August 14,
2012 05:53 pm
இன்றைய நாகரிக பெண்கள் தங்கள் உடல் எடையை குறைப்பதற்காக
உணவை தவிர்த்து அல்லது குறைத்து உடலை மெலிய வைப்பது நாகரிகமாக இருந்து வருகிறது இதில் பல்வேறு
ஊடகங்களுக்கும் பெரிய பங்கு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. இதனால் இன்றைய இளைய
சமுதாயம் தங்கள்
உடல் ஆரோக்கியத்திற்கு எத்தகு தீங்கிழைக்கிறோம் என்று அறியாமல் பின்பு உடல் ரீதியாக பல
நோய்களுக்கு ஆளாகி விடுவது வருத்தமான விசயம். பொதுவாக அதிக உடல் எடை உடல் நலத்திற்கு கேடு என்பது
உண்மை தான் என்றாலும் அதைக் குறைக்கின்றேன் என்று பட்டினி கிடந்து உடலை வருத்துவது மெத்த
தவறு, இது மிகப் பெரிய சிக்கலில் தான்
கொண்டு முடியும்.
அதில் மிகவும் ஆபத்தானது அநோரேக்ச்சியா/Anorexia என்ற பசியற்ற உளச் சோர்வு நிலை. இதை ஒரு நோய்க்குன்டான கண்ணோட்டத்திலேயே பார்க்கலாம். ஆரம்பத்தில் நாகரிகத்துக்காக தொடங்கி,பின்பு அதன் விளைவாக உடலில் பசியற்ற நிலை உண்டாகி, பிறகு எதை சாப்பிட்டாலும் வாந்தியில் போய் முடியும் நிலைக்கு தள்ளபடுவது. இவ்வாறு வேண்டுமென்றே உணவை குறைத்து உடலை மெலிய வைப்பது மிகவும் ஆபத்தானது என்பதை குறிப்பாக பெண்கள் உணர வேண்டும். ஏனெனில் ஆண்களைவிட பெண்களுக்கே இந்த பிரச்சனை மூன்று மடங்கு அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இந்த பிரச்சனை மனத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த நோயில் பாதிக்கப்பட்டவர்களின் உடல் எடை குறைந்திருந்தாலும் மனத்தளவில் அவர்கள் உடை எடை அதிகமாயிருப்பதைப் போன்றே உணர்வார்கள். இதனால் அவர்களுக்கு டிப்ரஷன் என்ற உளச் சோர்வும் சேர்ந்துக் கொள்ளும்,உடல் ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் உணவின் குறைப்பாடால் நரம்பு மண்டலமும் பாதிப்பிற்குள்ளாகி அதன் செயல்பாட்டிற்கு தேவைப்படும் இரசாயன மூலக்கூறுகள் குறைந்து போவதால் இந்த டிப்ரெஷன் என்ற மன நோயும் மேலோங்குகின்றது.
இதனால் தங்கள் அன்றாட வேலைகளை செய்யவிடாமல் எந்த வேலையிலும் நாட்டமில்லாமல் ஒரு மந்த நிலை வந்துவிடும். மனதில் மகிழ்வற்ற தொரு வெறுப்பு தன்மையை உண்டாக்கி விடும். வேலையிடத்திலும் எந்த தீர்மானமும் எடுக்கவிடாமல் உடலாலும் உள்ளத்தாலும் சக்தி முழுவதையும் இழந்ததுப் போன்ற ரிஆக்டிவ் டிப்ரஷன் / Reactive depression உணர்வு வந்துவிடும். இந்த பிரச்சனை பதின்ம வயதில் தொடங்கி எந்த வயதினர்க்கும் வரலாம், எனவே இந்த அனொரெக்ஸியா என்ற பசியற்ற மற்றும் உளச்சோர்வு தன்மையில் பாதிக்கப்பத்தவர்கள் இதிலிருந்து விடுபட நன்றாக சரிவிகித சமமான உணவை சாப்பிட்டு இழந்த எடையை மீண்டும் பெற வேண்டும். மற்றும் சிறந்த மனநல நிபுணரின் ஆலோசனையைப் பின்பற்றி சிகிச்சை பெறுவதும் மிக முக்கியமாகும்
/thamilan THANKS

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக