கண் எவ்வாறு உங்களுக்குப் பார்க்க உதவுகிறது ?
சாதாரண ' லென்ஸில் ' என்ன இருக்கும் ?
சாதாரண லென்ஸில் மென்தோல் பொதியுறை எனப்படும் மெல்லிய சவ்வினால் சூழப்பட்ட மையக்கரு (ழிuநீறீமீus) இருக்கும்.விழிப்படலம் என்றால் என்ன ?
உங்கள் கண்ணிலுள்ள லென்ஸ் மங்கலாகிப் போவதை விழிப்படலம் என்பார்கள். சாதாரன கண் லென்ஸ் தெளிவாக இருக்கும். ஆனால் மெல்ல மெல்ல அது, கீழ்க்கண்ட காரணங்களால் மங்கலாகிப்போகும்.- வயது முதிர்வு.
- கண் காயம் அல்லது கண் எரிச்சல், வீக்கம்.
- சிலவகை மருந்துகள்.
- நீரழிவு நோய் போன்ற நோய்கள்.
உங்களுக்கு விழிப்படலம் உள்ளது என்பதை எப்படி உணர்வீர்கள் ?
விழிப்படலமானது, மாதக்கணக்கில் மெல்ல மெல்ல உருவாகும். இதனுடைய வளர்ச்சி படிப்படியாக இருப்பதால், உங்கள் பார்வையின் மீதான அதன் தாக்கத்தை உங்களால் உணர முடியாமலும் போகலாம்.விழிப்படலம், கண்களைப் பார்வை செலுத்துவதில் கடினத்தை உண்டாக்குகிறது. விழிப் படலம் உள்ளதைக் கீழ்க்கண்ட அடையாளங்கள் உணர்த்த வல்லன.
- கண்ணாடியை அணிந்த போதும் சரியாகாத பார்வை மங்கல் நிலை.
- அருகிலும், தூரத்திலும் உள்ள பொருட்களை நண்கு பார்க்க முடியாமற் போதல்.
- சிறிய எழுத்துக்களைப் படிப்பதில் சிக்கல்.
- பகலிலும் இரவில் கூர்ந்து பார்க்க வேண்டிய தொல்லை.
- பல்லாண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் அணுக்கப் பார்வை (கிட்டப்பார்வை) ஏற்படுதல்.
உங்களுக்கு விழிப்படலம் உள்ளதா என்பதை எவ்வாறு அறிய இயலும் ?
'ஆப்தாலமாலஜிஸ்ட்' எனப்படும் கண்மருத்துவ வல்லுநர்கள் ஊடுறுவு விளக்கைப் பயன்பகுத்தி உங்கள் கண்களை நன்கு பரிசோதிக்க வேண்டியிருக்கும். ஆப்தாலமோஸ்கோப் எனும் கருவியின் உதவியுடன் உங்கள் கண்களின் உட்புறத்தையும் அவர் ஆராய்வார். இந்த பரிசோதனைகள் உங்களுக்கு விழிப் படலம் உள்ளதா எந்பதை உறுதிப்படுத்தும். உங்களுக்கு கண் விழிவிறைப்பு நோய் (க்ளாகோமா) முதலிய பிற கண் நிலமைகள் இருந்தால் அறிவுரைகள் கூறப்படும்.உங்கள் விழிப்படலத்தை எப்போது அகற்ற வேண்டும் ?
விழிப்படலம், அறுவை மருத்துவத்தால் மட்டுமே அகற்றப்படும். ஒளிக்கற்றைகளை உட்செலுத்தும் பணியைச் செய்வதற்காக, அறுவை மருத்துவத்தின் போது ஒரு செயற்கை லென்ஸ் பெரும்பாலும் அமர்த்தப்படும். இந்தச் செயற்கை லென்ஸ் அமர்த்துதல் இயற்கையான கண் லென்ஸ்ஸைப் போன்றே மிகவும் ஒத்திருக்கும். தற்போது உங்கள் பார்வையைச் சரி செய்ய இம் முறையே பெரிதும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனினும் செயற்கை லென்ஸைப் பாதுகாப்பாக உங்கள் கண்ணில் பொடறுத்த முடியாமற் போகும் சமயங்களும் உள்ளன. இத்தகு விசயங்களில், உங்கள் பார்வைக்கு உதவி சிறப்புக் கண்ணாடிகளையோ, குழைமக் கண்ணாடிவில்லைகளையோ (நீஷீஸீtணீநீt றீமீஸீs) பயன்படுத்த வேண்டியிருக்கும்.உங்கள் விழிப்படலத்தை எப்போது அகற்ற வேண்டும் ?
- நீங்கள் அறுவை மருத்துவம் செய்து கொள்ளும் ஆற்றல் உடையவர்தானா என்பதை உறுதி செய்துகொள்ள, அறுவை மருத்துவத்திற்கு முன்னர் சில பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டியிருக்கும். உங்கள் கண்களில் செயற்கை லென்ஸைப் பொருத்துவதற்கு ஏதுவாக உங்கள் கண்களின் வளைவையும், நீளத்தையும் அள்க்க வேண்டியிருக்கும்.
- அறுவை மருத்துவத்திற்கு 2-3 நாட்களுக்கு முன்னரிலிருந்தே உங்கள் கண்களில் கண் சொட்டு மருந்துகள் விடப்படும்.
- நள்ளிரவுக்குப் பின்னர் உறுவை மருத்துவம் நடைபெறுவதாக இருந்தால், அதற்கு முன்னிரவு முதலே நீங்கள் உணவு உள்பதையோ, நீர் முதலான பானங்களைக் குடிப்பதையோ நிறஉத்தி விட வேண்டும். காலையில் அறுவை மருத்துவம் நடைபெறுவதாக இருந்தால், நீரிழிவு நோய்ககான மருத்துகளைத் தவிர வேறேதேனும் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டியிருப்பின் சிறிதளவு நிரைமட்டும் பயன்படுத்துங்கள்.
- உங்கள் மருத்துவர் வேறேதேனும் கருத்துரைகள் கூறியிருப்பின் அவற்றையும் நீங்கள் பின்பற்ற வேண்டும்.
- வெளி நோயாளியாக (ஷீut ஜீணீtவீமீஸீt) உங்களுக்கு இந்த அறுவை மருத்துவம் செய்யப்படுவதால் நீங்கள் முன் தினமே வந்து மருத்துவமனையில் தங்க வேண்டிய தேவையில்லை.
அறுவை மருத்துவத்தின் போது என்ன எதிர்பார்க்கப்படும் ?
கண்ணுக்குள்ளே நன்கு பார்ப்பதற்கு வாய்ப்பாகு ஒரு சிறப்பான அறுவை நுண்நோக்கியையும், சின்னஞ்சிறு அறுவை கருவிகளையும் பயன்படுத்தி கண் மருத்துவ வல்லுநர் கண்களில் அறுவை மருத்துவம் செய்வார்.அறுவை மருத்துவத்திற்கு முன்னர், அறுவையின் போது வலி எடுக்காமல் இருப்பதற்காக, கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வலிஅழிப்பு (வலி போக்கி) ஊசிகளைப் போடுவார். உங்கள் கவலையைக் குறைப்பதற்கும் தூக்க கலக்கத்தை உண்டு பண்ணவும் உங்களுக்குச் சில அமைதிப்டுத்தும் மருந்துகள் தரப்படும். கண் மருத்துவர் உங்கள் கண்ணின் உள்ளே நுனுகிப் பார்ப்பதற்கு ஏதுவாக கண்பாவையை விரிவுபடுத்த (அகலப்படுத்த) உங்கள் கண்களில் சில சொட்டு மருந்துகள் விடப்படும். இந்த மருந்தளிப்பின் விளைவாக உங்கள் கண்பார்வை மங்கலாகும் இதனால் உங்கள் கண் அருகே அறுவை கருவிகள் வருவதை நீங்கள் காணமுடியாமற் போவீர்கள். அறுவை மருத்துவ அறையில் பானியாளர்கள் அறுவை மருத்துவத்திற்கு முன்னர் சுத்தமான போர்வையால் உங்களை மூடுவார்கள். அறுவை மருத்துவத்தின்போது நீங்கள் கண்கள் இமைக்காமலிருப்பதற்கும், கண்களை அகல திறந்திருப்பதற் காகவும் கண் மருத்துவ வல்லுநர் 'ரிட்ராக்டர்' எனும் ஒரு சிறப்புக் கருவியைப் பயன்படுத்துவார்.
அறுவை மருத்துவம் நடைபெறும்போது, மையக்கருவையும், கார்டெக்ஸையும் அகற்றுவதற்கு, கண்ணில் ஒரு கீறல் போடப்படும். செயற்கை லென்ஸைச் செருகி வைப்பதற்கு வசதியாக லென்ஸின் மென்தோல் பொதியுறை (சிணீஜீsuறீமீ) விட்டு வைக்கப்படும். அதன்பின்னர் அறுக்கப்பட்ட கீறல் தையல் போட்டு தைக்கப்படும்.
விழிப்படலத்தை அகற்றுதல்கண்படலத்தை நீக்க கண்மருத்துவ வல்லுநர் இரண்டு முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்துவார் ஒரு முறையில், மற்ற முறையைக் காட்டிலும் சற்றுப் பெரியதாக அறுக்க வேண்டியிருக்கும். சிறிய சீறல் மூலம் அறுவை செய்வது சற்று செலவோடு கூடிய செயல் என்றாலும் விரைவில் குணமாகும் நன்மையுடையது.' எக்ஸ்ட்ரா கேப்ஸ§லர் ' (ணிஜ்tக்ஷீணீ நீணீஜீsuறீணீக்ஷீ) விழிப்படல அகற்றல் கண்ணில் விழித்திரைப் படலத்திற்கு மேலுள்ள வெண்மைப் பகுதியில் ஏறத்தாழ 10 மி.மி. நீளத்திற்கு சீறப்படும். அந்தக சீறலின் வழியே கண்விழிப்படலம் ஒரே துண்டாக அகற்றப்படும். இந்த முறையில் லென்ஸின் முன்புற மென்தோல் பொதியுறை அகற்றப்படும். ஆனால் லென்ஸின் பின்புற மென்தோல் பொதியுறை அப்படியே அதே இடத்தில் விட்டு வைக்கப்படும். |
பேகோ மெல்சிபிகேஷன் (றிபிணீநீஷீமீனீuறீsவீயீவீநீணீtவீஷீஸீ கண்ணில் 4 முதல் 5 மி.மி. அகளத்திற்கு அறுக்கப்படும். லென்ஸில், கதழ் (uறீtக்ஷீணீ sஷீஸீவீநீ) முனையுடைய ஒரு சிறிய குறிகிய சலாகை (ஜீக்ஷீஷீதீமீ) நுழைக்கப்படும். இந்தச் சலாகையின் வழியே அனுப்பப்படும் கதழ் ஒலியலை (uறீtக்ஷீணீ sஷீuஸீபீ ஷ்ணீஸ்மீ) யானது விழிப்படலத்தைப் பல சிறு துண்டுகளாக உடைக்கிறது. இந்த முறையில் லென்ஸின் மென்தோல் பொதியுறையின் முன்புறமும் அகற்றப்படும். இந்தச்சிறு துண்டுகள் சிறிய உறிஞ்சு கருவியின் மூலம் அகற்றப்படும். |
|
மேலே கூறப்பட்ட இரு முறைகளில் எந்த முறையில் விழிப்படலம் அகற்றப்பட்டாலும், உடனே
கண்மருத்துவ வல்லுநர், கண்ணுக்குள் செயற்கை லென்யஸை உள்ளே அமர்த்துவார். இந்தப்
புது லென்ஸ் கண்ணுக்குள் நிரந்தரமாக இருக்கும். விழித்திரைப் படலத்துக்கும் பின்புற
மென்தோல் பொதியுறைக்கும் இடையே இந்தச் செயற்கை லென்ஸ் அமர்த்தப்படும். சிறப்பான
குழிவுக்குள் அதை அமர்த்துவது, லென்ஸின் அமர்த்துவதின் வடிவமைப்பின்
நடுபகுதியாகும். சில அரிய சந்தர்பங்களில், லென்ஸின் பின்புற மென்தோல் பொறியுறை அழிந்திருந்தாலும் அல்லது இல்லாமல் இருந்தாலும் இந்தச் செய்ற்கை லென்ஸ் விழித்திரைப்படலத்தின் முன்பே அமர்த்தப்படும். |
இந்த அறுவை மருத்துவம் முடிவதற்கு ஏறத்தாழ அரைமனிக்கும் மேலாகும். எனினும் அன்று மேலும் சில மணிநேரங்கள், படுக்கைத் தொகுதியிலேயே நீங்கள் தங்க வேண்டியிருக்கும். உங்களுக்குத் தரப்பட்ட வலி போக்கி, அல்லது அமைதிபடுத்தும் மருந்துகளின் பின் விளைவுகளிலிருந்து நீங்கள் முற்றிலும் மீண்டு விட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள சில மணி நேரங்கள் அங்கேயே தங்க வேண்டியது இன்றியமையாததாகும். அறுவை மருத்துவம் செய்யப்பட்ட கண்ணின்மீது துணியாலான ஒரு மறைப்புத் துண்டு, கண் பாதுகாப்புக்காக, கட்டப்படும். அறுவை மருத்துவம் செய்து கொண்ட உடனேயே உந்த வண்டியை ஒட்டுதல் கூடாது. இயன்றால் உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல யாரையாவது ஒருவரை ஏற்பாடு செய்துகொள்வது நல்லது. மறுநாள் மருத்துவமனைக்குக் கட்டைப்பிரித்துக் கொள்வதற்காக நீங்கள் மீண்டும் வர வேண்டியிருக்கும்.
அறுவை மருத்துவத்திற்குப் பின்னர் என்ன செய்ய வேண்டும் ?
கண் மருத்துவ வல்லுநர், வலியைப்போக்கு மருந்துகளையும், நோயெதிர்ப்புகண்சொட்டு மருந்தையும் எழுதித்தருவார். நீங்கள் பயன்படுத்தும் பிற மருந்துகள் ஏதேனும் இருப்பின், அவற்றோடு இம் மருந்துகள் அனைத்தையும் பயன் படுத்துங்கள்.
- தையல் போட்டுள்ளதால் உங்கள் கண்ணில் சில தொல்லைகள் இருக்கலாம். அதற்காக நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் கண்களைக் கசக்கவே கூடாது.
- ஆடி அசைந்து ஒடுதல், நீச்சலடித்தல், 'டை £சி' போன்ற உடலுக்குக் கடினமான வேலைகளைத் தவிர்க்க வேண்டும். எனினும், எளிய வீட்டு வேலைகள் செய்வது, சிறிது தூரம் நடப்பது, சற்று உயரமுள்ள படியேறுதல் முதலான எளிய வேலைகளைச் செய்தால் பரவாயில்லை. ஆனால் அவற்றையும் மிகுந்த கவனத்துடன் செய்யவும்.
- குனிவதையும், பெரும் எடையுள்ள பொருட்களை எடுப்பதையும், தூக்கிச் செல்வதையும் தவிர்க்க வேண்டும். கீழே தரையிலுள்ள எதையாவது எடுக்க வேண்டியிடருந்தால் உங்கள் முதுகை நிமிர்த்தி வைத்தவாறே செய்யலாம்.
- கண்களின் மீது அதிக அழுத்தம் உண்டாவதைத் தடுக்க, தலையைக் கீழே தவிழ்ப்பதைத்
தவிர்க்கவும்.
உங்கள் முழு காலணியை (ஷ§) அணிய, கீழே குனிவதைத் தவிர்த்தல் வேண்டும். ஒரு இருக்கையில் அமர்ந்து, உங்கள் காலை மேலே தூக்கி வைத்துக்கொண்டு காலணியை அணிய வேண்டும். அல்லது பிறர் யாரையாவது, காலணி அணிய உதவுமாறு செய்யலாம். - உங்கள் கண்களில் கவனக் குறைவாகவோ, வேடிக்கை யாகவோ குத்திவிடக் கூடுமாகையால் சிறு குழந்தைகள் அருகில் செல்வதையோ, அவர்களைத் துக்கிச் செல்வதையோ தவித்தல் வேண்டும்.
- முதல் சில வாரங்கள் வரை, உங்களுடைய முகம், தலை முடி இவற்றை கழுவும் போது சோப்பு, ஷாம்பு, தண்ணீர் உங்கள் கண்களில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முடிதிருத்தகத்தில் உங்கள் தலை முடியைக் கழுவிக்கொள்ளலாம். மாற்று வழியாக, ஒரு ஷாம்பு பேஸினை (sலீணீனீஜீஷீஷீ தீணீsவீஸீ) வாங்கி வைத்துக்கொள்ள, முடிதிருத்தகத்தில் செய்வதைப்போல தலையை லேசாக பின்பிறம் சாயத்து வைததுக் கொன்டு தலைமுடியை கழுவிவிடச் சொல்லலாம்.
- அறுவை மருத்துவம் முடிந்த 6 வாரங்கள் வரை உந்து வண்டி ஒட்டுதவைத் தவிர்க்க வேண்டும்.
- உங்களுடைய வழக்கமான உணவை நீங்கள் உண்ணத் தொடங்கலாம். மலச்சிக்கலைத்தவிர்க்கவும், குடல் அசைப்பதில் சோர்வையும் தடுக்க, நிறைய காய்கறிகளையும், நார் பொருட்களடங்கிய உணவுப் பொருட்களையும் உண்ணவும்.
- எழுதித் தரப்பட்ட அனைத்து மருந்துகளையும் பயன்படுத்த வேண்டும். மருத்துவர் கூறிய வண்ணும் சொட்டு மருந்துகளைக்கண்ணில் போட்டுக் கொள்ள வேண்டும்.
எழுதித்தரப்பட்ட கண்சொட்டு மருந்துகளை எப்படி பயன்படுத்த வேண்டும் ?
அறுவை மருத்துவத்திற்குப் பிறகு, தொற்றுநோய்களைத் தவிர்க்க, கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தும்போது கீழ்க்கண்ட வழி முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
- உங்கள் கைகளைச்சோப் போட்டுச் கழுவ வேண்டும்.
- உங்கள் தலையை பின்புறம் சாய்த்துக்கொள்ளவும்.
- கண்ணின் கீழ் இமையையை மெல்ல கீழே இழுங்கள்.
- மருந்து புட்டியிலிருந்து ஒரு துளி மருந்தைக் கண்ணில் விடவும். புட்டியின் நுனி உங்கள் கண்களைத் தொடாமற் பார்த்துக்கொள்ளுங்கள்.
- சில வினாடி நேரம் கண்களை மூடிக்கொள்ளுங்கள்.
- வேறொரு மருத்தினைப் பயன்படுத்த வேண்டிருப்பின், ஐந்து நிமிடங்கள் காத்திருந்த பின்னர் அடுத்த சொட்டு மருந்தை விட்டுக் கொள்ளவும்.
- சொட்டு மருந்துவின் கழுத்து நுனியை உங்கள் கைவிரலால் தொடக்ககூடாது.
அறுவை மருத்துவத்திற்குப் பின்னர் எவற்றைக் கவனிக்க வேண்டும் ?
பொதுவாக விழிப்படல் மருத்துவம் மிகவும் பாதுகாப்பான செயல் முறையாகும். பெரும்பாலான நோயாளிகள் நல்ல பார்வையைப் பெற்று நல மடைகிறார்கள். எனினும் சில சமயங்களில் தொற்று நோய் உண்டாகி, அதன் விளைவாககள் கண் பார்வை மங்கலாகக் கூடும். தொற்றுநோயின் அபாய அடையாளங்களாவன:-
- கண்ணில் வலியும் சிகப்புத்தன்மையும் அதிகரித்தல்.
- கண்ணிலிருந்து நீர்ப்பெருக்கு
- திடீரென்று கண்பார்வை மங்குதல்
- கண்ணில் வீக்கம்.
அடிக்கடி வினவப்படும் வினாக்கள்:-
1. உள்ளே அமர்த்தப்படும் லென்ஸ் எவ்வளவு காலம் இருக்கும் ?முதன்முதல் லென்ஸ் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் அமர்த்தப்பட்டது. அந்த நோயாளி இப்போதும் நலமுடன் உள்ளார்.
2. யார் வேண்டுமானாலும் இந்தலென்யை அமர்த்திச் கொள்ளலாமா ?
இந்த அமர்த்துதல் பாதுகாப்பானதாகையால் இதை யாரேனும் அமர்த்திக் கொள்ளலாம். ஒரு வேளை லென்ஸ் அமர்த்துதல் உங்களுக்கு பொருந்தாது என்றால், கண்மருத்துவ வல்லுநர் உங்களுக்கு அறிவுரை கூறுவார்.
3. விழிப்படலம் மீண்டும் வளரக்கூடுமா ?
காலமானாலும் அமர்த்தப்பட்ட செயற்கை லென்ஸ் மங்கலாகாது. கண்களில் நன்கு அமர்ந்தப்பட்ட லென்ஸின் பின்புற மென்தோல் பொதியுறை காலப்போக்கில் மங்கக்கூடும். அறுவை மருத்துவத்திற்குப்பின்னர் பார்வை தெளிவாக இருந்து பின்னர் காலம் செல்லச் செல்ல மீண்டும் மங்கலாகத் தொடங்னால் இப்படியாவதை உரைலாம். (லென்ஸின் மெல்தோல் பொதியுறை மங்கலாவதைக் கண் மருத்துவ மனையில், கண்மருத்துவர் 'லேஸர்' கிரணங்களைப் பயன்படத்தி, வலியில்லாமல் குணால் படுத்த முடியும்).
4. அறுவை மருத்துவத்தில் என்ன தவறு ஏற்படக் கூடும் ?
பெரும்பாலானவர்களுக்கு விழிப்படல அகற்று அறுவை மருத்துவம் எளியதும், பாதுகாப்பனதாகும். என்றாலும் மற்ற எல்லா அறுவை மருத்துவத்திலும் உள்ளதைப் போலவே இதிலும் சிக்கல்கள் எழ சிறிதுவாய்ப்பு உண்டு, இரண்டு முக்கிய சிக்கல்களாவன:
1. வலியைப் போக்கப் பயன்படுத்திய மருந்துகளால் உண்டாகும் நுட்ப ஊறுணர்வு (அலர்ஜி) இந்த வகை மருந்துகளால் சிலருக்கு நுட்ப ஊறுணர்வும் (அலர்ஜியும்), குமட்டல், வாந்தி, மூச்சு விடுவதில் சிக்கல், சூடுகட்டிகள், மூக்கும் உதடுகளும் வீங்கிப்போதல், பெரும்பாலும் வலிப்பு நோயும் போன்ற பக்கவிளைவுகளும் உண்டாகக்கூடும்.
2. அறுவை மருத்துவச் சிக்கல்கள் எந்த அறுவை மருத்துவமாகட்டும், அதில் தொற்று நோய்கள் உண்டாகக்கூடிய வாய்ப்புகள் எப்போதும் உண்டு. தீவிர தொற்று நோய் ஏற்பட்டால் கண்குருடாகக் கூடும். விழி வெண்படலத்திலும், விழித்திரையிலும் ரத்தக்கசிவும், சேதமும், பிற சிக்கல்களும் ஏற்பட்டு, கண்பார்வையைக் குறைக்கச்கூடும். இவற்றிக்கு மேலும் அறுவை மருத்துவம் செய்ய வேண்டியிருக்கும்.
5. இந்த விழிப்படல் அறுவை மருத்துவத்திற்கு யார் பொருத்தமற்றவர் ?
நீரழிவுநோய், குணப்படுத்தப்படாத அதிக இரத்த அழுத்தம், கடுமையான இதய நோய் முதலிய நோய்கள் வரையில் இந்த அறுவை மருத்துவம் செய்துகொள்ள வயது ஒரு தடையே அல்ல. சிறு குழந்தை முதல் 90 வயது முதியவர் வரையிலும் எவருக்கும் விழிப்படல அறுவை மருத்துவம் செய்யப்படலாம். அறுவை மருத்துவத்திற்கு முன்னர் மேற்கள்ட நோய்கள் ஏதேனும் இருப்பின் அவற்றைச் கட்டுப்படுத்த உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.
6. அறுவை மருத்துவத்திற்குப்பின்னர், நான், இறால், நண்டு முதலான கடல் உணவு வகைகளை உண்ணலாமா ?
ஏற்கனவே உங்களுக்கு இவ்வகை உணவுகளில் 'அலர்ஜி' இல்லையென்றால், அறுவை மருத்துவதற்குப்பின்னர் இவற்றை உண்ண எந்தத் தடையுமில்லை.
7. நான் பணிக்கு எப்போது திரும்பச் செல்லலாம் ?
பொதுவாக உங்களுக்கு 1 மாதம் மருத்துவ விடுப்பு தரப்படும். நீங்கள் உங்களது வழக்கமான பணியில் ஈடுபடுவதற்கு முன்னர் போதுமான அளவுகள் உங்கள் அறுவை காயம் குணமடைந்ததை உறுதிப் படுத்திக் கொள்ள இது உதவும்.
8. தையல்கள் பிரிக்கப்பட வேண்டுமா ?
பெரும்பாலோர் விசயத்தில் தையல் அப்படியே கண்ணிலேயே விட்டுவிடப்படலாம். கீழ்க்கன்ட சூழ்நிலை ஏற்படும் போதும் மட்டுமே அவை பிரிக்கப்பட வேண்டும்.
- தையல் தளர்ந்து போதல், அறுந்துபோதல்
- தையலைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொற்று நோய் ஏற்படத் தொடங்குதல்.
- தையல் மிகவும் இறுக்கமாக இருத்தல்.
Dr Goh Kong Yong [ Head and Consultant, Division of Ophthalmology ]
Dr Aliza Jap [ Consultant, Division of Ophthalmology ]
Dr Yap Soo Keong [ Senior Registrar, Division of Ophthalmology ]
Dr Ranjana Mathur [ Registrar, Division of Ophthalmology ]
Karabee Mukherjee [ Ophthalmic Technician, Division of Ophthalmology ]
Illustrations : Dr Choy Mei Yee
www.cgh.com.sg thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக