WELCOME TO OUR HOME PAGE அப்பாக்குட்டி மருத்துவம் <>தற்போதைய செய்திகள்:........சூடாக ஒரு கப் டீ<><>கருசிதைவு சில அறிகுறிகள்<><>இயற்கை வயாகரா முருங்கை பற்றி உங்களுக்கு தெரிந்ததும்... தெரியாததும்.<><>கர்ப்பப் பை பலம் அடைய உழுத்தங்களி சாப்பிடுங்க..!<><>பெண்கள் பயன்படுத்தும் “நாப்கின்” ஆல் உடல் நலத்திற்கு கேடு! ஆய்வில் அதிர்ச்சி தகவல்! »<><>குளிர் நீரை விட சுடு நீர் தான் பெஸ்ட்! லேட்டஸ்ட் தகவல்!<><>அதுல கிரேட்டா இருக்கணுமா? சில உணவுகளை சாப்பிடாதீங்க!<><>தூக்கம் குறைந்தால் கேன்சர் தாக்கும் : டாக்டர்கள் எச்சரிக்கை<><>மன உளைச்சலா, மாரடைப்பா? தலைமுடியை ஆராய்ந்தால் உடல்கண்டிஷன்தெரியும்<><>ஆஸ்டியோபொரோசிஸ் எனும் அசுரப் பிரச்னை<><>பக்கவாதம் என்றும் பாhpசவாயு என்றும் கூறப்படும் கை, கால், முகம், வாய் போன்றவற்றின் செயலிழப்பு எல்லா வயதினரையும்...;குட்டீஸ்க்கு மூக்கில் ஒழுகுதா? வீட்டு மருந்து கொடுங்க!<><>பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துணவுகள்!<><>பட்டினி கிடந்தா உடல் மெலியாதா?<><>வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்<><>;ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு <><>இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்‏<><>தொண்டையில் கழலை இல்லை, தைரொயிட் நோயா ?<><>நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்<><>ஹாய் நலமா-2 மூட்டு வலிகளா?‏<><>முட்டையின் மகத்துவம் - ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு<><>தூக்கம் இல்லாத பிரச்சனைக்கு சிறந்த மருந்து சப்போட்டா பழம்! <><>17 குணங்கள் கொண்ட‌ வெற்றிலை<><>குழந்தை மருத்துவம்: 3 முதல் 8 வயது வரை..<><>உடற்பயிற்சியின்றி அதிகரிக்கும் மரணங்கள்.<><>அல்சரை குறைக்க மன அமைதி தேவை.<><>புற்றுநோய் என்ன செய்யும்?, மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? : 3டி அனிமேஷனின் பதில் <><>பசுவின் பால், குழந்தைகளுக்கு நல்லதல்ல - அதிர்ச்சி தகவல்<><>தூக்கம் இன்றி 15 கோடி இளைஞர்கள் தவிப்பு<><>முகப்பரு மறைய<><>தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க!<><>சிறுநீரகக்கல் இருக்கா? கவலையை விடுங்க...<><>ஏலக்காய்’ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா!! <><>ஹீமோகுளோபின் அதிகரிக்க வழிகள்<><>மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி!<><>தைராய்டு பற்றிய விழிப்புணர்வும் அவற்றுக்கான தீர்வும்!<><>வயாக்கிராவுக்கு பதில் மாதுளம்பழம்!<><> உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வெள்ளரிக்காய்<><>தைரியமாக சொல்லுங்க: ”தொட்டுக்க ஒரு டபுள் ஆம்லெட் போடுங்க.. மனையாளே!”<><>புற்று நோய் பற்றிய விழிப்புணர்வும் விரிவான தகவல்களும்!<><>விஷ ஜந்துக்கள் கடித்து விட்ட‌தா? என்ன முதலுதவி செய்யலாம்? தெரிந்து கொள்ளுங்கள்…<><>மாரடைப்பைத் தடுக்கும் ரத்தப் பரிசோதனை <><>பகலில் தூங்காதீங்க மன அழுத்தம் வரும் – ஆய்வில் தகவல் <><>சிறு தானியங்களின் மருத்துவக் குணங்கள்!<><>சீரகத்தின் குணங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.<><>மன அழுத்தத்தை போக்கும் வாழை இலை! <><>ரத்த சோகையை தடுக்கும் வழிகள்<><>தூங்காமல அவதிப் படுகிறீர்களா! <><>இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம்! ஆய்வு தகவல்!<><>குழந்தை பெற்ற பின்னும் உடல் சிக்கென்று இருக்க<><>மார்பகப் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு தரும் வைட்டமின் C! <><>கிராம்பின் மருத்துவ குணங்கள்! <><> இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது வேர்க்கடலை<><>அல்சர் இருக்கா கவனம் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்! <><>புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களா நீங்கள்? நிறுத்த 7 வழிகள்!<><>அதிகாலையில் தண்ணீர் பருகுங்கள் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும்.<><>நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!!<><>பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்குமாம்... உங்களுக்குத் தெரியுமா?<><>குழந்தை வேண்டுமா? மணல்தக்காளி சாப்பிடுங்கள்!<><>சில நோய்களுக்கான அறிகுறிகளும் தப்பிக்கும் வழிகளும்.. <><>நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செக்ஸ் : ஆய்வில் நிரூபணம்<><>செக்ஸ் வாழ்க்கையில ஈடுபட முடியலையே!<><>மாரடைப்பு <>

புதன், 22 ஆகஸ்ட், 2012

உடல்நலத்தை பேணும் தயிர்!Wednesday  22  August  2012  
நாம் அன்றாடம் நம் இல்லத்தில் பயன்படும் உணவு பண்டங்களின் தயிரும் ஒன்று.
ஒரு ஊட்டச் சத்துமிகுந்த மற்றும் தனிப்பட்ட உடல்நலத்தை பேணும் ஆதாயங்கள் கொண்டவை.
ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.
தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.
குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

இதயத்தை பலப்படுத்தும் வெள்ளைக் காய்கறிகள்.


இதயத்தை பலப்படுத்தும் வெள்ளைக் காய்கறிகள்.

வெள்ளைக் காய்கறிகள்
வெள்ளை காய் மற்றும் பழ வகைகளில் தொடர்ந்து உண்பவர்கள் இதய நலத்துடன் இருப்பதாகவும், புற்றுநோயைத் தடுக்கும் எதிர்ப்பு சக்தி இவர்கள் உடலில் அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. வெங்காயத்திலிருந்து கிடைக்கும் அலிசின் என்ற வேதிப்பொருள் கொழுப்பையும், இரத்த அழுத்தத்தையும் குறைக்கும் சக்தி கொண்டது. காலிபிளவரில் உள்ள வெள்ளை அணுக்கள் புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது. பூண்டு, காளான்கள், இஞ்சி, வெள்ளை உருளை, முள்ளங்கி ஆகியவற்றிலும் புற்றுநோயைத் தடுக்கும் சக்தி இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

வலிப்பு நோய் – ஒரு விளக்கம்


வலிப்பு நோய் – ஒரு விளக்கம்

epilepsy_awareness
ஒவ்வொரு நோய்க்கும் அதற்குரிய மருந்துண்டு.மனிதனுக்கு ஏற்படும் துன்பங்களில் நோய் தவிர்க்க முடியாத ஒன்றாகும். எந்த ஒரு நோயும் அதற்குரிய நிவாரணி இன்றி இறக்கப்படுவதில்லை என இஸ்லாம் தீர்க்கமாகக் கூறுகிறது.
பல நோய்களின் தீவிரம் அதிகரிப்பதற்கு, அந்நோயைக் குறித்த போதிய அறிவின்றி தானாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளும் நடவடிக்கைகளும் காரணமாக அமைகின்றன. எந்த ஒரு நோயாக இருந்தாலும் அதனைக் குறித்த விவரங்கள் அறிந்திருப்பது கட்டாயமாகும்.
மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத நோய்களில் வலிப்பு நோயும் ஒன்றாகும். அதனைக் குறித்த விவரங்களை இங்குக் காண்போம்:
* வலிப்பு என்றால் என்ன?
வலிப்பு அல்லது ‘காக்கா வலிப்பு’ என அறியப்படும் நோய் மூளையைத் தாக்கும் ஒரு நோயாகும். மூளையிலிருந்து மைய நரம்பு மண்டலம் மூலம் உடலின் பல உறுப்புகளுக்கு நரம்புகள் வழியே வரும் கட்டளைத் தொகுப்புகளில் (நரம்புகளில்) சிறிது நேரம் தடங்கல் ஏற்படுவதையே வலிப்பு எனப் பொதுவழக்கில் அழைக்கிறார்கள்.
* வலிப்பு நோய்க்கான மூல காரணம் என்ன?
மைய நரம்பு மண்டலத்திற்கு இழைக்கப்படும் சேதங்களால்,
பிறப்பின்போது தலைப்பகுதியில் ஏற்படும் காயங்கள்/சிராய்ப்புகளால்,
சிலருக்குப் பிறப்பின்போதே இருக்கும் நரம்புமண்டலக் குறைப்பாட்டினால்,
விபத்தினால் தலையில் ஏற்படும் காயங்களினால்,
மூளையில் ஏற்படும் கட்டிகளால்,
ஆல்கஹால், போதை மருந்து உட்கொள்வதால் ஏற்படும் நரம்பு மண்டலம் சிதிலத்தால்,
மூளைக் காய்ச்சலால் வலிப்பு வர வாய்ப்புள்ளது.
* எத்தனை வகை வலிப்புகள் உள்ளன?

மேலோட்டமாக இவற்றை இருவகைப் படுத்தலாம். முதலாவது, பகுதி (Partial) வலிப்பு; இரண்டாவது பொது (General) வலிப்பு.
பகுதி வலிப்பில் மூளையின் ஒரு பகுதி மட்டும் பாதிக்கப்படும். அப்பகுதியினால் இயக்கப்படும் உறுப்புகள் வலிப்புக்கு உள்ளாகும். கை, கால், வாய் இவற்றைக் கட்டுப் படுத்தும் மூளையின் பகுதியில் வலிப்பு ஏற்பட்டால் அந்த உறுப்புகள் மட்டும் பாதிக்கப்படும்.
பொதுவலிப்பு மூளையின் பெரும்பான்மையான பகுதிகள் பாதிக்கப்படுவதால் உண்டாவதாகும். இதிலும் இருவகைகள் உள்ளன. ‘பெடிட்மால்’ (Petit Mal), ‘கிராண்ட்மால்’ (Grand Mal) என இவ்விரு வகைகளும் அழைக்கப்படுகின்றன.
பெடிட்மால் மிகச் சிறிய அளவில் தோன்றி மறையும் ஒரு வலிப்பாகும். சிலசமயம் இது கண்டுகொள்ளப்படாமலேயே வந்து போகலாம். இது ஒரு நொடியிலிருந்து பத்து முதல் இருபது நொடிகள் வரை நீடிக்கலாம். திடீரென விழிகள் செருகிக் கொள்ளுதல், காரணம் ஏதுமில்லாமல் ஓர் அறையினுள் அங்குமிங்கும் அலைதல் போன்றவை இந்நோயின் குறியீடுகளாம்.
கிராண்ட்மால் தாக்கியவர் முதலில் கண் முன் ஒரு பிரகாசமான காட்சி தோன்றுவது போல உணர்வார். கை கால்கள் உதறிக் கொள்ளும். பின், சுய நினைவின்றி மயங்கி விழுவார். மலம், சிறுநீர் போன்றவை அவரது கட்டுப்பாட்டில் இல்லாமல் பிரிய நேரலாம்.
* வலிப்பு நோய் தாக்கியவரைப் பார்க்கும்போது என்ன செய்ய வேண்டும்?
1. வலிப்பு கண்டவர் அருகில் கூரான பொருட்கள் ஏதுமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேசையின் கூரான முனைகள், சுவர் விளிம்புகள் இவற்றினருகில் அவர் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
2. அமைதியாக அவரை ஓரிடத்தில் அமர வைக்க முயலலாம்; ஆனால் கட்டாயப் படுத்துதல் கூடாது.
3. தரையில் விழ நேரிட்டால் அவரை ஒருக்களித்து இருக்குமாறு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், வலிப்பால் வெளிப்படும் உமிழ்நீர் எச்சில், மூச்சுக் குழலுக்குள் புகுந்து மூச்சுத் திணறலோ மரணமோ ஏற்படுவதைத் தடுக்கலாம்.
4. தலையில் அணைவாக மிருதுவான பொருட்களை வைக்க வேண்டும். இது, தலை வேகமாக தரையோடு முட்டிக் கொள்வதைத் தடுக்கும்.
5. வலிப்பு எவ்வளவு நேரம் நீடிக்கிறது எனச் சரியாகக் கணக்கிட வேண்டும். பொதுவாக 5 நிமிடங்களுக்குள் எல்லா வலிப்புகளும் அடங்கி விடும். அவ்வாறு அடங்காவிட்டாலோ, மீண்டும் மீண்டும் வலிப்பு வந்தாலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
* வலிப்பு இருப்பதாக அறியப்பட்டவர்கள் என்னென்ன செய்யக்கூடாது?
வலிப்பு நோய் இருப்பதாக அறியப்பட்டவர் சாதாரணமாகப் பிறரைப் போலவே வாழ்க்கை நடத்தலாம். இருப்பினும் வாகனங்கள் ஓட்டுதல், நீச்சல் அடித்தல், மரம் ஏறுதல், உயரமான இடங்களுக்குத் துணையின்றிச் செல்லல், கனரக வாகனங்கள், கேட்டர்பில்லர், போக்லைன் போன்ற மலை உடைக்கும் மண் அள்ளும் கருவிகளை இயக்குதல், போன்ற பணிகளில் ஈடுபடக்கூடாது.
“வலிப்பு வந்தவரின் கைகளில் இரும்பை அல்லது சாவிக் கொத்தைத் திணித்தால் வலிப்புப் போய் விடும்” என்று ஒரு நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது. இது தவறான நம்பிக்கையாகும். வலிப்பு வந்தவரின் கைகளில் இரும்பைக் கொடுப்பதால் ஒரு பலனும் இல்லை. அதனைக் கொண்டு அவர் தன்னைத் தாக்கிக் கொள்ள நேரிடலாம். அதனால் சாவிகொத்து, கம்பி, கத்தி போன்ற இரும்பாலான பொருட்களை வலிப்பு வந்தவரின் கையில் கொடுப்பது கூடாது.
வலிப்பும் மற்ற நோய்களைப் போன்ற ஒரு நோயே. சரியான சிகிச்சை அளிப்பதன் மூலம் அதனைக் குணப்படுத்தி விடவும் முடியும். எனவே இத்தகைய நோய் உள்ளவர்களைக் கண்டு அச்சம் கொள்ளவும் தேவையில்லை. மாறாக, முடிந்தவரையிலும் வலிப்பு நோயுள்ளவர்களைக் கண்காணிப்பதும் வலிப்பு ஏற்பட்டு விட்ட ஒருவருக்கு நம்மாலான தகுந்த உதவிகளைச் செய்வதும் மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவரது கடமையாகும்.


.iniyathu. thanks

புதன், 15 ஆகஸ்ட், 2012

ஒரு குழந்தைக்குத் தாய் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் தாய்ப்பால்
‘ம்ம்மா…’ எந்தக் குழந்தையும் இயல்பாகவே பேசும் வார்த்தை இது. ஒரு குழந்தைக்குத் தாய் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் தாய்ப்பால். அதனால்தான், கரு உண்டான நான்காவது மாதத்தில் இருந்தே தாயின் மார்பகத்தில் கொழுப்பு சேர்ந்து குழந்தைக்குத் தேவையான உணவு தயாராக ஆரம்பிக்கிறது. ”தாய்ப்பால் ஓர் தாயிடம் உள்ள அரிய செல்வம்” என்கிறார்கள் மகப்பேறு மருத்துவரான மோகனாம்பாள் மற்றும் தாய்ப்பால் ஆலோசகரான ஜெயஸ்ரீ. தொடர்ந்து தாய்ப்பாலின் மகத்துவங்களையும் பட்டியல் இடுகிறார்கள் இங்கே…
என்னவெல்லாம் இருக்கின்றன தாய்ப்பாலில்?

உடற் பயிற்சியின் அவசியம்


[ 02:08:17 14-08-2012 ]
உடற் பயிற்சியின் அவசியம்
ஒரு வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் ஆறு மணி நேரமாவது கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடை பயிற்சியோ அல்லது ஓட்டப் பயிற்சியோ அல்லதுவேறு பிற விளையாட்டோ இவை ஏதாவது ஒன்றின் மூலமாகவாவது கட்டாயம் உடற் பயிற்சியை செய்ய வேண்டும்.

குட்டீஸ்க்கு மூக்கில் ஒழுகுதா? வீட்டு மருந்து கொடுங்க!
[ 06:08:39 15-08-2012 ]
குட்டீஸ்க்கு மூக்கில்
மழைக்காலம் வந்தாலே சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, காய்ச்சல் தொந்தரவு ஏற்படும். திடீரென்று ஏற்படும் பருவநிலை மாற்றத்தினால் குழந்தைகள்தான் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மூக்கில் தண்ணீர் வடிவதால் முகமெல்லாம் சிவந்து எரிச்சலடைவார்கள். இந்த தொந்தரவுகளை நீக்குவதற்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே மருந்துகளை கொடுக்கலாம் என்கின்றனர் குழந்தைநல நிபுணர்கள்.

பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துணவுகள்!

[ 07:08:32 15-08-2012 ]
பெண்களுக்குத் தேவையான
ஆரோக்கியமான பெண்களால்தான் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கமுடியும். ஆனால் இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காத காரணத்தினால் நீரிழிவு, இதயநோய், ரத்தசோகை போன்றவைகளுக்கு ஆளாகின்றனர். சரிவிகித சத்துள்ள உணவுகளை கொண்டாலே பெரும்பாலான நோய்களை தவிர்த்து விடலாம். குடும்பத்தை பற்றிய சிந்தனையும், பணிச் சூழலும் பெண்களுக்கு தங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுகிறது. எனவே பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுகளை குடும்பத்தினர் வாங்கிக்கொடுக்கலாம். இந்த சுதந்திர நாளில் இருந்து ஊட்டச்சத்துள்ள உணவுகளை வாங்கி அவர்களுக்கு உண்ணக்கொடுங்களேன்.

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

கூந்தல் எப்போதும் ஆரோக்கியமா இருக்க‌? இதெல்லாம் சாப்பிடுங்க…எப்போது பார்த்தாலும், என்ன தான் கூந்தலை முறையாக பராமரித்தாலும், கூந்தல் உதிர்ந்து கொண்டே உள்ளதா? அதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற டயட்டில் இருப்பது, வைட்டமின் குறைபாடு. மேலும் அதிக மனஅழுத்தம், கவலைகள், டைபாய்டு, அனிமியா, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் தாக்குதல், சரியான இரத்த ஓட்டம் உடலில் இல்லாதது, மயிர்க்கால்கள் சுத்தமாக இல்லாதது போன்றவைகளும் சில காரணங்களாகும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாப்கார்ன்பாப்கார்னில் அதிகமான அளவு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஏனெனில் பாப்கார்ன் மக்காசோளத்தினால் செய்யப்படுகிறது.
அதனால் அதன் சத்துக்கள் போய் விடுகின்றன என்று நிறைய பேர் நினைக்கின்றனர். ஆனால் அது தான் தவறு, பாப்கார்னில் இனிப்பு அல்லது உப்பு என்று சுவைக்காக எதை சேர்த்தாலும், அதில் இருக்கும் சத்துக்கள் மாறாமல் இருக்கும்.

லிப் லாக் எப்படி இருக்கணும் தெரியுமா?உறவின் தொடக்கம் முத்தம். ஆரம்பம் சரியாக இருந்தால்தான் முடிவும் சரியாக இருக்கும். ஒரு சிலர் முத்தம் கொடுக்கத் தெரியாமல் சொதப்புவார்கள். முத்தத்தில் பலவகை உண்டு. அதில் ப்ரெஞ்ச் கிஸ் எனப்படும் உதட்டோடு உதடு பொருத்தி லிப் லாக் செய்வதுதான் முதன்மையானது.

பட்டினி கிடந்தா உடல் மெலியாதா?


பட்டினி கிடந்தா உடல் மெலியாதா?


August 14, 2012  05:53 pm
இன்றைய நாகரிக பெண்கள் தங்கள் உடல் எடையை குறைப்பதற்காக உணவை தவிர்த்து அல்லது குறைத்து உடலை மெலிய வைப்பது நாகரிகமாக இருந்து வருகிறது இதில் பல்வேறு ஊடகங்களுக்கும் பெரிய பங்கு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. இதனால் இன்றைய இளைய சமுதாயம் தங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு எத்தகு தீங்கிழைக்கிறோம் என்று அறியாமல் பின்பு உடல் ரீதியாக பல நோய்களுக்கு ஆளாகி விடுவது வருத்தமான விசயம். பொதுவாக அதிக உடல் எடை உடல் நலத்திற்கு கேடு என்பது உண்மை தான் என்றாலும் அதைக் குறைக்கின்றேன் என்று பட்டினி கிடந்து உடலை வருத்துவது மெத்த தவறு, இது மிகப் பெரிய சிக்கலில் தான் கொண்டு முடியும்.

சனி, 11 ஆகஸ்ட், 2012

கண் எவ்வாறு உங்களுக்குப் பார்க்க உதவுகிறது ?


கண் எவ்வாறு உங்களுக்குப் பார்க்க உதவுகிறது ?

கண் என்பது ஒரு புகைப்படக் கருவி போன்றதாகும். இது மூளையுடன் சேர்ந்து, உங்களைச் சுற்றியுள்ள பொருட்களைக் காண உதவுகிறது. கண்ணிலுள்ள வண்ணப் பகுதி விழித்திரைப் படலம் எப்படுகிறது.
அதன் நடுவில் கண்பர்வை எனப்படும் ஒரு வாயில் உள்ளது. இது விழித்திரைப் படலித்திற்குள் ஒரு கரிய வட்டமாகக் காணப்படும். ஒரு பொருளிலிருந்து வெளிவரும் ஒளிக் கற்றைகள் விழிவெண்படலத்தில், கண் பார்வையின் வழியே ஊடுருவிச் செல்கின்றன. கண்பார்வையின் அளவு வரும் ஒளியளவைக் கட்டுப் படுத்துகிறது. கண் பர்வையின் பின்புறம் ஒளிக்கற்றையை அனுப்பும் 'லென்ஸ்' உள்ளது. இப்படி செலுத்தப்படும் ஒளிக்கற்றைகள் விழித்திரையின் மீது விழும். விழித்திரையென்பது, புகைப்படக் கருவிக்குள் புகைப்படச் சுருள் இருப்பதைப் போல கண்ணின் பின் புறமுள்ள ஒரு மெல்லிய, உணர்ச்சிமிக்க திரையாகும்.

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

நச்சுக்கடி முறிவு மருத்துவம்

நச்சுக்கடி முறிவு மருத்துவம்

17:14:33Wednesday2012-06-27மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் மட்டுமே கீழ்க்கண்ட அவசர மருத்துவதத்தைப் பின்பற்றவும். பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம்

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு
மாற்றம் செய்த நேரம்:6/22/2012 2:18:50 PM
14:18:50Friday2012-06-22சர்க்கரைவள்ளி கிழங்கு உலகின் மிக சத்தான உணவுகள் ஒன்றாகும்.  சர்க்கரை வள்ளி கிழங்கில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் குறிப்பிடத்தக்கது.. ஆராய்ச்சி மூலம் சர்க்கரை வள்ளி கிழங்கில் ஆக்ஸிஜனேற்ற நிறமியாகிய பூநீலம் ஏராளமாக உள்ளது என்று நிருபிக்கப்பட்டுள்ளது. இது புற்றுநோயை தடுக்கும் குணம் கொண்டது..

புதன், 8 ஆகஸ்ட், 2012

ஆலிவ் எண்ணெய்


ஆலிவ் எண்ணெய் 
                                                    சருமத்திற்கு வெண்மையும்கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது.. இதன் இலை மேற்புறம்கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும்கனியின்நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும்கனிகள்உருண்டைநீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும்காய் பச்சை நிறத்திலும்கனிந்த பின்பழுப்புசிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும்இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம்.தவிர தாதுப் பொருள்களும்வைட்டமின் ‘’, வைட்டமின் ‘சி’, முதலான ஊட்டச்சத்துக்களும்அடங்கியுள்ளனஆலிவ் மரம் நன்கு வளர சூரிய ஒளியும்உலர் நிலமும்நல்ல கோடைவெயிலும்மிதமான குளிரும் தேவை. ‘திரவத்தங்கம்’ என்று இந்த எண்ணெய்மதிக்கப்படுகிறது.
மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆலிவ் எண்ணெய்
தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால்மார்பகப் புற்றுநோயைவராமல் தடுப்பதுடன்மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும்உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

தொண்டையில் கழலை இல்லை, தைரொயிட் நோயா ?


தைரொயிட் நோய்கள்

தொண்டையில் கழலை இல்லை, தைரொயிட் நோயா ?
"கை கால் உளைவு, களைப்பு, உடம்பு நோ, சோம்பல், தூக்கக் குணம், மலச்சிக்கல், உடம்பு பாரமாக இருக்கு, தசைப்பிடிப்பு ...." என்று சொல்லிக் கொண்டே போனாள்.

அந்தப் பெண்மணியின் நோய் அறிகுறிகள் தண்டவாளம் போல முடிவின்றி நீண்டு கொண்டே போயின. அவரை நோட்டமிட்டேன்.

வயது அய்ம்பது இருக்கும். 'வதனமே சந்திரபிம்பமோ' என்பது போல உருண்ட வட்ட முகம், கொழுத்த உடம்பு, வரண்ட தோல், சற்றுக் கரகரத்த குரல், அதிகம் கொட்டியதால் அடர்த்தி குறைந்த தலை முடி.


அவர் கூறிய அறிகுறிகளையும், நான் அவதானித்த குறிகளையும் இணைத்துப் பார்க்கும் போது இவருக்கு தைரொயிட் சுரப்பியின் செயற்பாடு குறைவாக இருக்கலாமோ எனத் தோன்றியது.
இவற்றுடன்
 • குளிர் சுவாத்தியத்தைத் தாங்க முடியாத தன்மை,
 • மறதி,
 • மனச் சோர்வு,
 • தசைப் பிடிப்பு போன்ற அறிகுறிகளும் சேர்ந்திருப்பதுண்டு.

நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்


நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்


அந்தச் செய்தி என்னை கவலைப்பட வைத்தது. அவளின் நீரிழிவு இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறதோ, பிரஸர் சிறுநீரகச் செயற்பாடு எல்லாம் எப்படி இருக்குமோ எனச் சந்தேகித்தேன்.


இத்தனைக்கும் அவள் ஒழுங்காக வேளை தவறாது மருந்துகளைச் சாப்பிடுகிறாள். அதுவும் மருத்துவனான அவளது கணவன் நீரிழிவுக்கு என எழுதிக் கொடுத்த அதே மருந்துகளைத்தான்.

 • ஆனால் அவர் இறந்து ஐந்து வருடங்களுக்கு மேலாகிறது. 
 • அதன் பிறகு அவள் மருத்துவர்களிடம் போகவும் இல்லை. 
 • பரிசோதனைகளைச் செய்யவும் இல்லை. 
 • மருந்துகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை. 
 • இது எவ்வளவு தவறானது என்பதை இற்றைவரை அவள் புரிந்திருக்கவில்லை.

நீரிழிவு என்பது கால ஓட்டத்துடன் தீவிரமாகும் ஒரு நோய். காலம் செல்லச் செல்ல நோய் அதிகரிக்கும். அத்துடன் நோய் கட்டுப்பாட்டில் இல்லையேல் பல்வேறுவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.


 • இருதயம், சிறுநீரகம், நரம்புகள், என ஒவ்வொறு உறுப்புகளிலும் பாதிப்புகள் ஏற்படும். 
 • இவை வெளிப்படையாகத் தெரியாமல் உள்ளுற தீவிரமாகும். அதேபோல உயர்இரத்த அழுத்த நோய் உள்ளவர்களிலும் பாதிப்புகள் ஏற்படவே செய்யும்.
 • இதில் முக்கியமான பாதிப்புகளில் ஒன்று சிறுநீரகத்தில் ஏற்படுவதாகும். 

ஹாய் நலமா-2 மூட்டு வலிகளா?‏


மூட்டு வலிகளா? பயிற்சிகள் உதவும்

'அம்மா நீங்கள் தினமும் கொஞ்சம் நடக்க வேண்டும், மூட்டுகளுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும்' என்றேன்.

'இந்தக் காலோடை எப்படி நடக்கிறது?'

அவளது கேள்வி நியாயம் போலத் தோன்றினாலும் சரியானது அல்ல.

அந்த அம்மா நடந்து வந்த முறையை அவதானித்திருந்தேன். நடக்க முடியாமல் அரங்கி அரங்கி நடந்து வந்திருந்தாள். முழங்கால் வலி, வீக்கம், கொழுத்த உடம்பு வாகை இவை யாவையும் நான் அறிந்ததே. அப்படி இருந்தபோதும் சற்று நடக்க வேண்டும் எனச் சொன்னேன்.

ஏனெனில் பயிற்சி என்பது மூட்டு நோய்கள் உள்ளவர்களுக்கும் மிக மிக அவசியமானதாகும். அது மூட்டுகளைப் பலமுடையதாக ஆக்கும், அவற்றின் மடங்கி நிமிரும் ஆற்றலையும் நெகிழ்வுத் தன்மையையும் அதிகரிக்கும். 

முட்டையின் மகத்துவம் - ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு
கர்ப்ப காலத்தில் முட்டை சாப்பிடுவது, சிசுவின் ஆரோக்கியத்துக்கு நல்லது. எதிர்காலத்தில் பல நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது என்று லேட்டஸ்ட் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கர்ப்பிணிகளின் டயட் தொடர்பாக அமெரிக்காவின் இதாகா நகரில் உள்ள கார்னெல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மேரி காடில் தலைமையில் சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

தூக்கம் இல்லாத பிரச்சனைக்கு சிறந்த மருந்து சப்போட்டா பழம்!

நமது சருமத்தை மிருதுவாக்கி, அழகுக்கு சப்போர்ட் கொடுப்பதில் சிறந்தது சப்போட்டா! அதிக ஈரப்பதத்தைத் தன்னுள் கொண்ட சப்போட்டா பழத்தின் அழகு மற்றும் ஆரோக்கிய பலன்களைப் பார்க்கலாம்..ஒல்லியாக இருப்பவர்களுக்கு புறங்கை மற்றும் முழங்கையில் நரம்பு புடைத்து கொண்டு, முண்டு முண்டாகத் தெரியும். இதற்கு தீர்வு தருகிறது சப்போட்டா.

17 குணங்கள் கொண்ட‌ வெற்றிலை1. இருமல்-சளி நீங்க
இருமல், சளி தொல்லை உள்ளவர்களுக்கு வெற்றிலை சிறந்த மரு ந்து. 2 வெற்றிலை, நடுநரம்பு நீக்கிய 5 ஆடாதொடா இலையுடன் 10 மிளகு, ஒரு பிடி துளசி இலைகளை சேர்த்து ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ள வேண்டு ம். அதனுடன் 300 மில்லி நீர்விட்டு மூடிய பாத்திரத் தில் நன்றாக கொதிக்க வைத்து 75 மில்லி ஆனவுட ன் வடிகட்டி குடிக்க வேண்டும். இதேபோல் தினமும் 2 அல்லது 3 வேளை சளி, இருமல் இருக்கும்வரை குடிக்கலாம். இப்படி செய்தால் உடனடி நிவார ணம் கிடைக்கும்.

முதன்முறையாக கர்பம் தரிக்கும் பெண்ணுக்கு ஏற்படும் உடல் ரீதியான மாற்ற‍ங்கள்முதல் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டு, ஒரு மாதம் ஆகிறது. ‘அக்கறை காட்டுகிறோம். ஆலோசனை சொல் கி றோம்’ என்ற பெயரில் உறவிலும், நட்பிலும் ஆளாளுக்குக் குழப்புகி றார்கள். உண்மையில் கர்ப்பம் தரித் தலுக்கும் பிரசவத்துக்கும் இடையே கர்ப்ப வதிகள் புதிதாக சந்திக்கும் உடற் சலனங்கள் என்னென்ன? அவ ற்றை எதிர் கொள்வது எப்படி என்று விளக்குங்கள் டாக்டர்…”
டாக்டர் வீணா, மகப்பேறு மற்றும் மகளிர் நலமருத்துவர், திருச்சி:
”கடைசி மாதவிடாய் துவங்கி, பிரசவமாகி குழந்தைக்கு பால் புகட் டும் காலம் வரை தாய் மற்றும் சேய் நலத்துக்காக கர்ப்பிணியின் உடலில் பல மாற்றங்கள்

குழந்தை மருத்துவம்: 3 முதல் 8 வயது வரை..


குழந்தை மருத்துவம்: 3 முதல் 8 வயது வரை..

கருவில் வளரும் குழந்தை சீராக வளர தாயின் உணவு மு றை சீராக இருக்கவேண்டும். அது போல் மனமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். 
மேலும் குழந்தை பிறந்து அதற்கு தாய்ப்பால் கொடுக்கும் வரை தா யின் உணவு முறையைப் பொறு த்தே குழந்தையின் ஆரோக்கியம் இருக்கும்.  ஆனால் குழந்தை வள ர்ந்து 3 வயது க்கு மேல் தான் உட ல் வளர்ச்சியும், மன வளர்ச்சி யும் அதிகரிக்க ஆரம்பிக்கும்.  எலும்புகள் வலுவடைய ஏற்ற தருணமு ம் இதுதான்.

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

உடற்பயிற்சியின்றி அதிகரிக்கும் மரணங்கள்.


புகை பிடித்தல், உடல் பருமன் போன்றவை காரணமாக ஏற்படும் மரணங்களுக்க்கு சமாந்திரமாக, உடற்பயிற்சிக் குறைவும் உலகெங்கும் மக்களைக் கொல்கிறது என்று புதிய மருத்துவ ஆராய்ச்சியொன்று கண்டறிந்திருக்கிறது.

மருத்துவ சஞ்சிகையான "தெ லான்செட்"டில் வெளியான இந்த ஆய்வு, மக்கள் வாரத்திற்குக் குறைந்தது இரண்டரை மணி நேரமாவது, நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, தோட்டவேலை செய்வது போன்ற மிதமான உடற்பயிற்சிகளை செய்தால், 50 லட்சத்துக்கும் மேலானோர் இறப்பதைத் தவிர்க்கலாம் என்று கூறுகிறது.

இதய நோய், சர்க்கரை வியாதி, சில ரக கான்சர் வியாதிகள் ஏற்படுவது ஆறிலிருந்து பத்து சதவீதமாகக் குறையும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

இந்த உடற்பயிற்சியின்மை என்ற பிரச்சினை, குறிப்பாக பிரிட்டனில் மிகவும் மோசமாகக் காணப்படுவதாகக் கூறும் இந்த ஆராய்ச்சியாளர்கள், பிரிட்டனில், மூன்றில் இரண்டு வயது வந்தோர், பரிந்துரைக்கப்பட்ட உடற்பயிற்சியை செய்யத் தவறுகிறார்கள் என்று கூறுகின்றனர்.
panncom thanks

அல்சரை குறைக்க மன அமைதி தேவை.வாய்க்கு ருசியாக காரமாகவோ, புளிப்பாகவோ எதையும் சாப்பிட முடியாத நிலை, கொஞ்சம் சாப்பிட்டால் கூட புளித்த ஏப்பம் என இன்றைக்கு பெரும்பான்மையோரை வாட்டி எடுக்கிறது அல்சர்.

சாப்பிட வேண்டிய நேரத்தில் சரியாக சாப்பிடாமல் விடுவதும், பாஸ்ட் புட், எண்ணெய் அதிகம் சேர்த்த உணவுகள்,காபி, டீ போன்றவற்றை உள்ளே தள்ளுவதும் அல்சர் ஏற்பட காரணமாகின்றன. அதேபோல் அதிக டென்சன், மன அழுத்தம் போன்றவையும் அல்சர் ஏற்பட காரணமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நம் வயிற்றுக்குள் குடலை பாதுகாக்கும் திரை போன்ற அதைப்பு பாதிக்கப்படுவதாலோ, அதில் புண்கள் உருவானாலோ வலியும், எரிச்சலும் ஏற்படுகிறது இதுவே அல்சர் எனப்படுகிறது. இந்த புண்களினால் சிறிது உணவு உட்கொண்டாலும் அது தொண்டைக்குழியிலேயே நிற்பது போல உணர்வு ஏற்படும். நெஞ்சு எரிச்சலும், புளித்த ஏப்பமும் அடிக்கடி வந்து தொந்தரவை ஏற்படுத்தும்.

புற்றுநோய் என்ன செய்யும்?, மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? : 3டி அனிமேஷனின் பதில்
மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது?, புற்றுநோயின் ஆபத்துக்கள் என்ன? இன்னமும் உடற்கல்வி, சுகாதாராம் சம்பந்தமான பல நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு 3டி உருவமைப்புமூலம் இலகுவாகவும், தெளிவாகவும் பதில் தருகிறது Biodigitalsystems எனும் யூடியூப் சேனல்.

மாரடைப்பு என்றால் என்ன?

புற்றுநோய் என்றால் என்ன?

உடல் நோய்கள் பற்றிய விழிப்புணர்வு பெற்றுக்கொள்வதற்கு இவை உங்களுக்கு பயனுடையதாக இருக்கலாம்.

இத்தகவல் பெறப்பட்ட கூகுள் பிளஸ் பக்கம் :

https://plus.google.com/u/0/113063416882359851238


4tamilmedia. thanks

பசுவின் பால், குழந்தைகளுக்கு நல்லதல்ல - அதிர்ச்சி தகவல்

பசுவின் பால், குழந்தைகளுக்கு நல்லதல்ல - அதிர்ச்சி தகவல்,Cow’s Milk Bad For Kids? தாய்ப்பால்தான் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தையும் ஒரு சேரக்கொண்டது என்று காலம் காலமாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் தாய்ப்பாலுக்கு மாற்றாக பல தாய்மார்கள், பல்வேறு காரணங்களால் பசுவின்பால் தருவதில் ஆர்வம் காட்டுவதைப் பார்க்க முடிகிறது.

ஆனால் இந்தப் பசுவின் பாலில் அதிகளவு புரதச்சத்து உள்ளது. இந்தப் புரதச்சத்து, குழந்தைகளின் சிறுநீரகம் உரிய வளர்ச்சியைப் பெறாத நிலையில் இருக்கும் என்பதால் அவற்றில் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

தேசிய குடும்ப நல சர்வேயில் இது தெரிய வந்துள்ளது.

இது குறித்து வல்லுனர்களின் ஆய்வுத்தகவல்களை மேற்கோள்காட்டி, கொல்கத்தாவில் உள்ள அகில இந்திய சுகாதாரம், பொது நல இன்ஸ்டிடியூட்டின் உயிரி ரசாயனம், ஊட்டச்சத்து துறை தலைவராக பணியாற்றிவரும் தேவநாத் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர், "உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில், தாய்மார்கள் இதுகுறித்து குடும்ப மருத்துவரைக் கலந்து ஆலோசித்து மாற்று வழி காணவேண்டுமே தவிர பசுவின்பாலைத் தரக்கூடாது. குழந்தையின் வேகமான வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் பசுவின் பாலில் இல்லை'' என்றார்.

tamilkurinji thanks

தூக்கம் இன்றி 15 கோடி இளைஞர்கள் தவிப்புதூக்கம் இன்றி 15 கோடி இளைஞர்கள் தவிப்பு,sleepless nights மனிதனின் உடல் நலத்துக்கு முறையான தூக்கம் இன்றியமையாதது ஆகும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 6 மணி நேரமாவது தூங்க வேண்டும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த வார்விக் மருத்துவ பல்கலைக்கழகம் உலக அளவில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். இந்தியா, வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா, கானா, தான்சானியா, வியட்னாம், கென்யா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் சுமார் 50 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் சுமார் 15 கோடி இளைஞர்கள் தூக்கம் இன்மையால் வாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு சோர்வு, மனக்கவலை போன்றவையே காரணம் என்றும், உடல்நலத்தை பாதுகாக்க வேண்டுமானால் தூங்கும் நேரத்தை குறைக்க கூடாது என்றும் அறிவுரை கூறுகிறார்கள்.

.tamilkurinji thanks

சனி, 4 ஆகஸ்ட், 2012

முகப்பரு மறைய August  2012  

முகப்பரு இக்கால தலைமுறையினருக்கு மிகுந்த மன உளைச்சலை உண்டாக்குகிறது. உணவு முறை மாறுபாட்டாலும், உடலின் வளர்ச்சிதை மாற்றத்தாலும் முகப்பரு உண்டாகிறது. முகப்பரு தொல்லையால் அவதிப்படுபவர்கள்
வெந்தயக் கீரை – 1 கைப்பிடி
துளசி இலை – சிறிதளவு
கொத்துமல்லி இலை – சிறிதளவு
எடுத்து நீர்விட்டு அரைத்து முகத்தில் உள்ள பருக்கள் மீது தடவினால் முகப்பரு மாறும். கொழுப்பு சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது. வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் நன்கு கொதிக்க வைத்து ஆறிய பிறகு அந்த நீரில் முகத்தைக் கழுவி வந்தால் பருக்கள் குறையும்.
வெள்ளரி – 2 துண்டு
தக்காளி – 2 துண்டு
கேரட் – 2 துண்டு
எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடங்கள் ஊறியபின் கழுவினால் பருக்கள் மறையும். ஆண்கள் இதனை உபயோகிக்கக் கூடாது.
ka.


.thedipaar thanks

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க!


[ 08:08:04 03-08-2012 ]
தூங்கும் போது பழம், சாக்லேட்
இரவில் நிம்மதியான உறக்கம் வேண்டும் என்பவர்கள் சில உணவுகளை தவிர்க்கவேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கண்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உறக்கம் தொலைந்துவிடும். ஜீரணமாகாத உணவு நெஞ்செரிச்சல்,வயிற்றுப் பொருமல் போன்றவற்றையும் ஏற்படுத்தி இரவு முழுவதும் தூங்கவிடாமல் செய்துவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.

சிறுநீரகக்கல் இருக்கா? கவலையை விடுங்க...


[ 08:08:09 03-08-2012 ]
சிறுநீரகக்கல் இருக்கா?
இன்றைய காலத்தில் சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதிலும் அந்த சிறுநீரகக் கல் ஏற்பட்டால் ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்ய வேண்டும். அதிலும் கற்களின் அளவு 5 மிமி குறைவாக இருந்தால் அதனை கண்டிப்பாக வீட்டில் இருக்கும் ஒரு சில உணவுகளின் மூலமே சரிசெய்துவிடலாம். இல்லையென்றால்

‘ஏலக்காய்’ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா!!சமையலில் வாசனைக்காக அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தும் ஒரு பொருள் தான் ஏலக்காய். அதிலும் இந்த ஏலக்காய் இந்திய உணவுகளிலேயே அதிகமாக பயன்படுத்தப்படும். சொல்லப்போனால், அந்த பொருள் பயன்படுத்தாத உணவுகளே இல்லை என்றே கூறலாம்.

ஹீமோகுளோபின் அதிகரிக்க வழிகள்tiradsa
உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

புதன், 1 ஆகஸ்ட், 2012

மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி!


துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான்.அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம். எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம்.

தைராய்டு பற்றிய விழிப்புணர்வும் அவற்றுக்கான தீர்வும்!


தைராய்டு பெண்களின் தலையாய பிரச்னையாக மாறிவருகிறது. ஆனால், ஆண்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தைராய்டு நமது கழுத்துப் பகுதியில் பட்டர்பிளை வடிவத்தில் உள்ள ஒரு நாளமில்லா சுரப்பி. இது சுரக்கும் ஹார்மோன் அளவு அதிகரிப்பது, குறைவது இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். இப்பிரச்னை உள்ளவர்கள் மருந்து சாப்பிடுவதன் மூலம் ஹார்மோனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதே போல் உண விலும் கட்டுப்பாட்டைக் கடைபி டிக்க வேண்டும். மாதவிலக்கு காலம் மற்றும் கர்ப்பகாலத்தில் தைராய்டு பிரச்னை உள்ள பெண்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். தைராய்டின் அளவு அதிகரித்தால் மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு மற்றும் பிரசவ காலப் பிரச்னைகளை உருவாக்கும்.
தைராய்டு குறைவாக இருக்கும் போது வறண்ட தோல், உடல் எடை அதிகரித்தல், மலச்சிக்கல், சாதாரண நாட்களிலும் குளிர்வ தைப் போல உணர்வது, முறையற்ற மாதவிலக்கு, குரல் மாறுதல் உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும். தைராய்டு அளவு அதிகரிக்கும் போது தொண்டைப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு எச்சில் விழுங்குவதில் சிரமம் ஏற்படும். பிரச்னை சிறிதாக இருக்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது முக்கியம். இதன் மூலம் தைராய்டு அளவு அதிகரிப்பதையோ, குறை வதையோ தடுக்கலாம்.

ஆரஞ்சு ஜுஸின் மகத்துவம்! இளமையின் இரகசியம்!


ஆரஞ்சு ஜுஸின் மகத்துவம்! இளமையின் இரகசியம்!பழங்களில் மிகச் சிறந்தது ஆரஞ்சு என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள். ஏனென்றால் ஆரஞ்சு பழத்தில் மருத்துவ குணங்கள் அதிகம் இருக்கின்றதாம். உடலில் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் ஆரஞ்சு பழத்தையோ அல்லது ஆரஞ்சு சாறோ குடிக்கலாம். இதனால் உடலில் ஏற்பட்ட பிரச்சினை உடனே குறையும். உடலில் ஏற்படும் உஷ்ணம், வயிற்று வலி அல்லது வயிறு தொடர்பான பிரச்சினைகளை உடனே சீராக்கும் ஆற்றல் உடையது ஆரஞ்சு.
ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் இளமை தோற்றம் உருவாகும். இதில் ஏ, பி, சி ஆகிய வைட்டமின்களும், ஏழு வகையான தாதுக்களும் உள்ளதால் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் அவசியம் சாப்பிட வேண்டும்.
அதுமட்டுமின்றி ஆரஞ்சு பழத்தை குறுக்கே இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழுவினால் முகம் பளபளப்பாகும். தினமும் ஆரஞ்சு சாப்பிட்டு வந்தால் பசி ஏற்படும். மலச்சிக்கலை நீக்கும். நன்கு ஜீரணமாகும். கழிவுகள் வெளியேறி குடல் சுத்தமாகும்.
மேலும் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் முதலியவை குணமாகும். நெஞ்சுவலி, இதய நோய், எலும்பு மெலிவு ஆகியவற்றை குணமாக்கும் ஆற்றல் உடையது ஆரஞ்சு.