WELCOME TO OUR HOME PAGE அப்பாக்குட்டி மருத்துவம் <>தற்போதைய செய்திகள்:........சூடாக ஒரு கப் டீ<><>கருசிதைவு சில அறிகுறிகள்<><>இயற்கை வயாகரா முருங்கை பற்றி உங்களுக்கு தெரிந்ததும்... தெரியாததும்.<><>கர்ப்பப் பை பலம் அடைய உழுத்தங்களி சாப்பிடுங்க..!<><>பெண்கள் பயன்படுத்தும் “நாப்கின்” ஆல் உடல் நலத்திற்கு கேடு! ஆய்வில் அதிர்ச்சி தகவல்! »<><>குளிர் நீரை விட சுடு நீர் தான் பெஸ்ட்! லேட்டஸ்ட் தகவல்!<><>அதுல கிரேட்டா இருக்கணுமா? சில உணவுகளை சாப்பிடாதீங்க!<><>தூக்கம் குறைந்தால் கேன்சர் தாக்கும் : டாக்டர்கள் எச்சரிக்கை<><>மன உளைச்சலா, மாரடைப்பா? தலைமுடியை ஆராய்ந்தால் உடல்கண்டிஷன்தெரியும்<><>ஆஸ்டியோபொரோசிஸ் எனும் அசுரப் பிரச்னை<><>பக்கவாதம் என்றும் பாhpசவாயு என்றும் கூறப்படும் கை, கால், முகம், வாய் போன்றவற்றின் செயலிழப்பு எல்லா வயதினரையும்...;குட்டீஸ்க்கு மூக்கில் ஒழுகுதா? வீட்டு மருந்து கொடுங்க!<><>பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துணவுகள்!<><>பட்டினி கிடந்தா உடல் மெலியாதா?<><>வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்<><>;ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு <><>இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்‏<><>தொண்டையில் கழலை இல்லை, தைரொயிட் நோயா ?<><>நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்<><>ஹாய் நலமா-2 மூட்டு வலிகளா?‏<><>முட்டையின் மகத்துவம் - ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு<><>தூக்கம் இல்லாத பிரச்சனைக்கு சிறந்த மருந்து சப்போட்டா பழம்! <><>17 குணங்கள் கொண்ட‌ வெற்றிலை<><>குழந்தை மருத்துவம்: 3 முதல் 8 வயது வரை..<><>உடற்பயிற்சியின்றி அதிகரிக்கும் மரணங்கள்.<><>அல்சரை குறைக்க மன அமைதி தேவை.<><>புற்றுநோய் என்ன செய்யும்?, மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? : 3டி அனிமேஷனின் பதில் <><>பசுவின் பால், குழந்தைகளுக்கு நல்லதல்ல - அதிர்ச்சி தகவல்<><>தூக்கம் இன்றி 15 கோடி இளைஞர்கள் தவிப்பு<><>முகப்பரு மறைய<><>தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க!<><>சிறுநீரகக்கல் இருக்கா? கவலையை விடுங்க...<><>ஏலக்காய்’ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா!! <><>ஹீமோகுளோபின் அதிகரிக்க வழிகள்<><>மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி!<><>தைராய்டு பற்றிய விழிப்புணர்வும் அவற்றுக்கான தீர்வும்!<><>வயாக்கிராவுக்கு பதில் மாதுளம்பழம்!<><> உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வெள்ளரிக்காய்<><>தைரியமாக சொல்லுங்க: ”தொட்டுக்க ஒரு டபுள் ஆம்லெட் போடுங்க.. மனையாளே!”<><>புற்று நோய் பற்றிய விழிப்புணர்வும் விரிவான தகவல்களும்!<><>விஷ ஜந்துக்கள் கடித்து விட்ட‌தா? என்ன முதலுதவி செய்யலாம்? தெரிந்து கொள்ளுங்கள்…<><>மாரடைப்பைத் தடுக்கும் ரத்தப் பரிசோதனை <><>பகலில் தூங்காதீங்க மன அழுத்தம் வரும் – ஆய்வில் தகவல் <><>சிறு தானியங்களின் மருத்துவக் குணங்கள்!<><>சீரகத்தின் குணங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.<><>மன அழுத்தத்தை போக்கும் வாழை இலை! <><>ரத்த சோகையை தடுக்கும் வழிகள்<><>தூங்காமல அவதிப் படுகிறீர்களா! <><>இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம்! ஆய்வு தகவல்!<><>குழந்தை பெற்ற பின்னும் உடல் சிக்கென்று இருக்க<><>மார்பகப் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு தரும் வைட்டமின் C! <><>கிராம்பின் மருத்துவ குணங்கள்! <><> இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது வேர்க்கடலை<><>அல்சர் இருக்கா கவனம் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்! <><>புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களா நீங்கள்? நிறுத்த 7 வழிகள்!<><>அதிகாலையில் தண்ணீர் பருகுங்கள் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும்.<><>நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!!<><>பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்குமாம்... உங்களுக்குத் தெரியுமா?<><>குழந்தை வேண்டுமா? மணல்தக்காளி சாப்பிடுங்கள்!<><>சில நோய்களுக்கான அறிகுறிகளும் தப்பிக்கும் வழிகளும்.. <><>நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செக்ஸ் : ஆய்வில் நிரூபணம்<><>செக்ஸ் வாழ்க்கையில ஈடுபட முடியலையே!<><>மாரடைப்பு <>

ஞாயிறு, 17 மார்ச், 2013

முகவாத நோய்


 

முகவாத நோய் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நரம்பு Facial Nerve எனப்படும். உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முகத்தசைகளை இயக்கக் கூடிய பணியைச் செய்யும் இந்த ஏழாவது கபால நரம்பு (Seventh Cranial Nerve or Facial Nerve) மூளையின் தண்டுப்பகுதியிலிருந்து புறப்பட்டு காதின் உட்புறம் இருக்கும் சிறு குழாயின் (Stylomastoid Canal) மிகவும் குறுகிய பகுதி வழியாக கபாலத்தை விட்டு வெளியேறி, முகத்திலுள்ள தசைகளுக்கு வந்து சேருகிறது.


முகத்திற்கு வந்ததும் ஐந்து கிளைகளாகப் பிரிந்து முகத்தசைகள், கண்ணீர் சுரப்பிகள், உமிழ் நீர் சுரப்பிகள், நாக்கு, உள்காது ஆகியவற்றில் உள்ள தசைகளை இயக்குகிறது. இந்த நரம்பு பாதிக்கப்படும் போது இந்த தசைகளின் இயக்கங்கள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன.

முகவாத நோய்க்கான காரணங்கள் இரண்டு.

1. சில்லென்ற குளிர்காற்று. குளிர்காலங்களில் இரவுப் பயணத்தின் போது, கார், ரயில், இரண்டு சக்கர வாகனங்களில் காதுகளை மூடாமல் செல்வதாலும் அல்லது இரவு நேரங்களில் திறந்த வெளியில் படுத்து உறங்குவதாலும் இந்த நோய் பாதிப்பு ஏற்படலாம்.

2. Herpes Zoster என்ற வைரஸ் நோய்த் தாக்கம். சிறுவயதில் சிற்றம்மை பாதிக்கப்பட்டிருந்தால், அம்மை குறைந்த பின்னும், வைரஸ் கபாலத்தின் உள்ளே, Gasserian ganglion என்னும் பகுதியில் தேங்கியிருக்கும். வேறு சந்தர்ப்பத்தில் உடல் நலக் குறைவின்போது, இந்த வைரஸ் வீறுகொண்டு தாக்கும். அப்பொழுதும் முகவாத நோய் ஏற்படலாம்.

திறந்த வெளியில் தூங்கி காலையில் எழுந்திருக்கும் போது, குளிரினால்  காதுக்குள் உள்ள நரம்புகள் பாதிப்படைவதாலும் முகத்தில் ஏதேனும் ஒரு பக்க தசைகள் செயலிழந்து விடும். இதனால் வருவது தான் முகவாத நோய். இந்த நோய்க்கு "பெல்ஸ் பால்சி" (Bell's Palsy) என்று பெயர். இந்த நோய் இருபாலருக்கும், எந்த வயதிலும் வரலாம்.

முகவாத நோயின் அறிகுறிகள்:

இந்த பாதிப்பு முகத்தின் ஒரு பக்கத்தில்தான் வரும்.

முதலில் காதின் முன்புறம் அல்லது பின்புறம் வலி தோன்றும்.

நோய் பாதிப்புள்ள பக்கத்தின் மறுபக்கமாக வாய் கோணிக் கொள்ளும்.

பாதிக்கப்பட்ட பக்கம் மதமதப்பாக இருப்பதாக நோயாளிகள் உணர்ந்தாலும், அப்பகுதியில் தொடு உணர்ச்சி குறைவதில்லை.

உணவு சாப்பிட்டால் அல்லது பானங்கள் அருந்தினால் பாதிக்கப்பட்ட பக்கத்தில் ஒழுகும்.

உணவை மெல்லும் போது அது பாதிக்கப்பட்ட பகுதியில் பற்களுக்கும், கன்னத்திற்கும் இடையில் தங்கிக் கொள்ளும்.

நாக்கில் சுவை தெரியாது.

சிலருக்கு தலைவலி, தலைச்சுற்றல் ஏற்படும்.

Herpes Zoster வைரஸ் காரணமாக முகவாத நோய் வருபவர்களுக்கு வலியுடன் கூடிய சிறு சிறு கொப்பளங்கள் காதின் உட்பகுதியிலும், வெளியிலும் ஏற்படலாம். 

கண்ணிமைகள் தளர்ந்து, கண் பாதி திறந்த நிலையில் இருக்கும். உறங்கும் போது கூட கண்ணை முழுவதுமாக மூட முடியாது. இதனால் கண்ணின் கருவிழி எனப்படும் Cornea ஈரத்தன்மை உலர்ந்து கண் எரிச்சல் ஏற்படும். இது Exposure Keratitis எனப்படும்.

முகவாத நோய்க்கு மருத்துவம்:

ஆரம்ப நிலையில் காதின் முன்புறம் அல்லது பின்புறம் தோன்றும் வலிக்கு நிவாரணமாக ஆஸ்பிரின் 500 மி.கி மாத்திரை 3 வேளை 2 நாட்களுக்கு சாப்பிடலாம்.

வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் இது வருவதால் வைரஸ் கிருமிகளை ஒழிக்கும் Acyclovir மாத்திரைகள் இதற்குத் தரப்படும்.

இவற்றுடன் ஸ்டீராய்டு மாத்திரைகளும் ஒரு சில நாட்கள் மட்டுமே தரலாம்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது Physiotherapy.

மருந்து மற்றும் Physiotherapy யினால் 3- 4 வாரங்களில் குணமாக ஆரம்பித்து, 3- 6 மாதங்களில் முழுதும் குணமாகலாம்.

பாதிக்கப்பட்ட பக்கத்தில் உள்ள கண்ணின் இமைகளை முழுவதும் மூட முடியாமல் போகும் நேரங்களில், கண்ணின் கருவிழியில் புண் (Exposure Keratitis) ஏற்படலாம். கண்ணைப் பாதுகாக்க தூங்கும்போது சிறு plaster  வைத்து மேல் இமையை கன்னத்தின் பக்கத்தில் ஒட்டிக் கொள்ளலாம்.

Ciprofloxin antibiotic Eye Ointment  2 வேளை கண்ணுக்கு போடலாம்.

இரண்டு காதுகளையும் குளிரிலிருந்து பாதுகாக்க கம்பளித் துண்டு அல்லது குல்லா அணியலாம்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாமதமின்றி பொதுநல மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் மற்றும் கண் மருத்துவரை கலந்து ஆலோசனை பெறுவது அவசியம்.

- வ.க.கன்னியப்பன் ( doctorvkk@yahoo.com இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )


keetru thanks

1 கருத்து:

  1. Dear sir,
    im suffering with stroke(pakkavatham)(left Hemiplegia) since one year.my left leg and hand has been disabled. plesae help me for recovery...
    for my recovery im struggling since one year physically and financially
    name: saravanan
    Age:32
    Place: Hosur , tamilnadu,india
    whatsapp: +91 9500964277
    e mail- ssaravanan2004@gmail.com

    பதிலளிநீக்கு