WELCOME TO OUR HOME PAGE அப்பாக்குட்டி மருத்துவம் <>தற்போதைய செய்திகள்:........சூடாக ஒரு கப் டீ<><>கருசிதைவு சில அறிகுறிகள்<><>இயற்கை வயாகரா முருங்கை பற்றி உங்களுக்கு தெரிந்ததும்... தெரியாததும்.<><>கர்ப்பப் பை பலம் அடைய உழுத்தங்களி சாப்பிடுங்க..!<><>பெண்கள் பயன்படுத்தும் “நாப்கின்” ஆல் உடல் நலத்திற்கு கேடு! ஆய்வில் அதிர்ச்சி தகவல்! »<><>குளிர் நீரை விட சுடு நீர் தான் பெஸ்ட்! லேட்டஸ்ட் தகவல்!<><>அதுல கிரேட்டா இருக்கணுமா? சில உணவுகளை சாப்பிடாதீங்க!<><>தூக்கம் குறைந்தால் கேன்சர் தாக்கும் : டாக்டர்கள் எச்சரிக்கை<><>மன உளைச்சலா, மாரடைப்பா? தலைமுடியை ஆராய்ந்தால் உடல்கண்டிஷன்தெரியும்<><>ஆஸ்டியோபொரோசிஸ் எனும் அசுரப் பிரச்னை<><>பக்கவாதம் என்றும் பாhpசவாயு என்றும் கூறப்படும் கை, கால், முகம், வாய் போன்றவற்றின் செயலிழப்பு எல்லா வயதினரையும்...;குட்டீஸ்க்கு மூக்கில் ஒழுகுதா? வீட்டு மருந்து கொடுங்க!<><>பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துணவுகள்!<><>பட்டினி கிடந்தா உடல் மெலியாதா?<><>வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்<><>;ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு <><>இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்‏<><>தொண்டையில் கழலை இல்லை, தைரொயிட் நோயா ?<><>நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்<><>ஹாய் நலமா-2 மூட்டு வலிகளா?‏<><>முட்டையின் மகத்துவம் - ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு<><>தூக்கம் இல்லாத பிரச்சனைக்கு சிறந்த மருந்து சப்போட்டா பழம்! <><>17 குணங்கள் கொண்ட‌ வெற்றிலை<><>குழந்தை மருத்துவம்: 3 முதல் 8 வயது வரை..<><>உடற்பயிற்சியின்றி அதிகரிக்கும் மரணங்கள்.<><>அல்சரை குறைக்க மன அமைதி தேவை.<><>புற்றுநோய் என்ன செய்யும்?, மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? : 3டி அனிமேஷனின் பதில் <><>பசுவின் பால், குழந்தைகளுக்கு நல்லதல்ல - அதிர்ச்சி தகவல்<><>தூக்கம் இன்றி 15 கோடி இளைஞர்கள் தவிப்பு<><>முகப்பரு மறைய<><>தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க!<><>சிறுநீரகக்கல் இருக்கா? கவலையை விடுங்க...<><>ஏலக்காய்’ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா!! <><>ஹீமோகுளோபின் அதிகரிக்க வழிகள்<><>மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி!<><>தைராய்டு பற்றிய விழிப்புணர்வும் அவற்றுக்கான தீர்வும்!<><>வயாக்கிராவுக்கு பதில் மாதுளம்பழம்!<><> உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வெள்ளரிக்காய்<><>தைரியமாக சொல்லுங்க: ”தொட்டுக்க ஒரு டபுள் ஆம்லெட் போடுங்க.. மனையாளே!”<><>புற்று நோய் பற்றிய விழிப்புணர்வும் விரிவான தகவல்களும்!<><>விஷ ஜந்துக்கள் கடித்து விட்ட‌தா? என்ன முதலுதவி செய்யலாம்? தெரிந்து கொள்ளுங்கள்…<><>மாரடைப்பைத் தடுக்கும் ரத்தப் பரிசோதனை <><>பகலில் தூங்காதீங்க மன அழுத்தம் வரும் – ஆய்வில் தகவல் <><>சிறு தானியங்களின் மருத்துவக் குணங்கள்!<><>சீரகத்தின் குணங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.<><>மன அழுத்தத்தை போக்கும் வாழை இலை! <><>ரத்த சோகையை தடுக்கும் வழிகள்<><>தூங்காமல அவதிப் படுகிறீர்களா! <><>இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம்! ஆய்வு தகவல்!<><>குழந்தை பெற்ற பின்னும் உடல் சிக்கென்று இருக்க<><>மார்பகப் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு தரும் வைட்டமின் C! <><>கிராம்பின் மருத்துவ குணங்கள்! <><> இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது வேர்க்கடலை<><>அல்சர் இருக்கா கவனம் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்! <><>புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களா நீங்கள்? நிறுத்த 7 வழிகள்!<><>அதிகாலையில் தண்ணீர் பருகுங்கள் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும்.<><>நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!!<><>பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்குமாம்... உங்களுக்குத் தெரியுமா?<><>குழந்தை வேண்டுமா? மணல்தக்காளி சாப்பிடுங்கள்!<><>சில நோய்களுக்கான அறிகுறிகளும் தப்பிக்கும் வழிகளும்.. <><>நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செக்ஸ் : ஆய்வில் நிரூபணம்<><>செக்ஸ் வாழ்க்கையில ஈடுபட முடியலையே!<><>மாரடைப்பு <>

திங்கள், 30 ஜனவரி, 2012

மருந்து மாத்திரைகள் வாங்கும் போது… சில எச்சரிக்கை குறிப்புகள்!!


மருந்து மாத்திரைகள் வாங்கும் போது… சில எச்சரிக்கை குறிப்புகள்!!

மருந்து வாங்கும் போது… கீழ்க்கண்ட விஷயங்களை அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இது உயிர் பற்றிய விஷயம். எனவே அக்கறை அவசியம்.
1. மருத்துவரின் சீட்டு இல்லாமல்வாங்காதீர்கள்!
தமிழ் சினிமாவின் பிரபல வசனங்களில் ஒன்று, யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும. யார் வெட்டினாலும் கத்தி வெட்டும். மருந்து, டாக்டர் எழுதிக் கொடுத்தாலென்ன… கடைக்காரரே கொடுத்தால் என்ன? என்று நினைப்பவர் அநேகர். அது உண்மையல்ல. குடும்ப மருத்துவருக்குக் கொடுக்கும் பணம் உங்கள் உடல்
நலத்திற்கான முதலீடு என்பதை உணருங்கள். நீங்கள் சரியான மருத்துவரிடம் 50, 100 ரூபாய் கொடுத்தால் அவர் குறைந்தது 5 மடங்கு பணம் மிச்சப்படுத்தும் வேலையைச் செய்வார்!
இப்போது பெரும்பாலான மருத்துவர் கள் தங்கள் மருந்துச் சீட்டை தெளிவாக, தனித்தனியாக கொட்டை எழுத்துக்களில் தான் எழுதித்தருகின்றனர். சிலர் கம்ப் யூட்டர் மூலம் பிரிண்ட் செய்யப்பட்ட மருந்துச் சீட்டை கொடுக்கிறார்கள்.
கையெழுத்துப் புரியவில்லை என்றால் கேட்டு விடுங்கள்! கோபிக்க மாட்டார்! சிலர் பழைய சீட்டை வைத்தே வருடக் கணக்கில் வாங்குவார்கள். அதுவும் தவறு! அவ்வப்போது மருத்துவரைப்பாருங்கள்!
2. செல்போனில் மருந்துச் சீட்டு
நீண்ட காலத்திற்கு சாப்பிட வேண்டிய உயிர் காக்கும் மருந்துகளின் பெயர், டோஸ் அளவு போன்றவற்றை Cell Phone™ மெஸேஜ் ஆக எழுதி பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த Message  வீட்டில் உள்ள அனைத்து செல்ஃபோனி லும் இருக்கட்டும். அவசரத்தில் சிகிச்சை யளிக்க மருத்துவர் கேட்கும்போது இது உயிர் காக்க உதவும்.
3. பில் இல்லா மருந்து மருந்தல்ல எங்கே வாங்கினாலும், எவ்வளவு வாங்கினாலும் எவ்வளவு அவசர மானாலும், பில் இல்லாமல் மருந்துகளை வாங்காதீர்கள்.
பில்லில் உங்கள் பெயர், மருத்துவரின் பெயரும் இருக்கட்டும். மருத்துவரின் மருந்துச் சீட்டுடன், பில்லை வைத்து கவனமாக சரிபார்த்து, வாங்குங்கள். சந்தேகம் இருக்கும் பட்சம் மருத்துவரிடமோ அவரது உதவியாளரிடமோ Cross Check செய்து கொள்ளுங்கள்.
4. உதிரிகள் வேண்டவே வேண்டாம்..
மருந்தின் பெயர், மருந்துப் பொருட்களின் பெயர், தயாரித்த கம்பெனியின்  பெயர், விற்கும் கம்பெனியின் பெயர் மருந்தின் வீரிய அளவு, மருந்து தயாரித்த தேதி காலாவதி தேதி ஆகியவற்றை முழு அட்டையாக மாத்திரை வாங்கும் போதுதான் கவனித்து வாங்க முடியும். எனவே கூடுமானவரை உதிரியாக மாத்திரை வாங்குவதை தவிர்த்து விடுங் கள். உதிரி மாத்திரைகள், காலாவதி, போலி, சாம்பிள் மாத்திரைகளாகக் கூட இருக்கக் கூடும். எனவே கூடுதல் கவனம் தேவை.
5. வீரியமில்லாமல் காரியமில்லை
மாத்திரை பெயர் பார்த்து வாங்கும் போது அதன் அளவு 2 மிலி, 5 மிலி, 10 மிலி என வீரியத்தின் அளவு பார்த்து வாங்க வேண்டும். இது மிக முக்கியம்.
6. காலாவதி மாத்திரை
காலனிடம் சேர்க்கும் எந்த மருந்தையும் நீங்களாகப் பார்த்து, காலாவதி தேதி சரிபாருங்கள். சில மாத்திரைகளில், 18 மாதங்கள், 24 மாதங்கள். தயாரித்த தேதியிலிருந்து என போட்டிருப்பார்கள். அதையும் சரிபாருங்கள்.
ஒரே வகையான மருந்து 6 மாதம் ஒரு கம்பெனியும் மற்றொரு கம்பெனி 3 வருடம் கழித்தும் காலாவதி தேதியை குறிப்பிட்டிருக்கும். அது மருந்து தயாரிக் கும் முறை, மருந்தின் உட்பொருட்கள் பொறுத்து மாறக்கூடும். நீங்களாக ஒரு முடிவுக்கு வர வேண்டாம்.
சில மருந்துகள் 1 நாள் தாண்டினால் கூட விஷமாக மாற வாய்ப்பு உண்டு. உதாரணம் டெட்ராசைக்ளின் வகை மருந்துகள். சில மருந்துகளில் காலாவதி தேதி நீண்ட நாட்கள் இருந்தாலும், குறிப்பாக குழந்தைகளுக்கு பவுடர் வடிவில் கொடுக்கப்படும் ‘ஆன்டி பயாடிக்Õ வகை மருந்துகள், காய்ச்சி ஆறவைத்த நீரில் கலந்து 5 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என சிறிய எழுத்தில் எழுதியிருப்பார்கள். அதுபோன்ற மருந்து களை 5 நாட்களுக்கு மேல் வைக்கக் கூடாது.
7. நீண்ட நாட்களுக்கு…
நீண்ட நாட்களுக்கு சாப்பிட வேண்டிய, தினசரி தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள் குறைந்தது 1 வாரத்துக்கான அளவாவது வீட்டில் இருக்கட்டும். இரவு ஒரே மாத்திரை இருந்து அதுவும் கீழே தவறி விழுந்துவிட்டால், தேவையில்லாத, பயம், பதட்டம், கவலை, அலைச்சல் டென்ஷன் இதை தவிர்க்க கைவசம் சற்று மாத்திரைகள், பர்ஸ், அல்லது ஹேண்ட் பேகில் இருக்கட்டும்.
