WELCOME TO OUR HOME PAGE அப்பாக்குட்டி மருத்துவம் <>தற்போதைய செய்திகள்:........சூடாக ஒரு கப் டீ<><>கருசிதைவு சில அறிகுறிகள்<><>இயற்கை வயாகரா முருங்கை பற்றி உங்களுக்கு தெரிந்ததும்... தெரியாததும்.<><>கர்ப்பப் பை பலம் அடைய உழுத்தங்களி சாப்பிடுங்க..!<><>பெண்கள் பயன்படுத்தும் “நாப்கின்” ஆல் உடல் நலத்திற்கு கேடு! ஆய்வில் அதிர்ச்சி தகவல்! »<><>குளிர் நீரை விட சுடு நீர் தான் பெஸ்ட்! லேட்டஸ்ட் தகவல்!<><>அதுல கிரேட்டா இருக்கணுமா? சில உணவுகளை சாப்பிடாதீங்க!<><>தூக்கம் குறைந்தால் கேன்சர் தாக்கும் : டாக்டர்கள் எச்சரிக்கை<><>மன உளைச்சலா, மாரடைப்பா? தலைமுடியை ஆராய்ந்தால் உடல்கண்டிஷன்தெரியும்<><>ஆஸ்டியோபொரோசிஸ் எனும் அசுரப் பிரச்னை<><>பக்கவாதம் என்றும் பாhpசவாயு என்றும் கூறப்படும் கை, கால், முகம், வாய் போன்றவற்றின் செயலிழப்பு எல்லா வயதினரையும்...;குட்டீஸ்க்கு மூக்கில் ஒழுகுதா? வீட்டு மருந்து கொடுங்க!<><>பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துணவுகள்!<><>பட்டினி கிடந்தா உடல் மெலியாதா?<><>வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்<><>;ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு <><>இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்‏<><>தொண்டையில் கழலை இல்லை, தைரொயிட் நோயா ?<><>நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்<><>ஹாய் நலமா-2 மூட்டு வலிகளா?‏<><>முட்டையின் மகத்துவம் - ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு<><>தூக்கம் இல்லாத பிரச்சனைக்கு சிறந்த மருந்து சப்போட்டா பழம்! <><>17 குணங்கள் கொண்ட‌ வெற்றிலை<><>குழந்தை மருத்துவம்: 3 முதல் 8 வயது வரை..<><>உடற்பயிற்சியின்றி அதிகரிக்கும் மரணங்கள்.<><>அல்சரை குறைக்க மன அமைதி தேவை.<><>புற்றுநோய் என்ன செய்யும்?, மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? : 3டி அனிமேஷனின் பதில் <><>பசுவின் பால், குழந்தைகளுக்கு நல்லதல்ல - அதிர்ச்சி தகவல்<><>தூக்கம் இன்றி 15 கோடி இளைஞர்கள் தவிப்பு<><>முகப்பரு மறைய<><>தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க!<><>சிறுநீரகக்கல் இருக்கா? கவலையை விடுங்க...<><>ஏலக்காய்’ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா!! <><>ஹீமோகுளோபின் அதிகரிக்க வழிகள்<><>மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி!<><>தைராய்டு பற்றிய விழிப்புணர்வும் அவற்றுக்கான தீர்வும்!<><>வயாக்கிராவுக்கு பதில் மாதுளம்பழம்!<><> உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வெள்ளரிக்காய்<><>தைரியமாக சொல்லுங்க: ”தொட்டுக்க ஒரு டபுள் ஆம்லெட் போடுங்க.. மனையாளே!”<><>புற்று நோய் பற்றிய விழிப்புணர்வும் விரிவான தகவல்களும்!<><>விஷ ஜந்துக்கள் கடித்து விட்ட‌தா? என்ன முதலுதவி செய்யலாம்? தெரிந்து கொள்ளுங்கள்…<><>மாரடைப்பைத் தடுக்கும் ரத்தப் பரிசோதனை <><>பகலில் தூங்காதீங்க மன அழுத்தம் வரும் – ஆய்வில் தகவல் <><>சிறு தானியங்களின் மருத்துவக் குணங்கள்!<><>சீரகத்தின் குணங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.<><>மன அழுத்தத்தை போக்கும் வாழை இலை! <><>ரத்த சோகையை தடுக்கும் வழிகள்<><>தூங்காமல அவதிப் படுகிறீர்களா! <><>இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம்! ஆய்வு தகவல்!<><>குழந்தை பெற்ற பின்னும் உடல் சிக்கென்று இருக்க<><>மார்பகப் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு தரும் வைட்டமின் C! <><>கிராம்பின் மருத்துவ குணங்கள்! <><> இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது வேர்க்கடலை<><>அல்சர் இருக்கா கவனம் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்! <><>புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களா நீங்கள்? நிறுத்த 7 வழிகள்!<><>அதிகாலையில் தண்ணீர் பருகுங்கள் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும்.<><>நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!!<><>பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்குமாம்... உங்களுக்குத் தெரியுமா?<><>குழந்தை வேண்டுமா? மணல்தக்காளி சாப்பிடுங்கள்!<><>சில நோய்களுக்கான அறிகுறிகளும் தப்பிக்கும் வழிகளும்.. <><>நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செக்ஸ் : ஆய்வில் நிரூபணம்<><>செக்ஸ் வாழ்க்கையில ஈடுபட முடியலையே!<><>மாரடைப்பு <>

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

ஆஸ்டியோபொரோசிஸ் எனும் அசுரப் பிரச்னை


ஆஸ்டியோபொரோசிஸ் எனும் அசுரப் பிரச்னை
மாற்றம் செய்த நேரம்:8/30/2012 2:36:57 PM 



14:36:57Thursday2012-08-30நோய்களுக்கும் பெண்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும் போல. அதனால்தான் பலதும் பெண்களைக் குறிவைத்தே தாக்குகின்றன  ஆஸ்டியோபொரோசி’ஸும்  அப்படித்தான். அதென்ன ஆஸ்டியோபொரோசிஸ்?


எலும்புப்புரை நோய், எலும்பு மெலிதல் நோய், எலும்புத்துளை நோய்... எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். ஆஸ்டியோபொரோசிஸ் ஆண்களுக்கும் வரும். ஆனால், அரிதாகவே தாக்கும்! பெண்களையோ பாரபட்சமின்றி தாக்கும். ஆஸ்டியோபொரோசிஸ் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்னென்ன? யாருக்கெல்லாம் வரும்? தவிர்க்க முடியுமா? தப்பிக்க வழி உண்டா? எல்லாவற்றையும் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் எலும்பு, மூட்டு சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஆறுமுகம்.

‘‘நம்முடைய எலும்புகளில் கால்சியம் சத்து குறைந்து, எலும்புகளின் அடர்த்தியும் குறைந்து, அவை உறுதித்தன்மையை இழந்து, மிருதுவாகும் நிலைதான் ஆஸ்டியோ பொரோசிஸ். மனித உடலில் மிக உறுதியான பாகமான எலும்பு, ஆஸ்டியோபொரோசிஸ் தாக்கிய பிறகு, ஸ்பாஞ்ச் மாதிரி மிருதுவாக மாறும். 50 பிளஸ்சில் உள்ள பெண்கள்தான் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது மெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கும் பெண்களையே இது குறி வைக்கும். மெனோபாஸ் காலத்தில், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பது குறையத் தொடங்கும். அதன் விளைவாக கால்சியம் கிரகிக்கப்படும் திறனும் குறையும். விளைவு..? ஆஸ்டியோபொரோசிஸ்!

சரி, எலும்புகள் மிருதுவானால் என்னாகும்?

ஆரோக்கியமான ஒருவர், லேசாக கீழே விழுந்தாலோ, இடறினாலோ எலும்புகள் அத்தனை சீக்கிரத்தில் உடையாது. அதுவே ஆஸ்டியோபொரோசிஸ் பாதித்தவர்களுக்கு, லேசாக இடித்துக் கொண்டாலோ, வழுக்கி விழுந்தாலோ, எலும்புகள் உடையும்.

அறிகுறிகள்?

கால் வலி, மூட்டு வலி என எலும்புகள் இணைகிற இடங்களில் எல்லாம் வலி இருக்கும். மிதமான உடற்பயிற்சிகள் கூட களைப்படையச் செய்யும். வலிதான் பிரதான அறிகுறி என்பதால், அதை வைத்து, ஆஸ்டியோபொரோசிஸாக இருக்குமோ என யாருக்கும் சந்தேகிக்கத் தோன்றாது. அடிபட்டோ, கீழே விழுந்தோ, எலும்புகள் நொறுங்கும்போதுதான், அதன் வீரியம் தெரியும். முதுகெலும்பு, இடுப்பெலும்பு, விலா எலும்பு மற்றும் மணிக்கட்டுப் பகுதிகளில் இந்த பாதிப்பை அதிகம் காணலாம்.

எலும்புகள் அடர்த்தி இழப்பதேன்?

நன்றாக இருந்த எலும்புகள், திடீரென ஏன் தம் அடர்த்தியை இழக்க வேண்டும்? எலும்புகளின் அடர்த்தியைப் பொறுத்தே, அவற்றின் உறுதித் தன்மை தீர்மானிக்கப்படும். பெண்களைவிட, ஆண்களுக்கு இயல்பிலேயே எலும்புகளின் அடர்த்தி அதிகம். அதனால்தான், அவர்கள் ஆஸ்டியோபொரோசிஸால் அரிதாகவே பாதிக்கப்படுகிறார்கள். எலும்புகளின் அடர்த்தியானது குழந்தைப்பருவத்தில் அதிகரிக்கத் தொடங்கி, ஒருவரது 25வது வயதில் உச்சத்தில் இருக்கும். வயதாக, ஆக, அதாவது 35க்குப் பிறகு, அந்த அடர்த்தி மெல்ல மெல்லக் குறைய ஆரம்பிக்கும். வருடத்துக்கொரு முறை முதுமையின் காரணமாக, 0.3 முதல் 0.5 சதவிகிதம் வரை எலும்புகளின் அடர்த்தி குறைந்து கொண்டே வரும்.

எப்படிக் கண்டுபிடிப்பது?
DEXA   என்கிற ஸ்கேன் மூலம் நடு முதுகெலும்பு, இடுப்பெலும்பு ஆகியவற்றின் அடர்த்தியைக் கண்டுபிடிக்கலாம். இந்த ஸ்கேன் செய்ய ரூ.2,500 செலவாகும். T score   என்கிற அளவீட்டை வைத்து, ஆஸ்டியோபொரோசிஸ்தானா என்பதைக் கண்டுபிடிப்பார்கள். T score   மைனஸ் 1 ஆக இருக்க வேண்டும். அது மைனஸ் 3 அல்லது அதற்கும் கீழ் என்றால் ஆஸ்டியோபொரோசிஸ் உறுதி செய்யப்படும். மைனஸ் 1க்கும் மைனஸ் 2.5க்கும் இடைப்பட்டிருந்தால், அது ‘ஆஸ்டியோபீனியா’ என்கிற நிலை. அதாவது ஆஸ்டியோபொரோசிஸை நோக்கிய பயணத்தின் ஆரம்பக் கட்டம்! 

சிகிச்சைகள்?

தினசரி உடலின் இயக்கத்துக்கு கால்சியம் மிக அவசியம். அதற்குப் போதுமான கால்சியம் சேராத பட்சத்தில், அது எலும்புகளில் இருந்து தேவையான கால்சியத்தை எடுத்துக் கொள்ளும். இதைத் தவிர்க்கவும், புதிய செல்கள் உருவாகவும் மருந்துகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கால்சியம் சப்ளிமென்ட்டுகளை எடுத்துக் கொள்ளலாம். 

கால்சியம் உடலில் சேர, வைட்டமின் டி3 சத்து மிக அவசியம். வைட்டமின் டி3 சத்தை சூரிய வெளிச்சத்திலிருந்து மட்டுமே பெற முடியும். ஆனால், இன்று வெயிலுக்குப் பயந்துகொண்டு, தலை முதல் கால் வரை மூடி மறைத்துக் கொண்டுதான் வெளியே செல்கிறார்கள் பெண்கள். குறிப்பாக
இஸ்லாமிய பெண்கள், பர்தா அணிந்த படியே வெளியில் செல்வதால், அவர்களுக்கு வைட்டமின் டி3 குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகி, அதன் விளைவாக ஆஸ்டியோபொரோசிஸ் வரும் ஆபத்தும் அதிகம்.

வைட்டமின் டி3 குறைபாடு உள்ளதா என்பதை ரத்தப் பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அப்படியிருந்தால், வைட்டமின் டி3 மருந்தை வாரம் ஒரு முறை என 6 வாரங்களுக்கும், பிறகு மாதம் ஒரு முறையும் தர வேண்டியிருக்கும்.

கர்ப்பப்பையை சீக்கிரமே அகற்றி விட்ட பெண்களுக்கு ஆஸ்டியோபொரோசிஸ் தாக்கும் அபாயம் அதிகம். அவர்களுக்கு ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட்
தெரபியுடன், கால்சியம் சப்ளிமென்ட்டுகளும் தர வேண்டும்.  எலும்புகளில் கால்சியம் சேரச் செய்வதற்கான பிரத்யேக ஊசிகளும் உள்ளன. வருடம் ஒரு முறை அந்த ஊசியைப் போட்டால், ஒரு வருடத்துக்குப் பலன் இருக்கும்.

மூக்கின் வழியே இழுத்துக் கொள்ளக் கூடிய ஸ்பிரே வகை மருந்துகளும் உள்ளன. அவை, எலும்புகளில் உள்ள கால்சியத்தை, உடல் இழுத்துக் கொள்வதைத் தடுக்கும். ஒரு வேளை எலும்பு முறிந்தால், அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம்.

தப்பிக்க வழி?
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறுவதுதான் முதல் வழி. பருமன் பிரச்னை, ஸ்டியோபொரோசிஸுக்கும்  விதை போடலாம். ஜாக்கிரதை! உடற்பயிற்சி மட்டும்தான், இதற்கான ஒரே தீர்வு. 

கால்சியம் அதிகமுள்ள பால் மற்றும் பால் பொருள்கள், முட்டை போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் குடித்தால் கால்சியம் சேரும் என லிட்டர் லிட்டராக பாலைக் குடித்துக்கொண்டு, உடற் பயிற்சியே இல்லாமல் இருந்தால், எடை கூடும். வெயிலே படாமல் இருப்பது பாதுகாப்பானதல்ல. அதிகாலை வெயிலும், அந்தி சாய்கிற நேரத்து வெயிலும்,ஒன்றும் செய்யாது. தினம் சில நிமிடங்களாவது வெயில் உங்கள் மீது படட்டும்.”


dinakaran. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக