மது, புகை பழக்கத்தால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு குறித்து அமெரிக்காவின்
கலிபோர்னியா பல்கலைக்கழக நுரையீரல் ஆராய்ச்சி பிரிவு டாக்டர்கள் ஸ்டான்டன் சியு,
கைசர் பெர்மானென்டி தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தினர். 1978-ம் ஆண்டு முதல்
1985 வரை நடத்தப்பட்ட ஆய்வுகள், அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஆய்வு
நடத்தப்பட்டது. 1.26 லட்சம் பேரிடம் கருத்து கணிப்பும் நடத்தப்பட்டது.
இவர்களில் பலர் தொடர் மதுப் பழக்கம் உள்ளவர்கள். ஆய்வில் தெரியவந்த தகவல்கள் பற்றி கைசர் கூறியதாவது: மது பழக்கம் உள்ளவர்கள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக கண்காணித்து நடத்தப்பட்ட ஆய்வு இது. தொடர்ந்து மது குடிக்கும் பழக்கம் உள்ள 1,852 பேருக்கு புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டன. நோய் பாதிப்பு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், உடனே மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனால், நோய் தீவிரம் ஆகாமல் எளிதாக விடுபட்டனர்.
புகை, மது பழக்கம் இரண்டுமே நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடியவை. இரண்டு பழக்கமும் ஒருசேர இருந்தால், புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறு அதிகம். இதய பாதிப்புகளும் தலைதூக்கும். புகை, மது பழக்கத்தை கைவிட்டு, பிளாக் டீ, பழ வகைகளை அதிகம் சாப்பிட்டால் பாதிப்பில் இருந்து விடுபட முடியும்.
-நன்றி: தினகரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக