்னைகள், 'க்ளாக்கோமா'வுக்கான அறிகுறிகள். பொதுவாக நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் முழுமையான கண் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
அடிக்கடி கண் பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள், கண்ணின் உட்பகுதிகளை முழுமை யாக அறியும் சில சிறப்புப் பரிசோதனையின் மூலம், 'க்ளாக்கோமா' பாதிப்பை அறியலாம். நோயின் படிநிலையைப் பொறுத்து சொட்டு மருந்தில் இருந்து அறுவை சிகிச்சை வரை இதற்கான சிகிச்சைகள் விரிகின்றன. எனவே, கண் மருத்துவருடன் இணைந்து செயலாற்றுவதன் மூலம் பார்வையை பாதுகாக்க முடியும்.

3. நீரிழிவு விழித்திரை நோய்:
 
பாரதம் நீரிழிவின் தலைநகரமாக உள்ளது. நீரிழிவின் தாக்கத்திற்குள்ளானவர்கள், வருடம் ஒரு முறை கண்டிப்பாக முழுமையான கண் பரிசோதனை செய்துகொள்வதன்மூலம் நீரிழிவு விழித்திரை நோயினால் பார்வையை இழப்பதைத் தடுக்க முடியும். மேலும் பெற்றோர்களுக்கு அல்லது பெற்றோர்களில் யாரேனும் ஒருவருக்கு நீரிழிவு  இருக்குமேயானால், அவர்களது சந்ததியினர் தமது முப்பது வயது முதல்,  வருடம் ஒரு முறையேனும், தமக்கு நீரிழிவு பிரச்னையிருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மருத்துவர்கள் ஆலோசனைப்படி வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் நீரிழிவு விழித்திரை நோய் உட்பட நீரிழிவு சார்ந்த உடல் நலப் பிரச்னைகளை தவிர்க்க வாய்ப்புள்ளது.

4. சுய மருத்துவம் :

கண்களில் அடிபட்டாலோ அல்லது ஏதாவது தொற்றுக் கிருமிகளால் கண்கள் சிவந்து போனாலோ,  மருந்துக்கடையில் "கண் சொட்டு மருந்து கொடுங்கள்" என்று ஏதாவது மருந்தினைப் போடுவது கண்களுக்கு ஆபத்து. குறிப்பாக மழைக்காலங்களில் பொதுவாக "ஹலோ" சொல்லும் "மெட்ராஸ் ஐ"க்கு இப்படி மருந்துக்கடையில் சொட்டு மருந்து கேட்டு வாங்கிப்போடுவதும் ஆபத்து.

5. உணவுப்பழக்கம் : 
சரியான உணவுப்பழக்கம் கண் நலத்துக்கு மிக மிக அவசியம். இது குழந்தைப் பருவத்திலிருந்தே கவனிக்க வேண்டிய குறிப்பு. பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மிஞ்சிய வேறேதுமில்லை. மற்ற உணவுகள் கொடுக்க ஆரம்பித்தவுடன் கவனிக்க வேண்டிய முக்கியமான குறிப்புகள்:
* ஜெராஃப்தால்மியா எனப்படும் குழந்தைகளின் கண்கள் உலர்ந்து போகச் செய்யும் பிரச்னைக்கும் மாலைக் கண் நோய்க்கும் முக்கியமான காரணம் வைட்டமின் ஏ சத்துக்குறைபாடுதான்.

வைட்டமின் ஏ - பால், கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள்,பப்பாளி, முட்டை மற்றும் கேரட் போன்றவற்றில் தேவையான அளவு இருக்கிறது.

* வைட்டமின் பி : பார்வை நரம்பின் செயல் பாட்டிற்க்கு காரணமாக இருப்பது வைட்டமின் பி.வைட்டமின் பி - அரிசி, கோதுமை, முளை கட்டிய தானியங்கள், பீன்ஸ் மற்றும் முட்டை போன்றவற்றில் தேவையான அளவு இருக்கிறது.

* வைட்டமின் சி - நமது கண்ணில் உள்ள ரத்தக்குழாய்களின் ஆரோக்கியத்திற்க்கு வைட்டமின் சி மிகவும் அவசியம்.வைட்டமின் சி ஆரஞ்சு, நெல்லி, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, கொய்யா, எலுமிச்சை மற்றும் தக்காளி போன்றவறில் தேவையான அளவு இருக்கிறது.

6. குழந்தைகளும் கண்ணாடியும்:

உங்கள் குழந்தை கண்ணாடி அணிய வேண்டிய நிலையிலிருந்தால் அவர்கள் கண்ணாடி அணிவதை ஊக்குவியுங்கள். அய்யோ நம் குழந்தை இந்த வயதிலேயே கண்ணாடி அணிய வேண்டியதாகிவிட்டாதே என்று  நீங்களே புலம்பாதீர்கள்.

குழதைகளுக்கும் காய்ச்சல் வரும், வயதானவர்களுக்கும் காய்ச்சல் வரும் என்பதை மறந்து விடாதீர்கள். கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக வருடம் ஒரு முறை கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். எனெனில் பார்வைத் திறன் மாறியிருக்கலாம். தவறான கண்ணாடியை அணிவதும் கண்களை பாதிக்கும்.

7. கண்களுக்கான முதல் உதவி ஏற்பாடுகள் :

அ) கண்களில் தூசி போன்ற ஏதேனும் விழுந்துவிட்டால், அவற்றை எடுப்பதற்க்காக கண்களைக்  கசக்காதீர்கள். கண்களை லேசாக திறந்து மூடினாலே கண்ணீர் பெருக்கெடுத்து அவற்றை தானே  வெளியேற்றிவிடும். உறுத்தல் அதிகமாக இருக்குமேயானால் சுத்தமான தண்ணீரினால் கண்களை சுத்தம் செய்வதன் மூலம் தூசுகளை அகற்றிவிடலாம்.

ஆ) கண்களில் ஏதேனும் ரசாயனப் பொருட்கள் அல்லது ஆசிட் தெறித்துவிட்டால், கண்ணில் சுத்தமான தண்ணீரினால் கண்களின் எரிச்சல் நிற்க்கும் வரை அலம்ப வேண்டும். பின் உடனடியாக கண் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.
இ) வெடி விபத்தினால் முகத்தில் காயம் ஏற்பட்டு கண்ணிலும் காயம் ஏற்பட்டுவிட்டால், முகத்தையும் கண்ணையும் தண்ணீர் விட்டு கழுவவே கூடாது. சுத்தமான துணியைக் கொண்டு முகத்தை லேசாக மூடி உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். மேலும் தீக்காயம் ஏதேனும் கண்ணில் பட்டுவிட்டால் மஞ்சள் தூள், பர்னால், பேனா மை, ஜெர்ஷியன் வைலட், பக்கத்துவீட்டார் சொல்லும் ஆயின்ட்மெண்ட் ஆகியாவற்றைப் போடக்கூடாது. இதனால் எந்த அளவுக்குக் காயம் ஏற்ப்பட்டுள்ளது என்பதை சரியாகத்ச் தெரிந்து கொள்ளமுடியாமல் போய்விடும், மேலும் அவற்றைச் சுத்தம் செய்வதிலும் சிரமம் ஏற்பபடும்.

ஈ) தொழிற்சாலை கண் விபத்துக்கள்: 


தொழிற்ச்சாலைகளில் பணியாற்றும் போது கண்களில் ஏதேனும் துரும்புகள் விழுந்துவிட்டால். அவற்றை நாமே எடுக்க முயற்சி செய்யக்கூடாது. கண் மற்றும் கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதிப்பு அதிகமாவதற்க்கு வாய்ப்பு உண்டு. ஈரமான துணி ஒன்றினை கண்ணை அழுத்தாதவாறு வைத்து மூடிக்கொண்டு உடனடியாக கண் மருத்துவரைச் சந்திக்க வேண்டும். அப்போது கண்ணில் விழுந்த பொருளின் மாதிரி இருந்தால் அதனையும் எடுத்டுச் செல்ல வேண்டும். கண்ணில் சுற்றுப்பகுதி மரத்துப்போவதற்கு மருந்து போட்டுவிட்டு கண்ணில் விழுந்த பொருளை மிகவும் இலாகவகமாக கண் மருத்துவர் எடுத்துவிடுவார்.

8. கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்: 

கணிணியில் ஒரு மணி நேரத்துக்கு மேல் பணியாற்றுபவர்கள் 20 - 20 - 20 ஃபார்முலா வினை  பயன்படுத்தினால் சில பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். அதாவது கணிணியில் தொடர்ந்து
பணியாற்றும்போது 20 நிமிடத்துக்கு ஒரு முறை 20 அடி தூரத்தில் உள்ள பொருட்களை 20 நொடிகள் பார்ப்பதும், அல்லது 20 நொடிகள் கண்களை மூடி ரிலாக்ஸ் செய்வதும், 20 நொடிகளுக்கு ஒருமுறை  கண்களை இமைப்பதும் மிக உதவியாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு அடிக்கடி தலைவலி, வாந்தி, குமட்டல் இருக்குமேயானல் உடனடியாக கண் மருத்துவரிடம் முழுமையான கண் பரிசோதனை செய்வதன்மூலம் பர்வையிழப்பைத் தடுத்துக் கொள்ளலாம்.

9. நீங்கள் அடிக்கடி பயணம் செய்பவராக இருந்தால் குறிப்பாக பகல் நேரங்களில் வாகனம் ஓட்டுபவராகவும் இருந்தால் புற ஊதாக்கதிர்களைத் தடுக்கக்கூடிய குளிர் கண்ணாடியை அணிந்து கொள்வது நல்லது. முக்கியமான விஷயம், ஒரு கண் மருத்துவரிடம் அல்லது கண்ணியலாளரிடம் கண் பரிசோதனை செய்து கொண்டபின் அவர் பரிந்துரைக்கும் புற ஊதாக்கதிர்களைத் தடுக்கக்கூடிய கண்ணாடியை அணிந்து கொள்வது நல்லது.

கண்தானம் செய்வீர்:

10. தானத்தில் சிறந்தது கண் தானம். கார்னியல் பார்வைக்கோளாரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்கள் தானமாகக் கிடைத்தால் மட்டுமே செய்யக்கூடிய கார்னியா மாற்று ஆபரேஷன் மூலமே மீண்டும் பார்வை கிடைக்க முடியும். அப்படிப்பட்டவர்களுக்கு பார்வை கிடைப்பதற்க்காக கண்கள் தானமாக தேவைப்படுகிறது.

நமக்கு தெரிந்தவர்கள் யாரேனும் மரணமடைந்துவிட்டால், மரணமடைந்தவரின் உறவினரைச் சந்தித்து,  மரணமடைந்தவரின் கண்களை தானமாக வழங்குமாறு ஊக்குவித்து ஆறு மணி நேரத்துக்குள் அவர்களது கண்களை தானமாக வழங்கினால் அது ஒரு புண்ணியமான காரியமாகும்.

.thanneerkunnam thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக