WELCOME TO OUR HOME PAGE அப்பாக்குட்டி மருத்துவம் <>தற்போதைய செய்திகள்:........சூடாக ஒரு கப் டீ<><>கருசிதைவு சில அறிகுறிகள்<><>இயற்கை வயாகரா முருங்கை பற்றி உங்களுக்கு தெரிந்ததும்... தெரியாததும்.<><>கர்ப்பப் பை பலம் அடைய உழுத்தங்களி சாப்பிடுங்க..!<><>பெண்கள் பயன்படுத்தும் “நாப்கின்” ஆல் உடல் நலத்திற்கு கேடு! ஆய்வில் அதிர்ச்சி தகவல்! »<><>குளிர் நீரை விட சுடு நீர் தான் பெஸ்ட்! லேட்டஸ்ட் தகவல்!<><>அதுல கிரேட்டா இருக்கணுமா? சில உணவுகளை சாப்பிடாதீங்க!<><>தூக்கம் குறைந்தால் கேன்சர் தாக்கும் : டாக்டர்கள் எச்சரிக்கை<><>மன உளைச்சலா, மாரடைப்பா? தலைமுடியை ஆராய்ந்தால் உடல்கண்டிஷன்தெரியும்<><>ஆஸ்டியோபொரோசிஸ் எனும் அசுரப் பிரச்னை<><>பக்கவாதம் என்றும் பாhpசவாயு என்றும் கூறப்படும் கை, கால், முகம், வாய் போன்றவற்றின் செயலிழப்பு எல்லா வயதினரையும்...;குட்டீஸ்க்கு மூக்கில் ஒழுகுதா? வீட்டு மருந்து கொடுங்க!<><>பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துணவுகள்!<><>பட்டினி கிடந்தா உடல் மெலியாதா?<><>வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்<><>;ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு <><>இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்‏<><>தொண்டையில் கழலை இல்லை, தைரொயிட் நோயா ?<><>நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்<><>ஹாய் நலமா-2 மூட்டு வலிகளா?‏<><>முட்டையின் மகத்துவம் - ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு<><>தூக்கம் இல்லாத பிரச்சனைக்கு சிறந்த மருந்து சப்போட்டா பழம்! <><>17 குணங்கள் கொண்ட‌ வெற்றிலை<><>குழந்தை மருத்துவம்: 3 முதல் 8 வயது வரை..<><>உடற்பயிற்சியின்றி அதிகரிக்கும் மரணங்கள்.<><>அல்சரை குறைக்க மன அமைதி தேவை.<><>புற்றுநோய் என்ன செய்யும்?, மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? : 3டி அனிமேஷனின் பதில் <><>பசுவின் பால், குழந்தைகளுக்கு நல்லதல்ல - அதிர்ச்சி தகவல்<><>தூக்கம் இன்றி 15 கோடி இளைஞர்கள் தவிப்பு<><>முகப்பரு மறைய<><>தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க!<><>சிறுநீரகக்கல் இருக்கா? கவலையை விடுங்க...<><>ஏலக்காய்’ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா!! <><>ஹீமோகுளோபின் அதிகரிக்க வழிகள்<><>மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி!<><>தைராய்டு பற்றிய விழிப்புணர்வும் அவற்றுக்கான தீர்வும்!<><>வயாக்கிராவுக்கு பதில் மாதுளம்பழம்!<><> உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வெள்ளரிக்காய்<><>தைரியமாக சொல்லுங்க: ”தொட்டுக்க ஒரு டபுள் ஆம்லெட் போடுங்க.. மனையாளே!”<><>புற்று நோய் பற்றிய விழிப்புணர்வும் விரிவான தகவல்களும்!<><>விஷ ஜந்துக்கள் கடித்து விட்ட‌தா? என்ன முதலுதவி செய்யலாம்? தெரிந்து கொள்ளுங்கள்…<><>மாரடைப்பைத் தடுக்கும் ரத்தப் பரிசோதனை <><>பகலில் தூங்காதீங்க மன அழுத்தம் வரும் – ஆய்வில் தகவல் <><>சிறு தானியங்களின் மருத்துவக் குணங்கள்!<><>சீரகத்தின் குணங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.<><>மன அழுத்தத்தை போக்கும் வாழை இலை! <><>ரத்த சோகையை தடுக்கும் வழிகள்<><>தூங்காமல அவதிப் படுகிறீர்களா! <><>இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம்! ஆய்வு தகவல்!<><>குழந்தை பெற்ற பின்னும் உடல் சிக்கென்று இருக்க<><>மார்பகப் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு தரும் வைட்டமின் C! <><>கிராம்பின் மருத்துவ குணங்கள்! <><> இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது வேர்க்கடலை<><>அல்சர் இருக்கா கவனம் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்! <><>புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களா நீங்கள்? நிறுத்த 7 வழிகள்!<><>அதிகாலையில் தண்ணீர் பருகுங்கள் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும்.<><>நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!!<><>பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்குமாம்... உங்களுக்குத் தெரியுமா?<><>குழந்தை வேண்டுமா? மணல்தக்காளி சாப்பிடுங்கள்!<><>சில நோய்களுக்கான அறிகுறிகளும் தப்பிக்கும் வழிகளும்.. <><>நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செக்ஸ் : ஆய்வில் நிரூபணம்<><>செக்ஸ் வாழ்க்கையில ஈடுபட முடியலையே!<><>மாரடைப்பு <>

திங்கள், 30 ஜனவரி, 2012

ஆரோ‌க்‌கிய‌மாக இருக்க தினமு‌ம் ஒரு ஆ‌ப்‌பி‌ள் சாப்பிடுங்கள்.


ஆரோ‌க்‌கிய‌மாக இருக்க தினமு‌ம் ஒரு ஆ‌ப்‌பி‌ள் சாப்பிடுங்கள்.

4 November 2011 No Comment

ஆப்பிளில் நீர்ச்சத்து, புரதச்சத்து, குளோரோபில், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் பல ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. இவை செரிமானப் பாதையில் ஏற்படும் என்சைம்கள் குறைபாட்டை சீர் செய்வதுடன் பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் வருவதை தடுக்கின்றன.
மது அருந்துபவர்களுக்கு ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவை குறைக்க ஆப்பிள் பெருமளவு உதவுகிறது. விஸ்கி எனப்படும் மதுவிலுள்ள பல சத்துக்கள் ஆப்பிளில் காணப்படுவதால் தொடர்ந்து ஆப்பிளை சாப்பிட்டு வர மது அருந்தும் எண்ணம் கட்டுப்படும். 
தோல் நீக்காத ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் பழச்சாறு ரத்தத்தை சுத்தம் செய்து ரத்தத்தில் கலந்துள்ள அதிக அமிலத்தன்மையை நடுநிலைப்படுத்துகிறது.
வ‌யி‌ற்று‌ப் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம் பொழுது இனிப்பு சேர்க்காத ஆப்பிள் பழச்சாற்றை சாப்பிட்டு வர வயிற்றிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் கார்பானிக் அமிலமாக மாற்றப்பட்டு நெஞ்சுக்கரிப்பு கட்டுப்படுகிறது. செரிமான சக்தி அதிகரிக்கிறது.

திராட்சையின் மருத்துவ குணம்…


திராட்சையின் மருத்துவ குணம்…

14 November 2011 No Comment

ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து ஆகியவை உள்ளன. ரத்த சோகை, மலச்சிக்கல், ஜீரண கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும் சக்தி திராட்சைக்கு உண்டு. உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் மாமருந்தாகிறது திராட்சை பழம். திராட்சையை உண்பதால் உடல் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை, நரம்புகள் வலுப்பெறும்.

நீரிழிவு நோயா?: கறிவேப்பிலை சாப்பிடுங்க.


நீரிழிவு நோயா?: கறிவேப்பிலை சாப்பிடுங்க.

16 January 2012 No Comment

நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையு‌ம், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல், ர‌த்த‌த்‌தி‌ல் ச‌ர்‌க்கரை‌யி‌ன் அளவு க‌ட்டு‌ப்படு‌ம்.
வெறும் வயிற்றில் ‌தினமு‌ம் கறிவேப்பிலை இலையை மெ‌ன்று சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம். இ‌ப்படியே 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம். சிறுநீரில் சர்க்கரை வெளியேறு‌ம் அளவு‌ம் குறை‌ந்து‌விடு‌ம்.
இளம‌் வய‌தி‌ல் நரை முடி வ‌ராம‌ல் தடு‌க்க க‌றிவே‌ப்‌பிலை பய‌ன்படு‌ம் எ‌ன்பது தெ‌ரி‌ந்த ‌விஷய‌ம். ஆனா‌ல் தெ‌ரியாத ‌விஷய‌ம் ஒ‌ன்று உ‌ள்ளது. 
அதாவது, நரை முடி வ‌ந்தவ‌ர்களு‌ம், உண‌விலு‌ம், த‌னியாகவு‌ம் க‌றிவே‌ப்‌பிலையை அ‌திகமாக சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் நரை முடி போயே போ‌ச்சு.

என்றும் இளமை வேண்டுமா? தினமும் தேனை அருந்துங்கள்


என்றும் இளமை வேண்டுமா? தினமும் தேனை அருந்துங்கள்

22 December 2011 No Comment

தேன் ஓர் இனிய உணவுப்பொருள் ஆகும். மருத்துவ குணமும் கொண்டது. பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில்(திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகின்றன.
1. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும். தேனும், வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும், ஊளைச் சதை குறையும், உடல் உறுதி அடையும்.
2. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.
 3. தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.
4. தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம்.
5. இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.
6. தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.
7. உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.
8. தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.
9. மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.
10. கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.
11. வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.
12. தேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.
13. அரை அவுன்ஸ் தேனுடன், அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.
14. அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும்.
15. முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.
16. தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது. ஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.
17. ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும்.
குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும்.
18. அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.
19. நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும் என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புவோர் தினமும் தேனை அருந்த வேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.

ந்த ப திவு  eluthamila  நன்றி

இதயம் காக்கும் வெள்ளைப் பூண்டு


இதயம் காக்கும் வெள்ளைப் பூண்டு…

14 December 2011 No Comment

மனித இனம், நாகரீகம் வளர வளர தன் சுவை தேவைக்காக உணவை பல வகையில் தயாரித்து உண்ண ஆரம்பித்தது.  பச்சையாக தின்ற மனிதர்கள், பின் வேகவைத்து உண்டு வந்தனர்.  இப்படி ஆரம்பித்த உணவு வளர்ச்சி ஒரு கட்டத்தில் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகளையே உண்ண ஆரம்பித்தனர்.  பின் வரும் காலங்களில் உணவே மருந்து, மருந்தே உணவு என்ற நிலை வந்தது.  இது சித்தர்கள், ஞானிகளின் காலமாகும்.  இக்காலத்தில் மனிதர்கள் நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.  நம் முன்னோர்களும் மேற்கண்ட நிலையையே கடைப்பிடித்து வந்தனர்.  ஆனால் நாம் ஆண்டாண்டு காலமாக நம் முன்னோர்கள் கடைபிடித்த முறைகளை கைவிட்டு நாவின் சுவையைத் தேட ஆரம்பித்தோம்.  அதன் பயன் இன்று நோய்கள் பலவற்றின் தாக்குதலுக்கு ஆளாகி மருந்து, மாத்திரை என தினமும் பொழுதைக் கழிக்கிறோம்.
இப்படி நாம் மறந்த உணவு முறையில் உள்ள  பொருட்களுள் ஒன்றான வெள்ளைப் பூண்டின் மருத்துவக் குணம் பற்றி அறிந்துகொள்வோம்.
இது இந்தியாவில் எல்லா பாகங்களிலும் பயிராகும் ஒருவகை பூண்டாகும்.  நெடிய மணமுடைய, குமிழ் வடிவ கிழங்காகக் காணப்படும்.  ஒரு பூண்டில் 10 முதல் 12 பற்கள் வரை இருக்கும்.
தற்போது சீனாவிலிருந்து பூண்டு இறக்குமதி செய்யப்படுகிறது.  மேலும், இந்திய பூண்டு வகைகள் அதிகம் மருத்துவக் குணம் கொண்டதாக மேற்கத்திய நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
வெள்ளைப் பூண்டில் பசைத்தன்மை அதிகமாக இருப்பதால், நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். வெள்ளைப் பூண்டானது சைவச் சமையலிலும் சரி, அசைவ சமையலிலும் சரி முக்கியப் பொருளாக சேர்க்கப்படுகிறது.
வெள்ளைப் பூண்டின் பயன்பாடு கி.மு.2600 ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வந்துள்ளது.
வெள்ளைப் பூண்டை வெள்ளுள்ளி, வெள்வங்காயம், இலசுனம் என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.
பூண்டின் மருத்துவக் குணங்கள்
சன்னியோடு வாதன் தலைநோவு தாள்வலி
மண்ணிவரு நீர்க்கோவை வன்சீதம்-அன்னமே!
உள்ளுள்ளி காண்பாய் உளைமூல ரோகமும்போம்
வெள்ளுள்ளி தன்னால் வெருண்டு
-அகத்தியர் குணவாகடம்
பொருள் – சுரக்காய்ச்சல், வளிநோய்கள், ஐயத் தலைவலி, மண்டைக்குத்து, நீரேற்றம், இருமல், இரைப்பு, வயிற்றுவலி போன்றவற்றை நீக்கச் செய்யும்.  முப்பிணி சீதக்கழிச்சல், மூலம், இவைகளுக்கு சிறந்த மருந்தாக வெள்ளைப்பூண்டு பயன்படும்.
பூண்டு பற்றிய ஆராய்ச்சி முடிவுகள்
பூண்டு பிட்யூட்டரி என்ற சுரப்பியைத் தூண்டிவிட்டு இதன் மூலமாக கொழுப்புச் சத்தையும், கார்போஹைட்ரேட் சத்தையும் ஜீரணிக்க உதவுகிறது.  வைட்டமின் பி சத்தை அதிகரிக்கச் செய்கிறது.  நரம்பு மண்டலங்க ளுக்கும் இருதய இரத்த ஓட்டத்திற்கும் நல்ல சக்தியைக் கொடுக்கிறது.  மனித இரத்த ஓட்டத்தை தடைகள் இல்லாமல் சீராக செயல்படச் செய்கிறது. இரண்டு ஆண்டி பயாடிக்ø-ஸ உற்பத்தி செய்கிறது.  இதன் மூலம் உடலைத் தாக்கும் 15 பாக்டீரியாக்களை அழிக்கிறது.
இரத்த அழுத்தம் குறைய
இரத்தத்தில் கலந்துள்ள கொலஸ்ட்டிராலை கரைத்து வெளியேற்றும் தன்மை பூண்டுக்கு உண்டு.  மேலும் இரத்தத்தின் கடினத் தன்மையைக் குறைத்து ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற ரசத்தாதுக்கள், வேதிப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.
ரத்தக் குழாய்களில் படிந்துள்ள கொழுப்புகளைக் கரைத்து ரத்தத்தில் அதிகளவு இரும்புச் சத்தை உட்கிரகிக்கச் செய்கிறது.  இதனால் இரத்த அழுத்தம் நீங்கி, ரத்தம் சீராக ஓட ஏதுவாகிறது.
இதயத் தசைகளை வலுவடையச் செய்வதால் மாரடைப்பு போன்ற நோயின் தாக்குதலில் இருந்து விடுபட வைக்கிறது.
பூண்டை தினமும்  ஏதோ ஒரு வகையில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  பாலில் வேகவைத்து பூண்டை சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட பாதிப்புகளுக்கு உற்ற மருந்தாகும்.
வாய்வுத்தொல்லை நீங்க
பூண்டுக்கு வாயுத் தொல்லையைப் போக்கும் குணமுண்டு.  உணவு முறையில் வாயு பதார்த்தங்களே அதிகம் இடம்பிடிக்கின்றன.  இவை வயிற்றில் வாயுவை உண்டுபண்ணுவதால் அவை உடலில் எங்காவது நின்று பிடிப்பை ஏற்படுத்திவிடும்.  வாயுத் தொந்தரவு அதிக மன உளைச்சலைக் கொடுக்கும்.  இதன் பாதிப்பை உணராதவர்கள்  இருக்க முடியாது.  இவர்கள் இரண்டு பூண்டுப்பல் எடுத்து அதனுடன் சிறிது மிளகு சேர்த்து நன்கு அரைத்து லேசாக கொதிக்க வைத்து அதனை அருந்தினால் வாயுத் தொந்தரவு நீங்கும்.  அல்லது, 10 பூண்டுப்பல்லை பாலில் வேகவைத்து சாப்பிட்டு வரலாம். இவ்வாறு சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு நீங்கும். உண்ட உணவு எளிதில் சீரணமாகும். 
 .நன்கு பசியைத் தூண்டும்.
· வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.
· மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.
· மலச்சிக்கலைப் போக்கும்.
· வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றும்.
· சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படும்.
· சர்க்கரை நோயாளிகளுக்கு உண்டாகும் பாதிப்பைக் குறைத்து கணையத்தைத் தூண்டி கணைய நீரை அதிகம் சுரக்கச் செய்யும்.  இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படும்.
நரம்புப் பாதிப்புகளைப் போக்கும்.  நரம்பு வறட்சி, நரம்புகளில் நீர் கோர்த்தல், நரம்புத் தளர்வு நீங்க பூண்டுப்பல்லை மேற்கண்ட முறையில் சாப்பிட்டு வருவது நல்லது.
வியர்வையை நன்கு வெளியேற்றி சருமத்தைப் பாதுகாக்கிறது.நாவறட்சியைப் போக்குகிறது.
இருமல், ஈளை, இழுப்பு, மூக்கில் நீர் வடிதல், மண்டைக்குத்து, நீரேற்றம் போன்றவற்றிற்கு பூண்டு சிறந்த மருந்தாகும்.
பூண்டானது உணவில் உள்ள தேவையற்ற பாக்டீரியாக்களை அழிப்பதால் காய்ச்சல், ஜலதோஷம், போன்ற சிறு சிறு பாதிப்புகள் ஏற்படாவண்ணம் தடுக்கிறது.
உடல் சூட்டை அகற்றுகிறது. காயங்களை வெகு விரைவில் ஆற்றும் தன்மை பூண்டுக்கு உண்டு. சிறு கட்டிகளின் மேல் பூண்டை அரைத்து பூசினால் கட்டி விரைவில் குணமாகும்.
தாதுவை விருத்தி செய்யும். விந்துவைக் கெட்டிப்படுத்தும்.  பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தும்.  தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.
தற்போதைய ஆராய்ச்சியில் பூண்டானது புற்றுநோயைக் குணப் படுத்தும் தண்மை கொண்டதாக கண்டறிந்துள்ளனர்.
இவ்வளவு சத்துக்களையும் இத்தகைய மருத்துவப் பயன்களையும் கொண்ட வெள்ளைப் பூண்டை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.


