மனிதனின் உடல் நலத்துக்கு முறையான தூக்கம் இன்றியமையாதது ஆகும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 6 மணி நேரமாவது தூங்க வேண்டும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த வார்விக் மருத்துவ பல்கலைக்கழகம் உலக அளவில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். இந்தியா, வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா, கானா, தான்சானியா, வியட்னாம், கென்யா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் சுமார் 50 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் சுமார் 15 கோடி இளைஞர்கள் தூக்கம் இன்மையால் வாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு சோர்வு, மனக்கவலை போன்றவையே காரணம் என்றும், உடல்நலத்தை பாதுகாக்க வேண்டுமானால் தூங்கும் நேரத்தை குறைக்க கூடாது என்றும் அறிவுரை கூறுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக