கர்ப்ப காலம் என்பது மாதவிலக்கு நிற்கும் நாளிலிருந்து 9 மாதமும் 7 நாட்களும் என்று கணக்கிடப்படுகிறது. பொதுவாக 40 வாரங்கள் என்று கணக்கிடப்படுகிறது. முதல் ட்ரைமாஸ்டர் (முதல் 12 வாரங்கள்) மிக முக்கியமான கர்ப்பகாலம்
1. ஏனென்றால் 35லிருந்து 40வது நாளுக்குள் இவர்களுக்குச் சிறுநீரைப் பரிசோதித்து முதலில் கருவுற்றிருக்கிறார்களா? என்பது உறுதிசெய்யப்படுகிறது.
2. அடுத்தபடியாக ‘முத்துப் பிள்ளை’ போன்ற அபாயகரமான, தாயின் உயிருக்குப் பலத்த சேதத்தை விளைவிக்கக் கூடிய கர்ப்பகால நோய்கள், இந்தச் சிறுநீர் பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டு ஸ்கேன் மூலம் உறுதி செய்து காலி செய்ய ஏதுவாகிறது.
3. கர்ப்பம் உறுதி செய்யப்பட்டுப் பதிவு செய்யப்படும் போதே அவருடைய இரத்தக் கொதிப்பு, எடை ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்க ஏதுவாகிறது.
4. சோகையான பெண்களுக்கும், இந்த ஆரம்ப காலப் பரிசோதனையிலே வார ஊசிகளாகச் சத்து ஊசிகளும் போட்டு அவர்களை, இரத்த சோகையின் காரணமாக ஏற்படும் இடர்ப்பாடுகளில் இருந்து ‘வருமுன் காப்போம்’ முறைகளை கடைப்பிடித்துக் காப்பாற்ற முடிகிறது.
5. அதிக வாந்தி, மயக்கம், ருசியில் மாறுதல் போன்ற ‘மசக்கை’ என்று கூறக்கூடியதானது, சில பெண்களுக்கு இந்த கால கட்டத்தில் அளவுக்கதிகமாகவே இருப்பதுண்டு. அதற்கான மருந்துகள் இருப்பதால் அவர்கள் சோர்வடையாமலும் அதனால் கருவின் வளர்ச்சி பாதிக்கப்படாமலும் பாதுகாக்க முடிகிறது.
6. முதல் 12 வாரங்களில் தான், கருவானது குழந்தையாக முழுவளர்ச்சி பெறுகிறது. அதன்பின் அதன் அளவுதான் பெரிதாகிறது. அதனால் வளர்ச்சிப் பரிமாணமானது இந்த 12 வாரங்களுக்குள் நடைபெறுவதால் 1. போதிய கவனிப்பு, 2. தரமான உணவு, 3. சுகாதாரமான தண்ணீர், 4. நல்ல ஓய்வு, 5. மருத்துவரின் கண்காணிப்பு இந்த சமயத்தில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகிறது. கர்ப்ப காலத்தில் பொதுவாக 3 முறை ஸ்கேன் அவசியமாகின்றது.
90வது நாள் (முதல் ட்ரைமாஸ்டர்) முடியும் பொழுது
1. குழந்தையாக கரு உருப் பெற்றுவிட்டதை உறுதி செய்ய
2. ‘முத்துப்பிள்ளை’ போன்ற உயிருக்கு ஆபத்தான கரு வளர்ச்சியைக் கண்டறிய
3. கர்ப்பப்பையிலும், கருவிலும் உள்ள மற்ற குறைபாடுகளைக் கண்டறிந்து குணப்படுத்த
150வது நாள் (20வது வாரத்தில்)
1. குழந்தை வளர்ச்சியைக் கண்காணிக்க
2.பிறப்பிலேயே ஏற்படக்கூடிய குறைபாடுகளைக் கண்டறிந்து மிகவும் ஆபத்தான குறைகள் என்றால் மருத்துவ முறைப்படி வளர விடாமல் வெளியேற்ற
3. குழந்தை வளரும் கர்ப்பப்பை சூழ்நிலைகளை, தன்மைகளைக் கண்டறிய
1. குழந்தையின் இருப்பிடம்,
4.தலை இறங்கியிருக்கும் அளவு,
5.பிரசவம் ஆகக் கூடிய தேதி
6.குழந்தையின் எடை போன்றவற்றைக் கண்டறிவதின் மூலம் குழந்தை பிறக்கும் வழியையும் (Nature of Delivery) தேதியையும் ஓரளவு கணிக்க முடிகிறது.
நவீன மருத்துவக் கருவிகளிலேயே இந்த “ஸ்கேன்”, மகளிர் மகப்பேறு மருத்துவத்தில் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது.
பிரசவ சமயத்தில் பிரசவம் 12 மணி நேரங்களுக்கு மேல் நீடித்தாலோ, குழந்தையின் துடிப்பு உணரப்படவில்லை என்று பெண்மணிகள் கர்ப்பக் காலத்தில் மருத்துவரைச் சந்திக்க வந்தாலோ, குழந்தைக்கு இருதயத் துடிப்பு இருக்கிறதா என்று இந்த ஸ்கேனர் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.
இருதயத் துடிப்பை ஈ.ஸி.ஜி. போன்று ஸ்கேனர் அழகாகப் பதிவு செய்து கொடுக்கும்.
இருதயத் துடிப்பு அதிகரித்தாலோ, மாறுதல்கள் இருந்தாலோ அது குழந்தையின் மூச்சுத் திணறுதலைச் சுட்டிக் காட்டுவதால், உடனடியாக அதற்கான வைத்தியமுறைகளைக் கையாண்டு அறுவை சிகிச்சை செய்தாவது குழந்தையைக் காப்பாற்ற ஏதுவாகிறது.
முந்தைய காலம் போல் அல்லாது ஒன்றிரண்டு குழந்தைகளே இன்றைய குடும்பம் என்று ஆகிவிட்ட சூழ்நிலையில் அவற்றை நன்முறையில் கர்ப்பக் காலத்தில் தாய் சேய் நலத்தைப் பேணி, மிகவும் சாதாரண அறுவை சிகிச்சை இல்லாத முறையில் பெற்றெடுப்பதற்கு இந்த கர்ப்பக் கால பராமரிப்பு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகிறது.
தொகுப்பாக, இந்த 12 வாரங்களில் கரு குழந்தையாக உருப்பெறுவது நடைபெறுவதால் நல்ல ஊட்டச்சத்தும், ஓய்வும் மருத்துவக் கண்காணிப்பும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகிறது.
இரண்டாவது ட்ரை மாஸ்டர் (இரண்டாவது 12 வாரங்கள்)
கரு குழந்தையான பின் ஏற்படும் வளர்ச்சிதான் இந்த இரண்டாவது 12 வாரங்களில் நடைபெறுகிறது. இதில், பொதுவாக முதல் ட்ரைமாஸ்டரைப் போன்ற மிகவும் ஆபத்தான இடர்ப்பாடுகள் ஏற்படுவதில்லை.
இந்த இரண்டாவது ட்ரை மாஸ்டரில்
1. இரண்டு தடுப்பூசிகளும் போடப்படுகிறது.
18 வது வாரம்
26 வது வாரம்
2. சத்து மாத்திரைகள் இரும்புச்சத்து, கால்சியம் சத்து (சுண்ணாம்புச் சத்து) போலிக் ஆசிட்.
3. மார்பகத்தைச் சோதனை செய்து, உள்ளடங்கிய காம்பு உள்ளவர்களுக்கு எளிய பயிற்சி கொடுத்து அதை வெளியில் திருப்பினால்தான் பிரசவத்திற்கு பின் தாய்ப்பால் கொடுக்கும்பொழுது சிரமம் இல்லாமல் இருக்கிறது.
4. மிகவும் இரத்தசோகையுடன் இருப்பவர்களுக்கு
1.இரும்புச் சத்து ஊசிகளும் 2. இரத்தமும் கூட ஏற்றப்பட்டு, அவர்கள் ஆபத்தில்லா பிரசவத்திற்கு தயார் செய்யப்படுகிறார்கள்.
மூன்றாவது ட்ரைமாஸ்டர் (24வது வாரம் முதல் 40வது வாரம் வரை)
அதாவது அந்த மூன்றாவது ட்ரைமாஸ்டர் என்பது பிரசவத்தின் தன்மையை நிர்ணயிக்கக் கூடிய முக்கியமான காலகட்டமாகும். இந்தக் கட்டத்தில்
1. மூளை வளர்ச்சி அதிகம் ஏற்படுகிறது. இது 1 வயது வரை தொடர்கிறது.
2. குழந்தையின் எடை அதிகரிக்கிறது.
3. நரம்பு மண்டலங்கள் பலப்படுகின்றன.
4. அசைவுகள் அதிகம் ஏற்படுகின்றன.
5. இருதயத் துடிப்பு சீராகிறது.
6.கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் போன்ற முக்கியமான உறுப்புகள் முழுவளர்ச்சி அடைகின்றன.
7. பிறப்பு உறுப்புகள் தெளிவாக ஸ்கேனிங்கில் தெரிய ஆரம்பிக்கின்றன.
8. எலும்பு வளர்ச்சி அடைகிறது செறிவடைகிறது.
9. இரத்த ஓட்டம் சீராகிறது.
10. குழந்தை கருப்பையினுள் சுற்றி வருகின்றது.
40வது வாரம் நெருங்கும் பொழுது
1. குழந்தையின் தலை கீழே, திரும்பி, இடுப்பு எலும்புக் கூட்டுக்குள் இறங்கி விடுகிறது. அவ்வாறு இறங்கினால் தான், இயற்கையான முறையில் பிரசவமாவதற்கு ஏதுவாகிறது.
2. தகுந்த தண்ணீர்ச் சத்து குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. அது குறையும் பொழுது குழந்தையின் உயிர்த் துடிப்பிற்கே ஆபத்தாகிறது.
3. தாயின் இரத்த அழுத்தம் இந்தச் சமயத்தில் சீராக 120/80ல் இருக்க வேண்டும்.
சிலருக்கு 40வது வாரம் நெருங்கும் பொழுதுதான்...
1. அதிகமான வீக்கம், கை, கால், முகங்களில் ஏற்படுகிறது.
2. உப்புச் சத்து அதிகரிக்கிறது.
3. இரத்தக் கொதிப்பு அதிகரிக்கிறது.
4. மூச்சுத் திணறல் உண்டாகிறது.
5. அளவுக்கதிகமான வியர்வை
6. இருதய படபடப்பு.
7. தூக்கமின்மை உண்டாகிறது.
இதைத்தான் (“TOXAEMIA OF PREGNANCY”) கர்ப்ப காலத்தில் உடலில் விஷமாக மாறிவிடக்கூடிய கர்ப்பம் என்று கூறுகிறோம்.
ஆகவே,கர்ப்பகால பராமரிப்பு ஒவ்வொரு கருவுற்ற தாய்க்கும் மிகவும் இன்றியமையாததாகும்.
கரு முதல் குழந்தை வரை பற்றி இஸ்லாம்:
(அல்லாஹ்) அவனே உங்களை மண்ணிலிருந்தும் பின்னர் விந்துத் துளியிலிருந்தும் பின்னர் கருவுற்ற சினை முட்டையிலிருந்தும் படைத்தான். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளியேற்றுகிறான். (அல்குர்ஆன் 40:67).
anbudaiyer naan en wife uden sexs vaithu kollum bodhu conden anindhu irunden adil hole ulladu teriyavillai adanal en wife karu undagumo endru payapadugiraal idrku edauvadhu tirvu irukka.
பதிலளிநீக்கு