ந்த ப திவு  eluthamila  நன்றி

தாயும் சேயும் நலமாக... யார் என்ன செய்ய வேண்டும்?

மருத்துவர்கள் - நோயாளிகள் இரு தரப்பையுமே அதிரவைத்திருக்கின்றன இரு பெண்களின் மரணங்கள். 

இந்தியா தூத்துக்குடியைச் சேர்ந்த அன்பான தம்பதி மகேஷ் - நித்யா. ஆறு மாதக் கர்ப்பமாக இருந்திருக்கிறார் நித்யா. கருவுற்ற நாளில் இருந்தே டாக்டர் சேதுலட்சுமி யிடம்தான் இவர் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுவந்திருக்கிறார். கருவுற்ற பெண்ணும் ஒரு நோயாளிபோலதான். ஆனால், நம் நாட்டில்தான் நோயாளிகளுக்கு எதுவுமே தெரியாதே?

ஒரு நாள் நித்யாவுக்கு வயிற்று வலி ஏற்பட சேதுலட்சுமியின் க்ளினிக்கிற்கு வழக்கம்போல அழைத்துச் சென்று இருக்கிறார்கள். அவர்கள் நினைத்திருந்தது நித்யாவுக்கு கர்ப்பிணிகளுக்கே வரக் கூடிய சாதாரணமான வலிதான் வந்திருக்கிறது என்று. ஆனால், நித்யாவுக்கு ஏற்பட்டிருந்ததோ மரண வலி. சில நாட்களுக்கு முன்பே வயிற்றில் குழந்தை இறந்து, நித்யாவின் ரத்தமே நஞ்சாகி இருந்திருக்கிறது. கடைப்பிடிக்கச் சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றவில்லையே என்று புலம்பிக்கொண்டே நித்யாவின் உயிரைக் காப்பாற்ற அறுவைச் சிகிச்சைதான் ஒரே வழி என்று முடிவெடுத்தார் சேதுலட்சுமி.

போதிய மருத்துவ வசதிகள் இல்லாத சூழலில், அவர் செய்த அறுவைச் சிகிச்சை நித்யாவை ஆபத்தான ஒரு சூழலுக்குக் கொண்டுசென்றது. வசதிகள் உள்ள வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு நித்யாவை அழைத்துச் செல்லுமாறு கூறினார் சேதுலட்சுமி. ஆனால், அந்த மருத்துவமனைக்கு நித்யா அழைத்துச் செல்லப்பட்டபோது அவர் சடலமாகி இருந்தார். இதற்குப் பின் மகேஷால் சேதுலட்சுமி கொலை செய்யப்பட்டதும் மருத்துவர்களின் மாநிலம் தழுவிய போராட்டங்களும் நாம் அறிந்ததே!


இந்தப் பிரச்னையை மருத்துவ அடிப்படையில் அணுகுவோம். இனி ஒருமுறை இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

''மருத்துவர் என்பவர் ஒரு கருவிதான், கடவுள் அல்ல என்பதை மக்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்'' என்று தொடங்கினார் மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணரான அமுதா ஹரி. இதுவரை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட  சுமார் 5,000-க்கும் அதிகமான பெண்களுக்குப் பிரசவம் பார்த்து இருப்பவர் இவர்.

''மருத்துவர்களால் மட்டுமே நோயைக் குணப்படுத்திவிட முடியாது. நோயாளிகளும் தாங்கள் எத்தகைய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறோம்; எப்படி எல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிந்துவைத்து, அதன்படி நடந்துகொள்ள வேண்டும். இதுதான் எந்த நோயில் இருந்தும் விடுபடுவதற்கான முதல் படி.

பல முறை கருச்சிதைவுகளைச் சந்தித்து, கடைசியில் அழகான குழந்தையைப் பெற்றெடுத்தவுடன், 'நீங்கள்தான் எங்கள் கடவுள்’ என்று மருத்துவர்களின் காலில் விழுபவர்களும் இருக்கிறார்கள். நடுராத்திரியில் 'எமர்ஜென்ஸி’ என்று தூக்கத்தில் இருக்கும் மருத்துவரை எழுப்பி, சிகிச்சையின்போது ஒருவேளை நோயாளி இறந்துவிட்டால், வன்முறையில் ஈடுபடுபவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே புரிந்துகொள்ள வேண்டிய ஓர் அடிப்படையான விஷயம்... எந்தவிதமான அறுவைச் சிகிச்சையாக இருந்தாலும் அதில் கட்டாயம் ரிஸ்க் இருக்கிறது. மருத்துவர்கள்  அப்படி ஒரு ரிஸ்க் எடுப்பதே நோயாளியின் நலனைக் கருதிதான்!'' என்ற அமுதா ஹரி  தனது 25 வருட அனுபவங்களின் அடிப்படையில்  இப்படிப்பட்ட சூழல்களை எதிர்கொள்ள தரும் ஆலோசனைகள் இங்கே:

''முதலில், ஆறு மாத சிசு ஒரு பெண்ணின் கருவறைக்கு உள்ளேயே இறந்துபோக என்ன காரணம் என்பதைப் பார்க்க வேண்டும். ஏனெனில், கர்ப்பிணிகளுக்கு நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், நோய்த் தொற்று, பி.ஐ.ஹெச். (PIH - Pregnancy Induced Hypertension)எனப்படும் பிரசவ கால உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது போன்ற பல காரணங்களால் சிசு இறந்துபோயிருக்கலாம். அல்லது பனிக்குடத்தில் நீர் குறைவாக இருந்திருக்கலாம். சரியான வளர்ச்சி இல்லாமல் இருந்திருந்தாலும் சிசு இறந்துபோயிருக்கலாம். என்னதான் முன்பே பரிசோதனை செய்து இருந்தாலும் திடீர் என ஏதேனும் பிரச்னைகள் ஏற்படுவது கர்ப்பக் காலத்தில் சகஜம்தான்.

இரண்டாவதாக, அப்படி இறந்துபோன சிசு வயிற்றுக்கு உள்ளேயே இருந்தால், அது தாயின் உடலுக்கு நஞ்சாகிவிடும். அதனால், அதை வெளியே எடுத்துவிட வேண்டும். அறுவைச் சிகிச்சை மூலமாக அதை வெளியே எடுக்கும்போது தாய்க்கு நிறைய உதிரப்போக்கு ஏற்படும். ஆகவே, அறுவைச் சிகிச்சைக்கு முன்பே தாய்க்கு ரத்தம் உறையும் தன்மை இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். ரத்தம் உறையும் தன்மை இல்லாதுபோனாலும், அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு தாய்  இறந்துபோகும் வாய்ப்பு இருக்கிறது.

மூன்றாவதாக, மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளிடம் நோய்பற்றிய விவரங்களை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். அறுவைச் சிகிச்சை செய்கிறபோது பிரச்னைகள்  வந்தால், என்ன செய்வது என்பதுபற்றி பல மருத்துவர்கள் யோசிப்பது இல்லை. ஆகவே, அதுபோன்ற சமயங்களில், நோயாளிகளின் குடும்பத்தினரிடம், 'எங்கள் மருத்துவமனையில் இந்த அளவுதான் வசதிகள் இருக்கின்றன. சிகிச்சையின்போது இப்படியான பாதிப்புகள் ஏற்படலாம்’ என்று  அவர்களுக்குப் புரியும் வகையில், எடுத்துச் சொல்ல வேண்டும்!'' என்கிறார் அமுதா ஹரி.

எளிய மக்களின் ஆதங்கத்தை அறிந்த மருத்துவரான புகழேந்தியிடம் பேசினோம். கல்பாக்கத்தில் தன் சேவையைத் தொடர்ந்துகொண்டு இருக்கும் இவர், மருத்துவத் துறையில் இருக்கும் அலட்சியங்கள்குறித்து விரிவாகப் பேசினார்.

''தூத்துக்குடி சம்பவத்தைப் பொறுத்த அளவில், அந்தப் பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை நடக்கும்போது, 'ஹெல்ப் சிண்ட்ரோம்’ (HELLP SYNDROME - Hemolytic anemia, Elevated Liver Enzymes, Low Platelet Count)  ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பாதிப்பில், ரத்தத்தில் இருக்கும் சிவப்பு அணுக்கள் உடைந்து ரத்த சோகை ஏற்பட்டு,  கல்லீரல் பாதிக்கப்படும். கல்லீரலில் இருந்து வெளியேறும் சில நொதிகள் ரத்தத்தில் கலந்து, ரத்தத்தை உறையவைக்கும் அணுக்களை குறைத்துவிடும். இதனால், நோயாளிக்கு மரணம் ஏற்படலாம். இந்தப் பிரச்னை நோயாளிக்கு உள்ளதா என்று அறிய முன்கூட்டியே ரத்தப் பரிசோதனை செய்வது அவசியம். அப்படி ஒரு சோதனை இங்கு நடத்தப்பட்டதா என்று தெரியவில்லை. இத்தகைய சோதனைகளின் முக்கியத்துவத்தையும் மருத்துவர்கள் ஒளிவுமறைவற்று நடந்துகொள்ள வேண்டிய அவசியத்தையும் இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது'' என்றார் புகழேந்தி.

''வன்முறையில் இருந்து மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் பாதுகாக்க, 2008-ல் தமிழக அரசால் 'மருத்துவமனைப் பாதுகாப்புச் சட்டம் எண் - 48’ என்கிற அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் தாக்கும் நபர்களுக்கு 10 ஆண்டுகள் பிணை இல்லா சிறைத் தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்தச் சட்டம் சரியாக நடைமுறைப் படுத்தப்படவில்லை.

பெண் மருத்துவர்களுக்கு இப்படிப்பட்ட  ஆபத்துகள் இருந்தால், அவர்களால் எப்படி தைரியமாக சிகிச்சை அளிக்க முடியும்?'' என்று மருத்துவர்களின் பிரதிநிதியாக அவர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் இந்திய மருத்துவக் கழகத்தின் மாநில இணைச் செயலர் ராஜ ராஜேஷ்வர்.

''மக்களின் உயிர் மருத்துவர்களைச் சார்ந்தும் மருத்துவர்களின் வாழ்க்கை மக்களைச் சார்ந்தும் இருக்கிறது. முன்பெல்லாம் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு வந்த மருத்துவத் துறை இன்று பணம் கொழிக்கும் துறையாக மாறிவிட்டது. மருத்துவத் துறையில், மருத்துவ அலட்சியத்தை நிரூபிப்பது மிகவும் கடினம். கவனக் குறைவாகச் செயல்படுவது வேறு. அலட்சியத்துடன் செயல்படுவது வேறு. குறிப்பிட்ட இந்தச் சம்பவத்தில், மருத்துவர் கவனக்குறைவாக இருந்துள்ளாரா அல்லது அலட்சியத்துடன் செயல்பட்டாரா என்பது முழுமையான விசாரணைக்குப் பின்புதான் தெரியும். ஆனால், இதுவரை மருத்துவ விசாரணைகளே தொடங்கப்படவில்லை'' என்று ஆதங்கத்துடன் பேச ஆரம்பித்தார் தேசிகன். நுகர்வோர் பாதுகாப்புக்காகப் பல ஆண்டுகளாகப் போராடி வருபவர் இவர்.

'' 'கிளினிக்கல் எஸ்டாப்ளிஷ்மென்ட் சட்டம்’ கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனையும் சட்டத்தில் சொல்லி இருக்கிறபடி அனைத்து விதிகளையும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும். இது போன்ற சோக நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்த இதுதான் வழி!'' என்கிறார் தேசிகன்.

மருத்துவம் என்பது மக்களின் பொறுப்பு என்பதுபோல அரசாங்கங்கள் அலட்சியத்தில் இருக்கின்றன.  தன்னுடைய உடலில் என்ன பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதே தெரியாமல் நோயாளி அறியாமையில் கிடக்கிறார். நோயாளிக்குத் தெரியப்படுத்த வேண்டிய அத்தியாவசியமான விஷயங்களைக்கூட தெரியப்படுத்தாமல், தங்களுக்குள் பூட்டிவைத்துக்கொண்டு மருத்துவர்கள் விழிக்கின்றனர். இது இந்த நாட்டின் துயரங்களில் ஒன்று. இந்தத் துயரத்தைத் துடைக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்குமே உண்டு!


இப்படியான நிகழ்வுகள் இனியும் நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

இது மருத்துவர்களுக்கு....

 நோயாளிகளிடத்தில் நோய், அதற்கான பரிசோதனைகள், மருத்துவ முறைகள், ஏற்படும் பின்விளைவுகள் எனச் சகலத்தையும் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகச் சொல்வது தன் அடிப்படைக் கடமை என்பதை ஒவ்வொரு மருத்துவரும் உணர வேண்டும்.

 தொழில்நுட்பங்கள், கருவிகள், நன்கு பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளர்கள் என அனைத்து வசதிகளும் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். போதிய வசதிகள் இல்லாவிட்டால், மருத்துவர்கள் அதை நோயாளிகளிடத்தில் சொல்லிவிடுவது உத்தமம்.

 அறுவைச் சிகிச்சை செய்வதை வீடியோ பதிவுசெய்ய வேண்டும் என்பது இந்தியாவில் வெறுமனே வழி காட்டுதலாக (கைட்லைன்) இருக்கிறதே தவிர, அது சட்டம் ஆக்கப்படவில்லை. சட்டம் இல்லை என்ற போதிலும், மருத்துவமனைகள் தங்களின் தார்மீகக் கடமையாக எடுத்துக்கொண்டு இந்த நெறிமுறையைச் செயல்படுத்த வேண்டும்.

  இது கர்ப்பிணிகளுக்கு...

 கர்ப்பிணிப் பெண்கள் முதல் செக்-அப்பில் இருந்தே ஒரே மருத்துவரிடம் செல்வது நல்லது. அப்போதுதான் உங்களின் நிறை-குறைகள் அத்தனையும் மருத்துவருக்குத் தெரியும்.
 மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகள், மருந்துகள், ஆலோசனைகள்,  நேரங்கள் ஆகியவற்றை மிகச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.

 உங்களுக்கு அளிக்கப்படும் மருத்துவம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் மருத்துவரிடம் இருந்து பெற்றுக்கொள்ள உரிமை இருக்கிறது. ஆகவே தயங்காமல் மருத்துவரிடம் அதைப் பற்றி விசாரியுங்கள்.

உறவு குலைய அரசும் காரணம்!

 டாக்டர்கள் சங்கப் பொதுச் செயலாளர் ஜீ.ஆர்.ரவீந்திரநாத்:

''நமது நாட்டில் சுகாதாரத் துறையில் வசதிகளை மேம்படுத்துவதன் மூலமே இதற்கு நிரந்தரத் தீர்வு காண முடியும்.

கடந்த 2009-ம் ஆண்டு அனைத்து குடிமகன்களுக்கும் தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தேசிய சுகாதார மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதன் பின்பு யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை. அந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், ஒவ்வொரு குடிமகனுக்கும் சிகிச்சை தர வேண்டியது அரசின் கட்டாயக் கடமையாகிவிடும். அப்படி சிகிச்சை அளிக்காமல் தவறும்பட்சத்தில் பாதிக்கப்பட்டவர் மாவட்ட ஆட்சியர் மீது வழக்குத் தொடரலாம்.

'ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஆறு சதவிகிதம் நிதியை மருத்துவத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. ஆனால், இந்தியாவில் 1.3 சதவிகிதம் மட்டுமே மருத்துவத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் செலவு செய்வதால், வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப்படுகின்றனர். மக்களின் இந்தக் கோபமும் மருத்துவர்கள் மீது திரும்புகிறது. மருத்துவர்கள் - நோயாளிகள் இடையேயான உறவு பாதிக்கப்பட இதுவும் ஒரு காரணம்!''

- டி.எல்.சஞ்சீவிகுமார்

 கர்ப்பக் காலத்தில் செய்ய வேண்டியவை...

 ஒரு பெண் கர்ப்பமானதும் செய்ய வேண்டியவை என்ன? என்பது குறித்து மூத்த மகளிர் நலன் மற்றும் மகப்பேறு மருத்துவர் பாமா நடராஜனிடம் கேட்டோம்...

''திருமணம் ஆன உடனேயே ஒரு பெண்ணுக்கு குழந்தைப்பேறு பற்றிய புரிதலை உருவாக்கிவிடுவது அவசியம். கருத்தரித்தலை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கும் உடல்நிலைக்கும்  அந்தப் பெண்ணைத் தயார்ப்படுத்த வேண்டும்.

கர்ப்பம் உறுதிப்படுத்தப்பட்ட பின், முதல் ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். கரு, கருப்பையில்தான் உள்ளதா அல்லது கருப்பைக்கு வெளியே உள்ளதா என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளலாம். ஆறு முதல் ஏழாவது வாரத்தில் குழந்தையின் இதயத்துடிப்பு தொடங்கும். அது நல்ல நிலையில் உள்ளதா என்பதைப் பரிசோதித்து தெரிந்துகொள்வது அடுத்த நிலை. இதன் பிறகுதான் அடிப்படை ஆய்வு என்று சொல்லக் கூடிய பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். இதில், அவர்களுடைய ரத்த வகை, ஆர்.ஹெச். பேக்டர், ஹெச்.ஐ.வி., ஹெபடைட்டிஸ் பி, ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்தத் தட்டுக்களின் தரம், சிறுநீரில் ஏதேனும் தொற்று உள்ளதா... இப்படிச் சகல விஷயங்களையும் அறிந்துகொள்ள முடியும்.
எங்களின் முதல் ஆலோசனை... சாப்பாடுதான். ஏனெனில், குழந்தையின் உருவம், மூளை எல்லாம் உருவாவது முதல் மூன்று மாதத்தில் எடுத்துக்கொள்ளும் உணவில்தான் உள்ளது. அந்த நிலையில் தாய்க்கு நல்ல சத்தான உணவு முக்கியம். காய், கீரை, பருப்பு, முளைகட்டிய பயறு, பழம், பால், மோர் ஆகிய ஏழு பொருட்கள் தினமும் அத்தியாவசியமாக உணவில் இருக்க வேண்டும். அசைவ உணவு சாப்பிடுபவராக இருந்தால் நாட்டுக்கோழி, மீன் அதிகம் சாப்பிட வேண்டும்.

அதேபோல், நல்ல ஓய்வும் அவசியம். நேரத்துக்கு படுக்கச் செல்ல வேண்டும். இரவு 9 மணியில் இருந்து காலை 5 மணி வரை தூங்குவது நல்ல ஓய்வைத் தரும். படுக்கும்போது இடது பக்கமாகத் திரும்பிய நிலையில் படுக்க வேண்டும். இப்படிப் படுத்தால், இதயத்தில் இருந்து வரும் நல்ல ரத்தம், கர்ப்பப்பைக்கு அதிகமாகச் செல்லும். உடலில் அநாவசியமாக கால், கை, வயிறு வீக்கம் இல்லாமல் இருக்கும்.

அடுத்து, 20-வது வாரத்தில் மீண்டும் ரத்தப் பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை செய்துபார்க்க வேண்டும். குழந்தையின் மொத்த உருவம், தலை முதல் கால் வரைக்கும் எல்லாப் பகுதிகளும் முழுமையாக வளர்ச்சி அடைந்து உள்ளதா, அதன் செயல்பாடு சரியாக உள்ளதா என்பதை அறிய இது உதவும்.

குறித்த காலத்திற்கு ஒருமுறை டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இந்தப் பரிசோதனைகளின் முடிவுகள் எல்லாம் சிறப்பாக அமையும் பட்சத்தில், பிரசவம் இயல்பானதாக அமைந்துவிடும். பிரசவத்திற்கு 10-15 நாட்களுக்கு முன்பு டாக்டரை அணுகி பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் அப்போதுதான் எங்கே, எப்படி, எப்போது டெலிவரி என்பதை டாக்டர் முடிவு செய்து தாயையும்,சேயையும் காப்பாற்றமுடியும்.  மருத்துவர்கள் சொல்வதை அலட்சியப்படுத்தாமல் பின்பற்ற வேண்டும்!'' என்றார் பாமா நடராஜன்.

ந்த ப திவு thedipaar  நன்றிமூளைக்கு தீங்கு விளைவிக்கும் 10 செயல்கள்!


மூளைக்கு தீங்கு விளைவிக்கும் 10 செயல்கள்!

மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் இயங்கும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல், செரிமானம், இதயத்துடிப்பு, கொட்டாவி, போன்ற செயற்பாடுகளையும்,விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.இதில் மூளையை பாதிக்கும் விஷயங்களும் இருக்கின்றன.
காலை உணவு..
காலையில் உணவு உண்ணாமல் இருப்பதன் மூலம் ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
அதிகமாகச் சாப்பிடுவது..
மிக அதிகமாகச் சாப்பிடுவதன் மூலம் இரத்த நாளங்கள் இறுகி மூளையின் சக்தி குறைந்து போகிறது.
புகை பிடித்தல்..
புகை பிடிப்பதால் மூளை சுருக்கமும் அல்ஸைமர்ஸ் வியாதி வருயதற்கு காரணமாகிறது
சர்க்கரை சாப்பிடுதல்..
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
சுவாசித்தல்..
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
தூக்கமின்மை..
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
போர்வையால் மூடிக்கொண்டு தூங்குவது..
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
நோயுற்ற காலம்..
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
மூளைக்கு வேலை..
மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது,மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
பேசாமல் இருப்பது..
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.
“உங்க மூளையை இனி நல்லா பாதுகாத்துகோங்க”
கல்வி களஞ்சியம் (www.kalvikalanjiam.com)
கல்விப்பணியில் என்றும் உங்களுடன்
Related Posts Plugin for WordPress, Blogger...

Related posts:
  1. அதிகம் பரோட்டா சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் – ஓர் எச்சரிக்கை
  2. கொட்டாவி (Yawning) வர உண்மையான காரணம் என்ன!!!? ஆராய்ச்சி தகவல்
  3. நோய்களில் இருந்து பாதுகாக்க பத்து உணவு வகைகள்!!
Tags: , , ,

மருந்து மாத்திரைகள் வாங்கும் போது… சில எச்சரிக்கை குறிப்புகள்!!


மருந்து மாத்திரைகள் வாங்கும் போது… சில எச்சரிக்கை குறிப்புகள்!!

மருந்து வாங்கும் போது… கீழ்க்கண்ட விஷயங்களை அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இது உயிர் பற்றிய விஷயம். எனவே அக்கறை அவசியம்.
1. மருத்துவரின் சீட்டு இல்லாமல்வாங்காதீர்கள்!
தமிழ் சினிமாவின் பிரபல வசனங்களில் ஒன்று, யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும. யார் வெட்டினாலும் கத்தி வெட்டும். மருந்து, டாக்டர் எழுதிக் கொடுத்தாலென்ன… கடைக்காரரே கொடுத்தால் என்ன? என்று நினைப்பவர் அநேகர். அது உண்மையல்ல. குடும்ப மருத்துவருக்குக் கொடுக்கும் பணம் உங்கள் உடல்
நலத்திற்கான முதலீடு என்பதை உணருங்கள். நீங்கள் சரியான மருத்துவரிடம் 50, 100 ரூபாய் கொடுத்தால் அவர் குறைந்தது 5 மடங்கு பணம் மிச்சப்படுத்தும் வேலையைச் செய்வார்!
இப்போது பெரும்பாலான மருத்துவர் கள் தங்கள் மருந்துச் சீட்டை தெளிவாக, தனித்தனியாக கொட்டை எழுத்துக்களில் தான் எழுதித்தருகின்றனர். சிலர் கம்ப் யூட்டர் மூலம் பிரிண்ட் செய்யப்பட்ட மருந்துச் சீட்டை கொடுக்கிறார்கள்.
கையெழுத்துப் புரியவில்லை என்றால் கேட்டு விடுங்கள்! கோபிக்க மாட்டார்! சிலர் பழைய சீட்டை வைத்தே வருடக் கணக்கில் வாங்குவார்கள். அதுவும் தவறு! அவ்வப்போது மருத்துவரைப்பாருங்கள்!
2. செல்போனில் மருந்துச் சீட்டு
நீண்ட காலத்திற்கு சாப்பிட வேண்டிய உயிர் காக்கும் மருந்துகளின் பெயர், டோஸ் அளவு போன்றவற்றை Cell Phone™ மெஸேஜ் ஆக எழுதி பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த Message  வீட்டில் உள்ள அனைத்து செல்ஃபோனி லும் இருக்கட்டும். அவசரத்தில் சிகிச்சை யளிக்க மருத்துவர் கேட்கும்போது இது உயிர் காக்க உதவும்.
3. பில் இல்லா மருந்து மருந்தல்ல எங்கே வாங்கினாலும், எவ்வளவு வாங்கினாலும் எவ்வளவு அவசர மானாலும், பில் இல்லாமல் மருந்துகளை வாங்காதீர்கள்.
பில்லில் உங்கள் பெயர், மருத்துவரின் பெயரும் இருக்கட்டும். மருத்துவரின் மருந்துச் சீட்டுடன், பில்லை வைத்து கவனமாக சரிபார்த்து, வாங்குங்கள். சந்தேகம் இருக்கும் பட்சம் மருத்துவரிடமோ அவரது உதவியாளரிடமோ Cross Check செய்து கொள்ளுங்கள்.
4. உதிரிகள் வேண்டவே வேண்டாம்..
மருந்தின் பெயர், மருந்துப் பொருட்களின் பெயர், தயாரித்த கம்பெனியின்  பெயர், விற்கும் கம்பெனியின் பெயர் மருந்தின் வீரிய அளவு, மருந்து தயாரித்த தேதி காலாவதி தேதி ஆகியவற்றை முழு அட்டையாக மாத்திரை வாங்கும் போதுதான் கவனித்து வாங்க முடியும். எனவே கூடுமானவரை உதிரியாக மாத்திரை வாங்குவதை தவிர்த்து விடுங் கள். உதிரி மாத்திரைகள், காலாவதி, போலி, சாம்பிள் மாத்திரைகளாகக் கூட இருக்கக் கூடும். எனவே கூடுதல் கவனம் தேவை.
5. வீரியமில்லாமல் காரியமில்லை
மாத்திரை பெயர் பார்த்து வாங்கும் போது அதன் அளவு 2 மிலி, 5 மிலி, 10 மிலி என வீரியத்தின் அளவு பார்த்து வாங்க வேண்டும். இது மிக முக்கியம்.
6. காலாவதி மாத்திரை
காலனிடம் சேர்க்கும் எந்த மருந்தையும் நீங்களாகப் பார்த்து, காலாவதி தேதி சரிபாருங்கள். சில மாத்திரைகளில், 18 மாதங்கள், 24 மாதங்கள். தயாரித்த தேதியிலிருந்து என போட்டிருப்பார்கள். அதையும் சரிபாருங்கள்.
ஒரே வகையான மருந்து 6 மாதம் ஒரு கம்பெனியும் மற்றொரு கம்பெனி 3 வருடம் கழித்தும் காலாவதி தேதியை குறிப்பிட்டிருக்கும். அது மருந்து தயாரிக் கும் முறை, மருந்தின் உட்பொருட்கள் பொறுத்து மாறக்கூடும். நீங்களாக ஒரு முடிவுக்கு வர வேண்டாம்.
சில மருந்துகள் 1 நாள் தாண்டினால் கூட விஷமாக மாற வாய்ப்பு உண்டு. உதாரணம் டெட்ராசைக்ளின் வகை மருந்துகள். சில மருந்துகளில் காலாவதி தேதி நீண்ட நாட்கள் இருந்தாலும், குறிப்பாக குழந்தைகளுக்கு பவுடர் வடிவில் கொடுக்கப்படும் ‘ஆன்டி பயாடிக்Õ வகை மருந்துகள், காய்ச்சி ஆறவைத்த நீரில் கலந்து 5 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என சிறிய எழுத்தில் எழுதியிருப்பார்கள். அதுபோன்ற மருந்து களை 5 நாட்களுக்கு மேல் வைக்கக் கூடாது.
7. நீண்ட நாட்களுக்கு…
நீண்ட நாட்களுக்கு சாப்பிட வேண்டிய, தினசரி தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள் குறைந்தது 1 வாரத்துக்கான அளவாவது வீட்டில் இருக்கட்டும். இரவு ஒரே மாத்திரை இருந்து அதுவும் கீழே தவறி விழுந்துவிட்டால், தேவையில்லாத, பயம், பதட்டம், கவலை, அலைச்சல் டென்ஷன் இதை தவிர்க்க கைவசம் சற்று மாத்திரைகள், பர்ஸ், அல்லது ஹேண்ட் பேகில் இருக்கட்டும்.
8. குறைந்த செலவில் நிறைய மருந்துகள் சில
மொத்த மருந்து வியாபாரிகளின் சில்லறை விலைக் கடைகளிலோ, சேவை நிறுவனங்கள் நடத்தும்
கடைகளிளோ, 10 முதல் 20% வரை எம்.ஆர்.பி. விலையில் இருந்து தள்ளுபடி விலையில் மருந்து கிடைக்கும். ஒரு மாதத்திற்குத் தேவை யான மருந்துகளை இதுபோன்ற கடை களில் வாங்கினாலே கணிசமான பணம் மிச்சமாகும். சில கடைகளில் போனில் ஆர்டர் கொடுத்தால் இலவச டோர் டெலிவரி வசதியும் உண்டு. பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேரத்தை
மிச்சப்படுத்துங்கள்.
9. அதே மருந்து…
வேறு கம்பெனி சில மருந்து கம்பெனியின் தயாரிப் புகள் இல்லாதபோது நீங்களாகவே வேறு கம்பெனி மருந்துகளை மருத்துவரின் அனுமதியில்லாமல் வாங்காதீர்கள். போலி கம்பெனியா, தடைசெய்யப்பட்ட மருந்துகள் கலந்துள்ளனவா என்பதை உங்கள் மருத்துவர் அறிவார். குறிப்பாக வலிப்பு/ சர்க்கரை வியாதி/ ரத்தக் கொதிப்பு மாத்திரை வாங்கும்போது, வீரியம் அதிகரித்தாலோ, குறைந்தாலோ, தேவையில்லாத பாதிப்புகள் ஏற்படக் கூடும்.
அதுபோலவே மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்தை நீங்களாகவே குறைத்துக் கொள்ளவோ அதிகரித்துக் கொள்ளவோ வேண்டாம்.
என் நண்பர் ஒருவர் ‘விருந்துக்குப் போய்விட்டு வந்தால் சர்க்கரை மாத்திரை இரண்டாகப் போட்டுக் கொள்வேன்’ என்பார். தலைக்கு மேல் கத்தி தொங்கு வது போன்றது இது. எப்போதும் ஆபத்து நேரலாம்.
10. மருந்துகள் பாதுகாக்க குழந்தைகள் கைக்கு எட்டாமல் வைக்கவும்.
பல மாத்திரைகள் கலர் கலராக ஜெம்ஸ் மிட்டாய் போல இருப்பதால் குழந்தைகள் வாயில் போட்டுக் கொள்ளும் ஆபத்து அதிகம்.
சில மருந்து மாத்திரைகள் குறிப்பாக நெஞ்சுவலி மாத்திரைகள் போன்றவை கைக்கு எட்டும் வகையிலும், தேவைப்பட்டால் ஒவ்வொரு அறையிலும் இருப்பது நலம்.
சில மருந்துகளை குளிர் சாதனப் பெட்டியில் தான் (இன்சுலின் போன்றவை) வைக்க வேண்டும். ஆனால் ஓபஸ் பெட்டியில் (ப்ரீஜரில்) வைக்கக் கூடாது.
பொதுவாக எல்லா மருந்துகளையும் வெயில், சூடுபடாத, ஈரம் இல்லாத உலர்ந்த இடத்தில் வைப்பது அவசியம். அடுப்பு அருகே, ப்ரிட்ஜின் மேல், சூடான பாத்திரம், ஹீட்டர் அருகே அல்லது வெயில்படும் இடங்களில் மருந்துகளை வைத்தால் மருந்து கெட்டுப்போக வாய்ப்பு உண்டு. சிலவகை தடுப்பு
மருந்துகளில், மருந்தின் வீரியம் கெட்டுப் போனதை அந்த லேபிள் கலர் மாறு வதைப் பொறுத்து கண்டுபிடிக்க இயலும்
கல்வி களஞ்சியம் (www.kalvikalanjiam.com)
கல்விப்பணியில் என்றும் உங்களுடன்

காய்ச்சாத பாலில் புரூசெல்லோ பாக்டீரியாக்கள் – டாக்டர் ஹர்ஷவர்தனின் எச்சரிக்கை தகவல்Milk - A Health Reportகள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 45 வயது வெள்ளைக்கண்ணு, மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ரியாத்தில் ஏழு ஆண்டுகளாக வேலை செய்துவந்தார். கடந்த பிப்ரவரி மாதம் சொந்த ஊருக்குத் திரும்பினார். ஊருக்கு வந்த அன்று ஆரம்பித்த காய்ச்சல், தொடர்ந்து ஒன்பது மாதங்களாக விடவில்லை. காய்ச்சலுக்காக அருகிலிருந்த டாக்டர்களிடம் மாற்றி மாற்றி மருந்து சாப்பிட்டும் காய்ச்சல் விட்டபாடில்லை.
“காய்ச்சலோட எதுவும் சாப்பிட முடியல. எது சாப்பிட்டாலும் ஒரு மணி நேரத்துல வாந்தி வந்துடும். வெறும் பாலும் தண்ணியும்தான். உடம்பு பலகீனமாயிடுச்சி” என்று சொல்லும் வெள்ளைக்கண்ணுவின் உடல்நிலை, கடந்த நவம்பர் 4ம் தேதி மூச்சு கூட விட முடியாத அளவுக்கு மிகவும் மோசமானது. அவசரமாக சிகிச்சைக்காக புதுச்சேரிக்கு அழைத்துச் சென்றார்கள். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ‘மிகவும் அபூர்வமான ஒரு பாக்டீரியா தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளார். இன்று இரவே அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பிழைப்பது கஷ்டம். நீங்கள் சென்னைக்குப் போய்விடுவது நல்லது’என்று சொல்லிவிட்டார்கள்.
பிறகு, சென்னை எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் வெள்ளைக்கண்ணுவிற்குத் திறந்த இதய அறுவைச்சிகிச்சை நடந்தது. சிகிச்சைக்குப் பிறகு, வெள்ளைக்கண்ணு நலமா இருக்கிறார். அறுவைச் சிகிச்சை செய்த எஸ்.ஆர்.எம். மருத்துவமனையின் இதய நுரையீரல் பிரிவுத் தலைவர் டாக்டர் கே. ஹர்ஷவர்தனைச் சந்தித்துப் பேசினோம்.
“நவம்பர் 4ம் தேதி மாலை, புதுச்சேரி டாக்டர்களே எனக்கு போன் செய்து பேசினார்கள்.‘இவருக்கு புரூசெல்லோசிஸ் (brucellosis) மாதிரி தெரியுது. இங்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடியாது. நீங்கள் முயற்சி செய்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். ‘சரி, உடனடியாக அனுப்புங்கள்’ என்றேன்.
தொடர்ந்து 9 மாதங்களாக ஜுரம் இருந்ததற்குக் காரணம், புரூசெல்லோ என்ற பாக்டீரியா. கால்நடைகள் மூலம் பரவும் இந்த நுண்ணுயிரி, உடலின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் பாதிக்கலாம்.
இந்தக் கிருமி வெள்ளைக்கண்ணுவின் இதயத்தில் போய் தங்கிவிட்டது. அவரின் இதயத் தசைகளைப் பாதித்து இதயத்தின் பிரதான இதய வால்வுகளான அயோட்டா, மைட்ரல் போன்ற 3 வால்வுகளில் துளைகளை ஏற்படுத்தி இருந்தது. மற்ற வால்வுகளில் தீவிர நோய்த் தொற்றை ஏற்படுத்திவிட்டது. இரவு 10 மணிக்கு அவரைக் கொண்டு வந்தார்கள். தொடர்ந்து ஏழு மணி நேரம் அறுவைச் சிகிச்சை செய்து பாதிக்கப்பட்ட அயோட்டா வால்வை நீக்கி, அதற்குப் பதிலாக செயற்கை வால்வைப் பொருத்தினோம். அறுவைச் சிகிச்சையின்போது, மற்ற உடல் பாகங்களுக்கு ரத்த ஓட்டப் பாதிப்பு ஏற்படாமல் இதயத் துடிப்பை மட்டும் நிறுத்தி, இந்தச் சிக்கலான அறுவைச் சிகிச்சையைச் செய்தோம். பாதிக்கப்பட்ட மற்ற வால்வுகளில் உள்ள குறைகளையும் பிறகு சரி செய்தோம்.
சிகிச்சைக்குப் பிறகு, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட்டில் வெள்ளைக்கண்ணுவின் ரத்தத்தைப் பரிசோதனைசெய்து, எந்த நோய்த் தொற்றும் தற்போது அவர் உடலில் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு அவரை டிஸ்சார்ஜ் செய்தோம். இனி அவருக்கு அந்த நுண்ணுயிரியின் மூலம் எந்தப் பாதிப்பும் இருக்காது. சராசரி வாழ்க்கையை இனி அவர் வாழலாம். அரசு மருத்துவமனையில் 30 ஆண்டுகள் பணி செய்த அனுபவம் உள்ள எனக்கு, இதைவிட சிக்கலான அறுவைச் சிகிச்சை எல்லாம் செய்துள்ளதால் இந்தச் சிகிச்சை எளிதாக இருந்தது. நம் நாட்டில் இந்தக் கிருமியின் தொற்று மிக அபூர்வம் என்றாலும் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். சென்னையில் செய்த இந்த அறுவைச் சிகிச்சை பற்றி சர்வதேச மருத்துவ இதழில் எழுத உள்ளேன்” என்றார் டாக்டர் ஹர்ஷவர்தன்.
வெல்டன் சார்..!
காய்ச்சாத பால் குடித்தால் ஆபத்து…
டாக்டர் ஹர்ஷவர்தன் சொன்னார்: “வெள்ளைக்கண்ணுவிற்கு ரியாத்தில் ஒரு வயலில் வேலை. அங்கு விளையும் காகறிகளை விற்பனைக்கு அனுப்புவதும் பண்ணையில் மாடுகளைப் பராமரிப்பதும் அவரின் தினப்படி வேலை. பாலைக் காச்சாமல் அப்படியே குடிப்பது அவரின் பழக்கம்.
காய்ச்சாத, பதப்படுத்தப்படாத பாலில் புரூசெல்லோ பாக்டீரியாக்கள் இருக்கும். இந்தக் கிருமி தாக்கிய மாடுகள் கருவுற்றால் 2 மாதங்களில் அப்படியே கரு சிதைந்து, தானாகவே வெளியில் விழுந்துவிடும். இதனை நாய், பன்றி போன்ற உயிரினங்கள் சாப்பிடும் அவற்றின் மூலம் மனிதர்களுக்கும் வந்துவிடும்.
நம் நாட்டில் இப்படிப்பட்ட கால்நடைகளைக் கவனித்து, ஏன் கரு தங்கவில்லை என்று உடனடியாக கால்நடை டாக்டரிடம் காட்டி சிகிச்சை செய்து விடுவார்கள். பச்சை இறைச்சி சாப்பிட்டாலும் இந்த நுண்ணுயிரி தாக்கும் அபாயம் உண்டு. வறட்டி தட்டுபவர்களுக்கும் வரலாம். இதயம் மட்டுமல்ல மூளை, நரம்பு மண்டலம் என்று உடலின் எந்தப் பாகத்தை வேண்டுமானாலும் இது தாக்கலாம். எந்த இடத்தில் போய் தங்கிவிடுமோ அந்த உறுப்பை, தசைகளை, எலும்பை கொஞ்சம்கொஞ்சமாக அழித்துவிடும்” என்கிறார்.
இதயத்தைத் துளைக்காதே!
ஜிஜி
– டாக்டர் ஹர்ஷவர்தன்.

சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த வல்லது – நாவல்பழம்!!


சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த வல்லது – நாவல்பழம்!!

பழங்கள், மனிதனுக்கு ஆரோக்கியத்தை  அள்ளித் தருபவை.  நோய்கள் ஏதும்  அணுகாதவாறு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக் கூடியவை.
பழங்கள் நாவுக்கு சுவையையும், மணத்தையும் கொடுத்து, உடலுக்கு வலுவையும் கொடுக்கிறது.  இந்த வகையில் நாவல் பழத்தின் மருத்துவப் பயன்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.
நாவலில் கொடிநாவல், குழிநாவல், கருநாவல், சம்புநாவல், நாட்டு நாவல் என பல வகைகள் உள்ளன.
ஏரிக் கரைகளிலும், கண்மாய், குளக் கரையிலும் நாவல் மரம் பெரியதாக வளர்ந்திருக்கும்.  தற்போது நவீன தொழில் நுட்பத்தால் நாவற்பழம் பெரியதாகவும், அதிகமாகவும் விளைவிக்கப் படுகிறது.
நாவல் மரத்தின் அனைத்து பாகங்களுமே மருத்துவப் பயன் கொண்டவை.
நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.  இதில் சிறப்பம்சமாக, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என முச்சுவையும் நிறைந்துள்ளது.
நாவல் பழத்தின் பயன்கள்
நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.  இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும்.  இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும்.  மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.
சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும்.  மலச்சிக்கலைப் போக்கும்.  மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.
நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால்  வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.
அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.
தூக்கமின்றி  அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.
மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.
நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும்,  உடல் சூட்டைத் தணிக்கும்.  ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
நாவல் கொட்டை
நாவல் பழத்தின் கொட்டைகளை எடுத்து வெயிலில் காயவைத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சூடான நீரில் கலந்து காலை வேளையில் குடித்து வந்தால் சர்க்கரை நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும்.  சர்க்கரை நோய் கட்டுப்படும்.   சர்க்கரை நோயின் பாதிப்பிற்கு ஆளானவர்களும், சர்க்கரை நோய் வராமல் தடுக்க நினைப்பவர்களும் இதனைச் சாப்பிடலாம்.
நாவல் கொட்டை சூரணம் கணையத்தை பலப்படுத்தி அதன் சுரப்பை சீராக்கும் தன்மை கொண்டது.  இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.  நாற்பது வயதை அடைந்தவர்கள் அனைவரும்  நாவல் கொட்டைச்  சூரணம் சாப்பிடுவது நல்லது.
நாவல் கொட்டையை லேசாக வறுத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து டி, காஃபி க்கு பதிலாக அருந்தலாம்.   இன்றும் மலைவாழ் மக்கள் நாவல் கொட்டையை டீ, காஃபிக்கு பதிலாக அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
நாவல் இலை
நாவல் கொழுந்து இலைச்சாறு     – 1 ஸ்பூன்
தோல் நீக்கிய ஏலக்காய் அரிசி    – 4
இலவங்கப்பட்டை தூள்    – 1/2 ஸ்பூன்
இவற்றை ஒன்றாகச் சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை அருந்தி வந்தால், அஜீரணக் கோளாறு, வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு போன்றவை நீங்கும்.
நாவல் பட்டை
100 ஆண்டுகள் பழமையான நாவல் மரப் பட்டை காயகற்ப மருந்து செய்ய பயன்படுத்தப் படுகிறது.
நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்.
எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில்  அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்.
நன்றி- ஹெல்த் சாய்ஸ்
Related Posts Plugin for WordPress, Blogger...

Related posts:
  1. நோய்களில் இருந்து பாதுகாக்க பத்து உணவு வகைகள்!!
  2. பேரீச்சம் பழத்தின் அற்புதமான பயன்கள்! – தினமும் சாப்பிட வேண்டிய ஒன்று
  3. நல்லெண்ணைய் – ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கும்
  4. சர்க்கரை நோய்க்கு ஒரு எளிமையான சிகிச்சை. முயற்சித்துப் பார்க்கலாமே!
  5. இளமை தோற்றத்துடன் இருக்க வேண்டுமா? மாதுழம் பழம் சாப்பிடுங்க!!
Tags: , , , ,

சீத்தப் பழம் ஓர் அருமருந்து!


சீத்தப் பழம் ஓர் அருமருந்து!

பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது சீத்தாப்பழம்.   இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது
பழத்தில் உள்ள சத்துக்கள்: சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்:
சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.
முகப் பருக்கள் குணமடையும்: சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.

மேனி பளபளப்பாகும்: விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.
சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.
சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.
மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை பொடி முக்கிய பங்காற்றுகிறது. விதையின் பொடியில் டீ தயாரிக்கப்பட்ட டீயை அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும்
எலும்பு பலமடையும்: சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.
நினைவாற்றல் அதிகரிக்கும்: சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.
தகவல் அலாவுதீன்.

கீரையின் மகத்துவம்!


கீரையின் மகத்துவம்!

கீரைகள் என்றாலே சத்துக்களின் தொகுப்பு என்பதனை நம்மால் உணர முடிகிறது. கீரை வகைகளில் எந்த சத்துக்களையும் இல்லையென்றால் அது மிகையாகாது. அத்தகைய கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உண்டாகும் நன்மைகளை தெரிந்துக்கொள்ளுங்கள்!
* கீரைகளை உண்பதன் மூலம் உடல் பருமன் கட்டுக்கோப்பாக இருக்கிறது. புற்றுநோய், இதய நோய், போன்ற கடுமையான நோய்கள் வருவதனை தடுக்கிறது. கொழுப்பை குறைப்பதிலும், செரிமானத்தை கூட்டுவதிலும் கீரை முக்கிய பங்கினை வகிக்கிறது.
* சர்க்கரை நோயாளிகள் கீரைகளை உண்பதனால்  அவர்களின் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது. சரியான விகிதத்தில் கீரைகளை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் வைட்டமின் 'கே' யின் அளவு உடலில் அதிகரிக்கறது. இதனால் நடுத்தர வயதில் இருக்கும் பெண்களுக்கு உண்டாகும் இடுப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். மேலும் எலும்பு உறுதிப்பெறுகிறது.
* இரும்புச்சத்தின் அளவும், கால்சியத்தின் அளவும் கீரைகளில் அதிகமாக இருப்பதால் எல்லா வகையான சத்துக்களையும் கீரைகளிலிருந்து நாம் பெறலாம்.
இத்தகைய கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் குறைவற்ற செல்வமான நோயற்ற வாழ்வை பெறுவோம்!!
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கீரையில் இருக்கும் முக்கிய சத்துபொருளான கரோட்டின் சிதைந்து விடும். கரோட்டின் பார்வைதிறனுக்கு உதவும் சத்துப்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது .
* கீரைகளை சமைப்பதற்கு பயன்படுத்தும் தண்ணீரை வீணாக கீழே கொட்டிவிடக் கூடாது. மேலும் கீரைகளை சமைக்கும்-பாத்திரங்களை சமைக்கும்போது திறந்து வைக்காமல் மூடி வைக்க வேண்டும்.
* கீரைகளை வெயிலில் உலர்த்தக்கூடாது. அப்படி உலர்த்தினால் அவற்றில் இருக்கும் கரோட்டீன்கள் வீணாகி விடும்.
* கீரைகளை பொரிப்பதை தவிர்க்க வேண்டும்.
சிறுநீர் எரிச்சலா? கீரை சாப்பிடுங்க
கீரைத்தண்டின் சுவை விளைகின்ற இடத்திற்கு ஏற்றபடி அமையும். இதில் சில நார் உள்ளவைகளாக இருக்கும். அந்த நாரை எடுத்துவிட்டு சமையல் செய்ய வேண்டும். கீரைத் தண்டின் தடிப்பான வேர்களிலும் சத்து இருக்கிறது. அதனால் மேல் தோலை மட்டும் சீவி விட்டு நசுக்கி சமையலில் பயன்படுத்தலாம்.
கீரைத் தண்டின் சுபாவம் குளிர்ச்சி ஆகும். இது மலத்தை நன்றhக இளக்குவதுடன் சிறுநீரையும் பெருக்கும். கீரைத் தண்டினை பருப்புடன் சேர்த்து சாப்பிடுவது நலம். கடலை, பட்டாணி, காராமணி, மொச்சை ஆகியவற்றை சேர்த்தும் சமைக்கலாம்.
கீரைத் தண்டு சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் காணாமல் போகும். வெள்ளை, குருதிக் கழிச்சல், வயிற்றுக் கடுப்பு ஆகியவையும் நீங்கி விடும்.
காய்கறி வகைகளிலே கீரை வகைகளுக்கு முக்கிய இடம் உண்டு. மருந்துக் கடைகளுக்குச் சென்று அதிக விலை கொடுத்து சத்து மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவதற்கு பதிலாக கீரை சாப்பிட்டால் போதும். தேவையான சத்துக்கள் தானாகவே கிடைத்து விடும். விலையும் குறைவு. இதில் பக்க விளைவுக்கு இடமே இல்லை. அந்தளவுக்கு கீரைகளில் அற்புதமான மருத்துவ குணங்கள் பொக்கிஷமாக பொதிந்து கிடக்கின்றன.
கீரை உணவு அனைவருக்கும் ஏற்றது. ஆனால் பெரும் பாலான குழந்தைகள் கீரையை பார்த்தால் ஏதோ இலை, தழை என்று நினைத்து பயந்து ஓடி விடுகின்றன. குழந்தைகள் மட்டுமல்ல, இளம் சிறுவர்களும், சிறுமிகளும் கூட கீரை வைத்தால் தொட்டு கூட பார்ப்பதில்லை. இதை பெற்றேhர்தான் மாற்ற வேண்டும். சின்ன வயதில் இருந்தே குழந்தை களுக்கு கீரை உணவுகளை கொடுத்து பழக்க வேண்டும்.
கீரை உணவு எந்தளவுக்கு சாப்பிடுகிறோமோ, அந்தளவுக்கு ஆரோக்கியம் அமையும்.
தகவல் : Eng.Sulthan