WELCOME TO OUR HOME PAGE அப்பாக்குட்டி மருத்துவம் <>தற்போதைய செய்திகள்:........சூடாக ஒரு கப் டீ<><>கருசிதைவு சில அறிகுறிகள்<><>இயற்கை வயாகரா முருங்கை பற்றி உங்களுக்கு தெரிந்ததும்... தெரியாததும்.<><>கர்ப்பப் பை பலம் அடைய உழுத்தங்களி சாப்பிடுங்க..!<><>பெண்கள் பயன்படுத்தும் “நாப்கின்” ஆல் உடல் நலத்திற்கு கேடு! ஆய்வில் அதிர்ச்சி தகவல்! »<><>குளிர் நீரை விட சுடு நீர் தான் பெஸ்ட்! லேட்டஸ்ட் தகவல்!<><>அதுல கிரேட்டா இருக்கணுமா? சில உணவுகளை சாப்பிடாதீங்க!<><>தூக்கம் குறைந்தால் கேன்சர் தாக்கும் : டாக்டர்கள் எச்சரிக்கை<><>மன உளைச்சலா, மாரடைப்பா? தலைமுடியை ஆராய்ந்தால் உடல்கண்டிஷன்தெரியும்<><>ஆஸ்டியோபொரோசிஸ் எனும் அசுரப் பிரச்னை<><>பக்கவாதம் என்றும் பாhpசவாயு என்றும் கூறப்படும் கை, கால், முகம், வாய் போன்றவற்றின் செயலிழப்பு எல்லா வயதினரையும்...;குட்டீஸ்க்கு மூக்கில் ஒழுகுதா? வீட்டு மருந்து கொடுங்க!<><>பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துணவுகள்!<><>பட்டினி கிடந்தா உடல் மெலியாதா?<><>வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்<><>;ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு <><>இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்‏<><>தொண்டையில் கழலை இல்லை, தைரொயிட் நோயா ?<><>நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்<><>ஹாய் நலமா-2 மூட்டு வலிகளா?‏<><>முட்டையின் மகத்துவம் - ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு<><>தூக்கம் இல்லாத பிரச்சனைக்கு சிறந்த மருந்து சப்போட்டா பழம்! <><>17 குணங்கள் கொண்ட‌ வெற்றிலை<><>குழந்தை மருத்துவம்: 3 முதல் 8 வயது வரை..<><>உடற்பயிற்சியின்றி அதிகரிக்கும் மரணங்கள்.<><>அல்சரை குறைக்க மன அமைதி தேவை.<><>புற்றுநோய் என்ன செய்யும்?, மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? : 3டி அனிமேஷனின் பதில் <><>பசுவின் பால், குழந்தைகளுக்கு நல்லதல்ல - அதிர்ச்சி தகவல்<><>தூக்கம் இன்றி 15 கோடி இளைஞர்கள் தவிப்பு<><>முகப்பரு மறைய<><>தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க!<><>சிறுநீரகக்கல் இருக்கா? கவலையை விடுங்க...<><>ஏலக்காய்’ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா!! <><>ஹீமோகுளோபின் அதிகரிக்க வழிகள்<><>மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி!<><>தைராய்டு பற்றிய விழிப்புணர்வும் அவற்றுக்கான தீர்வும்!<><>வயாக்கிராவுக்கு பதில் மாதுளம்பழம்!<><> உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வெள்ளரிக்காய்<><>தைரியமாக சொல்லுங்க: ”தொட்டுக்க ஒரு டபுள் ஆம்லெட் போடுங்க.. மனையாளே!”<><>புற்று நோய் பற்றிய விழிப்புணர்வும் விரிவான தகவல்களும்!<><>விஷ ஜந்துக்கள் கடித்து விட்ட‌தா? என்ன முதலுதவி செய்யலாம்? தெரிந்து கொள்ளுங்கள்…<><>மாரடைப்பைத் தடுக்கும் ரத்தப் பரிசோதனை <><>பகலில் தூங்காதீங்க மன அழுத்தம் வரும் – ஆய்வில் தகவல் <><>சிறு தானியங்களின் மருத்துவக் குணங்கள்!<><>சீரகத்தின் குணங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.<><>மன அழுத்தத்தை போக்கும் வாழை இலை! <><>ரத்த சோகையை தடுக்கும் வழிகள்<><>தூங்காமல அவதிப் படுகிறீர்களா! <><>இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம்! ஆய்வு தகவல்!<><>குழந்தை பெற்ற பின்னும் உடல் சிக்கென்று இருக்க<><>மார்பகப் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு தரும் வைட்டமின் C! <><>கிராம்பின் மருத்துவ குணங்கள்! <><> இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது வேர்க்கடலை<><>அல்சர் இருக்கா கவனம் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்! <><>புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களா நீங்கள்? நிறுத்த 7 வழிகள்!<><>அதிகாலையில் தண்ணீர் பருகுங்கள் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும்.<><>நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!!<><>பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்குமாம்... உங்களுக்குத் தெரியுமா?<><>குழந்தை வேண்டுமா? மணல்தக்காளி சாப்பிடுங்கள்!<><>சில நோய்களுக்கான அறிகுறிகளும் தப்பிக்கும் வழிகளும்.. <><>நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செக்ஸ் : ஆய்வில் நிரூபணம்<><>செக்ஸ் வாழ்க்கையில ஈடுபட முடியலையே!<><>மாரடைப்பு <>

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

வலிப்பு நோய் – ஒரு விளக்கம்


வலிப்பு நோய் – ஒரு விளக்கம்

epilepsy_awareness
ஒவ்வொரு நோய்க்கும் அதற்குரிய மருந்துண்டு.மனிதனுக்கு ஏற்படும் துன்பங்களில் நோய் தவிர்க்க முடியாத ஒன்றாகும். எந்த ஒரு நோயும் அதற்குரிய நிவாரணி இன்றி இறக்கப்படுவதில்லை என இஸ்லாம் தீர்க்கமாகக் கூறுகிறது.
பல நோய்களின் தீவிரம் அதிகரிப்பதற்கு, அந்நோயைக் குறித்த போதிய அறிவின்றி தானாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளும் நடவடிக்கைகளும் காரணமாக அமைகின்றன. எந்த ஒரு நோயாக இருந்தாலும் அதனைக் குறித்த விவரங்கள் அறிந்திருப்பது கட்டாயமாகும்.
மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத நோய்களில் வலிப்பு நோயும் ஒன்றாகும். அதனைக் குறித்த விவரங்களை இங்குக் காண்போம்:
* வலிப்பு என்றால் என்ன?
வலிப்பு அல்லது ‘காக்கா வலிப்பு’ என அறியப்படும் நோய் மூளையைத் தாக்கும் ஒரு நோயாகும். மூளையிலிருந்து மைய நரம்பு மண்டலம் மூலம் உடலின் பல உறுப்புகளுக்கு நரம்புகள் வழியே வரும் கட்டளைத் தொகுப்புகளில் (நரம்புகளில்) சிறிது நேரம் தடங்கல் ஏற்படுவதையே வலிப்பு எனப் பொதுவழக்கில் அழைக்கிறார்கள்.
* வலிப்பு நோய்க்கான மூல காரணம் என்ன?
மைய நரம்பு மண்டலத்திற்கு இழைக்கப்படும் சேதங்களால்,
பிறப்பின்போது தலைப்பகுதியில் ஏற்படும் காயங்கள்/சிராய்ப்புகளால்,
சிலருக்குப் பிறப்பின்போதே இருக்கும் நரம்புமண்டலக் குறைப்பாட்டினால்,
விபத்தினால் தலையில் ஏற்படும் காயங்களினால்,
மூளையில் ஏற்படும் கட்டிகளால்,
ஆல்கஹால், போதை மருந்து உட்கொள்வதால் ஏற்படும் நரம்பு மண்டலம் சிதிலத்தால்,
மூளைக் காய்ச்சலால் வலிப்பு வர வாய்ப்புள்ளது.
* எத்தனை வகை வலிப்புகள் உள்ளன?

மேலோட்டமாக இவற்றை இருவகைப் படுத்தலாம். முதலாவது, பகுதி (Partial) வலிப்பு; இரண்டாவது பொது (General) வலிப்பு.
பகுதி வலிப்பில் மூளையின் ஒரு பகுதி மட்டும் பாதிக்கப்படும். அப்பகுதியினால் இயக்கப்படும் உறுப்புகள் வலிப்புக்கு உள்ளாகும். கை, கால், வாய் இவற்றைக் கட்டுப் படுத்தும் மூளையின் பகுதியில் வலிப்பு ஏற்பட்டால் அந்த உறுப்புகள் மட்டும் பாதிக்கப்படும்.
பொதுவலிப்பு மூளையின் பெரும்பான்மையான பகுதிகள் பாதிக்கப்படுவதால் உண்டாவதாகும். இதிலும் இருவகைகள் உள்ளன. ‘பெடிட்மால்’ (Petit Mal), ‘கிராண்ட்மால்’ (Grand Mal) என இவ்விரு வகைகளும் அழைக்கப்படுகின்றன.
பெடிட்மால் மிகச் சிறிய அளவில் தோன்றி மறையும் ஒரு வலிப்பாகும். சிலசமயம் இது கண்டுகொள்ளப்படாமலேயே வந்து போகலாம். இது ஒரு நொடியிலிருந்து பத்து முதல் இருபது நொடிகள் வரை நீடிக்கலாம். திடீரென விழிகள் செருகிக் கொள்ளுதல், காரணம் ஏதுமில்லாமல் ஓர் அறையினுள் அங்குமிங்கும் அலைதல் போன்றவை இந்நோயின் குறியீடுகளாம்.
கிராண்ட்மால் தாக்கியவர் முதலில் கண் முன் ஒரு பிரகாசமான காட்சி தோன்றுவது போல உணர்வார். கை கால்கள் உதறிக் கொள்ளும். பின், சுய நினைவின்றி மயங்கி விழுவார். மலம், சிறுநீர் போன்றவை அவரது கட்டுப்பாட்டில் இல்லாமல் பிரிய நேரலாம்.
* வலிப்பு நோய் தாக்கியவரைப் பார்க்கும்போது என்ன செய்ய வேண்டும்?
1. வலிப்பு கண்டவர் அருகில் கூரான பொருட்கள் ஏதுமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேசையின் கூரான முனைகள், சுவர் விளிம்புகள் இவற்றினருகில் அவர் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
2. அமைதியாக அவரை ஓரிடத்தில் அமர வைக்க முயலலாம்; ஆனால் கட்டாயப் படுத்துதல் கூடாது.
3. தரையில் விழ நேரிட்டால் அவரை ஒருக்களித்து இருக்குமாறு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், வலிப்பால் வெளிப்படும் உமிழ்நீர் எச்சில், மூச்சுக் குழலுக்குள் புகுந்து மூச்சுத் திணறலோ மரணமோ ஏற்படுவதைத் தடுக்கலாம்.
4. தலையில் அணைவாக மிருதுவான பொருட்களை வைக்க வேண்டும். இது, தலை வேகமாக தரையோடு முட்டிக் கொள்வதைத் தடுக்கும்.
5. வலிப்பு எவ்வளவு நேரம் நீடிக்கிறது எனச் சரியாகக் கணக்கிட வேண்டும். பொதுவாக 5 நிமிடங்களுக்குள் எல்லா வலிப்புகளும் அடங்கி விடும். அவ்வாறு அடங்காவிட்டாலோ, மீண்டும் மீண்டும் வலிப்பு வந்தாலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
* வலிப்பு இருப்பதாக அறியப்பட்டவர்கள் என்னென்ன செய்யக்கூடாது?
வலிப்பு நோய் இருப்பதாக அறியப்பட்டவர் சாதாரணமாகப் பிறரைப் போலவே வாழ்க்கை நடத்தலாம். இருப்பினும் வாகனங்கள் ஓட்டுதல், நீச்சல் அடித்தல், மரம் ஏறுதல், உயரமான இடங்களுக்குத் துணையின்றிச் செல்லல், கனரக வாகனங்கள், கேட்டர்பில்லர், போக்லைன் போன்ற மலை உடைக்கும் மண் அள்ளும் கருவிகளை இயக்குதல், போன்ற பணிகளில் ஈடுபடக்கூடாது.
“வலிப்பு வந்தவரின் கைகளில் இரும்பை அல்லது சாவிக் கொத்தைத் திணித்தால் வலிப்புப் போய் விடும்” என்று ஒரு நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது. இது தவறான நம்பிக்கையாகும். வலிப்பு வந்தவரின் கைகளில் இரும்பைக் கொடுப்பதால் ஒரு பலனும் இல்லை. அதனைக் கொண்டு அவர் தன்னைத் தாக்கிக் கொள்ள நேரிடலாம். அதனால் சாவிகொத்து, கம்பி, கத்தி போன்ற இரும்பாலான பொருட்களை வலிப்பு வந்தவரின் கையில் கொடுப்பது கூடாது.
வலிப்பும் மற்ற நோய்களைப் போன்ற ஒரு நோயே. சரியான சிகிச்சை அளிப்பதன் மூலம் அதனைக் குணப்படுத்தி விடவும் முடியும். எனவே இத்தகைய நோய் உள்ளவர்களைக் கண்டு அச்சம் கொள்ளவும் தேவையில்லை. மாறாக, முடிந்தவரையிலும் வலிப்பு நோயுள்ளவர்களைக் கண்காணிப்பதும் வலிப்பு ஏற்பட்டு விட்ட ஒருவருக்கு நம்மாலான தகுந்த உதவிகளைச் செய்வதும் மனிதாபிமானமுள்ள ஒவ்வொருவரது கடமையாகும்.


.iniyathu. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக