|
|
அலர்ஜி என்பது விசித்திரமான வியாதி. மைக்ரோப், பாக்டீரியா, வைரஸ்
போன்ற எந்த கிருமிகளுக்கும் இதனுடன் தொடர்பு கிடையாது. இந்த வியாதிக்கு இப்படியொரு
பெயரைசூட்டியவர், டாக்டர் க்ளெமன்ஸ் ப்ரெய்ஹர் வான் பர்க்யூட் என்பவர். நமது
உடலுக்குள் தற்காப்புக்கு என்று சில அமைப்புகள் உள்ளன. சிலருக்கு இந்த
அமைப்பு சரியாக செயல்படாது. உடலுக்குள் நுழையும் கிருமிகளை எதிர்ப்பதற்காக
இருக்கும் இந்த அமைப்பு, சாதாரண விஷயங்கள் உடலில் நுழைந்தால் கூடி தப்புத்தப்பாக
ரியாக்ட் செய்யும். இதைத்தான் அலர்ஜி என்கிறோம். கத்தரிக்காய் அலர்ஜி
ஏற்படுத்தினால் அதை குற்றம் சொல்லி பயனில்லை. நாம் தான் கத்தரிக்காயோடு
ஒத்துப்போகவில்லை என்று அர்த்தம். ஜலதோஷம். தும்மல், மூச்சுத்திணறல், சொறி,
கொப்பளங்கள், இவற்றில் ஏதாவது ஒன்று அலர்ஜியின் அறிகுறியாகும். அலர்ஜிக்கு காரணமான
பொருளை கண்டுபிடிப்பது சிரமம். டாக்டர் நோயாளி என்று இருவரையும் குழப்புகிற வியாதி
இது. அலர்ஜிக்கு காரணம் எது என்று தெரிந்தது விட்டால் தான் பிரச்சனை.
ஆஸ்துமாவை எடுத்துக்கொள்ளுங்கள். 40 சதவீதம் அலர்ஜிதான் வில்லன். பயங்கரமான
அலர்ஜிகளும் உண்டு. அதில் ஒன்று அனாபைலாக்டிக் ஷாக் என்பது. திடீரென்று உடலின் சில
பாகங்கள் வீங்க ஆரம்பிக்கும். அதைத் தொடர்ந்து வயிற்றுத்தசைகளில் துடிக்கும்படியான
வலி, தொண்டைக்குழாய் வீங்கி நெருக்க ஆரம்பிக்கும். மூச்சுத்திணறல், ரத்த
அழுத்தம் ஏகத்துக்கும் எகிறும். உடனே சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் மரணம்
நிச்சயம்.இந்த வகை அலர்ஜிக்கு சிலவகை மீன்கள், பூச்சிக்கடி பென்சிலின் காரணமாக
இருக்கின்றன. அலர்ஜியை தூண்டி விடுவது உடலுக்கு இருக்கும் ஆராக்சிடோனின் ஆசிட் என்ற
கெமிக்கல்தான் என்று கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் அலர்ஜியை
குணப்படுத்தும் மருந்துகளை கண்டுபிடிக்கின்றனர். என்ன மருந்து கண்டுபிடித்தாலும்,
அலர்ஜிக்கான பொருள் எது என்று தெரியாத வரை குணப்படுத்துவது சிரமமான காரியம்
தான்.
viyapu thanks
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக