பாப்கார்னில் அதிகமான அளவு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள்
நிறைந்துள்ளன. ஏனெனில் பாப்கார்ன் மக்காசோளத்தினால் செய்யப்படுகிறது.
அதனால் அதன் சத்துக்கள் போய் விடுகின்றன என்று
நிறைய பேர் நினைக்கின்றனர். ஆனால் அது தான் தவறு, பாப்கார்னில் இனிப்பு அல்லது
உப்பு என்று சுவைக்காக எதை சேர்த்தாலும், அதில் இருக்கும் சத்துக்கள் மாறாமல்
இருக்கும்.
தானியங்களில் ஒன்றான மக்காசோளத்தால் செய்யப்படும்
பாப்கார்னில் அதிகமான அளவு நார்ச்சத்துக்கள், மற்ற பழங்கள் மற்றும் காய்களில்
இருப்பதைப் போன்று, இதிலும் அடங்கியுள்ளன.
ஆகவே ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைக்கும்
போது, சிப்ஸ் மற்றும் பர்கர் போன்றவைகளை சாப்பிடுவதை விட, இந்த பாப்கார்ன் மிகவும்
சிறந்தது.
மேலும் பாப்கார்னில் பாலிஃபினால் எனப்படும்
ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது என்றும் ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் சி மற்றும் ஈ
போன்ற சத்துக்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் இதில் இருக்கும் பாலிஃபினால் உடலில்
இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை
அதிகரிக்கின்றன.
அதுமட்டுமல்லாமல், பாப்கார்னில் உடலுக்கு ஒரு
நாளைக்கு தேவையான அளவு சத்துக்களில் 13% சத்துக்கள் கிடைக்கின்றது என்றும்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும்
பசியின்மை, புற்றுநோய், வயிற்றில் ஏற்படும் பிரச்சனை, இதய நோய் போன்றவை ஏற்படாமல்
கட்டுப்படுத்தும். அதிலும் உடலில் செரிமானத் தன்மையை அதிகரிப்பதோடு, அழகான
சருமத்தையும் தரும்.
நார்ச்சத்துக்களில் இரு வகைகளான கரையக்கூடிய
மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் என்று இருக்கின்றன. அதில் கரையக்கூடிய
நார்ச்சத்துக்கள் நீரில் கரையக்கூடியவை, கரையாத நார்ச்சத்துக்கள் நீரில் கரையாமல்,
அதனை பெருங்குடல் வழியாக உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றிவிடும்.
அத்தகைய கரையாத நார்ச்சத்துக்கள் பாப்கார்னில்
அதிகம் இருப்பதால், உடலில் செரிமான விரைவில் ஏற்படுவதோடு, மலச்சிக்கலையும்
சரிசெய்யும்.
மேலும் இதனை சாப்பிடுவதால் அடிக்கடி பசிக்காமல்
இருக்கும். இதனால் உடல் பருமன் அதிகரிக்காமல் இருக்கும்.
/yarlosai thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக