பெண்களுக்கு சத்து அளிக்கும் பழங்கள்!
கருப்பு திராட்சையில் வைட்டமின் ஏ மற்றும்
இரும்புச்சத்து அதிகம் காணப்படுகிறது. இதில் போலிக் அமிலம் இருப்பதால் கர்ப்பிணிப்
பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. பலர் கர்ப்பகாலங்களில் சாப்பிடக்கூடாது,
குழந்தை கருப்பாக பிறக்கும் என்பார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, நீங்கள்
சாப்பிடுவது குழந்தைக்கும் நல்லது தாய்க்கும் நல்லது. தர்பூசணி பழத்தில்
தண்ணீர்ச்சத்து அதிகம் இருக்கும். வைட்டமின் ஏ சத்து மற்றும் போலிக் அமிலம் அதிகம்
காணப்படுவதால் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிகவும் நல்லது. தாய்மார்கள் விரும்பிச்
சாப்பிடலாம்.
அத்திப் பழச்சாறு ஆண்களைவிட பெண்கள் மிக முக்கியமாக சாப்பிட வேண்டிய சாறு. ஏனெனில் பெண்களுக்கு ஏற்படும் சத்துக்குறைவு (இரத்தசோகை) பிரச்சனைகளை சரி செய்கிறது. உடலில் இரத்தத்தைச் சுத்திகரிக்கக் கூடியது. இதில் இரும்புச்சத்து அதிகம். பெண்கள் அதிகமாக சாப்பிட வேண்டும். சோர்வாக இருக்கும் போது சாப்பிட்டால் உடனடியாக சுறுசுறுப்பு வரும்.
-நன்றி நிலவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக