WELCOME TO OUR HOME PAGE அப்பாக்குட்டி மருத்துவம் <>தற்போதைய செய்திகள்:........சூடாக ஒரு கப் டீ<><>கருசிதைவு சில அறிகுறிகள்<><>இயற்கை வயாகரா முருங்கை பற்றி உங்களுக்கு தெரிந்ததும்... தெரியாததும்.<><>கர்ப்பப் பை பலம் அடைய உழுத்தங்களி சாப்பிடுங்க..!<><>பெண்கள் பயன்படுத்தும் “நாப்கின்” ஆல் உடல் நலத்திற்கு கேடு! ஆய்வில் அதிர்ச்சி தகவல்! »<><>குளிர் நீரை விட சுடு நீர் தான் பெஸ்ட்! லேட்டஸ்ட் தகவல்!<><>அதுல கிரேட்டா இருக்கணுமா? சில உணவுகளை சாப்பிடாதீங்க!<><>தூக்கம் குறைந்தால் கேன்சர் தாக்கும் : டாக்டர்கள் எச்சரிக்கை<><>மன உளைச்சலா, மாரடைப்பா? தலைமுடியை ஆராய்ந்தால் உடல்கண்டிஷன்தெரியும்<><>ஆஸ்டியோபொரோசிஸ் எனும் அசுரப் பிரச்னை<><>பக்கவாதம் என்றும் பாhpசவாயு என்றும் கூறப்படும் கை, கால், முகம், வாய் போன்றவற்றின் செயலிழப்பு எல்லா வயதினரையும்...;குட்டீஸ்க்கு மூக்கில் ஒழுகுதா? வீட்டு மருந்து கொடுங்க!<><>பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துணவுகள்!<><>பட்டினி கிடந்தா உடல் மெலியாதா?<><>வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்<><>;ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு <><>இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்‏<><>தொண்டையில் கழலை இல்லை, தைரொயிட் நோயா ?<><>நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்<><>ஹாய் நலமா-2 மூட்டு வலிகளா?‏<><>முட்டையின் மகத்துவம் - ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு<><>தூக்கம் இல்லாத பிரச்சனைக்கு சிறந்த மருந்து சப்போட்டா பழம்! <><>17 குணங்கள் கொண்ட‌ வெற்றிலை<><>குழந்தை மருத்துவம்: 3 முதல் 8 வயது வரை..<><>உடற்பயிற்சியின்றி அதிகரிக்கும் மரணங்கள்.<><>அல்சரை குறைக்க மன அமைதி தேவை.<><>புற்றுநோய் என்ன செய்யும்?, மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? : 3டி அனிமேஷனின் பதில் <><>பசுவின் பால், குழந்தைகளுக்கு நல்லதல்ல - அதிர்ச்சி தகவல்<><>தூக்கம் இன்றி 15 கோடி இளைஞர்கள் தவிப்பு<><>முகப்பரு மறைய<><>தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க!<><>சிறுநீரகக்கல் இருக்கா? கவலையை விடுங்க...<><>ஏலக்காய்’ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா!! <><>ஹீமோகுளோபின் அதிகரிக்க வழிகள்<><>மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி!<><>தைராய்டு பற்றிய விழிப்புணர்வும் அவற்றுக்கான தீர்வும்!<><>வயாக்கிராவுக்கு பதில் மாதுளம்பழம்!<><> உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வெள்ளரிக்காய்<><>தைரியமாக சொல்லுங்க: ”தொட்டுக்க ஒரு டபுள் ஆம்லெட் போடுங்க.. மனையாளே!”<><>புற்று நோய் பற்றிய விழிப்புணர்வும் விரிவான தகவல்களும்!<><>விஷ ஜந்துக்கள் கடித்து விட்ட‌தா? என்ன முதலுதவி செய்யலாம்? தெரிந்து கொள்ளுங்கள்…<><>மாரடைப்பைத் தடுக்கும் ரத்தப் பரிசோதனை <><>பகலில் தூங்காதீங்க மன அழுத்தம் வரும் – ஆய்வில் தகவல் <><>சிறு தானியங்களின் மருத்துவக் குணங்கள்!<><>சீரகத்தின் குணங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.<><>மன அழுத்தத்தை போக்கும் வாழை இலை! <><>ரத்த சோகையை தடுக்கும் வழிகள்<><>தூங்காமல அவதிப் படுகிறீர்களா! <><>இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம்! ஆய்வு தகவல்!<><>குழந்தை பெற்ற பின்னும் உடல் சிக்கென்று இருக்க<><>மார்பகப் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு தரும் வைட்டமின் C! <><>கிராம்பின் மருத்துவ குணங்கள்! <><> இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது வேர்க்கடலை<><>அல்சர் இருக்கா கவனம் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்! <><>புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களா நீங்கள்? நிறுத்த 7 வழிகள்!<><>அதிகாலையில் தண்ணீர் பருகுங்கள் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும்.<><>நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!!<><>பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்குமாம்... உங்களுக்குத் தெரியுமா?<><>குழந்தை வேண்டுமா? மணல்தக்காளி சாப்பிடுங்கள்!<><>சில நோய்களுக்கான அறிகுறிகளும் தப்பிக்கும் வழிகளும்.. <><>நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செக்ஸ் : ஆய்வில் நிரூபணம்<><>செக்ஸ் வாழ்க்கையில ஈடுபட முடியலையே!<><>மாரடைப்பு <>

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

காதுமடலில் கட்டி – காது குத்துவதிலும் கவனம் தேவை


காதுமடலில் கட்டி – காது குத்துவதிலும் கவனம் தேவை


காதுமடலில் கட்டி – காது குத்துவதிலும் கவனம் தேவை

குட்டிப் பையனின் காது மடலின் பிற்புறத்தில் சில நாட்களாக ஒரு கட்டி தெரிந்தது. சீழ்க் கட்டி போல நீர்ப்பிடிப்புடன் இருந்தது. பார்த்த மாத்திரத்திலேயே இது காதுக் குருத்தெலும்புடன் (Cartilage) தொடர்புடைய கட்டி எனப் புரிந்தது.

மருத்துவத்தில் பெரிகொன்ரைடிஸ் (Perichondritis) என்பார்கள். தமிழில் எவ்வாறு சொல்வது என்பது தெரியவில்லை.


எமது காது, மூக்கு போன்றவை யாவும் எலும்பு இல்லாத  உறுப்புகள். ஆனால் அவை மடிந்து தளர்ந்து விடாமல் இருப்பதற்கும், அவற்றிற்கான உருவத்தைக் கொடுப்பதும் அவற்றினுள் இருக்கும் குருத்தெலும்பு ஆகும்.

குருத்தெலும்பு என்பது எலும்புகளை விட மென்மையானவை ஆனால் தசை சவ்வு போன்றவற்றை விடக் கடினமானவை.

குருத்தெலும்புகளை மென்மையான சவ்வு மூடியிருக்கும். அதனை பெரிகொன்ரியம் - perichondrium - என்பார்கள் இதன் ஊடாகத்தான் குருத்தெலும்புக்கான போசனைப் பொருட்கள் குருதியிலிருந்து கடத்தப்படுகின்றன.

பெரிகொன்ரியத்தில் கிருமி தொற்றினால் ஏற்படுகின்ற நோய்தான் பெரிகொன்ரைடிஸ்.

ஏன் ஏற்படுகிறது.

பெரும்பாலும் ஏதாவது காயங்கள் எற்படும்போதே தோன்ற வாய்ப்பிருக்கிறது. பெரிய காயங்கள் அல்ல. காது குத்துவது போன்ற சிறிய காயங்கள் போதுமானவை. விளையாட்டுகளின் போது எற்படும் காயங்கள், அக்யூபங்சர், சத்திரசிச்சை போன்றவற்றைத் தொடர்ந்தும் வரலாம்.

காது குத்துவதால் எனக் கூறியதால் கலங்க வேண்டாம். சாதாரணமான காது குத்தல் அபாயமானதல்ல. காது மடலின் அடிப்பாகத்திலேயே இது குத்தப்படுகிறது. இது வெறும் தசையுள்ள பகுதியே. இங்கு குருத்தெலும்பு கிடையாது.

ஆனால் இப்போதைய நாகரீகத்தில் காதுமடலின் மேற்புறங்களிலும் குத்தப்படுகிறது. அங்கு குருத்தெலும்பு உள்ளது. அங்கு காது குத்தும்போது குருத்தெலும்பில் காயம் பட்டு, அதில் கிருமித் தொற்றும் ஏற்பட்டால் மேற் கூறிய பிரச்சனை ஏற்படும்.

அக்யூபங்சர் சிகிச்சையின் போது ஊசி குத்துவதும் மற்றொரு காரணமாகும், சில சத்திரசிகிச்சைகள், நெருப்பு சுட்ட காயங்கள் போன்றவையும் காரணமாகலாம்.

இது ஒரு பையனின் காது மடலில் தோன்றியது. எனவே காது குத்தியதால் அல்ல என்பது தெளிவு. வேறு ஏதோ காயத்தைத் தொடர்ந்து  வலியுடன் வீங்கிச் சீழ் கட்டியிருந்தது. இதுவம் அத்தகைய பெரிகொன்ரைடிஸ் தான்.



அறிகுறிகள்

  • காது மடலில் திடீரென ஏற்படும் வலிதான் பெரும்பாலும் முதல் அறிகுறியாகும். தொட்டுப் பார்த்தால் வலி அதிகமாகும்.
  • காது வீங்கவும் கூடும்.
  • அவ்விடம் சற்று சினத்து செம்மை படர்ந்திருக்கும்.
  • தொட்டால் சற்று சூடாகவும் இருக்கலாம்.
  • காய்சலும் ஏற்படலாம்.
  • முதலில் ஏற்பட்ட காயம்  தென்படலாம்.
  • அதிலிருந்து நீர் அல்லது சீழ் கசியவும் கூடும்.

மருத்துவம்

வீங்கி சினத்திருப்பது கிருமித்தொற்றைக் குறிக்கிறது. எனவே குணமாக்குவதற்கு நுண்ணுயிர் மருந்துகள் அவசியம்.
  • பொதுவாக மாத்திரைகளாகக் கொடுக்கக் குணமாகும். 
  • கடுமையான கிருமித்தொற்றாக இருந்தால் நாளங்கள் ஊடாகச் செலுத்தவும் நேரும்.
மேலே படத்தில் காட்டியது சற்று நாள்பட்டது. உள்ளே நீரும் சீழும் இருந்தது.
  • மரக்க வைத்துச் சீழை அகற்றியதன் சிகிச்சை மூலம் வீக்கமும் வலியும் குணமாகின. நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் கொடுக்கக் குணமாகியது.
கடுமையான கிருமித் தொற்றிருந்தால் வாயினால் உட்கொள்ளும் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் போதுமானவையாக இருக்காது. நாளங்கள் ஊடாக ஊசி மருந்துகளாக அவற்றைச் செலுத்த வேண்டியிருக்கும்.

வீரகேசரி ஞாயிறு வெளியீட்டில் நான் எழுதிய கட்டுரை

காதைப் பாதுகாப்பது பற்றிய எனது பதிவு
காதை குடையிறதுதான் வேலை



டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0.0.0

Post Comment

Saturday, December 17, 2011

கண்ணில் பிரஸர் குளுக்கோமா Glucoma


பிரஸர் என்பது உயர்இரத்த அழுத்தம். இது பற்றி எல்லோருக்கும் தெரியும். ஐ(கண்) பிரஸர் பற்றி அப்படியல்ல.

ஐ(கண்) பிரஸர் என்று பலரும் சொல்லுவது குளுக்கோமா (Glucoma) என்ற நோயைத்தான். பொதுவாக கண்ணினுள்ள திரவத்தின் அழுத்தம் (பிரஸர்) 21 mm Hg ற்குள் இருக்க வேண்டும். அதற்கு மேலே அதிகரிக்கும்போது அந்த அழுத்தமானது பார்வை நரம்பைப் (Optic Nerve) பாதிக்கிறது.


கண்ணினுள் அழுத்தம் அதிகரிப்பதே குளுக்கோமா நோய்க்கு முக்கிய காரணமாக இருந்த போதும் இதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இது அமைதியாக ஆர்ப்பாட்டமின்றி, நோயாளி தனது பார்வை பறிபோகின்னறது என்பதை நோயாளி உணராமலே அவரது பார்வையைப் பறிக்கின்ற ஒரு ஆபத்தான நோயாகும்.

பார்வை நரம்பு பாதிப்புறவதால் பார்க்கும் திறன் பாதிக்கப்பட்டு படிப்படியாக அதிகரித்து முழுமையாகக் குருடாக்கும்.


பார்வை நரம்பு என்பது நாம் பார்க்கும்போது எமது விழித்திரையில் விழுகின்ற விம்பங்களை மூளைக்குக் கடத்துகின்ற நரம்பாகும். நரம்பு என ஒருமையில் சொல்லப்பட்டபோதும் இது ஒரு மில்லியனுக்கு அதிகமான நுண்ணிய பார்வை நாரம்புகளைக் (Optic Fibers) கொண்டதாகும்.

குளுக்கோமாவில் பல வகைகள் இருந்தாலும் மிக அதிகமானது திறந்த கோண குளுக்கோமா (Open angle Glucoma) தான்.

யாருக்கு வரும்

  • நெருங்கிய குடும்பத்திரிடையே இருந்திருந்தால் வருவதற்கான சாத்தியம் அதிகம்.
  • அதே போல 45 வயதிற்கு மேல் சாத்தியம் மிக அதிகம்.
  • வெள்யைர்களைவிட கறுப்பு இனத்தவரிடையே அதிகம்.
  • நீரிழிவு இருந்தாலும் வாய்ப்பு அதிகம்.
  • ஸ்டிரோயிட் வகை மருந்துகளை மாத்திரைகளாக, ஊசியாக அல்லது கண்துளிகளாக அதிகம் உபயோகித்தவர்களுக்கும்.
  •  கண்ணில் ஏதாவது அடிகாயங்கள் ஏற்பட்டிருந்தாலும் வாய்ப்பு அதிகம்.
அறிகுறிகள் படிப்படியாக நீண்ட காலத்தில் ஏற்படுவதால் நோயாளி அதை உணர்ந்து கொள்ள மாட்டார். அதுவும் இப்பார்வை இழப்பானது வெளிப்புறத்தில் (Side Vision) ஏற்படுவதால் உணர்ந்து கொள்வது கடினம்.

பக்கப் பார்வை இழப்பு எனச் சொல்லாம்.


அதாவது நீங்கள் நேரே கணனியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது பக்கவாட்டில் ஏதாவது அசைந்தால் கூட அந்த அசைவை உங்களால் காண முடியும்.

ஆனால் குளுக்கோமா நோயளிகளுக்கு அவரது பார்வையின் பரப்பானது வெளிப்புறத்திலிருந்து குறைந்து கொண்டு வரும். ஆனால் நேர் பார்வை வழமைபோல தெளிவாக இருக்கும்.

இதனால்தான் அவருக்கு தனது பார்வை இழப்பை உணர்ந்து கொள்ள முடியாதிருக்கிறது.


இதனைக் கவனிக்காது விட்டால் பார்வை மேலும் குறைந்து வரும். சிலகாலத்தின் பின்னர் ஒரு குழாயினூடாகப் பார்ப்பது போல நேரே இருப்பவை மட்டுமே தெரியும். இறுதியில் முழுப் பார்வையும் பறிபோகும் அவலம் நேரும்

தடுப்பது எப்படி?

நோயின் தாக்கம் பார்வைiயில் சேதத்தை ஏற்படுவதற்கு முன்னரே நோயைக் கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையைச் செய்வதுதான் ஒரே வழி.

கண் மருத்துவரிடம்

இந்நோய் வரக் கூடிய சாத்திய உள்ளவர்கள்
  • கண் மருத்துவரை அணுகி தமது கண்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். 
  • இப்பொழுது பாதிப்பு இல்லாவிட்டாலும் அவர்கள் இரண்டு வருடங்களுக்கு ஓரு முறையாவது கண் மருத்துவரிடம் போவது அவசியம்.

கண்ணில் பார்வைக் குறைவு ஏற்பட்டால் நீங்களாக கடையில் மூக்குக் கண்ணாடி வாங்கி அணிவதைத் தவிர்க்க வேண்டும். அச் சந்தர்ப்பத்தை கண் மருத்துவரைச் சந்திப்பதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்துங்கள். அவர் உங்கள் கண்களின் உட்பகுதியை விசேடமான கருவிகள் மூலம் பரிசோதிக்கும்போது குளுக்கோமா ஆரம்ப நிலையில் இருந்தாலும் கண்டுபிடிக்க முடியும்.

1.    ரோனோ மீற்றர் (Tonometer) என்ற கருவி உங்களது கண்ணினுள் இருக்கும் அழுதத்தை அளவிட உதவும்.
2.    கண் பார்வையின் பரப்பை அளவிடும் (Visual field test) பரிசோதனை இது உங்கள் பார்வையின் பரப்பளவில் பாதிப்பு ஏற்கனவே ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய உதவும்.
3.    (Dilated eye Exam) இது கண்ணின் ஒளி புகும் பாதையை விரிவித்து அதனூடாக விழித்தரையையும், பார்வை சரம்பையும் பிம்பம் பெருக்குவிக்கும் கண்ணாடி ஊடாகப் பார்த்து அவற்றில் பாதிப்பு இருக்கிறதா எனக் கண்டறிவதாகும்.


சிகிச்சை

நோயின் நிலக்கு ஏற்ப சிகிச்சை முறைகளில் மாற்றம் ஏற்படலாம்.

1.  துளி மருந்துகள்
அதிகமானோருக்கு இவை மட்டுமே கண்ணின் பிரசரைக் குறைத்து, பார்வை பறிபோகாமல் தடுப்பதற்குப் போதுமானது. பிரஸர் சரியான நிலைக்கு வந்தாலும் தொடர்ந்து உபயோகிக்க வேண்டும். தினமும் ஒரு முறை உபயோகிக்கும் மருந்துகள் உள்ளன. பலமுறை விட வேண்டியவையும் உண்டு. இது அவரவர் நோயின் தன்மையைப் பொறுத்தது. அவற்றை மருத்துவர் கூறுவதுபோல சரியான முறையில் கண்ணில் சரியான நேர இடைவெளிகளில் விட வேண்டும்.
2.    மாத்திரைகள்
தனியாக துளி மருந்துகளை உபயோகித்து கண் பிரசரைக் குறைக்க முடியாவிட்டால் மாத்திரைகளும் தேவைப்படலாம்.
3.    சத்திர சிகிச்சை
இப்பொழுது லேசர் முறையிலேயே பெரும்பாலும் செய்யப்படுகிறது. கண்ணில் மேலதிகமாக நீர் தேங்காது தடுத்து கண் பிரசரைக் குறைப்பதே இதன் நோக்கமாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0.0

Post Comment

Sunday, December 11, 2011

களைப்பாயிருக்கிறதா? காரணங்களும் காரியங்களும்..

உங்களுக்கு களைப்பாயிருக்கா? உங்களுக்கு மட்டுல்ல.....

மருத்துவரிடம் வருபவர்களில் பலர் களைப்பாயிருக்கு என்று சொல்லுவார்கள்.டொனிக் குடித்தால், அல்லது ஒரு சேலைன் ஏற்றினால் அது குணமாகிவிடும் எனப் பலரும் நம்புகிறார்கள்.

ஆனால் அது உண்மையா?

காய்ச்சல் வயிற்றோட்டம், வாந்தி போன்ற  நோய்களால் போஷாக்கு இழந்தவர்கள் களைப்பாக இருந்தால் அது புரிந்து கொள்ளக் கூடியதே.

ஆனால் நோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி மிகவும் ஆரோக்கியமான உடல் நிலையில் இருப்பவர்கள் அல்லது அவ்வாறு பார்வைக்குத் தென்படுபவர்கள் கூட களைப்பு எனச் சொல்லிக் கொண்டு வருவார்கள்.


  • 'சத்தெல்லாம் பிழிஞ்சு எடுத்த மாதிரிக் கிடக்கு', 
  • 'உடம்புக்கு ஏலாதாம்', 
  • 'ஒண்டுமே செய்ய முடியுதில்லை' 
இப்படி எத்தனையோ வாசகங்கள் உதிர்த்தப்படும்.
  • வழமைபோல இயங்க முடியாதிருத்தல்,
  • ஊக்கக் கேடு, 
  • உற்சாகமின்மை, 
  • சோம்பலாக இருத்தல் 
போன்ற யாவும் இந்தக் களைப்பிற்குள் அடங்கும். ஆங்கிலத்தில் Fatigue என்பார்கள். ஆனால் இது நித்திரை கொள்ள வேண்டும் என்ற நிலை எனப்படும் தியக்கம் (Drowsiness) அல்ல.

பெரும்பாலும் இக் களைப்பு என்பது உடலின் ஒருவித தற்காப்பு முயற்சியாகும்..
  • கடுமையான உழைப்பு, 
  • உளநெருக்கீடு, 
  • போதிய ஓய்வின்மை, 
  • உற்சாகமற்ற சூழல் 
போன்ற வேண்டாத தொல்லையிலிருந்து மீள்வதற்கு எமது உடலும் உள்ளமும் எடுக்கும் எதிர்வினைதான்.


  • போதிய ஓய்வு எடுத்ததும், 
  • நன்கு தூங்கி எழுந்ததும் அல்லது 
  • மகிழ்ச்சியான சூழல் கிட்டியதும் 
அது தானே மறைந்துவிடும்.

பெரும்பாலும் களைப்பு என்பது கடுமையான நிலை அல்ல. ஆபத்தாக இருக்காது. பயப்பட வேண்டியதும் இல்லை.

மருத்துவரிடம் தெளிவாகச் சொல்லுங்கள்

ஆனால் அவ்வாறு செய்தும் (போதிய ஓய்வு, நிம்மதியாக தூக்கம், மகிழ்ச்சியான சூழல்)  அது மாறவில்லை எனில் மருத்துவரை நாட வேண்டிய தேவை ஏற்படும்.

மருத்துவரிடம் செல்ல நேர்ந்தால் களைப்பு எத்தகைய வேலைகளின் போது ஏற்படுகிறது. வேலைகளுடன் தொடர்பில்லை எனின் எந்த நேரத்தில் ஏற்படுகிறது போன்றவற்றைக் கவனித்துச் சொல்லுங்கள்.

  • காலையில் படுக்கையிலிருந்து விழித்தெழும்போதே சோர்வாக இருந்து அது நாள் முழுவதும் தொடர்ந்தால் மனச்சோர்வின் அறிகுறியாக இருக்கக் கூடும். 
  • மாறாக காலையில் மிக உற்சாகமாக இருந்து நேரம் செல்லச்செல்ல களைப்பு அதிகரித்துச் சென்றால் அது தைரொயிட் சுரப்பி குறைவாக வேலை செய்வதாக இருக்கலாம். 
  • அல்லது காலையில் நலமாக இருந்து சற்று நேரம் செல்ல சோர்வும் தலைவலியும் சேர்ந்து வந்தால் அது சைனஸ் நோயாக இருக்கலாம். 
இவ்வாறு பல நோய்களை அறிகுறிகளிலிருந்தே மருத்துவர் ஓரளவு ஊகிக்க முடியும் என்பதால் உங்கள் அறிகுறிகளை இயன்றளவு தெளிவாகச் சொல்லப் பழகுங்கள்.

காரணங்கள் என்ன?

இரத்தசோகை

எமது நாட்டிலும் மேலும் பல கீழைத்தேச நாடுகளிலும் இரத்தசோகை பரவலாக இருக்கிறது. பொதுவாக ஹீமோகுளோபிலின் அளவு
  1. ஆண்களில் 13 கிராம் (Hb 13gm) ஆகவும் 
  2. பெண்களில் 12கிராம் ;(Hb 12gm) ஆகவும் இருக்க வேண்டும். 

இது குறைவாக இருந்தால் மூளை உட்பட உடல் உறுப்புகளுக்கு போதிய ஒட்சிசன் கிடைக்காது. இதனால் சோர்வும் களைப்பும் மந்தநிலையும் ஏற்படலாம். பிள்ளைகள் மனமூன்றிப் படிக்க முடியாது சோர்வு தடுக்கும். சுறுசுறுப்பு குறையும்.

இது படிப்படியாக ஏற்படும் நிலை என்பதால் நோயாளியால் புரிந்து கொள்ள முடியாதிருக்கலாம். உடல், முகம், கண், நாக்கு போன்றவை வெளிறலாக இருப்பதை வைத்து மருத்துவரால் அறிய முடியும். சுலபமான இரத்தப் பரிசோதனை மூலம் நிச்சயமாக அறிய முடியம்.

சளி, பீனிசம்

தூசி, காலநிலை மாற்றங்கள். கடுமையான மணங்கள், மகரந்தம், போன்றவற்றிற்கு ஓவ்வாமை உள்வர்களுக்கு அடிக்கடி சளி, தும்மல், முக்கடைப்பு போன்ற அறிகுறிகள் தோன்றும். சிலருக்கு அது சைனஸ் தொல்லையாக மாறிவிடுவதும் உண்டு.


சைனசைடிஸ் என்பது மண்டை ஒட்டில் நாசிக்கு அண்மையாக இருக்கும் காற்றறைகளில் அழற்சியும் கிருமித்தொற்றம் ஏற்படுவதாகும். இவை யாவும் தலைப்பாரம், களைப்பு, சோர்வுத்தன்மை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். ஆஸ்த்மாவும் இத்தகைய ஒரு ஒவ்வாமைச் சளி நோயே.

மேலைநாடுகளில் வசந்த காலங்களில் பெரும்பாலும் காணப்படும் Hay Fever இத்தகையதே. இங்கு காலவேறுபாடுகள் தெளிவாக இல்லாத நிலையில் பலருக்கும் நாளாந்தம் தொல்லை கொடுக்கிறது.

நீடித்து தொல்லை கொடுக்கும் வலிகள்

மனிதர்களுக்கு பலவிதமான உடல் வலிகள் ஏற்படுகின்றன. உதாரணமாக மோட்டார் சைக்கிளில் செல்லும் போது வீழ்ந்துவிட்டால் அடிபட்ட வலி தாங்க முடியாததாக இருக்கும். ஆனால் இது தற்காலிகமானது.சில நாட்களில் குணமாகிவிடும்.

ஆனால் வேறுபல வலிகள் வாரக்கணக்கிலோ மாதக் கணக்கிலோ அன்றி வாழ்நாள் பூராவும் தொல்லை கொடுக்கலாம்.
  • மூட்டுவாதங்கள்,
  • முள்எலும்பு நோய்கள் 
  • புற்று நோய்களால் ஏற்படுவது
போன்றவை  அத்தகையவை. நீண்டநாள் நீடிக்கும்போது வலிகள் மனச்சோர்வையும் களைப்பையும் ஏற்படுத்தும்.

மது மற்றும் போதைப் பொருட்கள்

இன்று எமது சமுதாயத்தில்
  • மதுப்பாவனை அதிகரித்து வருகிறது. 
  • போதைப் பொருட்களும் பலரை வசீகரிக்கின்றன. 
  • சிகரட்டும் இதில் அடங்கும். 
இவை மன உற்சாகத்தைக் கொடுக்கின்றன. ஆனால் அது போலியானது. அதாவது அதை உபயோகிக்கும்போது மட்டுமே. உபயோகிக்காதபோது சோர்வும் களைப்பும் தோன்றும். உடனேயே மீள எடுக்கச் சொல்லும். ஆனால் நாட் செல்லச் செல்ல மேலும் அதிகளவு பாவித்தாலே பழைய உற்சாகம் கிடைக்கும்.


நீங்கள் அவ்வாறு உபயோகிப்பவராயின்
  • அதனை உடனே நிறுத்துங்கள். 
  • குறைத்துக் குறைத்து நிறுத்தலாம் என எண்ணினால் நீங்கள் உங்களையும் மற்றவர்களையும் ஏமாற்றுவதாகவே இருக்கும். 
  • நீங்களாக நிறுத்துவது கடினமாக இருந்தால் மருத்துவ உதவியை நாடுங்கள்.

உங்களது கணவன் அல்லது மகனது நடத்தையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டால் அவதானியுங்கள். சில நேரங்களில் சோர்வும் வேறு நேரங்களில் அதிக உற்சாகமும் காணப்பட்டால் இதுவும் மது அல்லது போதைப் பொருள் காரணமாக இருக்கலாம். இப்பொழுது பல பெண்களும் இதில் அடங்குகிறார்கள்.

தூக்கக் குறைபாடு

பொதுவாக ஒருவருக்கு தினமும் 6-7 மணிநேரத் தூக்கம் தேவை. இல்லாவிடின் மூளையால் சமாளிக்க முடியாது. ஏனெனில் நீங்கள் தூங்கும் போதுதான் மூளையானது தனக்குக் கிடைத்த தகவல்களை ஒழுங்குபடுத்திச் சேமிக்கின்றது. போதிய தூக்கம் இல்லாவிடில் அதைச் செய்ய முடியாது சோர்வுறும்.


தூக்கக் குறைபாடு ஏற்படுவதற்கு உங்கள் வேலைப்பளுவும் காரணமாக இருக்கலாம். அல்லது நோய்களும் காரணமாக இருக்கலாம். உடல் நோய்கள் மட்டுமின்றி மன உளைச்சல்களும் தூக்கத்தைக் கெடுக்கும்.

போதிய தூக்கம் என்பது படுக்கையில் கிடக்கும் நேரமல்ல.
அமைதியாகத் தூங்கும் நேரம் என்பதாகும்.

தூக்கத்தில் மூச்சுத் திணறல் (Sleep Apnea) சிலருக்கு ஏற்படுவதுண்டு. இதை நீங்கள் உணர மாட்டீர்கள். கூடத் தூங்குபவர் நீங்கள் அமைதியாகத் தூங்குவதையும் திடீரென திணறுவதையும் அவதானிக்கக் கூடும். அவ்வாறெனில் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

Delighful drowsiness Thanks:- http://www.paintinghere.com


தைரொயிட் சுரப்பி நோய்கள்.

தைரொயிட் சுரப்பி என்பது எமது கழுத்தில் குரல்வளையை அண்டியிருக்கும் ஒரு சுரப்பியாகும். இது தைரொஸ்சின் என்ற ஹோர்மோனைச் சுரக்கிறது. இது குறைவாகவோ அன்றி அதீதமாகவோ சுரந்தால்
  • களைப்புச் சோர்வு, 
  • வியர்வை, 
  • குளிர் தாங்க முடியாமை, 
  • படபடப்பு, 
  • எடை குறைதல் அல்லது அதிகரித்தல் 
போன்ற பல்வேறு அறிகுறிகள் நோயின் நிலைக்கு ஏற்பத் தோன்றும்.
TSH, FT4 போன்ற இரத்தப் பரிசோதனைகள் மூலம் இதனைக் கண்டறியலாம்.

இப்பிரச்சனை உள்ளவர்களுக்கு சுரப்பியில் வீக்கம் பெரும்பாலும் இருப்பதில்லை. அதே நேரம் கழுத்தில் களலை இருக்கும் அனைவருக்கும் இந்நோய் இருக்கிறது எனவும் கருத வேண்டாம்.

மனச்சோர்வு

பெரும்பாலானவர்களுக்கு களைப்பு என்பது மனத்தோடு சேர்ந்தது.
  • மனச்சோர்வு (Depression)
  • உள நெருக்கீடு (Stress)
  • மனப் பதகளிப்பு (Anxiety)
போன்ற பல்வேறு உளம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்களில் முக்கிய அறிகுறி களைப்பாகத்தான் இருக்கிறது.

இதை நோயுள்ளவர்கள் உணர்வதில்லை. உடலில் உள்ள பிரச்சனைக்கு மனம் காரணமாக இருக்கும் என்பதை மருத்துவர் கூறினாலும் பலரும் ஏற்றுக் கொள்வதில்லை.

'எனக்கு ஒரு கவலையும் இல்லை. யோசனையும் இல்லை' என மறுப்பவர்கள் ஏராளம்.

காரணம் மனநோய்கள் பற்றி எமது சமூகத்தில் இருக்கும் தப்பான அபிப்பிராயம்தான். விசர், பைத்தியம், அங்கொடை எனப் பல பிம்பங்கள் மனநோய்கள் பற்றி அவர்களுக்கு உண்டு.


வேலைத் தளத்தில் உள்ள நெருக்கீடு, பரீட்சையில் உச்ச மார்க் பெற வேண்டும் என்ற துடிப்பு, வீட்டிலும் சமூகத்திலும் நிதம் சந்திக்கும் சாதாரண பிரச்சனைகள் கூட உளநெருக்கீட்டிற்கு காரணமாகலாம் என்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை.

எனவே நெருக்கீடுகள் உங்கள் களைப்புக் காரணமாக இருக்கலாம் என்றால் அதை உங்கள் மருத்துவரிடம் கூறுங்கள். அல்லது மருத்துவர் அவை பற்றி தானாக விசாரித்தால் தயங்காமல் வெளிப்படையாகப் பேசி உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண முயலுங்கள்.

 வேறு தீவிர காரணங்கள்

அவை தவிர பல தீவிர நோய்களும் களைப்புக்கு காரணமாக இருக்கலாம்.


  • நீரிழிவு, 
  • இருதயச் செயலிழப்பு, 
  • சிறுநீரகச் செயலிழப்பு, 
  • ஈரல் செயலிழப்பு, 
  • சயரோகம். 
  • புற்றுநோய்கள், 
  • எயிட்ஸ் கூட காரணமாகலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது

எனவே போதியளவு தூக்கம், போஷாக்கான உணவு, தினசரி உடற்பயிச்சி, அளவான வேலை, போதிய ஓய்வு, மகிழ்ச்சியான சூழலுக்கு மாறுதல், மன அடக்கப் பயிற்சி (யோகா,தியானப் பயிற்சி), போதைப் பொருள் தவிர்ப்பு போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடித்துப் பாருங்கள்.


அவ்வாறு செய்தும் உங்கள் களைப்புக் குறையாவிட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது மிகவும்அவசியம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0.0.0

Post Comment

Saturday, December 3, 2011

திடீர் மயக்கங்கள் வருவது ஏன்?




திடீர் மயக்கங்கள் வருவது ஏன்?


  • பாத்ரூம் போனபோது மயங்கிவிட்டேன்.
  • படுக்கையிலிருந்து எழுந்தபோது மயங்கிவிட்டேன்.
  • யாரோ கூப்பிட்டபோது திரும்பிப் பார்க்கையில் விழுந்துவிட்டேன்.
  • சாமிக்கு வைப்பதற்காக பூ கொய்வதற்கு சென்றபோது என்ன நடந்ததெனத் தெரியாது விழுந்துவிட்டேன்.

இப்படிப் பலவாறாகச் சொல்லிக்கொண்டு வருபவர்கள் பலபேராகும்.

திடீர் மயக்கங்கள் யாருக்கு வருகின்றன?


  • பொதுவாக வயதானவர்களிடையே இவ்வாறு மயக்கம் வந்து விழும் சம்பவங்களை அதிகம் காண்கிறோம்.
  • சில தருணங்களில் பள்ளி மாணவர்களும் கூட அவ்வாறு விழுகிறார்கள்.



  இவற்றுக்குக் காரணங்கள் என்ன? 

மூளைக்குச் செல்லும் இரத்தம் திடீரென குறையும்போதுதான் மயக்கம் ஏற்படுகிறது. இரத்தம் செல்வது குறைந்தால் மூளையின் கலங்களுக்கு ஒட்சிசன் கிடைப்பதும் குறையும்.

பல காரணங்களினால் இது ஏற்படலாம்.

மலத்தை கடுமையாக முக்கி வெளியேற்றும் போது

    கடுமையான நீரிழப்பு நிலையின் போது இது நிகழலாம்.

      உதாரணமாக * கடுமையான காய்ச்சல்,
                                     * கடுமையான வயிற்றோட்டம்,
                                     * சூழல் வரட்சியால் கடுமையாக வியர்வை வெளியேறல் போன்றவற்றால் உடலிலுள்ள நீரின் தன்மை குறையும்போது ஏற்படலாம்.

      அதிகமான இரத்தப் பெருக்கும் காரணமாகலாம்.
        உதாரணமாக * காயத்தினால் கடுமையாக குருதிவெளியேறுவது
                                     *கடுமையான மாதவிடாய் பெருக்கு,
                                     *மூலத்திலிருந்து திடீரென இரத்தம் ஓடுதல். 
                                     * வெளிப்படையாகத் தெரியாது உடலின் உள்ளே நடக்கும்   
        குருதிப்பெருக்குகள் காரணமாகவும் நடக்கலாம்.
                                   
        உதாரணமாக-
        • குடற்புண், ஈரல் சிதைவு, புற்றுநோய்கள் எனப் பல.
        கடுமையான இருமலும் காரணமாக இருப்பதுண்டு.

        குக்கல் போன்ற இருமலின் போது இடையில் மூச்சு விடமுடியாது தொடர்ந்து இருமுவதால் ஏற்படலாம்.
          திடீரென இரத்தத்தில் சீனியின் அளவு குறையும்போது. 

          நீரிழிவு நோய்க்காக இன்சுலின் ஊசி, அல்லது மாத்திரைகள் எடுப்பவர்களிடையே ஏற்பட வாய்ப்பு அதிகம்.         
          உதாரணமாக
          • தினமும் எடுக்கும் மாத்திரை அல்லது ஊசியின் அளவை தவறுதலாக கூடுதலாக எடுத்தால் நடக்கலாம்.                 
          • விரதங்கள் இருப்பதால் நேரலாம். நீரிழிவு நோயாளிகள் விரதங்கள் இருப்பதும் உணவுகளைத் தவறவிடுவதும் கூடாது.
          • வேறு நோய்கள் காரணமாக பசியின்மையால், உட்கொள்ளும் உணவின் அளவு குறைவதாலும் ஏற்படலாம்.
           
          நீண்ட நேரம் ஓரிடத்தில் அசையாது நிற்பதாலும் நிகழலாம். 
           
          • பாடசாலைப் பிள்ளைகள் வழிபாடுக்காக, 
          • இராணுவ வீரர்கள் அணிவகுத்து நிற்கும்போது விழுவது உதாரணங்களாகும்.
            திடீரெனப் படுக்கையை விட்டு எழும்போது பலர் மயங்கி விழுவதுண்டு.

            படுக்கையிலிருந்து திடீரென எழும்போது இரத்த அழுத்தம் தற்காலிகமாக குறைவதே இதற்குக் காரணமாகும்.

            படுக்கை விட்டெழும்போது தலைச்சுற்றும் மயக்கமும்
             சடுதியாக வரும் கடுமையான வலி சிலருக்கு திடீரென மயக்கத்தைக் கொடுப்பதுண்டு.

            மிகுந்த பயமும் மயக்கத்தை அதே போல உண்டுபண்ணலாம்.
            மது மற்றும் போதைப் பொருட்களும் காரணமாகலாம். 
            சில மருந்துகளும் காரணமாகலாம்.

              என்ன செய்ய வேண்டும்?

              உங்கள் வீட்டில் ஒருவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டால் மேற் கூறிய எவையாவது காரணமாக இருக்கக் கூடும்.

              மருத்துவரிடம் செல்லும்போது, இவற்றில் ஏதாவது காரணமாகலாம் எனச் சந்தேகித்தால் அவரிடம் சொல்லுங்கள்.

              மயக்கமுற்றவர் வழமையாக உட்கொள்ளும் மருந்துகள், அவற்றின் அளவுகள் ஆகியவற்றையும் மருத்துவருக்கு அறியத்தாருங்கள்.


              டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
              0.0.0.0.0.0.0.0

              Post Comment

              Saturday, November 12, 2011

              மார்பகத்தை இழக்காமலிருக்க.... மார்பக புற்றுநோய்


              இப் பெண் போல மார்பகத்தை இழக்காமலிருக்க..


              இந்தப் பெண் போல பாதிப்புறுவதற்கு எந்தப் பெண்ணிற்குத்தான் விருப்பம் இருக்க முடியும். பெண்மையின் அடையாளமாக அவளது பெருமையின் சின்னமாக, சுயகௌரவத்;தைப் பேணுவதாக இருப்பது மார்பகங்கள். இதை இழப்பது பெண்களால் சகிக்கக் கூடிய விடயம் அல்ல.

              மற்றவர்களை மோகிக்க வைத்த அதே உறுப்பு அவளைச் சாகடிக்கவும் கூடும் என்பதுதான் சோகமான மறுபக்கம்.

              புற்றுநோய் என்றால் புதைகுழிக்கு செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்ற எண்ணமே இன்றும் பலரிடையே நிலவுகிறது.

              ஆனால் இன்று மார்புப் புற்றுநோயானது குணமாக்கக் கூடிய நோய் என்பது பலருக்குத் தெரிவதில்லை. அதுவும் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால் வந்த சுவடின்றி முற்றாக மாற்றக் கூடியதாகும்.

              மார்பகப் புற்று நோயானது பால் சுரக்கும் கலங்களில் அல்லது சுரந்த பாலை முலைக்குக் கடத்தும் குழாய் (கான்) களில் தோன்றுவதாகும்.

              யாருக்கு?

              ஆண்களுக்குக் கூட மார்புப் புற்றுநோய் வரலாம். பெண்களே பெருவாரியாகப் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் எத்தகையவர்களுக்கு இது வருவதற்கான வாய்ப்பு அதிகம்?
              1. தாய், சகோதரி என நெருங்கிய குடும்ப உறவினர்களிடையே காணப்பட்டால் வாய்ப்பு அதிகமாகும்.
              2. மகப் பேறு இல்லாத பெண்களுக்கு.
              3. காலம் கடந்து முதுவயதில் தாய்மைப் பேறு அடைந்தவர்களுக்கு ஏனையவர்களi விட அதிக சாத்தியம் உள்ளது.
              4. மாதவிடாய் நின்ற பின்னர் திடீரென அதிகளவு எடை கூறியவர்கள்.
              5.   பெண் ஹோர்மோன் ஆன ஈஜ்ரோஜனைத் தூண்டுவதற்கான சிகிச்சைகளை நீண்டகாலம் செய்தவர்களுக்கு.
              6. மிகக் குறைந்தளவு வயதிலேயே பூப்படைந்தவர்களுக்கு.
              7. மிகப் பிந்திய வயதிவேயே மாதவிடாய் முற்றாக நின்றவர்களுக்கு.
              8.   ஈஜ்ரோஜன் அடங்கிய கருத்தடை மாத்திரைகளை மருத்துவ ஆலாசனை இன்றி நீண்ட காலம் உபயோகித்தவர்களுக்கு

              இவ்வாறான வாய்ப்புள்ளவர்களுக்கு மாத்திரமின்றி ஏனையவர்களுக்கும் அது வருவதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

              எனவே ஒவ்வொருவரும் தமது மார்பகங்களில் அக்கறை செலுத்துவது அவசியமாகும். அதன் முதற்படி அதனை அக்கறையுடன் கவனிப்பதுதான்.


              இதன் மூலம் ஆரம்ப அறிகுறிகளை ஒருவரால் கண்டறிய முடியும்.

              அறிகுறிகள்

              • முக்கியமானது மார்பில் தோன்றும் வீக்கங்களும் கட்டிகளுமாகும். வலி இருக்கிறதோ இல்லையோ எத்தகைய மாற்றங்களும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவையே.
              • சாதாரண அவதானத்தில் அல்லது கண்ணாடி முன் நின்று பார்க்கும்போது மார்பக அளவுகளில் மாற்றம் தென்பட்டால் அசட்டை செய்ய வேண்டாம். சிலருக்கு இயல்பிலேயே ஒரு மார்பு மற்றதைவிடப் பெரிதாக இருக்கும். இது பயப்பட வேண்டியதில்லை. ஆனால் அந்ந அளவுகளில் புதிய மாற்றம் ஏற்பட்டால் கவனத்தில் எடுப்பது அவசியம்.
               
              • மார்பின் மேற்பரப்பில் ஏதாவது பள்ளம் அல்லது உட்குழிவு ஏற்பட்டால்.
              • மார்பக தோலின் மிருதுத் தன்மையில் மாற்றம் ஏற்பட்டால், முக்கியமாக தோடம்பழத்தில் உள்ளது போல சிறு திட்டிகளும் பள்ளங்களுமாக மாற்றம் ஏற்பட்டால்.
              • முலைக்காம்பின் தோற்றத்தில் மாற்றம். அல்லது துருத்திக் கொண்டிருந்த முலைக்காம்பு உள்வாங்கப்பட்டால்.
               
              • முலைக் காம்பின் ஊடாகத் திரவம் வெளியேறினால்.
              • மார்பகத்தில் வலி ஏற்பட்டால். சில பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வழமையாக வலி ஏற்படுவதுண்டு. இதைத் தவிர ஏதாவது வலி ஏற்பட்டால் மருத்துவரைக் காண வேண்டும்.

              மேற்கண்ட அறிகுறிகள் ஏதாவது தெரிந்தால் உடனடியாக உங்கள் குடும்ப மருத்துவரை அல்லது உங்கள் பகுதியில் உள்ள மருத்துவரை அணுகுங்கள்

              பரிசோதனைகள்

              மார்பகத்தில் கட்டியிருந்தால் அல்லது இருக்கிறதா எனச் சந்தேகம் எழுந்தால் பரிசோதனைகள் மூலமே விடை காண முடியும்.

              1.    மமோகிறபி அல்லது மார்பக கதிர்ப்படம் என்பது மிக முக்கியமானதாகும். ஐககளினால் தடவிக் கண்டு பிடிக்க முடியாத சிறிய கட்டிகளைக் கூட மிக ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவுகிறது. வழமையன கதிர்படங்கள் (X Ray) போலல்லாது மிகக் குறைந்தளவு கதிர்வீச்சு மட்டுமே பயன்படுத்தப்படுவதால் ஆபதற்றது.
              2.    ஸ்கான் (Ultra Sound Scan) பிரிசோதனை. குட்டியிருக்கிறதா எனச் சந்தேகம் இருந்தால் அதனைக் கண்டறிய மிக உதவியானது. அதிலும் முக்கியமாக இளம் பெண்களில் கட்டி மிகத் தளிவாகத் தெரியும்.
              3.    சிறிய ஊசி மூலம் கட்டியிலுள்ள சிறியளவு திசுக்களைப் உறிஞ்சி எடுத்து பெற்று இழையவியல் பரிசோதனை செய்தல். கட்டியானது ஆபத்தற்ற சாதாரண கட்டியா புற்றுநோயா போன்ற விபரங்களை அறிய இது அவசியமாகும்.


              நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

              ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு வருவோம். இப் பெண் போல மார்பகத்தை இழக்காமலிருக்க நீங்கள் செய்ய வேண்டியவை என்ன?
              1.    ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உதாரணமாக மாதமொருமுறை உங்கள் மார்பகங்களை கட்டியிருக்கிறதா என்பதையிட்டு சுயபரிசோதனை செய்வது அவசியமாகும்.. இதை எப்பொழுது செய்வது எவ்வாறு செய்வது என்பது பற்றி மற்றொரு கட்டுரையில் பார்க்கலாம்.
              2.    கட்டி சிறியதாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரைக் காணுங்கள். சுயபரிசோதனையின் போது மேலே சொன்ன அறிகுறிகளில் ஏதாவது இருந்தாலும் அவ்வாறு அணுகவும்.
              3.    மருத்துவரின் ஆலோசனையுடன் மமோகிறபி (Mamography) எனப்படும் மார்பக கதிர்ப்படம் எடுத்தல். கட்டி வந்த பின் அல்ல. வெளிப்படையாகத் தெரிய முன்னரே ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது அவசியமாகும்.

              மமோகிறாம்

              இது ஒரு முக்கிய பரிசோதனை. கட்டி தென்பட்ட பின் செய்வது மாத்திரமல்ல, இந்நோய் வர வாய்புள்ள பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்காக அவசியம் செய்ய வேண்டிய பரிசோதனை ஆகும்.


              இந் நோய் வருவதற்கான சாத்தியம் அதிகமுள்ள பெண்களுக்கு 35 வயதிற்கு பின்னர் வருடாவருடம் செய்வது அவசியம்.

              50வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை செய்வது அவசியம். ஆயினும் இதற்கான வசதி நாடு பூராவும் இல்லை என்பது உண்மையே. ஆயினும் கொழும்பில் தனியார் துறையினரால் பல இடங்களில் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

              மருத்துவம்

              இன்றைய நிலையில் மார்பகப் புற்று நோய் வந்தால் கூட முதலில் கூறியது போல மார்பகத்தை முற்றாக அகற்றும் சிகிச்சைகள் செய்யப்படுவதில்லை. சத்திரசிகிச்சை, கதிர் சிகிச்சை, மற்றும் ஊசி மருந்துகள் மூலம் முழமையாகக் குணமாக்கலாம்.

              ஆபத்தான நோயெனப் பயந்து மறைக்காது, உடனடியாக மருத்துவரை அணுகுவதன் மூலம் பூரண குணம் பெற்று ஏனைய பெண்களைப் போல வாழலாம் என்பது உறுதி.


              டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

              வீரகேசரி ஞாயிறு வெளியீட்டில் நான் எழுதிய கட்டுரை.
              0.0.0.0.0.0.0.0

              Post Comment

              Sunday, November 6, 2011

              துர்நாற்றத்துடன் பாதத் தோலை அரிக்கும் சருமநோய்


              தோலை அரித்து நாற்றத்தை எழுப்பும் பாத நோய் (Pitted keratolysis)

              நாற்றம் மூக்கைப் பிடுங்கியது. குடலைப் பிரட்டிக் குமட்டிக் கொண்டு வந்தது.

              அவரைப் படுக்கையில் விட்டு வயிற்றைப் பரிசோதிக்க முனைந்த நான் எனது எண்ணத்தை மாற்றினேன்.

              'சொக்சைக் கழற்றுங்கோ' என்றேன்.

              இப்பொழுது என் முன்னுரிமை வேறாயிற்று.


              கல்லும் குளியுமான தெருவைப்போல அவரது பாதம் பள்ளமும் திட்டியுமாக அசிங்கமாத் தோற்றமளித்தது. பிற்றட் கெரெட்டோலைசிஸ் (Pitted keratolysis) என்பது பாதத்தைப் பாதிக்கும் சரும நோயாகும். நோயாளி பரிசோதனை அறைக்குள் நுழையும் முன்னரே இது என்ன நோயென மோப்ப சக்தி குறைவில்லாத மருத்துவரால் நிர்ணயிக்க முடியும்.

              அறிகுறிகள்


              முக்கிய அறிகுறி நோயுற்ற பகுதியின் பிரத்தியேகமான தோற்றம்தான். ஏற்கனவெ குறிப்பிட்டதுபோல சிறு பள்ளங்களும் திட்டிகளுமாக பூச்சி அரித்த தோல் போலக் காணப்படும்.

              முக்கியமாக பாதங்களில் மட்டுமே இருக்கும். பாதம் தரையில் அழுத்தமாக அழுத்தப்படும் பகுதிகளான குதிக்கால், விரல்களுக்கு அண்மையான பகுதிகளில் பெரும்பாலும் காணப்படும். ஆனால் கால் விரல்கள் பொதுவாகப் பாதிக்கப்படுவதில்லை.

              பாதம் ஈரலிப்பாக இருக்கும்போது இது தெளிவாகத் தெரியும். ஒரு வகை பக்றீரியா (Kytococcus sedentarius) கிருமித் தொற்றினால் இது ஏற்படுகிறது.

              பக்றீரியாவால் சுரக்கும் ஒரு நொதியம் சருமத்தில் உள்ள புரதங்களை தாக்கும்போது தோல் கரைந்து சொரசொரப்பாவதுடன் கெட்ட மணமும் வெளியேறுகிறது.

              கடுமையாக இருக்கும் துர்நாற்றம் நோயை நிர்ணயிப்பதில் மிகவும் உதவும்.

              விரல் இடுக்ககளில் தோன்றும் சேற்றுப் புண் போன்ற பங்கஸ் தொற்று நோய்களில் அரிப்பு ஏற்படும். ஆனால் பிற்றட் கெரெட்டோலைசிஸ் என்ற இந்நோயில் அரிப்பு ஏற்படுவதில்லை. ஆனால் இலேசான வலி சிலவேளை ஏற்படலாம்.

              யாரைப் பீடிக்கும்

              ஆண் பெண் வேறுபாடின்றி எந்த வயதினரையும் இந்நோய் பீடிக்கக் கூடும்.
              ஆயினும் அதீதமாக வியர்ப்பவர்களில் (Hyperhydrosis) தோன்றுவதற்கான சாத்தியம் அதிகம்.


              சிலருக்கு உள்ளங்கைகளிலும் பாதங்களிலும் வியர்ப்பது அதிகம். இவர்கள் பாதிப்படைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

              சிகிச்சை முறைகள்

              சிகிச்சையின்றி இருந்தால் காலத்திற்கு காலம் குறைவும் கூடுதுமாகப் பல வருடங்களுக்கு நீடிக்கலாம். வியர்வை அதிகமாகும் கோடை காலங்களில் நோயின் தீவிரம் அதிகமாக இருக்கும். நோய் வராமல் தடுப்பதில் தீவிர கவனம் செலுத்துவது அவசியம்

              கதகதப்பும் ஈரலிப்பும் இணைந்த சூழல் இந்நோயைக் கொண்டுவரும் பக்றீரியாக் கிருமி பெருகுவதற்கு வாயப்பானது என்பதால் பாதங்களை ஈரலிப்பின்றியும் காற்றோட்டமாகவும் வைத்திருப்பது அவசியமாகும்.
              குளிக்கும்போது பாதங்களை கிருமிஎதிர்ப்பு சோப் வகைகளை உபயோகித்து நன்கு உராஞ்சித் தேய்த்து சுத்தப்படுத்த வேண்டும்.

              குளித்த பின்னரும் கால்களைக் கழுவிய பின்னரும் பாதங்களிலுள்ள ஈரலிப்பு மறையும் வண்ணம் சுத்தமான துணியினால் துடைக்க வேண்டும். அக்குள் வியர்வையை நீக்கும் ஸ்ப்ரேக்களை உபயோகிப்பதன் மூலம் (Antiperspirant spray) பாதங்களிலும் வியர்வையைக் குறைக்க முடியும்.

              வியர்வையை உறிஞ்சக் கூடிய சப்பாத்துக்களை அணிவது நல்லது. தோலினால் செய்யப்பட்டவை அத்தகையவையாகும். ரப்பர், ரெக்சீன் ஆகியவற்றால் செய்யப்பட்வைகளைத் தவிர்ப்பது நல்லது.

              இரண்டு சோடி சப்பாத்துக்களை உபயோகிப்பது நல்லது. இன்று உபயோகித்ததை மறுநாள் நன்கு உலர ஒதுக்கி வைத்துவிட்டு வேறொரு காலணியை அணிவது சாலச் சிறந்தது.


              பாதங்களுக்கு காற்றறோட்டம் அளிக்கக் கூடிய செருப்புவகைகள் நல்லது. ஆனால் அவையும் தோலினால் செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும்.

              சப்பாத்து அணியும் போது கட்டாயம் சொக்ஸ் அணிய வேண்டும். இவையும் வியர்வையை உறிஞ்சும் வண்ணம் பருத்தியிலானவையாக இருப்பது அவசியம்.

              அடிக்கடி மாற்ற வேண்டும். பாடசாலை செல்லும்போது ஒரு மேலதிக சோடி சொக்ஸ் கொண்டு செல்வது உசிதமானது. கிருமியை அழிப்பதற்கு சொக்ஸ்சை சுடு நீரில் (60 C) துவைப்பது நல்லது.

              மருந்துகள்

              அன்ரிபயரிக் கிறீம் வகைகள் உதவும். ஏரித்திரோமைசின், கிளிட்டாமைசின் கிறீம் போன்றவை நல்ல பலன் கொடுக்கும்.

              மாத்திரைகளாக உட்கொள்ளவும் கொடுப்பதுண்டு.

              ஆயினும் நோயை மருத்துவர் சரியாக நிர்ணயித்த பின்னரே அவற்றை உபயோகிக்க வேண்டும்.

              சருமநோய்கள் பற்றிய எனது சில பதிவுகள்

              வரட்சியான சருமம் காரணங்களும் பிரச்சனைகளும்  






              டொக்டர்எம்.கே.முருகானந்தன்.

              0.0.0.0.0.0.0

              Post Comment

              Saturday, October 29, 2011

              மூட்டு வலிகளைக் குணமாக்க பத்தியங்கள் உதவுமா?



              மூட்டு நோய்களைக் குணமாக்க உணவுமுறையில் மாற்றங்கள் செய்வது உதவுமா?

              வலிகளுக்கும் மூட்டுகளுக்குமான உறவு அண்ணன் தம்பி போல மிக நெருக்கமானவை. விட்டுப்பிரியாதவை.


              இதன் காரணமாக மூட்டுவலிகளினால் துன்பப்படுவோர் அவற்றிலிருந்து விடுபடுவதற்கான மார்க்கங்கள் எதைப் பற்றிக் கேள்விப்படாலும் அதனைப் பரீட்சித்துப் பார்க்காது விடமாட்டார்கள். வேறும் ஏதாவது இருக்கிறதா எனத் தேடியலைவார்கள்.

              மூட்டுகளுக்கான எளிமையான பயிற்சிகள் மூட்டு நோய்கள் உள்ளவர்களுக்கும் மிக மிக அவசியமானதாகும்.

              மூட்டு வலிகளா? பயிற்சிகள் உதவும்

              மூட்டு நோய்கள் என நாம் பொதுவாகச் சொன்னாலும் அது தனி ஒரு நேயால்ல. மூட்டுகளில் வலி, வீக்கம், அழற்சி ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய பல நோய்கள் யாவற்றையும் (Arthritis) என்றுதான் சொல்லுவார்கள். சுமார் 100க்கு மேற்பட்ட அத்தகைய நோய்கள் இருக்கின்றன.

              அத்தகைய நோய்களைக் குணப்படுத்த உணவுப் பத்தியம் உதவுமா என்று கேட்டால்
              • நிச்சயமாக இல்லை. 
              • ஆயினும் மூட்டு நோயுள்ளவர்களது பொதுவான உடல்நலத்தைப் பேணுவதற்கு சமச்சீர் வலுவுள்ள ஆரோக்கிய உணவுமுறை உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
              சமச்சீரான உணவு உதவும்

              எவ்வாறான உணவுமுறை உதவும்

              • சமச்சீரான உணவு. உங்கள் பொதுவான உடல் ஆரோக்கியத்தைப் பேணவும், உடலுக்கு ஏற்ப எடையை சரியான அளவில் பேணவும் உதவும். பொதுவான உடல் நிலை நல்ல நிலையில் இருந்து எடையும் சரியான அளவில் பேணப்பட்டால் மூட்டு நோய்களின் தாக்கம் குறைவடையும்.
              • எடையைச் சரியான அளவில் பேணுவது மிக முக்கியமாகும். எடை அதிகரித்தால் முழங்கால். இடுப்பு போன்ற எடை தாங்கும் மூட்டுகளுக்கு சுமை அதிகமாகி நோய் தீவிரமடையும்.
              • எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காகத் திடீரென கடுமையாக உணவுகளைக் குறைப்பதும் பட்டினி கிடப்பதும் நோயின் தீவிரத்தை அதிகரிக்குமே அன்றிக் குறைக்காது.
              • தாராளமாக நீராகாரம் எடுங்கள். ஆனால் மதுபானம் கூடாது. இனிப்பு அதிகமுள்ள மென்பானங்களையும் அதிகம் உட்கொள்ளக் கூடாது.
              • கல்சியம் செறிவுள்ள உணவுகள் அவசியம் தேவை. பால், யோகொட், தயிர், கீரை வகைகள், சிறுமீன்கள், பயறின உணவுகளில் கல்சியம் அதிகம் உண்டு.
              தவிர்க்க வேண்டியவை உள்ளனவா?

              'மூட்டு நோயெனற்றால் வாதம்தானே?

              • அப்படியென்றால் தயிர், வெண்டைக்காய், தக்காளி போன்ற குளிர்ச்சாப்பாடுகள் கூடாதுதானே' என்று பலர் கேட்பார்கள். 
              • வேறு சிலர் 'தேசிப்பழம், உருளைக்கிழங்கு கூடாது என்பர்.  
              இவை தவறான நம்பிக்கைகள். உண்மை கிடையாது. மாறாக இவற்றில் பல நல்ல போசாக்குப் பொருட்கள் உள்ளன. எனவே அவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.

              ஒரு சில நோய்களில்

              கவுட் (Gout)
              ஆயினும் கவுட் (Gout) என ஒரு மூட்டு வருத்தம் உண்டு. இது இலங்கையில் காணப்படுவது குறைவு. இந்நோய்க்கும் குருதியில் யூரிக் அமிலம் (Uric Acid) அதிகரிப்பதற்கும் தொடர்புண்டு.
              இந்நோயுள்ளவர்கள் இறைச்சியில் ஈரல், மூளை, சிறுநீரகம் போன்றவற்றையும், நண்டு போன்ற கடலுணவுகளையும், ஈஸ்ட் அதிகமுள்ள மாமைட், பியர் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

              ஆனால் ஏனைய மூட்டுவலிக்காரருக்கு அவற்றைத் தவிர்ப்பதால் பயன் ஏதும் இல்லை.

              ரூமரெடியிட் ஆத்திரைடிஸ்

              ரூமரெடியிட் ஆத்திரைடிஸ் என்பது இங்கும் பரவலாக உள்ளது.

              இவர்களுக்கு ஒமேகா 3 கொழுப்பு உதவலாம் எனத் தெரிகிறது. வலிநிவாரணிகள் போல நல்ல சுகத்தைக் கொடுக்காது என்ற போதிலும் பக்கவிளைவுகள் இல்லாதததால் உட்கொள்வதில் பயமில்லை.


              ஒமேகா 3 கொழுப்பானது கொலஸ்டரோல் குறைப்பிற்கும், இருதய நோய் சிலவற்றைத் தடுப்பதற்கும் உதவும். சல்மன், சார்டீன் போன்ற மீன்களிலும் எள்ளிலும் இருக்கிறது. மாத்திரைகளாகவும் கிடைக்கிறது.

              தவறான கருத்து

              உங்களது நோயை ஏதாவது ஒரு உணவு அதிகரிக்கிறது என நீங்கள் கருதினால் உடனடியாக அதை நிறுத்திவிடாதீர்கள்.
              • தினமும் உண்ணும் உணவு பற்றிய நாட்குறிப்பை ஒரு மாதத்திற்கு குறித்து வாருங்கள். 
              • உங்கள் நோயின் நிலை, குறித்த உணவு ஆகியவை பற்றி உங்கள் மருத்துவருடன் கலந்துரையாடுங்கள். 
              • நீங்களாக நிறுத்த வேண்டாம்.

              ஏனெனில் பொதுவாக மூட்டு வலிகள் காலத்திற்குக் காலம் காரணம் எதுவுமின்றி தீவிரமாவதும் தானாகவே மறைவதும் உண்டு. எனவே நீங்கள் அது திரும்ப வருதற்குக் காரணம் ஒரு உணவு அல்லது ஒரு உணவு வகை என நம்புவது காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதையாகவும் இருக்கலாம்.

              ஏனெனில், எந்த ஒரு உணவையும் தவிர்ப்பதன் மூலம் எந்தவொரு மூட்டு நோயையும் தணிக்கலாம் என்பதற்கு விஞ்ஞான பூர்வமான ஆதாரம் இதுவரை கிடையாது. (ஏற்கனவே குறிப்பட்ட கவுட் தவிர).
              • குறிஞ்சா இலை, 
              • முடக்கொத்தான் 
              எனப் பல பயன்படுகின்றனவே என்கிறீர்களா.

              இவை பற்றி ஆய்வுகள் நடந்ததாக அறியவில்லை. அத்துடன் வேறெந்த மருந்தும் பயன்படுத்தாமல் இவற்றை மட்டும் பயன்படுத்தி குணமடைந்தவர்கள் இருக்கிறார்களா?
               

              இருந்தால் அது பற்றி விஞ்ஞானபூர்வ ஆய்வுகள் தேவை.

              வலிநிவாரணி வெளிப் பூச்சு மருந்துகள் உதவலாம்


              எனவே
              • குளிர், சூடு, பித்தம் எனச் சொல்லி எந்த ஒரு உணவையும் தள்ளி வைக்க வேண்டாம். 
              • சமசீர் வலுவுள்ள (Balanaced Diet) நல்ல உணவாக உண்டு உங்கள் உடல் நலத்தைப் பேணுங்கள்.
              இவற்றைக் கடைப்பிடித்தால் மூட்டு நோய்களோடு வாழ்தல்  சிரமமானது அல்ல


              டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

              தினக்குரலின் ஹாய் நலமா? பத்தியில் நான் எழுதியது.


              Post Comment

              Saturday, October 22, 2011

              விமர்சனங்களை எதிர்கொள்வது நாளாந்த வாழ்விலும் படைப்புலகிலும்



              உங்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது.

              வேறொன்றும் இல்லை. சின்ன விடயம்தான். 'அப்பா உங்களுக்கு கலர் சென்சே கிடையாது. என்ன கலர் ஜீன்ஸ்க்கு என்ன கலர் சேட் போட்டிருக்கிறியள்.' அவள் சொன்னது உங்களுக்குப் பிடிக்கவில்லை.

              கோபம் பொத்துக் கொண்டு வருகிறது

              அவ்வாறு சொன்னது உங்களுக்கு எதிரான தனிப்பட்ட விமர்சனமாகப் படுகிறது. "எனது மகள் எனக்கு இப்படிச் செல்வதா?" என கிளர்ந்தெழுகிறிர்கள்.

              எழுத்தாளர்களும் விமர்சனங்களும்

              விமர்சனங்களைப் பற்றி பேச்சு எழுந்தால் முதலில் எழுத்தாளர்கள்தான் நினைவில் வருவார்கள்.

              மனிதர்கள் தம்மைப் படைத்ததாகக் தாம் கருதும் இறைவனையே 'நீ இப்படிச் செய்து போட்டியே' எனக் கோபமாகக் கேள்வி எழுப்புகிறார்கள்.

              அவ்வாறிருக்கும்போது எழுத்தாளர்களை விட்டு வைப்பார்களா? அதிலும் ஒரு எழுத்தாளன் மற்றவனைப் பற்றி ஆவேசமாகவோ அன்றி நாசூக்காக கிணடலடித்து விமர்சனம் எழுப்புவதற்குக் காத்திருப்பான். ஆனால் தன்னைப் பற்றி விமர்சனம் எழும்போது.....
              மல்லுக்கட்டல்தான்

              பொதுவான எழுத்தாளர்கள் படைப்பு எப்படியாக இருந்தாலும் ஆகா ஓகோ எனப் பாராட்டுக் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். பாராட்டுக் கிடைத்தால் உச்சி குளிரப் புன்னகை வீசி தனது ஆற்றலையிட்டுப் பெருமிதம் அடைவார்கள். மற்ற எந்த நல்ல எழுத்தையும் வாசிப்பதைக் கைவிட்டுத் தன்னைத்தானே படித்துக் கொலரை உயர்திக் கொள்கிறார்கள்.

              மாறாக மறையாக விமர்சனம் செய்யதவருடன் மல்லுக்கட்டல்தான். காரசாரமாக விமர்சிக்க வேண்டும் என்றில்லை. சற்று நாசூக்காக 'இவ்வாறு எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்' என்று சொல்வபரையும் தனது எதிராளியாகவே கணிக்கத் தொடங்கிவிடுவார்.

              ஆனால் இந்தக் கட்டுரையானது எழுத்துலக விமர்சனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல.

              மனதை நோகச் செய்யும் என்பது உண்மை

              விமர்சனங்கள் மிகவும் மனதை நோகடிக்கச் செய்யக் கூடியவை என்பது உண்மைதான்.
              மனதை நோகடிக்கச் செய்யக் கூடியவையானாலும் .....

              ஆனால் அதே நேரம் மிகவும் அவசியமானவை என்பதை மறந்துவிடக் கூடாது. விமர்சனமானது ஒருவர் தன்னை சீர்தூக்கிப் பார்க்கவும், தன்னைத் திருத்திக் கொள்ளவும் அல்லது தன்னை மேன்மைப்படுத்த உதவும் சாதனமாகும்.

              சொல்வது சுலபம். ஆனால் கடைப்பிடிப்பது கடினம் என்பதே உண்மை. யாருக்குத்தான் தன்னைப் பற்றி குறைவாகச் சொல்வது திருப்தியைக் கொடுக்கும். ஏனெனில் நாம் சாதாரண மனிதர்கள் தானே. எதையும் உணர்வுபூர்வமாக அணுகப் பழகியவர்கள்.

              எம்மை மேன்மைப்படுத்தாத எதுவும் எம்மை மகிழ்சிப்படுத்தாது. எம்மை மேன்மைப்டுத்தாதவன் பற்றி நல்ல அபிப்பிராயம் எழுவதில்லை.


              இவ்வாறு நிகழ்வதற்குக் காரணம் என்ன? நீங்கள் ஒரு
              • படைப்பாளியாக இருக்கலாம், 
              • ஒவியனாகவோ, 
              • பாடகனாகவோ அல்லது 
              • வேறெந்தக் கலைஞனாக இருக்கலாம். 
              படைப்புலகம் சாராது
              • ஆசிரியனாகவோ, 
              • தொழிலதிபராகவோ, அல்லது 
              • சாதாரண உழைப்பாளியகவோ இருக்கலாம். 
              விமர்சனமானது உங்கள் செயற்பாடு சம்பந்தமானதாகவே இருக்கும். வீணாக அதற்குள் உங்கள் பெயரைப் புகுத்தி, அது தனிப்பட்ட உங்களுக்கு எதிரானது எனக் கருதுவதைத் தவிர்க்க வேண்டும்.


              நீpங்கள் விமர்சனங்களைத் தனிப்பட்ட ரீதியானவை எனக் கருதும்போது பல சிக்கல்கள் உருவாகின்றன.
              • அவ்வாறு கருதும்போது உங்களை அறியாமலே, அக்கருத்திலிருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ள முனைகிறீர்கள். 
              • அதற்கு எதிரான வாதங்கள் அமோக மனதிற்குள் விளைகின்றன. 
              • அவை சொல்லப்பட்ட கருத்திற்கு எதிரானவையாக பெரும்பாலும் இருப்பதில்லை. 
              • கருத்தைச் சொன்னவர் பற்றியும் அவர் அவ்வாறு சொன்னதற்கான காரணங்களையும் கண்மூடித்தனமாக கற்பிதம் செய்ய முனைகிறீர்கள்.

              இழப்பும் கிடைப்பும்

              இதனால் இழப்பு உங்களுக்குத்தான். கருத்து ரீதியாக எதிர்கொள்ளாமல் தனிப்பட்ட ரீதியானதாக விமர்சனங்களை எடுக்கும்போது அதில் உள்ள ஆரோக்கியமான, உங்கள் எழுத்தை அல்லது செயற்பாட்டைச் செம்மைப்படுத்தக் கூடிய வழிகாட்டக் கூடிய தகவலையும் கைநழுவ விட்டுவிடுவீர்கள்.

              மாறாக பொதுமையானதாகக் கருதும்போது
              • மிகத் தீவிரமான விமர்சனத்திலிருந்தும் உங்களால் நல்ல கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு தேவையற்றவையை அசட்டை பண்ண முடியும். 
              • அரிசி மணியிலிருந்து பதரை நீக்குவதுபோல காரமான விமர்சனங்களுக்குள் ஒளிந்திருக்கும் பயன்படக் கூடிய கருத்துக்களைப் பொறுகியெடுக்கப் பழகவேண்டும். 
              • அவற்றை விட மோசமான, கடுமையான, நேரடியாக உங்கள் மனதைப் புண்படுத்த வேண்டும் என வீசப்படும் தனிமனிதக் காழ்ப்புணர்வு விமர்சனங்களையும் பொதுமைப்படுத்தும்போது அது ஒரு பாதுகாப்புக் கவசமாகி உதவும். 
               

                விமர்சங்கள் எழும்போது தன்னிச்சையான எதிர்ப்புணர்வுடன் செயற்படுவதற்குக் காரணம் என்ன?

                விமர்சனமானது எமது தன்னங்காரத்துடன் நேரிடையாக மோதுகிறது.
                • ஒருவர் எமது செயற்பாட்டை மேலும் மேம்படுத்துவதற்கு உண்மையாகவே ஆலோசனை கூற வரும்போது அதற்குள் ஒரு கசப்பான உண்மை மறைந்திருக்கிறது. 
                • அதாவது நீ செய்வது அல்லது எழுதியது திருப்தியானது அல்ல. திருந்த மேலும் இடம் உண்டு என்பதுதான். 
                • அதை சற்றுக் கசப்பான வார்த்தைகளில் சொன்னால் நீ செய்தது பிரமானதானதல்ல. அதாவது நீ ஒரு ஒரு சிறப்பான மனிதன் அல்ல. மாற்றத்தை வேண்டி நிற்கும் ஒரு சாதாரணன் என்பதல்லவா? 
                இத்தகைய எண்ணம் உங்களைப் புண்படுத்தி விடுகிறது. அதனால்தான் விமர்சனங்களை ஒருவன் எதிர்புணர்வுடன் அணுக நேர்கிறது.

                நீங்கள் செய்யக் கூடியது என்ன?

                உங்களுக்கு எதிரானதாக நீங்கள் கருதும் விமர்சனத்தை நேரிடையான வார்த்தைகளாகவோ அன்றி எழுத்திலோ எதிர் கொள்ள நேரும்போது நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
                1. அவசரப்பட்டு எதையும் செய்ய முனையாதீர்கள். எதிர்வினைகளாக அந்நேரத்தில் எழும் உணர்வலைகளை வெளிப்படுத்த வேண்டாம். 
                • இணையப் பதிவுலகில் சிறிதும் சிந்தனையற்று எழுந்தமாரியாகப் போடப்படும் விமர்சனங்களை உதாரணமாகக் கொள்ளலாம். உடனடியாக முறைக்கவோ ஏசவோ, காரமான வார்த்தைகளைச் சிந்தவோ, எழுத்தில் வடிக்கவோ வேண்டாம். சற்று ஆறப்போடுங்கள். 
                • உங்களைப் பற்றியதான அதிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு அடங்கும் வரை பொறுத்திருங்கள்.
                 2. அந்த விமர்சனமானது வேறொருவரைப் பற்றியது எனக் கற்பனை செய்ய முயலுங்கள்.
                • தற்செயலாக உங்களது பெயரைக் கொண்ட வேறொருவர் பற்றியது என நினையுங்கள். 
                • அதுவும் உங்களைப் போன்ற செயற்பாடுடைய வேறெருவரைப் பற்றியது என எண்ண முயலுங்கள். 
                • இன்னொருவரைப் பற்றியது என எண்ணும்போது, தர்க்க ரீதியாக அதிலுள்ள சாதகமான அம்சங்களை இனங்காண முடியலாம். 
                    வாயை இறுக மூடிக் கொள்ளுங்கள்
                    •  வாயை இறுக மூடிக் கொள்ளுங்கள். எதுவும் பேச வேண்டாம். விமர்சனமாகச் சொல்வதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருங்கள். நேரம் கிடைத்தால் குடிகாரக் கணவனின் கோபத்தை அடக்க மனைவியை வாயில் கிறீன் ரீயை வாயிலிட்டு அலசிக் கொண்டிருப்பது பற்றி நான் எழுதிய நகைச் சுவைக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். 
                                 நிறம் மாறும் போஸ்டர்களாக அவள் முகம்   
                        • ஆத்திரத்தைக் காட்டாது அமைதியாக அது பற்றி மேலும் விளக்கங்களைக் கேளுங்கள். ஆனால் அந்தக் கேள்விகள் தனிப்பட்ட ரீதியானவையாக அமையாமல் விடயம் பற்றிப் பொதுமையாக இருக்கும் வண்ணம் இருப்பது அவசியம். 
                         இதனால் இரண்டு விதமான நன்மைகள் கிட்டலாம்.
                        1. முதலாவதாக அதிலுள்ள சாதகமான அம்சங்களை நீங்கள் இனங்கண்டு பயன்பெற உதவும். 
                        2. இரண்டாவதாக விமர்சிப்பவரும் தனது கருத்துக்களை கண்மூடித்தனமாக உங்களைப் பற்றி நேரிடையாகத் தூற்றாது கருத்து ரீதியாக முன்னெடுக்க உதவும். 
                        இதனால் சூடு தணிந்த பின் நீங்களும் அதனை ஆக்கபூர்வமாக எதிர்கொள்ள முடியும்.
                          ஆத்திரத்தைக் காட்டாது அமைதியாக .........

                          இவ்வாறு எதிர்கொள்வதற்கு உங்கள் அடிப்படை நம்பிக்கை முக்கியமானதாகும். இது இரண்டு விடயங்களில் அவசியம் இருந்தே ஆகவேண்டும்.

                          1.    நீங்கள் என்ன செய்கிறீர்கள், அல்லது சொல்வது என்ன? இது பற்றி தெளிவும் உறுதியும் இருக்க வேண்டும். எத்தகைய கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் உங்கள் செயற்பாட்டில் பற்றுதி வேண்டும். கைவிடக் கூடாது. தடுமாறக் கூடாது.

                          2.    எதற்காகச் செய்கிறீர்கள்? அதாவது உங்கள் நோக்கம் அல்லது இலக்கு என்ன என்பது பற்றியும் அவ்வாறே தெளிவும் உறுதியும் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் உங்கள் செயற்பாடு பற்றிய கருத்தறியலை வேண்டும்போது அக் கருத்துக்களில் உள்ள நல்ல அம்சங்களை உள்வாங்கிப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இல்லையேல் அக் கருத்துகள் அதிகார ஆணையாகி மாறி உங்களைத் திசை திருப்பிவிடும் அபாயம் உண்டு.

                          தெளிந்து சொல்லுங்கள். உறுதியாக நில்லுங்கள். பதரை நீக்கி மணிகளைப் பொறுக்குங்கள். பயன் பெறுவீர்கள். வீண்பகை தவிருங்கள்.

                          எம்.கே.முருகானந்தன்

                          ஜீவநதி சஞசிகையில் வெளியான எனது கட்டுரை
                          0.0.0.0.0.0.0

                          Post Comment

                          Saturday, October 15, 2011

                          கண்ணருகே தோலில் தடிப்புகள் கொலஸ்டரோலா?



                          கொலஸ்டரோல் உங்களுக்கு இருக்கிறதா என அறிவது எப்படி? 12-14 மணிநேரம் வெறும் வயிற்றிலிருந்து இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என விடயம் அறிந்தவர்கள் கூறுவார்கள்.

                          ஆனால் உங்களுக்கு இருக்கக் கூடும் என்பதைக் காட்டும் வேறு அறிகுறிகள் உள்ளனவா?

                          சன்தலஸ்மா

                          கண் இமைகளின் மேல் மடல் அல்லது கீழ் மடலில் அல்லது அவற்றருகே மஞ்சள் நிறத்தில் தோற் தடிப்புகள் சிலரில் தென்படுவதுண்டு. சன்தலஸ்மா Xanthelasma என்பார்கள். உண்மையில் இவை தோலுக்கு அடியிலுள்ள கொலஸ்டரோல் படிவுகளாகும்.


                          ஆசிய மற்றும் மத்தியதரைக் கடற்பிரதேசத்தைச் சார்ந்தவர்களிடையே அதிகம் காணப்படுகிறது. இவை வலியையோ அல்லது வேறெந்த சிரமத்தையோ கொடுப்பதில்லை.

                          ஆயினும் தமது அழகிய தோற்றத்தைக் கெடுப்பதான உணர்வை நோயாளிக்கு ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.


                          இது இரத்தத்தில் கொலஸ்டரோல் அதிகரிப்பதின் அறிகுறி என பலகாலமாக நம்பப்பட்டது. ஆயினும் அண்மைக் கால ஆய்வுகளின் படி, அத்தகைய தோற் தடிப்பு இருப்பவர்கள் அனைவருக்கும் குருதியில் கொலஸ்டரோல் அதிகரித்து இருப்பதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

                          இருந்தபோதும் பலருக்கு நல்ல கொலஸ்டரோலான HDL குறைந்திருக்கும், அல்லது கெட்ட கொலஸ்டரோலில் ஒன்றான ரைகிளிசரைட் (Triglyceride)  அதிகரித்திருக்கும்.

                          சன்தலஸ்மாவுடன் கொலஸ்டரோல் அதிகமாக உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் பரம்பரையில் கொலஸ்டரோல் அதிகமுள்ளவர்களாக இருப்பர். அல்லது நீரிழிவு நோயாளிகளாகவும் இருப்பது தெரிகிறது.




                          கொலஸ்டரோல் அதிகரிக்காவிட்டாலும் பாதிப்புண்டு

                          அத்தகைய தடிப்புகள் உள்ளவர்கள் பலருக்கு கொலஸ்டரோல் அதிகரிப்பதில்லை என்பதால் எதுவிது அக்கறையும் எடுக்காது அசட்டை செய்யலாமா?

                          நிச்சயமாக இல்லை. குருதியில் கொலஸ்டரோல் அளவு அதிகரிக்காவிட்டால் கூட இவர்களுக்கு
                          • மாரடைப்பு 
                          • பக்கவாதம் 
                          போன்ற பாதிப்புகள் வருவதற்கான சாத்தியம் ஏனையவர்களை விட சற்று அதிகமாகும்.

                          அதீத எடை, உயர் இரத்த அழுத்தம், குருதியில் அதிகரித்த கொலஸ்டரோல் அளவு, புகைத்தல் போன்ற மாரடைப்பு எற்படுவதற்கான ஏனைய காரணிகளைக் கணக்கில் எடுத்தபோதும் இந்த அதிகரிப்பு இருக்கவே செய்தது. 

                          எனவே அத்தகையவர்கள் தமக்கு எதிர்காலத்தில் இந்நோய்கள் வராமல் தடுப்பதற்காக
                          • உணவு முறைகளில் கவனம், 
                          • தினசரி உடற் பயிற்சி, 
                          போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்ய வேண்டும். அத்துடன் மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெறுவதும் நல்லது.
                          அகற்ற முடியுமா?

                          பொதுவாக இவற்றை அகற்றுவதில்லை. அகற்றினாலும் 40 சதவிகிதமானவர்களுக்கு 1-3 வருடங்களுக்குள் திரும்பத் தோன்றலாம். சிலருக்கு மறுவும் தோன்ற வாய்ப்புண்டு.

                          ஆர்க்கஸ் சினலிஸ்

                          வேறு சிலருக்கு கண் கருவிழியில் வட்டமாக வெள்ளை நிறத்தில் படிவு ஏற்பட்டிருக்கும். இதனை ஆர்க்கஸ் சினலிஸ் (arcus senilis) என்பார்கள்.

                          இது வெள்ளையாக இருந்தபோதும் வெண்புரை எனும் கற்றரக்ட் அல்ல. அது லென்ஸ்சில் வெள்ளை படிவதாகும்.

                          மாறாக இது விழித் துவாரத்தைச் சுற்றி கருவிழியில் கொழுப்பு வட்டமாக படிவதாகும். இதனால் பார்வைக் குறைபாடு எதுவும் ஏற்படாது.



                          இதுவும் குருதியில் கொலஸ்டரோல் அதிகரிப்பதைக் குறிப்பதாகவே நம்பப்படுகிறது. ஆயினும் எப்பொழும் அவ்வாறு இருக்க வேண்டும் என்றெல்ல.

                          மேற் கூறிய ஆய்வின் பிரகாரம் வயது முதிர்வின் போது தோன்றினால் இதற்கும் மாரடைப்பிற்கும் தொடர்பில்லை. வயது அதிகரிப்போடு இது தொடர்புடையது.


                          பொதுவாக 50வயதிற்கு மேலேயே தோன்றும். ஆண் பெண் இருபாலானாரிலும் காணப்பட்டாலும் ஆண்களில் அதிகம் தோன்றும்.

                          இதருந்த போதும் 40 ற்கு உட்பட்ட வயதில் தோன்றினால் அது இருதய நோய்கள் வரக் கூடிய சாத்தியத்தை அதிகரி்கிறது.

                          ஒரு கண்ணில் மாத்திரம் இந்த வெள்ளை வளையம் தோன்றினால் இது மற்றக் கண்ணுக்கான குருதி சுற்றோட்டத்தில் பாதிப்பு இருப்பதாகக் கொள்ளலாம்.

                          எவ்வாறிருந்த போதும் இத்தகைய அறிகுறிகள் இருப்பவர்கள் தங்கள் மருத்துவருடன் கலந்தாலோசிப்பது நல்லது.

                          டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
                          0.0.0.0.0.0..0

                          Post Comment

                          கருத்துகள் இல்லை:

                          கருத்துரையிடுக