WELCOME TO OUR HOME PAGE அப்பாக்குட்டி மருத்துவம் <>தற்போதைய செய்திகள்:........சூடாக ஒரு கப் டீ<><>கருசிதைவு சில அறிகுறிகள்<><>இயற்கை வயாகரா முருங்கை பற்றி உங்களுக்கு தெரிந்ததும்... தெரியாததும்.<><>கர்ப்பப் பை பலம் அடைய உழுத்தங்களி சாப்பிடுங்க..!<><>பெண்கள் பயன்படுத்தும் “நாப்கின்” ஆல் உடல் நலத்திற்கு கேடு! ஆய்வில் அதிர்ச்சி தகவல்! »<><>குளிர் நீரை விட சுடு நீர் தான் பெஸ்ட்! லேட்டஸ்ட் தகவல்!<><>அதுல கிரேட்டா இருக்கணுமா? சில உணவுகளை சாப்பிடாதீங்க!<><>தூக்கம் குறைந்தால் கேன்சர் தாக்கும் : டாக்டர்கள் எச்சரிக்கை<><>மன உளைச்சலா, மாரடைப்பா? தலைமுடியை ஆராய்ந்தால் உடல்கண்டிஷன்தெரியும்<><>ஆஸ்டியோபொரோசிஸ் எனும் அசுரப் பிரச்னை<><>பக்கவாதம் என்றும் பாhpசவாயு என்றும் கூறப்படும் கை, கால், முகம், வாய் போன்றவற்றின் செயலிழப்பு எல்லா வயதினரையும்...;குட்டீஸ்க்கு மூக்கில் ஒழுகுதா? வீட்டு மருந்து கொடுங்க!<><>பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துணவுகள்!<><>பட்டினி கிடந்தா உடல் மெலியாதா?<><>வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்<><>;ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு <><>இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்‏<><>தொண்டையில் கழலை இல்லை, தைரொயிட் நோயா ?<><>நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்<><>ஹாய் நலமா-2 மூட்டு வலிகளா?‏<><>முட்டையின் மகத்துவம் - ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு<><>தூக்கம் இல்லாத பிரச்சனைக்கு சிறந்த மருந்து சப்போட்டா பழம்! <><>17 குணங்கள் கொண்ட‌ வெற்றிலை<><>குழந்தை மருத்துவம்: 3 முதல் 8 வயது வரை..<><>உடற்பயிற்சியின்றி அதிகரிக்கும் மரணங்கள்.<><>அல்சரை குறைக்க மன அமைதி தேவை.<><>புற்றுநோய் என்ன செய்யும்?, மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? : 3டி அனிமேஷனின் பதில் <><>பசுவின் பால், குழந்தைகளுக்கு நல்லதல்ல - அதிர்ச்சி தகவல்<><>தூக்கம் இன்றி 15 கோடி இளைஞர்கள் தவிப்பு<><>முகப்பரு மறைய<><>தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க!<><>சிறுநீரகக்கல் இருக்கா? கவலையை விடுங்க...<><>ஏலக்காய்’ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா!! <><>ஹீமோகுளோபின் அதிகரிக்க வழிகள்<><>மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி!<><>தைராய்டு பற்றிய விழிப்புணர்வும் அவற்றுக்கான தீர்வும்!<><>வயாக்கிராவுக்கு பதில் மாதுளம்பழம்!<><> உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வெள்ளரிக்காய்<><>தைரியமாக சொல்லுங்க: ”தொட்டுக்க ஒரு டபுள் ஆம்லெட் போடுங்க.. மனையாளே!”<><>புற்று நோய் பற்றிய விழிப்புணர்வும் விரிவான தகவல்களும்!<><>விஷ ஜந்துக்கள் கடித்து விட்ட‌தா? என்ன முதலுதவி செய்யலாம்? தெரிந்து கொள்ளுங்கள்…<><>மாரடைப்பைத் தடுக்கும் ரத்தப் பரிசோதனை <><>பகலில் தூங்காதீங்க மன அழுத்தம் வரும் – ஆய்வில் தகவல் <><>சிறு தானியங்களின் மருத்துவக் குணங்கள்!<><>சீரகத்தின் குணங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.<><>மன அழுத்தத்தை போக்கும் வாழை இலை! <><>ரத்த சோகையை தடுக்கும் வழிகள்<><>தூங்காமல அவதிப் படுகிறீர்களா! <><>இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம்! ஆய்வு தகவல்!<><>குழந்தை பெற்ற பின்னும் உடல் சிக்கென்று இருக்க<><>மார்பகப் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு தரும் வைட்டமின் C! <><>கிராம்பின் மருத்துவ குணங்கள்! <><> இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது வேர்க்கடலை<><>அல்சர் இருக்கா கவனம் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்! <><>புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களா நீங்கள்? நிறுத்த 7 வழிகள்!<><>அதிகாலையில் தண்ணீர் பருகுங்கள் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும்.<><>நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!!<><>பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்குமாம்... உங்களுக்குத் தெரியுமா?<><>குழந்தை வேண்டுமா? மணல்தக்காளி சாப்பிடுங்கள்!<><>சில நோய்களுக்கான அறிகுறிகளும் தப்பிக்கும் வழிகளும்.. <><>நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செக்ஸ் : ஆய்வில் நிரூபணம்<><>செக்ஸ் வாழ்க்கையில ஈடுபட முடியலையே!<><>மாரடைப்பு <>

புதன், 25 ஏப்ரல், 2012

கர்ப்பகாலம், கர்ப்பம்


கர்ப்பகாலம், கர்ப்பம்

கர்ப்பகாலம், கர்ப்பம்

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் என்றாலும், சிலர் அந்த மாற்றங்களைக் கண்டு திகைப்படைகிறார்கள். சிலர் பயப்படுகிறார்கள். சிலர் எதுவும் புரியாமல் விழிக்கிறார்கள். இன்னும் சிலருக்கு அந்த மாற்றங்கள் மேல் எரிச்சலோ, வெறுப்போ எழும். இவற்றைத் தவிர்க்க எவ்வாறான மாறுதல்கள் உடலில் ஏற்படுகின்றன என்று தெரிந்து கொள்வது நல்லதுதானே.
முதல் மூன்று மாதம் : பதினான்கு வாரங்கள் வரை எந்த நேரத்திலும் (காலையில் மட்டுமல்ல) அடிக்கடி குமட்டல் மற்றும் வாந்தியின் உணர்வு ஏற்படலாம். இதற்கு உங்கள் மாறும் ஹார்மோன்களே காரணம்.
உங்கள் மார்பகத்தை தாய்ப்பால் கொடுக்கத் தயார் செய்வதற்காக நேரிடும் ஹோர்மேனஸ் மாறுதல்கள் காரணமாக மார்பகம் வீங்குகிறது. மிருதுவாகிறது.
மூக்கினுளிருக்கும் லைனிங்கில் கூடுதலான அழுத்தம் இருப்பதால் மூக்கடைப்பு ஏற்படுகிறது. இது கர்ப்பப்பையினுள் உள்ள லைனிங் போலவே உள்ளது. கருத்தரிப்பினால் இரண்டிலும் அதிகமான இரத்த ஓட்டம் இருக்கிறது.
அதிகமான சோர்வை அதிகபட்ச பெண்கள் உணருகிறார்கள். இதற்குக் காரணம் ஒரு குழந்தைக்கு வடிவம் கொடுக்க உங்கள் உடல் அதிக அளவு சக்தியை உபயோகிக்கிறது.
அடிக்கடி சிறுநீர் கழிப்பிற்குக் காரணம் கர்ப்பப்பை வளர்ந்து, மூத்திரப்பையை அழுத்துவதுதான்.
மார்னிங் சிக்னெஸ் உள்ள பெண்கள் மாவு சத்துள்ள உணவுப் பண்டங்களுக்காக சில சமயம் ஏங்குகின்றனர். ஏனெனில் மாவுச் சத்து குமட்டலை அடக்க உதவுகிறது.
கருத்தரித்த நிலையின் மாஸ்க் என்பது கன்னத்திலும் மூக்கிலும் ஆங்காங்கே காணப்படும். இந்த அனுபவம் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. பிரசவத்திற்கு பிறகு இது மறைந்துவிடுகிறது. இதற்கு ஹார்மோன்களின் மாற்றங்கள் மற்றும் சூரிய ஒளியே காரணம்.
இரண்டாவது மூன்று மாதம் : முதல் மூன்று மாத கால அசௌகரியங்கள் மறைந்தவுடன் ஒரு மொத்த ஆரோக்கியமான உணர்வு திரும்புகிறது.
இடுப்பு தடிப்பாகிறது. அடிவயிறு ரவுண்டாகவும் உறுதியாகவும் ஆகிறது.
நெஞ்சில் எரிப்பு அதிகரிக்கிறது. இதற்குக் காரணம், கர்ப்பப் பை வளரும்போது, வயிற்றை அழுத்தி, உணவு செல்லும் குழாயைக் குருக்குகிறது. வயிற்றில் அமிலமும் அதிகமாக உற்பத்தியாகிறது.
கர்ப்பப் பை குடல்கள் மீது அழுத்துவதால், உணவின் போக்கு குறைகிறது. வைட்டமின் மற்றும் இரும்புச் சத்து அதிகமாக உட்கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.
மார்பகம் மற்றும் அடிவயிற்றின் மீது தழும்புகள் ஏற்படுகின்றன.
அரிப்பு, சருமம் ஸ்ட்ரெச் ஆவதால் ஏற்படுகிறது.
சாதாரண பிக்மெண்டின் மாறுதல்களின் ஒரு பங்காக முலைக்காம்பைச் சுற்றியுள்ள சருமம் கருமையாகிறது. தொப்புள் வரை அல்லது அதற்கு மேலேயும் ஒரு மெல்லிய கருமை ரேகை வருகிறது.
குழந்தையின் அசைவு யாரோ லேசாகக் குத்துவதைப் போலிருக்கும்.
உணவுக்காக ஏக்கம் இதில் எழும். நெஞ்செரிச்சலை அடக்க எலுமிச்சை வகைப் பழங்கள் நல்லது. முக்கியமாக உப்பைக் குறைப்பது முக்கியம்.
மூன்றாவது மூன்று மாதம் : உங்கள் முதுகுக்கு ஆதரவளிக்கும் தசைநார் மற்றும் தசைகள் மீது அதிகமாக அழுத்தமிருப்பதால் முதுகுவலி ஏற்படுகிறது.
நீங்கள் கீழே படுத்துக் கொள்வதால் காலில் இழுப்பு வருகிறது. உங்கள் உடலில் இரத்தத்தின் கொள்ளளவு அதிகரிக்கிறது. ஈர்ப்பு காரணமாக இரத்தம் கால்களுக்குச் செல்கிறது. ஆகையால், தசைகள் மீது அழுத்தம் ஏற்பட்டு, கால்களில் இழுப்பு வருகிறது.
மூச்சுத் திணறல் ஏற்படுவதற்கு காரணம், குழந்தை உதரவிதானம் மீது அழுத்துகிறது. சுவாசப் பை விரிந்து கொடுப்பதில்லை மற்றும் உங்களுக்கு வேண்டிய அளவு வாயு கிடைப்பதில்லை.
குழந்தையின் அசைவைக் காண முடிகிறது. இப்போது குழந்தையின் எடை கூடுகிறது மற்றும் அதன் உதையையும், விக்கலையும் கூட நீங்கள் உணர முடிகிறது.
உறங்குவதில் கடினமாக இருக்கும். இதற்கு காரணம் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை மற்றும் எடை அதிகரிப்பினால் ஏற்படும் அசௌகரியங்களாகும்.
இவற்றையெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டவர்களுக்கு இந்த மாற்றங்கள் விரும்பத்தக்கவையாக இருக்கும். ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க மனம் தயாராகிவிட்ட உணர்வு எழும். தாயாகப்போகும் நாளை எதிர்பார்த்துக்கொண்டு இருப்பீர்கள்
nantri-kumutham www.mahalir.blogspot.com

ஆரோக்கியமான கர்ப்பகாலம்

ஒரு பெண் தாய்மை அடையும் போது, அவள் தன்னை மட்டுமல்ல அந்தக்குடும்பத்தையே மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துகிறாள். கருவுற்ற காலம் தொடக்கம் ஆரோக்கியமாக இருந்தால்தான், தாய்க்கு மட்டுமல்ல வளரும் குழந்தைக்கும் நல்ல ஆரம்பமாய் அமையும். பிரச்சைனைகள் இல்லாமல் கற்பகாலமும் பிரசவமும் அமையும் என்று யாராலுமே உறுதியளிக்க முடியாது. ஆனால் ஆரோக்கியமான வழிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இப்பிரச்சனைகளைத்தடுக்கலாம்.
கற்பகலாம் ஆரோக்கியமாய் அமைய பத்து வழிகள்.
(இவை துண்டு பிரசுரத்தில் இருந்து சேர்க்கப்ட்ட தகவல்கள் )
1. சமவீத உணவை உட்கொள்ளல்:பாண், தானிய வகைகள், பழவகைகள், காய்கறி வகைகள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை உண்ண வேண்டும்.
2. போலிக் அமிலம் மாத்திரைகள்:
நீங்கள் கற்பம் தரிக்க தீர்மானிக்கும் போதிலிருந்து கற்பம் தரித்து பன்னிரண்டாவது வாரம் வரை தினமும் 400 அப மாத்திரையைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும். முதுகெலும்பில் ஏற்படும் குறைபாட்டைத் தடுக்க போலிக்கமிலம் உதவுவதால் சுகாதார அமைப்புக்களில் இதைச் சிபார்சு செய்து வருகிறார்கள். கீரை வகைகள், புறோக்கோழி, தானியங்கள் சேர்க்கப்பட்ட பாண், தானியங்கள் மற்றும் மாமையிற் போன்ற உணவுகள் போலிக் அமிலம் நிறைந்தவையாகும்.
3. தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்கள்:
மென்மையான பதப்படுத்தப்படாத பாற்கட்டிகள்(ஸீஸ்), நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சி, அவிக்கப்படத முட்டை போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் லிஸ்டீயா, சால்மனெல்லா போன்ற கிருமிகளால் பரவும் நோய்களைத் தடுக்கலாம். விற்றமின் ஏ மாத்திரைகள் மற்றும் ஈரல் போன்ற விற்றமின் ஏ நிறைந்த உணவுப்பொருட்களை தவிர்ப்பதன் மூலம் குழத்தைக்கு பிறப்பில் ஏற்படும் குநைபாடுகளைத் தடுக்கலாம்.
4. ஓய்வுக்காக நேரம் ஒதுக்குங்கள்:
சிறிது நேரமேனும் ஓய்வு எடுக்காமல் வேலை செய்யின் குறைமாதப்பிரசவமாக வாய்ப்பிருக்கிறது. ஆகவே கற்பிணிகள் ஓய்வு எடுப்பது அவசியமாகும். தியானம், யோகாசனம் போன்றவை உங்களுக்கும், உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் சிறந்ததாகும். தினமும் எளிய உடற்பயிற்கிகளைச் செய்வதன் மூலம் உற்சாகமாக இருப்பதுடன் இலகுவில் பிரவசமாகவும் உதவும். (சிலருக்கு தவிர்க்க முடியாத சில காரணங்களால் உடற்பயிற்சியைத் தவிர்க்கும்படி மருத்துவர் ஆலோசனை கூறி இருப்பின் தவிர்க்கலாம்.)
5. தவிர்க்கவேண்டிய மருந்துகள்:
கற்பகாலத்தின் போது மருத்துவரின் ஆலோசனையின்றிக் கடைகளிலே வாங்கி மருந்துகள் ஏதும் உட்கொள்ளக் கூடாது. நீங்கள் நீண்டகால மருந்து உபயோகிப்பவராயின் கற்பம் தரித்துவிட்டதாகத் தெரிந்தவுடனேயே மருத்துவரின் ஆலோசனையைப் பொறுவது மிகவும் அவசியம். போதை மருந்துகளுக்கு அடிமையாய் இருப்பவராயின் உங்கள் குழந்தையையும் அம்மருந்துக்கு அடிமையாக்குவது மட்டுமல்ல அக்குழந்தையின் இறப்புக்கும் காரணமாகிவிடுவீர்கள். எனவே அப்பழக்கம் இருப்பவர்கள் நிறுத்தவேண்டும்.
6. மருத்துவரை உடனே அணுகவேண்டிய நிலைகள்:
உங்கள் உடல்நலனைப்பற்றி ஏதேனும் சந்தேகம் ஏற்படினும், யோனிமடல் வழியே குருதி அல்லது நீர் கசிதல், கை கால் முகம் வீக்கம், பார்வையில் ஏதேனும் மாற்றம் அல்லது அதிக ஒளி வீசுவது போன்ற உணர்வு, வயிற்றுவலி அல்லது தலைவலி முதலிய அறிகுறிகள் காணப்படின் உடனே மருத்துவரை அணுகவும்.
7. டோக்சோ பிளாஸ்மோசிஸ்
இது ஒரு ஒட்டுண்ணியால் ஏற்படும் நோய். இந்நோய் கற்பகாலங்களில் ஏற்படின் குழந்தைக்குப் பலவகை உடற்கோளாறுகளை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, தோட்ட வேலைகள் செய்யும்போது புனையின் எச்சம் கைகளில் படாமல் இருக்க கை உறைகளை அணியுங்கள். நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சியினை உண்ணாதீர்கள்.
8. பரிசோதனை நேரம்:
கற்பகாலத்தின்போது மருத்துவரும் தாதியும் சில பரிசோதனைகள் செய்வதற்காக உங்களை அழைப்பார்கள். இதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர்க்காதீர்கள். இப்பரிசோதைனைகள் செய்வதன் மூலம் உங்கள் உடலிலும் உங்கள் குழந்தைக்கு ஏற்படக்கூடிய பல பிர்சனைளக் முற்கூட்டியே கண்டறிந்து நிவர்த்ர்தி செய்ய வாய்ப்பிருக்கின்றது.
9. மது அருந்துவதைக் குறைக்க வேண்டும்:
அதிக அளவில் மது அருந்தினால் குழந்தையின் மூளை பாதிக்கப்படும். அதனால் ஒன்று அல்லது இரண்டு அலகளவே (யுனிட்) அனுமதிக்கப்பட்டுள்ளது. (ஒரு யுனிட் என்பது அரை பயின்ட் பீயர் அல்லது ஒரு திராட்சைரசக் கிண்ணம்(வயின்) அளவு என அளவிடப்படும்.
10. புகை பிடித்தலை தவிர்த்தல்:
எமது கலாசாரத்திற்கு அப்பாற்பட்டதாயினும் மேலைநாடுகளில் வாழ்ந்து வரும் நாம் இதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். கற்பம் தரிக்க வேண்டும் என தீர்மானிக்கும் போதே புகை பிடிப்பதை நிறுத்திவிடுவது நன்று. இல்லையேல் குறைப்பது மிகவும் அவசியம். புகைபிடித்தலினால் குழந்தைக்கு ஆபத்து மட்டுமன்றி குறைமாதப்பிரசவம் ஆகவும் வாய்ப்பிருக்கின்றது.
மேலும் சில துணுக்குகள்:
1. நீங்கள் எங்கு செல்வதானாலும் உங்கள் கைப்பைக்குள் கற்பகால கையேட்டை எடுத்து செல்ல மறவாதீர்கள். இது ஏதும் பிரச்சனைகள் வந்தால் எந்த ஒரு மருத்துவரும் உங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.
2. முதல் மூன்று மாதங்கள் வரை அதிகாலையில் வாந்தி வருவது வளக்கமான ஒரு அறிகுறியாகும். வாட்டிய பாண், கிரக்கர் பிஸ்கட், உலர் தானிய வகைகள்(சீரியல்) போன்ற உணவுகளைக் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக உட்கொண்டால் வாந்தி குறையும். உணவுகளை சிறிய அளவில் அடிக்கடி உண்ணுவதாலும் பொரித்த உணவுப் பதார்த்தங்களை தவிர்ப்பதாலும் வாந்தியைக் கட்டுப்படுத்தலாம்.
3. நீங்கள் கற்பம் தரித்த நாள் முதல் உங்கள் குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை உங்களுக்கு மருத்துவச் செலவும் பல் வைத்தியச் செலவும் இலவசமாக அளிக்கப்படும் என்பதை ஞாபகத்தில் வைத்து அதைப் பயனபடுத்தலாம்.
4. சிறு வயதில் ருபெல்லா தடுப்புசி போடப்படாமல் இருப்பின் நீங்கள் கற்பமாக வேண்டும் என தீர்மானிக்கும் முன்னே உங்கள் மருத்துவரை அணு;கி தடுப்புசியைப் பெற்றுவிட்டு கற்பமாவது அவசியம்.
5. கற்பகாலத்தின் போது அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவருடன் தொடர்பு ஏற்படின் உடனடியாக மருத்துவரை அணுகி உங்கள் உடலில் அந்த நோயை எதிர்க்க, எதிர்ப்பு சக்தி இருக்கிறதா? என்பதை இரத்தப் பரிசோதனை செய்து அறிய வேண்டும்.
ஆணின் பங்கு என்ன?ஒரு குழந்தையை உருவாக்க ஆணின் பங்கும் அவசியம் என்பது மறுக்க முடியாத உண்மை. இது முழுமை பெற ஆண்களும் பின்வருவனவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.
1. நல்ல ஆரோக்கியமான உணவு
2. புகைபிடிப்பதைத் தவிர்த்தல் – புகை பிடிப்பின் ஆரோக்கியமான அணுக்கள் உருவாகாது.
3. மது அருந்துவதில் அளவைக் குறைத்தல்
4. இறக்கமான உள்ளாடைகள், அதிக வெப்பமான நீரில் குளித்தல், சில மருந்து வகைகளைத் தவிர்த்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
ஆக்கம்:- டாக்டர் சியாமளா சுந்தரலிங்கம்
தமிழாக்கம்: டாக்கர் நிலானி நக்கீரன்
நன்றி:-வடலி சஞ்சிகை-UK

கர்ப்பத்தின் போது இரத்தப்போக்கு எதனால்..?

கருவுற்றிருக்கும் போது பயணங்களை, குறிப்பாக வெளியூர்ப் பயணங்களைப் பெண்கள் தவிர்த்துவிடுவது நல்லது. காரணம், இதுபோன்ற சமயங்களில் சில பெண்களுக்கு ரத்தப்போக்கு அதாவது Threatened Abortion எனும் நிலை உண்டாகலாம். அதுபற்றி இப்போது விளக்கமாகச் சொல்கிறேன்.
கருவுற்றிருக்கும் ஆரம்ப மாதங்களில் சில பெண்களுக்கு ரத்தப்போக்கு ஏற்படுவதுண்டு. அதுபோலதான் ரஞ்சிதாவுக்கும் ஏற்பட்டது. சென்ற செப்டம்பர் 10_ம் தேதிதான் அவளுக்குக் கடைசியாகப் பீரியட்ஸ் வந்தது. அக்டோபர் 21_ம் தேதி என்னிடம் வந்தவளுக்கு யூரின் டெஸ்ட் செய்து பார்த்ததில் அவள் தாய்மை அடைந்திருந்தது உறுதியானது. அதைத் தொடர்ந்த சில நாட்களில் கர்ப்பமுற்றதற்கான தலைசுற்றல், வாந்தியெடுத்தல் போன்ற அத்தனை அறிகுறிகளும் அவளிடம் தென்பட, அந்தக் குடும்பம் சந்தோஷப்பட்டது. அதுவும் ரஞ்சிதா _ சிவகுமார் தம்பதியருக்கு அது முதல்குழந்தை எனும்போது சந்தோஷத்துக்கு சொல்லவும் வேண்டுமா…
எதிர்பாராதவிதமாக சில நாட்களில் (நவம்பர் 11) அவளுக்கு சிறுசிறு துளிகளாக ரத்தப்போக்கு ஏற்பட்டது. பின் ஓரிரு நாட்களில் அது நின்றுபோனது. மீண்டும் அடுத்தமாதம், அதாவது டிசம்பர் 9_ம் தேதியும் அவளுக்கு முன்பு போலவே ரத்தப்போக்கு ஏற்பட…. பதறிப்போனது குடும்பம். பதற்றத்தோடு என்னை அணுகியதும் ரஞ்சிதாவுக்கு ஸ்கேன் செய்து பார்த்தேன். கரு எந்த பாதிப்பும் இல்லாமல் நார்மலாக இருப்பது தெரியவந்தது.
பீரியட்ஸ் சமயத்தில், கருவுற்ற சில பெண்களுக்கு இதுபோல ரத்தப்போக்கு ஏற்படும். இதற்குக் காரணமுண்டு. கரு உண்டாகி, வளரும்போது அது பெரும்பாலும் கருப்பையை இடைவெளியே இல்லாமல் அடைத்தபடி நின்றுவிடும். அப்படி உருவாகும் கரு, கர்ப்பப்பையை முழுவதுமாக அடைத்துக் கொள்ளாமல் சிறு இடைவெளி விட்டு நிற்கும்போதுதான் இதுபோல ரத்தப்போக்கு ஏற்படுகிறது.
பாதிப்பு ஏதும் உண்டா?
இதனால் பெரிய பாதிப்பு ஏதுமில்லை என்பதால் பயப்படத் தேவையில்லை. கருத்தரித்த ஒரு சில மாதங்களில் எல்லாம் சரியாகிவிடும். இந்த ரத்தப்போக்கின்போது பெரும்பாலும் வலி இருப்பதில்லை. என்றாலும் ரத்தப்போக்கு ஏற்படத் தொடங்கியதுமே மருத்துவரை அணுகுவதுதான் சிறந்தது. காரணம் அது அபார்ஷன்தான் என்பதையோ, சாதாரண ரத்தப்போக்குதான் என்பதையோ அவரால்தான் உறுதிபடச் சொல்லமுடியும். மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் ஒரு ஸ்கேன் செய்து பார்த்துவிட, தேவையற்ற பயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.
சில மருத்துவர்கள் இதுபோன்ற ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த ‘எண்ணெய் ஊசி’ என்று பரவலாக அழைக்கப்படும் ஒருவித ஹார்மோன் ஊசி போட்டுவிடுவார்கள். இன்னும் சில சந்தர்ப்பங்களில் பேஷண்டோ அவருடைய சொந்தக்காரர்களோ கூட எண்ணெய் ஊசி போட்டுவிடச் சொல்லி எங்களிடம் கேட்பார்கள். இந்த ஊசி போடுவதால் எல்லாம் பெரிய பலன் இல்லை. உண்மையில் அபார்ஷன் ஆகப்போகிறதென்றால் அதை நம்மால் தடுத்து நிறுத்தமுடியாது. உருவான கருவில் சில சமயம் க்ரோமோசோம் (ஒருவருடைய தோற்றத்தையும் செயல்பாடுகளையும் நிர்ணயிக்கும் பொருள் இது!) குளறுபடிகள் உள்ளிட்ட சில பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம். அப்படிப்பட்ட கருவை மேற்கொண்டு வளரவிடாமல் இயற்கையே அழித்துவிடும் ஒரு வழிதான் அபார்ஷன். பாதிக்கப்பட்ட அதுபோன்ற கருவை மேலும் பொத்திப் பாதுகாக்காமல் வெளியே வரவிடுவதுதான் நல்லது.
தாம்பத்திய உறவின்போது ரத்தப்போக்கு வந்தால்…
கருவுற்றிருக்கும் சமயத்தில் கணவருடன் உறவு வைத்துக் கொள்ளும்போது சில பெண்களுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு பயமுறுத்துவதுண்டு. இதுவும் அபார்ஷன்தானோ என்று நினைத்து பயந்துவிடாதீர்கள். கருவுற்றவுடன் கர்ப்பப்பையின் வாயில் பகுதி மிகவும் மிருதுவாகிவிடும். அந்தப் பகுதியில் அதிகப்படியான ரத்தம் தேங்கி நிற்கும். உறவு கொள்ளும்போது இந்தப் பகுதியில் உராய்வு ஏற்பட்டு அதனால் அந்த மிருதுப் பகுதியிலிருந்து ரத்தக் கசிவு ஏற்படலாம். இதனால்தான் இப்படி ஏற்படுகிறது என்பது புரியாமல் சிலர் அபார்ஷன் ஏற்பட்டுவிட்டதாகப் பதறிப்போவார்கள். இதையெல்லாம் தவிர்க்கத்தான் கருத்தரித்த ஆரம்ப நாட்களில், உறவு கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ரத்தப்போக்கு ஏற்படுவதால் வேலையே செய்யாமல் பெண்கள் பெட் ரெஸ்டில் இருக்கவேண்டும் என்பதில்லை. பயணங்களைத் தவிர்த்துவிட்டு வழக்கம்போல வீட்டு வேலைகள் செய்யலாம். வேலைக்குப் போகும் பெண்கள் ஓரிரு நாட்கள் லீவு எடுத்துக் கொண்டு பிறகு புத்துணர்ச்சியுடன் மீண்டும் வேலைக்குச் செல்லலாம்.
மசக்கை வாந்தி ஏன்?
கருவுற்ற சில மாதங்களுக்குப் பெண்கள் சர்வகாலமும் வாந்தி எடுப்பது நாம் எல்லோரும் அறிந்ததே. இந்த மசக்கை வாந்தி எதனால் ஏற்படுகிறது என்பதை யாராலும் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. ‘குழந்தைக்கு நிறைய முடி இருந்தால் வாந்தி அதிகமா வருமாம்!’ என்ற பொதுவான நம்பிக்கைகளிலும் அறிவியல் உண்மைகள் இருப்பதாகத் தெரியவில்லை. இது சற்றே வருத்தி எடுக்கும் அறிகுறிதான் என்றாலும் கரு நன்றாக இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லும் நல்ல அறிகுறி இது. இந்த மசக்கை வாந்தி பிரச்னையை சில மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்திவிடலாம்.
மசக்கைக்கு மாத்திரை சாப்பிடலாமா?
‘மாத்திரையெல்லாம் போட்டால் குழந்தை கலைஞ்சிடும். கை, கால் விளங்காமல் பிறக்கும்’ என்று சிலர் பயமுறுத்துவார்கள். இந்த பயத்துக்குக் காரணம் உண்டு. பல வருடங்களுக்கு முன் மசக்கை வாந்தியைக் கட்டுப்படுத்த Thalidomide எனும் மாத்திரையை வெளிநாட்டவர் கண்டுபிடித்து அதை விற்பனைக்கும் கொடுத்தார்கள்.
மாத்திரையும் கச்சிதமாக செயல்பட்டு வாந்தியைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. ஆனால், மாத்திரை சாப்பிட்ட பெண்களின் குழந்தைகள், கை கால் சரியான வளர்ச்சி பெறாமல் பிறப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்புறம் அந்த மாத்திரை மார்க்கெட்டில் காணமல் போனது வேறு விஷயம். அந்த சரித்திரத்தை மறக்காதவர்கள்தான் இன்றைக்கும் மசக்கை வாந்திக்கு மாத்திரை போடக்கூடாது என்கின்றனர்.
வாந்தியைக் கட்டுப்படுத்த இன்று கடைகளில் கிடைக்கும் மாத்திரைகள் முற்றிலும் பாதுகாப்பானவைதான். என்றாலும், எந்தவித மாத்திரையையுமே மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில்தான் போட்டுக் கொள்ளவேண்டும்.
ஸ்கேன் ஏன் செய்யவேண்டும்?
‘குழந்தை நல்லாதான் வளருதானு ஒரு ஸ்கேன் செய்து பாத்துட்டா போச்சு!’ என்று, படிப்பறிவில்லாத பேஷண்டுகள்கூட சர்வசாதாரணமாக ஸ்கேனிங் பற்றிப் பேசுமளவுக்கு, இன்று மக்கள் மத்தியில் அத்தனை பிரபலமாகிவிட்டது ஸ்கேனிங் கருவி. அல்ட்ரா சவுண்ட் எனும் ஒலி அலைகளை உடலில் செலுத்தி குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்க ஸ்கேனிங் உதவுகிறது. மனித காதுக்கு எட்டாத ஒலி அலைகளை உடலில் செலுத்தி, இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது.
கருவுற்ற பெண்ணுக்கு யூரின் டெஸ்ட் செய்து பார்த்து கர்ப்பத்தை உறுதி செய்வது வழக்கம். இன்று யூரின் டெஸ்டோடு ஒரு ஸ்கேன் செய்தும் பார்த்துவிடுகிறோம். கர்ப்பப் பையில்தான் கரு வளர்கிறது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால் சில நேரங்களில் கரு தப்பிதமாக கருக்குழாயில் வளர்ந்துவிடுதுண்டு. இதுபோன்ற பிரச்னைக்குரிய கேஸ்களை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டுபிடிக்கவும் ஸ்கேனிங் பயன்படுகிறது. பாதிக்கப்பட்ட கரு அபார்ஷன் கட்டத்தைத் தாண்டி வளர்வதைக் தடுக்கவும் ஸ்கேனிங் பயன்படுகிறது.
சிலருக்கு பீரியட்ஸ் ரெகுலராக வராது. இப்படிப்பட்டவர்களுக்கு குழந்தை பிறக்கப்போகும் தேதியை (Due date) துல்லியமாகக் கணிப்பது சிரமமாகிவிடும். இவர்களுக்கு ஸ்கேனிங் செய்து குழந்தையின் அளவு பார்த்து குழந்தை பிறக்கப்போகும் தேதியைத் துல்லியமாகச் சொல்லிவிட முடியும். பிறக்கப்போவது இரட்டைக் குழந்தையாக இருந்தால் அதற்கும் நம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள ஸ்கேனிங் உதவுகிறது.
ஒரு பெண் கருவுற்றிருப்பது உறுதியாகி 6_10 வாரங்களுக்குள் ஸ்கேன் செய்யலாம். பொதுவாகவே ஒருவருக்கு கர்ப்ப காலத்தின்போது வெவ்வேறு கட்டங்களில் மொத்தமாக மூன்று ஸ்கேன்கள் செய்து பார்த்தால் போதும். பிரச்னைக்குரிய கருவுக்கு டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் ஸ்கேன் செய்து பார்க்கும் எண்ணிக்கை கூடவோ குறையவோ செய்யலாம்.
எப்போதெல்லாம் ஸ்கேன் செய்வது?
முதல் ஸ்கேனை 8_10 வாரத்துக்குள் செய்யலாம். அடுத்ததாக 20_22 வாரங்களுக்குள் செய்யலாம். இந்த சமயத்தில் ஸ்கேன் செய்யும்போது மூளை, இதயம், கிட்னி போன்ற குழந்தையின் முக்கிய உடல்பாகங்களின் வளர்ச்சி துல்லியமாகத் தெரியும். மூன்றாவது ஸ்கேனை எட்டாவது மாதத்தில், அதாவது 32_34வது வாரங்களுக்குள் செய்துவிடலாம்.
எத்தனை ஸ்கேன் செய்து பார்த்தும் சில குழந்தைகள் ஒரு காது மடங்கியோ, சில விரல்கள் இல்லாமலோ அவ்வப்போது பிறப்பதுண்டு. ஸ்கேன் செய்து பார்த்தும் இப்படியாகிவிட்டதே என்று சிலர் மருத்துவர்களிடம் வருந்துவது உண்டு. சிலர் கோர்ட் படியேறுவதும் உண்டு. உண்மையில் ஸ்கேனிங் மூலம் ஒரு குழந்தை 100% நார்மலாக வளர்கிறது என்று சொல்லிவிடமுடியாது. இதற்குப் பல காரணங்கள் உண்டு.
சில சமயங்களில் கருவுற்றிருக்கும் பெண் ரொம்ப குண்டாக இருப்பதுண்டு. அப்படிப்பட்ட பெண்ணின் உடலுக்குள் அல்ட்ரா சவுண்ட் அலைகள் சரியாக நுழையமுடியாமல் போக வாய்ப்புண்டு. அப்படியாகும்போது சில பகுதிகள் துல்லியமாகத் தெரியாமல் போகலாம். மேலும் ஸ்கேன் செய்யும்போது குழந்தை படுத்திருக்கும் நிலையைப் பொறுத்துதான் ரிசல்ட் கிடைக்கும். குழந்தையின் இடதுபுறம் முழுமையாகத் தெரியும் சமயங்களில் வலது புறத்திலுள்ள சில தகவல்கள் பதிவு ஆகாமல் போக வாய்ப்புண்டு. இப்படி ஸ்கேன் ரிசல்ட் துல்லியமாக இல்லாமல் போக பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆணா, பெண்ணா தெரிஞ்சுக்க முடியுமா?
‘யு.எஸ்ல எல்லாம் அஞ்சாம் மாசமானதுமே குழந்தை ஆணா, பெண்ணானு சொல்லிடறாங்க தெரியுமா? நீங்க ஏன் அப்படிச் சொல்ல மாட்டேங்கறீங்க?’ என்று என்னுடைய சில பேஷண்டுகள் கேட்பதுண்டு. யு.எஸ். போன்ற வளர்ந்த நாடுகளில் குழந்தை ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அதை சந்தோஷத்துடனேயே பெற்றுக் கொள்பவர்கள்தான் அதிகம். நம் நாட்டில் அப்படி ஒரு நிலைமை இல்லையே… ஆண் குழந்தையென்றால் பெற்றெடுப்பதில் ஆர்வமாக இருக்கும் சில பெற்றோர், பெண் குழந்தை என்றதும் அதை அழிக்கத் துடிக்கின்றனர். அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்ததால்தான் அரசாங்கம் Sex Determination¬ò யை (குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிதல்) தடைசெய்துள்ளது.
உண்மையில் சுமந்து கொண்டிருக்கும் அந்தக் கரு ஆணா, பெண்ணா என்று, அந்தப் பத்து மாதமும் பொறுத்திருந்து பார்ப்பதில்தான் த்ரில்லே இருக்கிறது. இது அனுபவசாலிகளுக்கு மட்டுமே புரிந்த விஷயம்…
Dr.ஜெயசிறீ
சந்திப்பு: ஜி. கிருஷ்ணகுமாரி
nantri – Kumutham

கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க………….

இன்றைய பெண்கள் கருவுறும்போதே குழந்தையோடு சில கேள்விகளையும் சேர்த்தே சுமக்கிறார்கள். அவற்றுள் முக்கியமானது, ‘அபார்ஷன் அபாயம்’ குறித்த அவர்களின் சந்தேகங்கள். அவற்றைப் போக்கும் விதமாக இங்கே தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் அரசு மகப்பேறு மருத்துவரான திருமதி. சி.பரிமளா, ‘அபார்ஷன் என்பது நன்மை தீமை இரண்டும் சமவிகிதத்தில் சேர்ந்து செய்யப்பட்ட கலவை’ என்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து…
அபார்ஷன் என்றால் என்ன?
ஒரு பெண் தாயாகும் விஷயம் மிக அற்புதமானது. பலவித கனவுகளுடன் தனது கருவை, தாயானவள் நேசிக்கத் தொடங்குகிறாள். ஆனால் விதிவசத்தால் எல்லா பெண்களாலுமே குழந்தையைப் பெற்றெடுக்க முடிவதில்லை. சிலரால், சில காரணங்களால் கருவைச் சுமக்க முடியாமல் போகிறது. அந்தக் கருவானது குழந்தையாக முழு உருவத்தை அடையும் முன்பே, அதாவது 28 வாரங்களுக்குள் தானாகவோ அல்லது மருத்துவ முறையிலோ தாயை விட்டுப் பிரியும் நிகழ்வைத்தான் ‘அபார்ஷன்’ என்கிறோம்.
அபார்ஷனை வகைப்படுத்த முடியுமா?
முடியும். அபார்ஷனை மருத்துவ முறையில் மூன்று விதமாக வகைப்படுத்தலாம். அவை…
1. தானாக ஆகும் அபார்ஷன் (Spontaneous)
2. எம்.டி.பி. (Medical Termination Pregnancy)
3. செப்டிக் அபார்ஷன்
தானாக ஆகும் Spontaneous அபார்ஷனில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றாய் பார்ப்போம்…
பொய்த்தோற்ற அபார்ஷன் (Therater abortion):
உண்மையில் இது அபார்ஷன் இல்லை. ஆனால் அபார்ஷன் போன்று தோற்றமளிக்கும். திடீரென்று ரத்தப்போக்கு இருக்கும். ஆனால் அபார்ஷன் நடந்திருக்காது. காரணம், கருப்பை வாய் (Cervics) மூடி இருப்பதுதான். இதுபோன்ற சமயங்களில் மகப்பேறு மருத்துவரிடம் காட்டி, தேவையான ஓய்வு எடுக்க வேண்டும். பிறகு சரியாகிவிடும்.
தவிர்க்க இயலாத அபார்ஷன் (Inevitable Abortion):
இந்த வகையில் கருவானது திடீரென்று கருப்பையின் வாய் திறந்து வெளியேறலாம். ரத்தப்போக்கு இருக்கும். இத்தகைய சூழலில் கருவகத்தை முழுவதும் சுத்தப்படுத்தப்பட வேண்டும். தேர்ந்த மகப்பேறு மருத்துவரை அணுகுவது நல்லது.
அரைகுறை அபார்ஷன் (Incomplete Abortion) :
கருவானது முழுவதுமாக வெளிவராமல் அரைகுறையாக மட்டுமே வெளியேறும். மீதம் கருப்பையிலேயே தங்கிவிடும். இந்நிலையில் கரு முழுவதும் வந்துவிட்டதாக தவறாக நினைத்து அப்படியே விட்டுவிடுவது மிகவும் ஆபத்தானது. மகப்பேறு மருத்துவரிடம் சென்று, கருவகத்தை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் முழுவதுமாக வெளிவராத கருவின் பிசிறுகள் தங்கி, இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு நிலைமை சிக்கலடையும்.
முழுமையான அபார்ஷன் (Complete Abortion):
இம்முறையில் கருவானது கருவகத்தை விட்டு முற்றிலுமாக வெளிவந்துவிடும். இப்படி முழுவதும் வந்தால், தனியாக மீண்டும் சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் அப்படி முழுவதும் வெளிவந்துவிட்டதா என்பதை மகப்பேறு மருத்துவரிடம் சென்று சோதனை செய்து பார்த்துக்கொள்வது நல்லது.
அடிக்கடி ஏற்படும் அபார்ஷன் (Habitual Abortion):
இது பெரும்பாலும் கரு உருவான மூன்றாவது மாதத்திலிருந்து ஆறாவது மாதத்துக்குள்தான் ஏற்படும். இதுபோன்று பெண்களுக்கு அடிக்கடி அபார்ஷன் ஏற்பட பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
1. கரு, கருப்பையில் சரியான முறையில் தங்காததால்.
2. கரு, சரியான வளர்ச்சி பெறாததால்.
3. கருப்பையின் வாய் திறந்திருந்தால்.
இதுபோன்று ஏற்பட சாத்தியக்கூறுகள் அதிகம்.
அடுத்து வி.ஜி.றி. எனப்படும் Medical Termination of Pregnancy பற்றிப் பார்ப்போமா?
ஒரு பெண்ணுக்கு மருத்துவ முறையில் அபார்ஷன் செய்வதைத்தான் வி.ஜி.றி. என்கிறோம். சில_பல காரணங்களால் தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தையின் உடலுறுப்புகள் சரியாக வேலை செய்யாமல், சமயத்தில் சரிப்படுத்த முடியாத நிலையில் காணப்படும். இதுபோன்ற சூழலிலும், அம்மா சாப்பிட்ட மருந்துகளால் கருவான குழந்தைக்கு கிட்னி, மூளை, இதயம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்ட சூழலிலும், வி.ஜி.றி. சிபாரிசு செய்யப்படுகிறது. இன்னும் சில நேரங்களிலும் இந்த முறையில் அபார்ஷன் செய்யப்படுகிறது. அவை…
1. மரபணுக்கள் தொடர்பான நோயால் குழந்தை தாக்கப்பட்டிருக்கும்போது…
2. பிளசண்டாவில் ஏற்படும் பிரச்னைகளால்…
3. பனிக்குடத்தில் தண்ணீர் அதிகப்பட்டு விடும்போது…
4. ஒன்றுக்கு மேற்பட்ட சிக்கலான கருக்கள் வளரும்போது…
5. வைரல் இன்பெக்க்ஷன்களால் தாய் தாக்கப்படும்போது…
6. மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களால் தாய் பீடிக்கப்படும்போது…
7. மனஅழுத்த நோய்களால் தாய் அவதியுறும்போது…
செப்டிக் அபார்ஷன்
சுகாதாரமின்மையால் ஏற்படுவதுதான் இந்த செப்டிக் அபார்ஷன். உதாரணமாக திருமணமாகும் முன்பே தவறான பழக்க வழக்கங்களால் கர்ப்பமாகிவிடும் சில பெண்கள், மருத்துவரிடம் செல்ல பயந்து சமயத்தில் எருக்கங்குச்சியை கருக்கலைக்க பயன்படுத்துவார்கள். இதுபோன்ற சுகாதாரமில்லாத கருப்பை சுத்தப்படுத்தும் செயல்களால் உண்டாவதுதான் இந்த செப்டிக் அபார்ஷன். இப்பழக்கம் கிராமங்களில மிக அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால் இது மிகவும் ஆபத்தான ஒன்று. இதனால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் பாதிப்புகள் நிறைய.
1. கருக்குழாய் அடைப்பால் திருமணத்திற்குப் பின்பு குழந்தையில்லாமை,
2. கருப்பையில் ஓட்டை உண்டாகுதல்,
3. உதிரப்போக்கு ஏற்பட்டு இரத்தம் உறையாத தன்மை உண்டாகுதல் போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
அபார்ஷன் ஏற்பட பொதுவான காரணங்கள் என்னென்ன?
1. கருப்பையில் கரு சரியாக உருவாகாத பட்சத்தில் அபார்ஷன் தானாகவே ஏற்பட்டு விடும்.
2. கருப்பையின் பொசிஷன் சில பெண்களுக்கு ஏடாகூடமாக அமைந்திருப்பதால் அபார்ஷன் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
3. இரட்டைக் கருப்பை இருப்பதனாலும் அபார்ஷன் அவசியம்ஏற்பட்டு விடுகிறது.
4. கருப்பையில் ஃபைபிராய்டு கட்டிகள் தோன்றுவதால் அபார்ஷன் வலியுறுத்தப்படுகிறது.
5. தொற்று நோய்களால் பாதிக்கப்படும்போது அபார்ஷன் கட்டாயமாகிறது.
6. சில குறிப்பிட்ட நோய்களுக்கு (கேன்சர், இதய பாதிப்பு) எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கூட அபார்ஷனை அதிகப்படுத்துகின்றன.
7. மனநலக் கோளாறுகள் அபார்ஷனில் கொண்டுபோய் விட்டு விடுகின்றன.
8. நாகரிக மோகத்தால் பெண்கள் புகை பிடிப்பதும், மது அருந்துவதும், புகையிலை போன்ற போதை வஸ்துகளை எடுத்துக் கொள்வதும் அபார்ஷனை வலிந்து அழைக்கும் காரணிகள்.
அபார்ஷன் அபாயத்தைத் தவிர்ப்பது எப்படி?
1. கர்ப்பம் என்று உறுதியான உடனேயே கணவன்_மனைவி இருவரும் தாம்பத்ய உறவை நிறுத்திவிட வேண்டும். இதன் மூலம் கரு பாதிப்படையாமல் இருக்கும்.
2. அதிக களைப்பு தரக்கூடிய பணிகளைப் பார்க்காதிருத்தல் நல்லது. கூடவே நல்ல தூக்கமும், ஓய்வும் தேவை.
3. கூடிய மட்டும் நோய்கள் அண்டாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மீறி நோய் தாக்கும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் சுய வைத்தியம் கூடாது.
4. குறைந்தது கர்ப்பம் தரித்த மூன்று மாதத்திற்காவது பயணங்களைத் தவிர்ப்பது நலம்.
5. நல்ல ஊட்டச்சத்து மிகுந்த, போஷாக்கான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
6. உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதனை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
7. முதல் மூன்று மாதங்களில் அபார்ஷன் ஆபத்து அதிகமென்பதால் எடை அதிகமான பொருட்களைத் தூக்குதல் கூடாது. வீணாக உடலை வருத்திக்கொள்ளக் கூடாது. குறிப்பாக, மன இறுக்கமின்றி காணப்பட வேண்டும்.
இந்த வழிமுறைகளை விழிப்புணர்ச்சியோடு தாய்மார்கள் ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே போதும், அபார்ஷனை முடிந்தவரை தடுத்து விடலாம். முன்னெச்சரிக்கை ஒன்றுதான் எப்போதும் நம்மை இன்னல்களிலிருந்து காப்பாற்றும். கர்ப்பகால மகளிருக்கும் அதுதான் முக்கிய தேவையாக இருக்கிறது

கருவிலிருக்கும் குழந்தையின் முக்கிய குறைபாடுகளைத் தெரிந்து கொள்வது எப்படி?

ஒரு பெண், கர்ப்பமுற்று அவள் குழந்தை பெற்றுக் கொள்ளும் வரையான காலத்தை மூன்று பகுதிகளாக நாங்கள் பிரித்துக் கொள்வோம். ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட சில டெஸ்ட்டுகள் செய்துபார்த்து அதன் மூலம் பிறக்கப்போகும் குழந்தைக்கு ஏதும் குறையிருக்கிறதா என்று கண்காணிப்போம்.
பேறுகாலத்தின் முதல் பகுதியில் செய்யப்படும் முக்கியமான பரிசோதனைகளில் ரத்தப் பரிசோதனையும் ஒன்று. இந்தப் பரிசோனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரத்த சோகை உள்ளதா, சர்க்கரை நோய் இருக்கிறதா என்பது போன்ற முக்கியமாக சில விஷயங்களைப் பார்த்து அதை சரிசெய்ய சிகிச்சை மேற்கொள்வோம்.
சர்க்கரை நோய் என்பது இந்த சமயத்தில் சில பெண்களுக்கு மரபு ரீதியாகவோ, முதல் பிரசவத்தில் பிறந்த குழந்தையின் எடை 4 கிலோவுக்கு மேல் இருந்தாலோ, வரலாம். தாய்க்கு சர்க்கரை நோய் இருந்தால் அது குழந்தைக்கு பலவித குறைபாடுகளை உண்டாக்கும் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதனால் இந்தப் பிரச்னை உள்ள பெண்களுக்கு குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்டை பேறு காலத்தின் முதல் பகுதியிலேயே அவசியம் செய்து பார்ப்போம்.
இன்னும் இதுபோன்ற பல நுணுக்கமாக விஷயங்களையும் கூட ரத்தப் பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியும். இதில் மிக முக்கியமான ஒன்று கர்ப்பிணிப் பெண்ணின் ரத்தத்தில் Rhyping ஐ கண்டுபிடிப்பது. இதுபற்றி விரிவாகப் பார்க்கும் முன் இன்னொரு தகலைத் தெரிந்து கொள்ளுங்க…
நம் ரத்தத்தில் கி, ஙி, ளி என்று சில வகைகள் இருப்பது மட்டுமே நமக்கு இதுவரை தெரிந்திருந்தது. ஆனால் இன்றோ பல ஆராய்ச்சிகளின் முடிவாக டஃப் கெல்லி என்று ரத்தத்தில் இன்று வேறு பல குரூப்களும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். இதில் Rhyping என்பது எங்கே வந்தது என்று பார்ப்போம்.
சில வருடங்களுக்கு முன்பு வரை ஒரே குரூப் ரத்தம் கொண்ட சிலருக்கு ரத்ததானம் செய்யும்போது அது பொருந்தாமல் போய் வேறு வகையான ரியாக்ஷன்கள் கொடுத்துக் கொண்டிருந்தது. இருவருக்கும் ஒரே குரூப் ரத்தமாக இருந்தும் ஏன் இப்படி ஆகிறது என்று ஆராய்ச்சி செய்தார்கள். அப்போது Rhyping என்கிற ஒரு விஷயமே மருத்துவ உலகுக்குத் தெரிய வந்தது. இது ரத்த குரூப்களில் இன்னொரு சப் பிரிவு. நூறு நபர்களில் 35 பேருக்கு ஸிபி பாஸிடிவ் ஆகவும், மீதமிருப்பவர்களுக்கு ஸிபி நெகடிவாகவும் இருக்கும். சரி இந்த சுhலிiபெ க்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
உதாரணமாக கர்ப்பமடைந்த ஒரு பெண்ணின் ரத்தம் ஸிபி நெகடிவ் ஆக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவருடைய கணவரின் ரத்தம் ஸிபி பாஸிடிவ் ஆக இருந்தால் பிறக்கப்போகும் குழந்தை பெரும்பாலும் ஸிபி பாஸிடிவ் ஆகத்தான் இருக்கும். இப்படிப்பட்ட நிலையில் தனக்கு சம்பந்தமில்லாத ஒரு வகை ரத்தம் உடலில் இருப்பதை உணரும் அம்மாவின் உடல் அதை எதிர்க்கும் விதமாக எதிர்ப்பு அணுக்களை உருவாக்கத் தொடங்கும் இந்த அணுக்கள் அம்மாவின் உடலிலிருந்து குழந்தையின் உடலுக்குப் போய் மெதுவாக குழந்தையின் ரத்த அணுக்களை செயலிழக்கச் செய்யும். இதன் காரணமாக குழந்தைக்கு இதயக் கோளாறுகள் உண்டாகலாம். உடம்பெல்லாம் நீர் கோர்த்துக் கொள்ளக்கூடிய பிஹ்பீக்ஷீஷீஜீள திஷீமீவணீறீவீள என்கிற நிலை ஏற்படலாம். குழந்தையின் நார்மலான வளர்ச்சி பாதிக்கப்படலாம். சில சமயம் குழந்தை இறக்கக் கூட நேரலாம்.
Rhyping பற்றிய இந்தத் தகவல்களைப் படித்ததுமே பயந்து போய் விடாதீர்கள். பொதுவாகவே இதனால் முதல் குழந்தைக்குப் பெரிய பாதிப்பு ஏற்படுவதில்லை. முதல் குழந்தையால் தாயின் உடலில் உருவாகும் எதிர்ப்பணுக்குள், இரண்டாம் அல்லது அதன் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்குத்தான் பெரும்பாலும் பாதிப்பு ஏற்படுத்தும். இந்தப் பிரச்சினையை முன்கூட்டியே தெரிந்துகொண்டால் அதை சரி செய்துவிடலாம். இதுபோன்ற மேலும் பல முக்கிய தகவல்களை அறிந்துகொள்ள உதவுவதால்தான் நாம் கருத்தரித்த உடனேயே ரத்தப் பரிசோதனை செய்கிறோம்.
அம்மாவின் ரத்தம் Rhyping நெகடிவ் ஆக இருந்தால் மட்டும்தான் பிரச்னை. அதுவே அப்பாவின் ரத்தம் ஸிபி நெகட்டிவாக இருந்து அம்மாவின் ரத்தம் ஸிபி பாஸிடிவ் ஆக இருந்தாலோ இரண்டு பேருக்குமே ஸிபி நெகடிவ் ஆக இருந்தாலோ பிரச்னை இல்லை.
ஸிபி நெகடிவ் ஆக இருக்கும்போது அம்மாவுக்கு முதல் குழந்தை ஸிபி பாஸிடிவ் ஆக பிறக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் பிரசவமான எழுபத்தியிரண்டு மணி நேரத்துக்குள் தாய்க்கு Antid Immuni Globulin என்கிற ஊசியைப் போட்டு விட வேண்டும். இது கொஞ்சம் காஸ்ட்லியான ஊசி என்றாலும் இனி பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு ஆபத்து இல்லாமல் இருக்க இதை தாய்க்குக் கொடுத்தே ஆக வேண்டும்.
ஸிபி நெகடிவ் உள்ளவர்களுக்கு முதல் பிரசவம் ஆனால்தான் என்று இல்லை. அபார்ஷன் ஆனாலும்கூட, ஆன உடனே இந்த ஊசியை அம்மாவுக்குப் போட வேண்டும். கர்ப்ப காலத்தின் போது ரத்தக் கசிவு ஏற்பட்டாலும் கூட தாய்க்கு இந்த ஊசியைப் போடவேண்டும்.
முன்னெல்லாம் ஸ்கேன் என்பது பலருக்கும் அவ்வளவாகத் தெரியாத விஷயமாக இருந்தது. இன்று எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருக்கும் ஸ்கேன்_ஐ ஆரம்பத்தில் கருத்தரித்த 4_5 மாதங்கள் ஆனதும் தான் செய்து வந்தார்கள். ஆனால் இன்றோ கருத்தரித்த 10_12 வாரங்களுக்குள்ளாகவே ஸ்கேன் செய்கிறோம். காரணம் அதில் குழந்தையின் சில முக்கிய குறைபாடுகளைக் கண்டறிய முடியும்.
உதாரணமாக முதல் ஸ்கேன் செய்யும்போது குழந்தையின் கழுத்தின் பின்புற சதைப் பகுதியின் தடிமனைத் தெரிந்துகௌ;ள முடியும். அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் தடிமன் இவ்வளவுதான் இருக்கமுடியும் என்று ஒரு அளவு இருக்கிறது. அதற்கு அதிகமாகவே சதையின் அளவு இருந்தால் குழந்தைக்கு மரபு ரீதியாக சில குறைபாடுகள் இருக்கலாம் என்பது தெரியும். இதுபோன்ற சில குறைபாடுகளைக் கண்டறிந்து அதை நிவர்த்தி செய்யவோ அல்லது அந்தக் குழந்தையே வேண்டாம் என்று முன்கூட்டியே எடுக்கவும் கூட இந்த முதல் ஸ்கேன் உதவும்.
ஆனால் சில வீடுகளில் கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் ஸ்கேன் கூடவே கூடாது என்பார்கள். ஸ்கேனைத் தள்ளிப்போட்டால் அது பின்னால் பெரிய பிரச்சினைகளை உருவாக்கும்.
இது தவிர கர்ப்ப காலத்தின் இரண்டாம் பகுதியில் அதாவது 20_22 வாரங்களுக்குள் இன்னொரு ஸ்கேன் செய்து பார்ப்போம். இதற்குள் குழந்தையின் முக்கிய உறுப்புகள் நன்கு வளர்ச்சி பெற்றிருக்கும். இந்த ஸ்கேன் மூலம் வளர்ச்சி நார்மலாக உள்ளதா என்று பார்ப்போம். மூன்றாவது ஸ்கேன்_ஐ கர்ப்பகாலத்தின் மூன்றாம் பகுதியில் செய்து பார்ப்போம். இதை வைத்து மீண்டும் குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிப்போம்.
குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்க பொதுவாக இந்த மூன்று ஸ்கேன்கள் செய்வது வழக்கம். சிலர் அடிக்கடி ஸ்கேன் செய்து பார்க்கும் வசதியற்றவர்களாக இருப்பார்கள். இன்னும் சிலர் அடிக்கடி ஸ்கேன் செய்வதை (அது குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுத்திவிடுமென) விரும்பமாட்டார்கள். இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் கர்ப்பகாலத்தின் இரண்டாம் பகுதியில் ஒரு ஸ்கேன் செய்து கொண்டால் போதும்.
கர்ப்பமடைந்த விஷயம் மருத்துவரீதியாக உறுதிப்படுத்தப்பட்டதுமே மருத்துவரைச் சந்திப்பது நல்லது என்பது பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதிலிருந்து கருவுக்கு முப்பத்தி நான்காம் வாரம் ஆகும் வரை ஒவ்வொரு மாதமும் மருத்துவரை தவறாமல் சந்திக்க வேண்டும். இந்த ஒவ்வொரு சந்திப்பின்போதும் அம்மாவின் பி.பி., எடை எல்லாம் நார்மலாக உள்ளதா என்று சரி பார்ப்போம். மேலும் கர்ப்பப்பையின் அளவு மற்றும் வளர்ச்சி ஆகியவையும் சரியானபடி உள்ளதா என்று பார்ப்போம். ஒவ்வொரு காலகட்டத்தின்போதும் கர்ப்பப்பை இவ்வளவுதான் வளர்ச்சி பெற்றிருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். அதேபோல பனிக்குட நீரின் அளவையும் இந்த சமயத்தில் சரிபார்ப்போம்.
கர்ப்பகாலத்தின்போது அம்மாவின் உடல் எடை அதிகரிக்கவே மாட்டேன்கிறது என்று சில வீடுகளில் வருத்தப்பட்டுக் கொள்வார்கள். கருத்தரித்த முதல் மூன்று மாதங்களுக்கு சில பெண்களுக்குப் பெரிதாக வெயிட் போடாது. இதற்குக் காரணம், அதிகப்படியான வாந்தியும் அதன் காரணமாக தாய்க்கு உணவின் மீது ஏற்படும் வெறுப்பும்தான். ஆரம்பக்காலகட்டத்தில்தான் இந்தப் பிரச்னை தலைதூக்குமே ஒழிய, பிறகு எடை ஏறத்தான் செய்யும். கடைசி பத்து வாரங்களில்தான் குழந்தையின் எடை வேகமாகக் கூடிப்போகும். காரணம் இந்த சமயத்தில்தான் குழந்தையின் வளர்ச்சியும் அதிகப்படியாக இருக்கும். பிரசவ காலத்தின்போது மொத்தத்துக்கும் தாயின் எடை 9_12 கிலோ வரை கூடுவதுதான் சரி.
கர்ப்பகாலத்தின் போது அம்மாவின் பி.பி. நார்மலுக்கும் சற்றே குறைவாகத்தான் இருக்கும். இதனால் பயப்பட ஒன்றுமில்லை. அம்மாவின் உடலிலிருந்து குழந்தையின் உடலுக்கு ரத்தம் பாயும் நிகழ்வால் இப்படி இருக்கும். இது நார்மலான விஷயம்தான்.

பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா?

பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று சொல்லக் கூடாது என்று சட்டம் சொல்கிறது. இருந்தாலும், பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கக் கூடாதா என்று ஏங்கும் குடும்பங்கள் பல. ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுத்துப் பார்த்தால்தான் குழந்தை எது? என்பதை உறுதி செய்ய முடியும். ஆனால், காமசூத்ராவின் தந்தை வாத்சாயனாரோ, சில அறிகுறிகளை வைத்தே பிறக்கப் போகும் குழந்தையை அடையாளம் கண்டு விடலாம் என்கிறார். அவர் கூறுவது இதுதான்…
• பெண்ணின் மாதவிலக்கிற்குப் பிறகு ஒற்றைப்படை நாளில் உறவு கொள்ள பெண் குழந்தை பிறக்கும். இரட்டைப்படை நாளில் உறவு கொண்டால் ஆண் குழந்தை பிறக்கும்.
• கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆண் என்றால், கர்ப்பிணியின் வலது பக்கம் மார்பகம் பருத்துப் போய் காணப்படும். அந்த மார்பகத்தில் உள்ள பால் கலங்கலாகவும், வெண்மையாகவும் இருக்கும்.
• இதேபோல், அந்த கர்ப்பிணியின் சிறுநீர் முந்தைய நிறத்தை இழந்து பல நிறமாக மாறும். அத்துடன், குழந்தை தனது வயிற்றில் வலது பக்கம் இருப்பது போன்று அவளுக்குத் தோன்றும். அவள் படுக்கையில் இருந்து எழும்பும் போதும், அமரும் போதும் வலது கையையே ஊன்றுவாள். அவளது மார்பகப் பாலில் ஒரு துளியை எடுத்து தண்ணீரில் விட்டால் அது மிதக்கும்.
• கர்ப்பிணியின் இடது மார்பகம் பருத்துக் காணப்படுவதும், அவளது தேகத்தில் அதிக சோம்பல் ஏற்படுவதும், தின்பண்டங்கள் மீது ஆசை ஏற்படுவதும், அடிக்கடி பொய்ப்பசி தோன்றுவதும் பெண் குழந்தைக்கான அறிகுறிகளாகும். இதேபோல், அவள் படுக்கையில் இருந்து எழும்பும் போதும், உட்காரும போதும் இடது கையையே ஊன்றுவாள்.
-நெல்லை விவேகநந்தா

கர்ப்பிணிகளுக்கானக் குறிப்புகள்: முதல் 3 மாதங்கள்

சகோதரி அவர்களுக்கு நலமாக இருக்கிறீர்களா.உங்கள் நண்பி எப்படி உள்ளார்.
பொதுவாகவே குழந்தை உண்டான உடன் நம்முடைய உடலில் நிறைய மாற்றங்கள் வரும்.வாந்தி வருவது போல் இருக்கும் ஆனால் வராது
சில சமயம் வாந்தி வந்து கொண்டே இருக்கும் எதும் சாப்பிட முடியாது சாப்பிட்டால் உடனே வாந்தி வந்துவிடும்
நம்மால் சாதாரண சமயம் இருப்பது போல் இருக்க இயலாது அதும் முதல் 3 மாதங்கள் சொல்லவே வேண்டாம் ரெம்பவும் அசதியாக இருக்கும்.
சில சமயம் அதிகமாக தூக்கம் வரும் சில சமயம் தூக்கமே வராது இன்னும் இந்த மாதிரி நிறைய இருக்கும்.
இது கஷ்டமாக இருந்தாலும் ஒரு வித சுகம் ஏன் என்றால் எல்லாவிதமான கஷ்டத்தயும் தாங்கி கொண்டுதான் ஒரு தாய் குழந்தையையை பெற்று எடுக்கிறாள்.
எல்லாவற்றுக்கும் மேலாக அந்த 10 மாதம் வரை எல்லாவற்றையும் தாங்கி அவள் காத்திருந்து குழந்தையை பெற்ற பின் அந்த பிள்ளையை பார்த்தவுடன் அவளுடைய எல்லா கஷ்டமும் மறந்து போய்விடும்.
இது எல்லாம் நான் எதுக்கு உங்களிடம் சொல்கிறேன் என்றால் உங்கள் நண்பியால் சாப்பிட முடியவில்லை வாந்தி வருவது போல் இருக்கிறது என்று எதையும் சாப்பிடாமல் இருந்து விடவேண்டாம். வாந்தி வந்தால் வரட்டும் இருந்தாலும் சாப்பிடவும் சில சமயம் சாப்பிடும் போது குமட்டுதல் இருந்தால் புளிப்பானது எதையாவது சிறிது சாப்பிட்டு கொள்ள சொல்லவும். ஊறுகாய் அல்லது உங்கள் நண்பிக்கு பிடிச்சது எதுவோ அதை சாப்பிட சொல்லவும் டென்ஷனாக இருக்ககூடாது எப்பொழுதும் ரிலாக்ஸாக இருக்கனும்.
ஜூஸ் குடிக்கனும் டயர்டாக இருக்கும் போது ஜூஸ்கள் குடித்துவரலாம்,ஆரஞ்சு ஜூஸ்,குமட்டுதலுக்கு எழுமிச்சை பழத்தை நுகர்ந்து வரலாம் அதன் மணம் குமட்டுதலை குறைக்கும்.
வயிற்றை மட்டும் எப்பொழுதும் காலியாக போட்டுவிட கூடாது உள்ளே ஒரு உயிர் இருக்கிறது அதற்க்கு தேவை என்று சாப்பிட முடியாவிட்டாலும் கொஞ்சமாவது சாப்பிடனும்.
வாழைப்பழம் சாப்பிடலாம் பொதுவாக இந்த சமயத்தில் மலசிக்கல் வரும் அதனால் தினமும் இரவு படுக்கும் முன்பு வாழைப்பழம் சாப்பிடலாம்.
பிஸ்கட் சாப்பிடலாம்.கேக் ,ஐஸ் க்ரீம் இது எல்லாம் அவர்களுக்கு பிடித்து இருந்தால் சாப்பிடட்டும்.ஏன் என்றால் எல்லா கர்பிணி பெண்களுக்கும் ஒரே போன்று எல்லாம் பிடித்து விடாது.
நான் குழந்தை உண்டாகி இருக்கும் போது நிறைய ஜூஸ் ,ஐஸ் க்ரீம் தான் சாப்பிட்டேன். ஆனால் என் தோழி ஒருவர் குழந்தை உண்டாகி இருக்கும் போது இதை எல்லாம் தொடவே மாட்டார் வாந்தி வருவது போல் இருக்குது என்பார்.அதனால் உங்கள் தோழிக்கு எது பிடிக்கிறதோ அதை சாப்பிடட்டும்.
சிலருக்கு இனிப்பாகவே பிடிக்கும்.சிலருக்கு காரமாகவே பிடிக்கும்.இன்னும் சிலருக்கு புளிப்பாகவே பிடிக்கும் .
அதனால் உங்கள் தோழியை வயிற்றை மட்டும் காலியாக வைக்க வேண்டாம்.காலையில் பால் மட்டும் குடித்தால் போதாது கொஞ்சமாவது டிபன் ஏதாவது சாப்பிட சொல்லவும்.
அவர்களுக்கு எது பிடிக்கும் காரமாகவா அல்லது இனிப்பாகவா அல்லது புளிப்பாகாவா என்று சொல்லவும் நான் அதுக்கு தகுந்தது போல் எது எல்லாம் சப்பிடலாம் என்று சொல்கிறேன்.
சாப்பிட கூடாது என்றால் எனக்கு தெரிந்தது அன்னாசி பழமும்,முந்திரி பழமும் (க்ரேப்ஸ்) ,பேரீதம் பழம் சூடு என்பார்கள் அதாவது மலச்சிக்கல் வரும்
மாதுளை பழம் சாப்பிடலாம் பால் நிறைய குடிக்கவும் முக்கியமாக தண்ணீர் அதிகமாக அருந்தவும்.
வயிற்றை சாப்பிடாமல் காயப்போட்டால் வயிற்றுவலி வந்து விடும்.பசிக்கவிடாமல் எதையாவது சாப்பிடவும்.
சாப்பிட நேரம் ஆகிவிட்டால் இடையில் பிஸ்கட்டாவது சாப்பிடனும் .இல்லை என்றால் வாயு தொல்லை ஏற்பட்டு விடும் அதனால் கவனமாக இருக்க சொல்லவும்.
எனக்கு தெரிந்ததை சொல்லி விட்டேன் மேலும் எதுவும் சந்தேகம் என்றால் கேட்கவும்.
                                                                          www.aagaayanathi.blogspot.com

கர்ப்பிணிகளுக்கானக் குறிப்புகள்: 8,9,10 மாதங்கள்


இந்த மாதமும் இரத்த பரிசோதனை செய்து சர்க்கரை, சிவப்பணுக்கள் இவற்றோட அளவு என்னனு பாக்கனும். யூரின் பரிசோதனையும் செய்துக்கனும்.கிருமித் தொற்று இருக்கானு பாக்கனும்.
இப்போ உங்க செல்லத்துக்கு 2கிலோக்கு மேல் எடை கூட ஆரம்பிச்சிருக்கும்
வாரக் கணக்குப்படி
32வது வாரம் முதல் 8வது மாதம் 36வது வாரம் முதல் 9ஆவது மாதம்.
இப்போ முதலே நீங்க என்ன குழந்தை அதுக்கு என்ன பேர் வைக்கலாம் அப்டினு யோசிச்சுட்டிருப்பீங்க  இரும்புச் சத்து, புரதம், விட்டமின் ஏ,பி,சி,இ,ஃபாலிக் அமிலம் இதெல்லாத்தையும் உணவு மற்றும் மாத்திரை மூலமா தொடர்ந்து எடுத்துக்கனும்.
இனிமே படுக்க ரொம்ப சிரமமா இருக்கும். எப்பவுமே இடது புறமா திரும்பி வயிற்றின் மேலே உங்களோட எடை இல்லாத மாதிரி படுக்கனும். அது தான் குழந்தையின் வளர்ச்சிக்கும், சீரான சுவாசத்துக்கும் நல்லது. கழுத்து வலிக்கும் போது வலது பக்கமா திரும்பிக்கலாம்.
இனிமே நீங்க உங்க அம்மினாய்டிக் திரவ அளவ சீரா வெச்சிக்கனும். பிரசவ காலம் வரை நான் சொன்ன சீரக கசாயம் குடிக்குறது நல்லது.
கேழ்வரகு கூழ், சத்து மாவு கூழ் குடிக்கிறதும் ரொம்ப நல்லது.
இனி நீங்க நல்லா முன்ன விட‌ நல்லா நடங்க. அப்புறம் வெண்ணீர் வெச்சி இடுப்பு, கால் தசைப் பகுதிகள்ல நல்லா ஊற்றி விட மறக்காதீங்க.
நல்லா உதை வாங்குறீங்களா? இரவு படுக்கும் முன்னாடி அடி வயிற்றுல விளக்கெண்ணெய் தேய்ச்சிட்டுப் படுங்க. உடல் சூட்டைத் தணிக்கும். இனிமே இளநீர் அதிகம் அடிக்க வேண்டாம் அது அதிகமான சுண்ணாம்பு நிறைந்தது செல்லத்துக்கு ஒத்துக்காது.
அதிகமா குலுங்கி பயணம் செய்றது, தொலை தூர பேருந்து மற்றும் இரு சக்கர வாகனப் பயணம், வேகமான நடை இதெல்லாம் கூடாது.
இப்போ உங்க குழந்தை பிறந்தா நல்லா படியா இருக்க வாய்ப்புகள் அதிகம். நீங்க பிரசவ வலி பற்றி அவசியம் தெரிஞ்சிக்கனும். அதுக்கு பயப்படவே தேவை இல்லை. உங்க செல்லத்தப் பாக்கப் போற அந்த நேரம், கடவுளுடைய படைப்ப இந்த உலகத்துக்குக் கொண்டு வரப் போற அந்த நேரம் நீங்களும் புதுசாப் பிறக்கப் போற அந்த நேரம், பிஞ்சுக் கால் கைகள தொடப்போற அந்த நேரம், உங்கத் திருமணப் பரிசா ஒரு உன்னதப் பூங்கொத்த உங்களவருக்குக் கொடுக்கப் போற அந்த நேரம், உங்க அம்மாவ தெய்வமா நீங்க உணரப் போற அந்த நேரம், ஒரு புனிதமான நேரம்!!! வாழ்க்கைல அதிக அளவு மகிழ்ச்சியான நேரம்!!!உங்கப் பிறப்போட அர்த்தம் உங்களுக்கு புரியிற நேரம்!!!!
அதுக்காக காத்திருக்க ஆரம்பிங்க. அது உங்களுக்கு மட்டும் வலி இல்லை. குட்டி பாப்பாக்கும் வெளிய வரும் போது வலிக்கும்ல. நீங்க இப்போ தைரியமா இருந்தா தான் பாப்பாவும் தைரியமா இருக்கும்.
இடுப்புப் பகுதிகளில் வலி அதிகமா இருக்கும்। அதிகமா மூச்சிறைக்கும். உடலில் சில மாற்றங்கள் தெரியும். கால்கள் வலிக்கும். கடைசியா பிரசவ வலி வரும். அது பல விதமா வரலாம். இடுப்பு, வயிறு முழுதும், அடி வயிறு,இடுப்போடிணைந்து கால்கள்,நடு வயிறு அப்டினு வலி எங்க வேணுனா துவங்கலாம். முடிவு நல்லதா இருக்கும்.

                                       – www.aagaayanathi.blogspot.com


http://thamilinian.blogspot.com/2011_03_26_archive.html
ந்த ப திவு  சித்தார்கோட்டை நன்றி

பெண்ணுக்கு பிடித்த உடலுறவு வேட்கைக் காலம்


பெண்ணுக்கு பிடித்த உடலுறவு வேட்கைக் காலம்

ஒரு பெண், ஒரு மாத காலத்தில், இயல்பாகவே உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்மைக அதிகம் உள்ள குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட சில நாட்கள் உள்ளன.
இத்தகைய உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை அதிகமாக உள்ள கால கட்டத்தை. அவள் கருப்பபையில் ஊறும் பெண்மைச் சுரப்பி நீர் ஏற்படுத்தித் தருகின்றது.
அந்தக் கால கட்டம் எது?
பெண்ணின் கருப் பையிலிருந்து, மாதம் ஒரு நாள் கரு முட்டை ஒன்று வெளியாகின்றதல்லவா? அந்தக் கால கட்டத்தில் ஒரு பெண்ணுக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை இயல்பாகவே அதிகமாக இருக்கும். அந்தக் கால கட்டத்தில், எந்தப் பெண்ணுமே உடலுறவு கொள்ள விழைவாள். பெண் கருமுட்டை வெளியாகும் காலத்தில், அவள் ஓர் ஆணோடு உடலுறவு கொண்டால், அந்த உடலுறவு நேரத்தில், ஆணிடமிருந்து வெளியாகின்ற ஆண் விந்தில் உள்ள கரு முட்டையும் இணைந்து குழந்தை உருவாகி விடும்.
ஆம் உயிரின உற்பத்திக்காக உடலுறவை ஏற்படுத்திய ஆண்டவன், ஒரு பெண்ணிடம் இத்தகைய நிலையை உருவாக்கி, இன உற்பத்தியில் அவளைச் சிக்க வைக்கச் செய்த சதிதானோ இது*

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

வாழை என்ற `மருத்துவர்'!


10:39 AM | ஏப்ரல் 24, 2012
அன்றாட உபயோகம் மட்டுமல்ல, மருத்துவப் பயனும் நிறைந்த தாவரம், வாழை. பல்வேறு உடல்நல பாதிப்புகள், குறைவுகளுக்கு வாழை எவ்வாறு உதவுகிறது என்று பார்க்கலாம்.....
பெண்களை அதிகம் தாக்கும் முதுகு வலி
2:55 PM | ஏப்ரல் 23, 2012
உலகில் 80 சதவீதம் பேர், வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் கீழ் முதுகு வலியால் அவதிப்படுகிறோம். முதுகுத் தண்டு வடம், ஒன்றன் மீது ஒன்று அமைந்த வகையிலான...
ஜீரணம் ஆகாத உணவுப் பொருட்களை சாப்பிடாதீர்கள்
10:24 AM | ஏப்ரல் 23, 2012
"ஒண்ணுமே சாப்பிடலை, ஆனால் வயிறு மட்டும் பெரிசா இருக்கு'' என்பார்கள் சிலர். "வயிறு வீங்கியிருக்கு, வயிறு பானை மாதிரி இருக்கு'' என்பார்கள் சிலர். "வயித்...
நீரிழிவு நோயால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்க..
5:34 PM | ஏப்ரல் 22, 2012
நீரிழிவு நோயால் நமது கண்பார்வை எந்த அளவுக்கு கடுமையாகப் பாதிக்கப்படும், இதனால் ஏற்படும் பார்வை குறைபாட்டை குணமாக்குவது எப்படி என்பது பற்றியெல்லாம் நம்...
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் கீரைகள்
11:33 AM | ஏப்ரல் 21, 2012
சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கீரைகளுக்கும் உண்டு. கறிவேப்பிலை, தூது வளைக்கீரை, அரைக்கீரை, முசுமுசுக்கைக் கீரை, வெந்தயக்கீர...
சைனஸ் கோளாறை விரட்ட எளிய வழிகள்
2:10 PM | ஏப்ரல் 20, 2012
கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த கால கட்டத்தில் ஏராளமானோர் `ஜலதோஷ' பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். இதற்கு வெவ்வேறு வகையான வைரஸ்கள்தான் காரணம். இந்த வ...
வயிறு மந்தமாக இருந்தால்....
12:56 PM | ஏப்ரல் 19, 2012
`ஆரோக்கியமான ஒரு மனிதன், சாப்பிடும் உணவு, மலமாகவும், சிறுநீராகவும் சுத்தமாக உடலில் இருந்து வெளியேற, 24 மணி நேரத்தில் இருந்து 72 மணி நேரம் வரை எடுத்துக...
புற்றுநோயை குணப்படுத்த ஒலி அலை சிகிச்சை
2:37 PM | ஏப்ரல் 18, 2012
புற்றுநோய்க்கு கீமோதெரபி சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் மூலமும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிக அளவில் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்ப...
கோடை வெயிலுக்கு
 ஏற்ற வெள்ளரிக்காய்: உடலை குளிர வைக்கும்
1:05 PM | ஏப்ரல் 18, 2012
வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும், உடலைக் குளிரவைக்கும். வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆ...
படுக்கை அருகில் கம்ப்யூட்டரை வைக்காதீங்க..
11:06 AM | ஏப்ரல் 18, 2012
ஆழ்ந்து அமைதியாக தூங்க முடிந்தால், மனிதன் இளமையாக இருப்பான். முதுமை அவனை நெருங்காது என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை. தொடர்ந்து ஓடிக்கொண்...
நன்மை தரும் தேன்
10:41 AM | ஏப்ரல் 17, 2012
* பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும். * பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உ ண்டாகும். * மாதுளம் பழச...
கோடையில் `கூல்' ஆகலாம்!
11:55 AM | ஏப்ரல் 14, 2012
கோடை காலம் வந்தாலும்தான் வந்தது, எல்லா இடங்களிலும் அக்னி நட்சத்திர தகிப்பு மக்களை பாடாய்படுத்துகிறது. அதில் இருந்து தப்பிக்க வேண்டுமா? அப்படியென்றால்,...
காலை சாப்பாட்டை தவறவிட்டால் நீரிழிவு வரும்
10:53 AM | ஏப்ரல் 13, 2012
வேலைப்பளு அது இதுவென்று காலையில் சாப்பிடாமல் இருந்து விடுகிற வழக்கம் பல ஆண்களிடம் இருக்கிறது. ஆனால் காலைச் சாப்பாட்டை இப்படி தவற விடுவது நல்லதல்ல என்ப...
கண் பராமரிப்பு
12:55 PM | ஏப்ரல் 12, 2012
உடலின் ஒளியாய் இருப்பது கண் தான். எனவே நமது கண் தூய்மையாக இருந்தால் உடம்பு முழுவதும் ஒளி உள்ளதாய் இருக்கும். கண்கள் நமது உடலின் மிக மென்மையான முக்கிய ...
நீரிழிவு நோய்க்கு கோவைக்காய்...
11:22 AM | ஏப்ரல் 11, 2012
சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கொஞ்சம் நம்முடைய உணவுப் பழக்க முறைகளில் கூடுதல் கவனம் செலுத்தினால்...
பக்கங்கள்:
1
2
3
4
5