8. குறைந்த செலவில் நிறைய மருந்துகள் சில
மொத்த மருந்து வியாபாரிகளின் சில்லறை விலைக் கடைகளிலோ, சேவை நிறுவனங்கள் நடத்தும்
கடைகளிளோ, 10 முதல் 20% வரை எம்.ஆர்.பி. விலையில் இருந்து தள்ளுபடி விலையில் மருந்து கிடைக்கும். ஒரு மாதத்திற்குத் தேவை யான மருந்துகளை இதுபோன்ற கடை களில் வாங்கினாலே கணிசமான பணம் மிச்சமாகும். சில கடைகளில் போனில் ஆர்டர் கொடுத்தால் இலவச டோர் டெலிவரி வசதியும் உண்டு. பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேரத்தை
மிச்சப்படுத்துங்கள்.
9. அதே மருந்து…
வேறு கம்பெனி சில மருந்து கம்பெனியின் தயாரிப் புகள் இல்லாதபோது நீங்களாகவே வேறு கம்பெனி மருந்துகளை மருத்துவரின் அனுமதியில்லாமல் வாங்காதீர்கள். போலி கம்பெனியா, தடைசெய்யப்பட்ட மருந்துகள் கலந்துள்ளனவா என்பதை உங்கள் மருத்துவர் அறிவார். குறிப்பாக வலிப்பு/ சர்க்கரை வியாதி/ ரத்தக் கொதிப்பு மாத்திரை வாங்கும்போது, வீரியம் அதிகரித்தாலோ, குறைந்தாலோ, தேவையில்லாத பாதிப்புகள் ஏற்படக் கூடும்.
அதுபோலவே மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்தை நீங்களாகவே குறைத்துக் கொள்ளவோ அதிகரித்துக் கொள்ளவோ வேண்டாம்.
என் நண்பர் ஒருவர் ‘விருந்துக்குப் போய்விட்டு வந்தால் சர்க்கரை மாத்திரை இரண்டாகப் போட்டுக் கொள்வேன்’ என்பார். தலைக்கு மேல் கத்தி தொங்கு வது போன்றது இது. எப்போதும் ஆபத்து நேரலாம்.
10. மருந்துகள் பாதுகாக்க குழந்தைகள் கைக்கு எட்டாமல் வைக்கவும்.
பல மாத்திரைகள் கலர் கலராக ஜெம்ஸ் மிட்டாய் போல இருப்பதால் குழந்தைகள் வாயில் போட்டுக் கொள்ளும் ஆபத்து அதிகம்.
சில மருந்து மாத்திரைகள் குறிப்பாக நெஞ்சுவலி மாத்திரைகள் போன்றவை கைக்கு எட்டும் வகையிலும், தேவைப்பட்டால் ஒவ்வொரு அறையிலும் இருப்பது நலம்.
சில மருந்துகளை குளிர் சாதனப் பெட்டியில் தான் (இன்சுலின் போன்றவை) வைக்க வேண்டும். ஆனால் ஓபஸ் பெட்டியில் (ப்ரீஜரில்) வைக்கக் கூடாது.
பொதுவாக எல்லா மருந்துகளையும் வெயில், சூடுபடாத, ஈரம் இல்லாத உலர்ந்த இடத்தில் வைப்பது அவசியம். அடுப்பு அருகே, ப்ரிட்ஜின் மேல், சூடான பாத்திரம், ஹீட்டர் அருகே அல்லது வெயில்படும் இடங்களில் மருந்துகளை வைத்தால் மருந்து கெட்டுப்போக வாய்ப்பு உண்டு. சிலவகை தடுப்பு
மருந்துகளில், மருந்தின் வீரியம் கெட்டுப் போனதை அந்த லேபிள் கலர் மாறு வதைப் பொறுத்து கண்டுபிடிக்க இயலும்
கல்வி களஞ்சியம் (www.kalvikalanjiam.com)
கல்விப்பணியில் என்றும் உங்களுடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக