WELCOME TO OUR HOME PAGE அப்பாக்குட்டி மருத்துவம் <>தற்போதைய செய்திகள்:........சூடாக ஒரு கப் டீ<><>கருசிதைவு சில அறிகுறிகள்<><>இயற்கை வயாகரா முருங்கை பற்றி உங்களுக்கு தெரிந்ததும்... தெரியாததும்.<><>கர்ப்பப் பை பலம் அடைய உழுத்தங்களி சாப்பிடுங்க..!<><>பெண்கள் பயன்படுத்தும் “நாப்கின்” ஆல் உடல் நலத்திற்கு கேடு! ஆய்வில் அதிர்ச்சி தகவல்! »<><>குளிர் நீரை விட சுடு நீர் தான் பெஸ்ட்! லேட்டஸ்ட் தகவல்!<><>அதுல கிரேட்டா இருக்கணுமா? சில உணவுகளை சாப்பிடாதீங்க!<><>தூக்கம் குறைந்தால் கேன்சர் தாக்கும் : டாக்டர்கள் எச்சரிக்கை<><>மன உளைச்சலா, மாரடைப்பா? தலைமுடியை ஆராய்ந்தால் உடல்கண்டிஷன்தெரியும்<><>ஆஸ்டியோபொரோசிஸ் எனும் அசுரப் பிரச்னை<><>பக்கவாதம் என்றும் பாhpசவாயு என்றும் கூறப்படும் கை, கால், முகம், வாய் போன்றவற்றின் செயலிழப்பு எல்லா வயதினரையும்...;குட்டீஸ்க்கு மூக்கில் ஒழுகுதா? வீட்டு மருந்து கொடுங்க!<><>பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துணவுகள்!<><>பட்டினி கிடந்தா உடல் மெலியாதா?<><>வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்<><>;ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு <><>இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்‏<><>தொண்டையில் கழலை இல்லை, தைரொயிட் நோயா ?<><>நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்<><>ஹாய் நலமா-2 மூட்டு வலிகளா?‏<><>முட்டையின் மகத்துவம் - ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு<><>தூக்கம் இல்லாத பிரச்சனைக்கு சிறந்த மருந்து சப்போட்டா பழம்! <><>17 குணங்கள் கொண்ட‌ வெற்றிலை<><>குழந்தை மருத்துவம்: 3 முதல் 8 வயது வரை..<><>உடற்பயிற்சியின்றி அதிகரிக்கும் மரணங்கள்.<><>அல்சரை குறைக்க மன அமைதி தேவை.<><>புற்றுநோய் என்ன செய்யும்?, மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? : 3டி அனிமேஷனின் பதில் <><>பசுவின் பால், குழந்தைகளுக்கு நல்லதல்ல - அதிர்ச்சி தகவல்<><>தூக்கம் இன்றி 15 கோடி இளைஞர்கள் தவிப்பு<><>முகப்பரு மறைய<><>தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க!<><>சிறுநீரகக்கல் இருக்கா? கவலையை விடுங்க...<><>ஏலக்காய்’ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா!! <><>ஹீமோகுளோபின் அதிகரிக்க வழிகள்<><>மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி!<><>தைராய்டு பற்றிய விழிப்புணர்வும் அவற்றுக்கான தீர்வும்!<><>வயாக்கிராவுக்கு பதில் மாதுளம்பழம்!<><> உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வெள்ளரிக்காய்<><>தைரியமாக சொல்லுங்க: ”தொட்டுக்க ஒரு டபுள் ஆம்லெட் போடுங்க.. மனையாளே!”<><>புற்று நோய் பற்றிய விழிப்புணர்வும் விரிவான தகவல்களும்!<><>விஷ ஜந்துக்கள் கடித்து விட்ட‌தா? என்ன முதலுதவி செய்யலாம்? தெரிந்து கொள்ளுங்கள்…<><>மாரடைப்பைத் தடுக்கும் ரத்தப் பரிசோதனை <><>பகலில் தூங்காதீங்க மன அழுத்தம் வரும் – ஆய்வில் தகவல் <><>சிறு தானியங்களின் மருத்துவக் குணங்கள்!<><>சீரகத்தின் குணங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.<><>மன அழுத்தத்தை போக்கும் வாழை இலை! <><>ரத்த சோகையை தடுக்கும் வழிகள்<><>தூங்காமல அவதிப் படுகிறீர்களா! <><>இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம்! ஆய்வு தகவல்!<><>குழந்தை பெற்ற பின்னும் உடல் சிக்கென்று இருக்க<><>மார்பகப் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு தரும் வைட்டமின் C! <><>கிராம்பின் மருத்துவ குணங்கள்! <><> இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது வேர்க்கடலை<><>அல்சர் இருக்கா கவனம் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்! <><>புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களா நீங்கள்? நிறுத்த 7 வழிகள்!<><>அதிகாலையில் தண்ணீர் பருகுங்கள் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும்.<><>நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!!<><>பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்குமாம்... உங்களுக்குத் தெரியுமா?<><>குழந்தை வேண்டுமா? மணல்தக்காளி சாப்பிடுங்கள்!<><>சில நோய்களுக்கான அறிகுறிகளும் தப்பிக்கும் வழிகளும்.. <><>நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செக்ஸ் : ஆய்வில் நிரூபணம்<><>செக்ஸ் வாழ்க்கையில ஈடுபட முடியலையே!<><>மாரடைப்பு <>

வியாழன், 22 மார்ச், 2012

ஆடாதோடை இலையும் அதன் மருத்துவ குணமும்!



Feb 16, 2012

ஆடாதோடை இலையும் அதன் மருத்துவ குணமும்!

ஆடாதோடை இதன் முருத்துவ பெயர் ( Adhatoda zeylanica) ஆகும். இது சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் வளரும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும்.  ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என அழைக்கப்படுகிறது.

உடலில் தசைப்பகுதிகளில் ஏற்ப்படும் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள்
இதில் இருக்கும் வாசிசின் என்னும் வேதிப்பொருள்  நுரையீரல் செல்களில் புகுந்து வேலை செய்து விரிவடைய செய்வதால் ஆஸ்த்மா, நாட்பட்ட இருமல், சளி போன்ற நோய்களை இது குணப்படுத்துகிறது.

Feb 11, 2012

ஆளை மயக்கும் அதிசய கீரை!

அகத்தி கீரை: இதன் தாவரவியல் பெயர் (Sesbania grandiflora) என்பதாகும். ரத்த கொதிப்பு கட்டுபடுத்தும், பித்தத்தை போக்கும்.

இளந்தாய்மார்கள் அகத்தி கீரையை அடிக்கடி சாப்பிட்டால் நிறைய பால் சுரக்கும். கண் எரிச்சல், கண் வலி, கண்ணில் நீர் வடிதல் ஆகிய நோய்களுக்கு அகத்திப்பூவை கண்ணில் வைத்து கட்டிக்கொண்டால் சரியாகும்.

வைசூரி போன்ற நோய் குணமாக அகத்தி பட்டையை தண்ணீரில் காய்ச்சி வடித்துக் குடிநீராக குடிக்கலாம் அகத்தி கீரையை அடிக்கடி சேர்த்து கொண்டால் எலும்பும், பல்லும் உறுதியாகும். இந்த கீரையின் சாறில் 2 சொட்டு எடுத்து நமது மூக்கில் விட்டால் ஜுரம் போய்விடும். வாய்ப்புண், குடல்புண், தொண்டைப்புண் ஆகிறவற்றை இது நீக்கும்.

Jan 13, 2012

ஆண்மையை பெருக்கும் அதிசய "வயாகரா"!

ஆண்மையை  குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகை வேர்தான் அஸ்வகந்தா என்று அழைக்கப்படும் அமுக்கிரா கிழங்கு ஆகும்.  

ஆண்குறின் இரத்த ஒட்டத்தை பெருக்கி உடலுறவின் போது அதீத உத்வேகத்தைத் தரும். இது சீமை அமுக்கிரா, நாட்டு அமுக்கிரா என்று இரண்டு வகைப்படும். 

இதில் சீமை அமுக்கிரா கிழங்கு ஆண்கள் உடலுறவு கொள்ளும் போது அதிக நேரம் தாக்குப்பிடிக்க இது உதவுகிறது. இதை ஒரு மூலிகை  "வயாக்ரா"  சொன்னால் அது மிகையாகாது.

Dec 28, 2011

குழந்தை வேண்டுமா? மணல்தக்காளி சாப்பிடுங்கள்!

மணல் தக்காளி எண்ணற்ற சத்துக்களை தன்னுள்ளே கொண்ட ஒரு தாவரமாகும்.  இது மிளகு தக்காளி எனவும்  கிராமங்களில் சுக்குட்டிக் கீரை எனவும் அழைக்கப்படுகிறது.

இதன் பயன்கள்:  
1) தசைகளுக்குப் பலம் சேர்க்கும், கண்பார்வையை தெளிவாக்கும்,  தலைவலி, தோல் நோய் முதலியவற்றைக் குணப்படுத்தி மனநலவளத்தை அதிகரிக்கும்.

2) சிறுநீர்ப் போக்கினைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். நெஞ்சுப்பை எரிச்சலை அகற்ற வல்லது. சீதபேதிக்கு மாற்றாகும். செடியின் சாறு கல்லீரல், கணையத்தின் வீக்கம், மூலநோய், பால்வினைநோய், நீர்க் கோர்வை ஆகியவற்றினை குணப்படுத்தும்.

3) மலர்கள் இருமல் மற்றும் சளிக்கு மருந்தாகும். கனிகள் இதய நோய்களுக்கு மருந்தாக உதவுகின்றன. இலைகள் வீக்கமடைந்த விந்துப்பை வலியை அகற்றவல்லது. இலையின் பசை மூட்டு வலிக்கு பற்றாக பயன்படுகிறது. விழிப் படலத்தினை விரிவடையச் செய்யும் தன்மை கொண்டது.

4) உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும். அவற்றைக் குணப்படுத்தியும் விடும். தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம். உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப்பெறலாம்.

5) நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்த வேண்டும். சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும். மணத்தக்காளிப் பழத்தை பேதி மருந்தாக சாப்பிடலாம்.

6) கீரையின் சாறு வயிற்றுப் பொருமல், பெருங்குடல் வீக்கம், வயிற்றுப் புண், வயிற்று வலி, குடல் புண், நாக்குப் புண், மூல வியாதி முதலியவற்றை விரைந்து குணமாக்கும்.மலச்சிக்கலை விரைந்து குணமாக்கும். இக்கீரையை பச்சையாக மென்றும் சாப்பிடலாம். மஞ்சள் காமாலையை இக்கீரையின் சாறு குணமாக்குகிறது.

7) இக்கீரையை சாப்பிட்டால் உடலுக்கு அழகு கூடும். இதயத்திற்கு வலிமை அதிகரிக்கும். வயிற்றுப் போக்கு, காய்ச்சல், குடல்புண் முதலியவற்றிற்கு உணவு மருந்தாகவும் இக்கீரை பயன்படுகிறது. இரவு நேரங்களில் இக்கீரையை உணவுடன் உண்டால் தூக்கத்தை கொடுக்கவல்ல தூக்க மாத்திரையாகவும் செயல்படும்.

8) மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும். பழத்தில் உள்ள ஒரு வித காடிப்பொருள் செரிமானச் சக்தியைத் துரிதப்படுத்திப் பசியின்மையைப் போக்கிவிடுகிறது. ஆஸ்துமா நோயாளிகள் காசநோயாளிகளும் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது.

9) இப்பழம் உடனே கருதரிக்கச் செய்யும். உருவான கரு வலிமை பெறவும் இப்பழம் பயன்படுகிறது. புதுமணத்தம்பதிகள் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள இப்பழம் போதும். குழந்தை ஆரோக்கியமாய் உருவாகிப் பிரசவமாக இப்பழம் பெரிதும் உதவுகிறது. பிரசவம் எளிதாக நடைபெறவும் பயன்படுகிறது. ஆண்களுக்கு விந்து உற்பத்தியை அதிகரித்து குழந்தை பேரை உண்டாக்குகிறது.

Aug 27, 2011

கிரீன் டீ புற்று நோய்க்கு அருமருந்து!

கிரீன் டீக்கு பச்சைக் கொடி காட்டியவர் சீன நாட்டு மன்னராக இருந்த ஷென் நங்தான். புதிதாகப் பறிக்கப்பட்ட பச்சைத் தேயிலை இலைகளை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்தபோது கருஞ்சிவப்பு நிறத்தில் திரவம் வெளிப்பட்டது.

அதைக் குடித்த நங் தாங்கமுடியாத உற்சாகத்தால் குதிக்க ஆரம்பித்துவிட்டார்.  அந்த ஆட்டத்திலிருந்து தொடங்கியதுதான் கீரின் டீயின் வரலாறு. சாயா என்ற வார்த்தைக்கும் சொந்தக்காரர்கள் சீனர்கள்தான். "சா' என்ற சொல்லிலிருந்தே சாயா.

பச்சைத்தேயிலை சாயாவுக்குத் தொடக்கம் சீனாவாக இருந்தாலும், அது எல்லா இடங்களுக்கும் பரவி பச்சைத் தேயிலை உற்பத்தியில் ஒவ்வொரு நாடும் போட்டி போடுகிற நிலைக்குக் கொண்டுபோய்விட்டது.  இதன் வரிசையில் மலை மாவட்டமான நீலகிரியில் பிரதானத் தொழிலான தேயிலைத் தொழிலில் முதலிடத்தில் இருப்பது பசுந்தேயிலை. அதேபோல, தேயிலை வர்த்தகத்தில் முதலிடத்தில் இருப்பது பச்சைத்தேயிலை.

பசுந்தேயிலை என்பது தேயிலைத்தூள் உற்பத்திக்காக தேயிலைச் செடிகளிலிருந்து பறிக்கப்படும் கொழுந்து. இதைப் பல்வேறு வகைகளில் பதப்படுத்தி தேயிலைத்தூளாகத் தயாரிக்கப்படும். ஆனால், பச்சைத் தேயிலை என்பது தேயிலைச் செடிகளிலிருந்து பறிக்கும் கொழுந்தை அப்படியே உலர வைத்து பின்னர் பயன்படுத்துவது.  பச்சைத்தேயிலை அதிக அளவில் உபயோகப்படுத்துவதால் ஏற்படும் பயன் என்ன தெரியுமா?

புற்று நோய்க்கு அருமருந்து. கலிபோர்னியாவிலுள்ள ஜான் வெயின்ஸ் புற்றுநோய் மையத்தில் ஆராய்ச்சிப் பிரிவில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த டி.எஸ்.சரவணன் மேற்கொண்ட கிரீன் டீ குறித்த ஒரு ஆராய்ச்சியில் இது தெரியவந்துள்ளது. ""கிரீன் டீயிலுள்ள இஜிசிஜி எனப்படும் (Epi Gallo Catechin Gallate) பொருள் மிகச்சிறந்த மருத்துவ நிவாரணி என்பதால் புற்றுநோயைக் குணப்படுத்துவதில் இதன் பங்கு பிரதானமானது.

மார்பகப் புற்று நோய்க்கும், கல்லீரல் புற்றுநோய்க்கும் மிகச்சிறந்த மருந்து பொருளாகவும் கிரீன் டீ பயன்படுகிறது. புற்றுநோய்க்குக் காரணமான செல்களை வளரவிடாமல் தடுப்பதே இதன் முக்கிய வேலை.  இந்தப் பச்சைத் தேயிலையை சீனர்களும், ஜப்பானியர்களும் மட்டுமே அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் உலகளவில் மற்ற நாட்டினரைவிட புற்றுநோய்க்கு ஆளாவது சீனாவிலும் ஜப்பானிலும் மிகவும் குறைவு. 

சீன போர்ப்படை வீரர்கள் யுத்தத்திற்குச் செல்வதற்கு முன்னர் கிரீன் டீயைப் பருகிவிட்டுத்தான் போர்க்களத்திற்கே செல்வார்களாம். அந்த அளவிற்கு இது வலிமை மிக்க பொருளாகவும் கருதப்பட்டு வந்தது. கிரீன் டீ பருகுவதால் தோல் விரைவில் சுருக்கமடையாது என்பதோடு, இளமையுடனும், வனப்புடனும் காணப்படுவதற்கு இதுவே முக்கிய காரணமென்பதே சீனர்களின் வாதம். அத்துடன் கிரீன் டீயில் இயற்கையாகவே புளோரைடு எனப்படும் பொருள் அமைந்துள்ளது.

பற்பசைகளில் புளோரைடுக்காக கூடுதல் விலையைக் கொடுத்து வாங்கும் நிலையில் இயற்கையாகவே கிரீன் டீயில் புளோரைடு அமைந்துள்ளதால் இது பற்களுக்கும் பாதுகாப்பானதாகும். உடலில் உணவுப்பொருள் ஜீரணத்திற்கு முக்கியமானதான கிரீன் டீயில் உள்ள டாக்சிஜன்ட் தன்மை, குடலிலுள்ள சிறு துகள்களைக்கூட அகற்றும் வல்லமை கொண்டதாகும்'' என்கிறார் சரவணன். சீனாவிலிருந்து சென்ற புத்தமதத் துறவிகளால் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட தேயிலை பின்னர் இங்கிலாந்திற்குக் கொண்டு சென்று பயிரிடப்பட்டது.

அங்கு பகல் உணவின்போது பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை குடிக்கும் டீயை ஹை டீ எனவும், மற்ற நேரங்களில் களைப்பிற்காகவும், புத்துணர்வுக்காகவும் குடிக்கும் டீயை லோ டீ எனவும் அழைக்கிறார்கள். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் 1610ம் ஆண்டுகளில் தேநீர் என்பது பணக்காரர்களின் பானமாகவே கருதப்பட்டது. அப்போது 1 பவுண்டு தேயிலை 100 டாலருக்கு விற்கப்பட்டதாக வரலாறே உள்ளது.

Jul 13, 2011

குறட்டையா இனி கவலைப்படாதீங்கள்!

JULAY 14, மனிதர்கள் விடும் குறட்டை குறித்தும், அதை தடுப்பது பற்றியும் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர். சாதாரண மனிதர்களிடமும், நோயாளிகளிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மூச்சு விடுதலில் ஏற்படும் சிரமங்கள் தான் குறட்டையாக வெளி வருகிறது.

இந்த பிரச்சினை உள்ளவர் ஒரு இரவில் அதிகபட்சமாக 100 தடவை குறட்டை விட வாய்ப்பு உள்ளது என்றும், ஒவ்வொரு குறட்டையும் 10 வினாடிகள் வரை நீடிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நோயாளிகளை தான் குறட்டை அதிகமாக பாதிக்கிறது என்றும், அவர்களது ஆழ்ந்த தூக்கத்தை இது கெடுக்கிறது என்றும் தெரிய வந்துள்ளது.

ஆராய்ச்சியை தொடர்ந்து குறட்டையை தடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். அதன் விளைவாக பிளாஸ்திரி போன்ற புதிய உபகரணம் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த பிளாஸ்திரியை உதட்டில் ஒட்டிக்கொண்டால் மூச்சு விடுவது சீராகி, குறட்டை விடுவது தடுக்கப்படுகிறது.

தூங்கப்போகும் முன்பு, மேல் உதட்டில் இந்த பிளாஸ்திரியை ஒட்டிக்கொள்ள வேண்டும். இடையில் பேசிக்கொண்ட இருந்தாலும், பிளாஸ்திரியால் சிரமம் இருக்காது. இந்த பிளாஸ்திரி இன்னும் சில சோதனைக்கு பிறகு சந்தைக்கு வரவிருக்கிறது.

தற்போது இந்த புதிய பிளாஸ்திரி உபகரணம், அமெரிக்காவில் உள்ள மயோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் 125 பேருக்கு பொருத்தி சோதித்து பார்க்கப்பட்டு வருகிறது.  ஆரம்ப கட்ட சோதனை யிலேயே இந்த பிளாஸ்திரி உபகரணம் நல்ல பலனை அளித்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். முழுமையான பரிசோதனைக்கு பிறகே இந்த உபகரணம் வெளிச்சந்தைக்கு அனுப்பப்பட உள்ளது.

Jul 8, 2011

பெண்கள் 7 மணி நேரம் தூங்கவேண்டும்! ஆய்வில் புதிய தகவல்!

JULY 09, லண்டன் : "பெண்கள் தினமும் இரவில் ஏழு மணி நேரம் தூங்குவது அவசியம். இல்லையெனில், கண்கள் சோர்ந்து, உடல் நிலையைப் பாதிக்கும்' என, ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள வார்விக் பல்கலைக் கழக மருத்துவ ஆய்வாளர்கள், தூக்கத்தின் அவசியம் குறித்து ஆய்வு செய்தனர்.

பெண்கள் தினசரி இரவில் ஏழு மணி நேரம் தூங்குவது அவசியம். இல்லையெனில், அவர்களின் கண்கள் சோர்ந்து, உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், இது ஆண்களுக்கு பொருந்தாது. குறைந்த நேர தூக்கம், குறைந்த வயதிலேயே இறப்பை ஏற்படுத்தவும் வாய்ப்பு உண்டு. ஆண், பெண் இருபாலருக்கும் தூக்கத்தில் வேறுபாடு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு உள்ளதா என்று ஆய்வு செய்தோம்.

தினசரி இரவில் ஏழு மணி நேரம் தூங்கும் பெண்களை விட,  ஐந்து மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கிறது. போதிய தூக்கம் இல்லாத பெண்கள், உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் ஆண்களை விட அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

பெண்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கும், போதிய தூக்கமின்மைக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆனால், இது போன்ற நெருங்கிய தொடர்பு ஆண்களிடம் காணப்படவில்லை.  ஆழ்ந்த தூக்கத்திற்கு இடைஞ்சலை ஏற்படுத்துவதில் இரைச்சல் முதலிடமும், குழந்தையின் அழுகை இரண்டாமிடமும் பெறுகின்றன.

Jul 6, 2011

ஸ்ட்ராபெரியும் அதன் மருத்துவக்குணமும்!!

ஜூலை 07, வாஷிங்டன்:  தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியம் ஏற்படாது என கூறுவதுண்டு.

அதாவது, ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். ஆனால், இந்த விஷயத்தில் ஸ்ட்ராபெரி பழம் ஆப்பிளையே மிஞ்சும் என்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் சால்க் இன்ஸ்டிடியூட்டின் செல்லுலர் நியூராலஜி ஆய்வகம் (சிஎப்எல்) எலிகளை வைத்து ஒரு ஆய்வை மேற்கொண்டது. ஒரு பிரிவு எலிகளுக்கு ஸ்ட்ராபெரி பழம் வழங்கப்பட்டது.

மற்றொரு பிரிவுக்கு வழங்கப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட நாட்கள் கழித்து அவைகளுக்கு உள்ள நோய் எதிர்ப்பு சக்தி பற்றி ஆய்வு பரிசோதிக்கப்பட்டது. இதில், ஸ்ட்ராபெரி பழம் சாப்பிட்ட எலிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி, சாப்பிடாத எலிகளைவிட அதிகமாக இருந்தது தெரியவந்தது.

ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுவது ஆய்வில் உறுதி செய்யப் பட்டுள்ளது. எனவே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் உதவும். இந்த பொருள் வேறு சில பழங்கள், காய்கறிகள், டீ மற்றும் ரெட் ஒயின் ஆகியவற்றில் உள்ளன.

இது சர்க்கரை நோய், புற்று நோயை தடுக்கும் திறன் வாய்ந்தது. இதுதவிர எல்லாவிதமான நோய்களையும் தடுக்கும். தாவரங்களில் இலைகள் மற்றும் பழங்களை பூச்சிகள் தாக்குவதைத் தடுக்கவும் பிளேவனாய்டு உதவுகிறது. இவ்வாறு சிஎப்எல் விஞ்ஞானியும், இந்த ஆய்வின் தலைவருமான பம் மஹர் தெரிவித்தார்.

Jun 29, 2011

ஓரினச்சேர்க்கை (Homosex) ‘எய்ட்ஸ்’ நோய் கடுமையாக பரவுகிறது!

JUNE 30, நியுயார்க் ஜுன் 30,  ‘ஓரினச்சேர்க்கை’ யால் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள் மேற்கத்திய நாடுகளில் கடுமையாக பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் பலவற்றில் கொடுமையான எச்.ஐ. வி கிருமியால் வரும் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களால் ஓரினச்சேர்க்கையில்  ஈடுபடும் இளைஞர் மற்றும் யுவதிகளை கடுமையாக பாதித்து பரவிக் கொண்டிருப்பது சிக்மா எய்ட்ஸ் ஆய்வு குழும ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், மட்டும் கடந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட ஐந்து லட்சத்து ஐம்பத்து ஐயாயிரம் ஓரின சேர்க்கையாளர்கள் எச் ஐ வி / எய்ட்ஸ் நோய் தொற்றுக்கு ஆளாகி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் ஒரு லட்ச்சத்திற்கும் மேற்பட்ட ‘ஓரின சேர்க்கையாளர்கள்’ எய்ட்ஸ் நோய் தோற்றால் இறந்து போனதாக அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள மொத்த எய்ட்ஸ் நோயாளிகளில் 48% சதவீதம் பேர் ‘ஓரினச்சேர்க்கை’ பழக்கத்தால் இந்த நோய்க்கு இலக்காகியுள்ளதாக தெரிகிறது. இதே போன்று இங்கலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ‘ஓரினச்சேர்க்கையால் எய்ட்ஸ் மற்றும் பால்வினை தாக்கியவர்களின் சதவீதம், சாதாரண ஆண் மற்றும் பெண் இடையேயான செக்ஸ் உறவில் இடுபடுபவர்களை விட பல மடங்கு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

அதே வேளை, இவ்வாறான ‘எய்ட்ஸ் மற்றும் பால்வினை’ நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் 53% பேர் 35 வயதுக்கும் குறைவான வயது பிரிவினர் என்ற அதிர்ச்சியளிக்கும் உண்மையும் தெரிய வந்துள்ளது. இது போன்ற உலகெங்கும் பல நாடுகளில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு ‘ஓரினச்செர்க்கையால்’ எய்ட்ஸ் பரவும் அபாயத்தை உறுதி செய்துள்ளது.

குறிப்பாக ‘ஓரினச்சேர்க்கையாளர்கள்’ குறிப்பிடத்தக்க அளவில் பெருகிவரும் லத்தின் அமெரிக்காவில், எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளவகளிடையே நடத்தப்பட்ட ஆய்வில் எய்ட்ஸ் நோய் தோற்று குறித்த இதுவரை வெளிவராத அதிர்ச்சிகரமான பல புதியஉண்மைகள் வெளிவந்துள்ளன.

முதலாவதாக, லத்தீன் அமெரிக்காவில் எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் பரவலுக்கு பிரதான காரணமாக ‘ஓரினச்சேர்க்கை’ விளங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லத்தின் அமெரிக்க நாடுகளில் ‘எய்ட்ஸ் நோயால்’ தாக்கப்பட்டவர்களில் 40% பேர் ‘ஓரினச்சேர்க்கை’ மூலமே நேரடியாக எய்ட்ஸ் நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதை விட மிகவும் மோசமான விடயம் என்னவென்றால், எய்ட்ஸ் பற்றிய சரியான அறிவுள்ள, உயர் கல்வி மற்றும் மருத்துவ துறையில் உள்ள ‘ஓரினச்செர்கையாலர்களிடையே’ நிலவும் ‘எய்ட்ஸ்’ தங்களை தாக்க வாய்ப்பில்லை என்று நிலவும் தவறான நம்பிக்கையாகும்.

இவ்வாறு ‘எய்ட்ஸ்’ தங்களை தாக்க வாய்ப்பில்லை என்று கருதும் ‘உயர் கல்வி, வேலை மற்றும் பொரளாதார’ பிரிவினரிடையே உள்ள ‘ஓரினச்சேர்க்கையில்’ ஈடுபடும் 35% பேருக்கு, எய்ட்ஸ் நோய் தோற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுகளில், ‘ஓரினச்சேர்க்கை’ யில் ஈடுபடுவோரிடையே, எய்ட்ஸ், கிளமீடியா, கோனோரியா மற்றும் பிறப்புறுப்பு ஹெர்பிஸ் ஆகிய நோய் பதிப்பு கடந்த பத்து வருடங்களில் 100% க்கும் மேற்பட்ட அளவில் அதிகமாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Jun 24, 2011

2 வயதுக்கு மேல் புட்டி பால் குடிக்கும் குழந்தைகள் குண்டாகும்!

JUNE 25, வாஷிங்டன்: இரண்டு வயதை கடந்த பிறகும் புட்டி பால் குடிக்கும் குழந்தைகள் 5 வயதுக்கு பிறகு குண்டாவதற்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் டெம்பிள் யுனிவர்சிட்டியில் பொது சுகாதாரம் என்ற தலைப்பில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டுள்ள ரச்சல் கூஸ் தலைமையிலான குழுவினர், சிறு வயது உடல் பருமன் குறித்து 6,750 குழந்தைகளிடம் ஒரு ஆய்வை மேற்கொண்டார். அதன் விவரம்:

ஆய்வில் பங்கேற்றவர்களில் 5ல் 1 குழந்தை 2 வயதான பிறகும் பாட்டிலில் பால் குடிப்பதும், இப்படி நீண்ட காலம் புட்டி பால் குடிப்பவர்களில் 5ல் ஒரு குழந்தையின் உடல் 5 வயதுக்குப் பிறகு பருமானாவதும் தெரியவந்தது. அதேநேரம், 1 வயதுக்குப் பிறகு பாட்டில் பழக்கத்தை கைவிட்ட 6ல் ஒரு குழந்தை மட்டுமே குண்டாவது உறுதி செய்யப்பட்டது.

நீண்ட காலம் பாட்டிலில் பால் குடிக்கும் குழந்தைகளில் 33 சதவீதம் பேருக்கு உடல் பருமனாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே, 2 வயதுக்கு முன்பாக பாட்டில் பழக்கத்தை நிறுத்தி விடுவது நல்லது என கூஸ் தெரிவித்துள்ளார்.

Jun 23, 2011

புற்று நோய்க்கு எலுமிச்சை மூலம் மருந்து! அமெரிக்கா சாதனை!

JUNE 24, கேன்சர் என்னும் புற்றுநோய் அரக்கனுக்கு மருந்தாகிறது எலுமிச்சை. உலகம் முழுவதும் கேன்சருக்கு பலியாவோர் எண்ணிக்கை கொஞ்ச நஞ்சமல்ல.

 இந்த கொடிய வியாதியை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

அமெரிக்காவின் பால்டிமோரில் செயல்பட்டு வரும் ஒரு சுகாதார அமைப்பு தான் இந்த பெருமைக்குரிய கண்டு பிடிப்புக்கு சொந்தக்காரர்கள். தற்போது இந்த வியாதிக்கு உள்ள சிகிச்சைகளில் முக்கியமானது கீமோ தெரபி.

இந்த கீமோ தெரப்பியின் பக்க விளைவுகளையும் தாங்க முடியாத வேதனைகளையும் சொல்ல வேண்டியதில்லை. இதற்கொரு வரப்பிரசாதமாக வந்துள்ளது தான் எலுமிச்சை.

உடலில் நல்ல செல்களுக்கு எந்த விதமான ஆபத்தையும் ஏற்படுத்தாமல், ஆபத்தான செல்கள் மற்றும் கேன்சராக மாறிவிடக்கூடிய கட்டிகளை மட்டுமே அழிக்கும் அபரிமிதமான ஆற்றல் பெற்றது எலுமிச்சை என்கிறது இந்த ஆராய்ச்சி.

கீமோ தெரப்பியைவிட 10 ஆயிரம் மடங்கு ஆற்றல் கொண்டது இந்த எலுமிச்சை என்பது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள ஆச்சரியமான உண்மை. அதுமட்டுமா? ஆபத்தான பாக்டீரியாக்கள், கிருமிகள் மற்றும் காளான்களையும் ஒரு கை பார்க்காமல் விடுவதில்லையாம் இந்த எலுமிச்சை.

இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவது, மன அழுத்தங்களை கட்டுப்படுத்துவது, நரம்பு கோளாறுகளை சரி செய்வது என்று எலுமிச்சையின் மகிமை.... பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

மார்பகம், ப்ராஸ்டேட், கல்லீரல் மற்றும் கணையம் என்று கேன்சர் எங்கிருந்தாலும் அவற்றை அழிக்கும் பணியை சிறப்பாக செய்ய முடியுமாம் எலுமிச்சையால். இத்தகைய சிறப்பு வாய்ந்த எலுமிச்சையின் மருத்துவ குணத்தை பயன்படுத்தி புற்று நோயை அழிக்கும் மருந்துகளை உருவாக்கும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

-உஸ்மான்-

Jun 20, 2011

தினமும் டீ குடித்தால் உடல் குண்டாவதில் இருந்து தப்பிக்கலாம்!

JUNE 21, டோக்யோ : நொறுக்குத் தீனி காரணமாக உடல் பருமனாவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தொடர்ந்து டீ குடித்தால் உடல் பருமனாவதைத் தடுக்க முடியும் என புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

ஜப்பானின் கோப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உடல் பருமனை குறைப்பதற்கான வழிகள் குறித்து எலிகளை வைத்து ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

இந்த எலிகளை மேலும் பல சிறு குழுக்களாக பிரித்து, இவற்றுக்கு 14 வாரங்கள் வரை தொடர்ந்து தண்ணீர், பிளாக் டீ அல்லது கிரீன் டீ கொடுத்தனர். பின்னர் அந்த எலிகளை ஆய்வு செய்ததில், இரண்டு வகையான டீ குடித்த எலிகளின் உடல் பருமன் குறைந்திருந்தது. மேலும் வயிற்று பகுதியில் தேவையற்ற சதை வளர்வதற்கு உதவும் கொழுப்பு சத்தையும் இந்த டீ கரைத்து விடுவது ஆய்வில் தெரியவந்தது.

அதிக கொழுப்புச் சத்துள்ள உணவால் ரத்தத்தில் கலந்துள்ள, கொலஸ்ட்ரால், உயர் ரத்த குளுக்கோஸ் உள்ளிட்ட உடல் நலனை கெடுக்கும் பொருட்களையும் பிளாக் டீ வெளியேற்றி விடுகிறது. 2ம் வகை சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு காரணமாக உள்ள இன்சுலின் பாதிப்பையும் சரிசெய்ய இது உதவும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-உஸ்மான்-

Jun 18, 2011

சிறுநீரகமும் அதை பாதுகாக்கும் முறையும்!

மனித உடலில் உள்ள உறுப்புகளில் மிகவும் இன்றியமையாதது சிறுநீரகம் ஆகும். மனித உடலின் மிக முக்கிய உறுப்பாக செயல்பட்டு, சிறுநீரை பிரித்து வெளியேற்றி, உடலின் தட்ப வெப்பத்தை சீராக வைத்திருப்பதுதான் சிறுநீரகத்தின் வேலை. அவரை விதை வடிவில் இரண்டு சிறுநீரகங்கள் ஒவ்வொரு மனித உடம்பிலும் உள்ளன.

இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரிக்கும் மிக நுண்ணிய சுத்திகரிப்பு உபகரணம்தான் சிறுநீரகம் இந்த சிறுநீரகம் கருவின் நான்காவது மாதத்திலிருந்து அதனுடைய இயக்கத்தை தொடங்கி மனிதனின் மரணம் வரை இடைவிடாது இயங்குகிறது. வயிற்றின் பின் பகுதியில் விலா எலும்பிற்குக் கீழே, பக்கத்திற்கு ஒன்றாக சற்று மேலும் கீழும் இறங்கி காணப்படுகிறது. சிறுநீரகம் சீராக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் சில மணி நேரங்களில் உயிரழப்பு கூட நேரிட வாய்ப்புண்டு.

சிறுநீரகத்தின் செயல்பாடுகள்: இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் இரத்தத்தில் நான்கில் ஒரு பங்கு சிறுநீரகத்திற்கு சுத்திகரிக்க அனுப்பப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 150 லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு அதில் 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரை சிறுநீராக வெளியேறுகிறது.

மீதி அனைத்தும் மீண்டும் இரத்தத்தில் கலந்து விடுகிறது. இதனால் உடலிலுள்ள அனைத்து கழிவுகளும் வெளியேற்றப்படுகின்றன.  இரத்தம் சுத்தமடைகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துதல் மட்டும் சிறுநீரகத்தின் வேலையல்ல. மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளை தூண்டுவதும் சிறுநீரகத்தின் வேலைதான்.

உடலின் திரவ நிலையை சம நிலையில் பராமரிக்கிறது. இரத்த அழுத்தத்தை சம நிலைப்படுத்துகிறது. இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவையான சுரப்பினை சுரக்கச் செய்கிறது. எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை சமப்படுத்தும் தன்மை சிறுநீரகத்திற்கு உண்டு.  அமில, காரத்தன்மைகளையும், சோடியம் பொட்டாசியம், அம்மோனியம் போன்றவற்றை சரிவிகிதத்தில் சமன்செய்யும் பணியையும் சிறுநீரகம் சிறப்பாக செயல்படுத்துகிறது.

நெப்ரான்: இதுவே சிறுநீரகத்தின் முக்கிய வடிகட்டி. இது இரத்தத்தில் உள்ள வேதியல் பொருட்களில், தேவையுள்ள, தேவையில்லாதவற்றை பிரித் தெடுக்கிறது. சிறுநீரகத்தில் இந்த நெப்ரான்கள் பல கோடிகள் உள்ளன. மால்பிஜியன் குழாயின் மூலம் வடிகட்டி மீண்டும் உறிஞ்சி இரத்தத்துடன் கலக்க வைப்பதும், மீதத்தை சிறுநீர் குழாய் வழியாகவும் வெளியேற்றுகிறது.

சிறுநீரகம் சீராக செயல்படவில்லை யென்றால்: இரத்தம் அசுத்தமாகும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிக்கப் படும். தண்ணீர், யூரியா, சோடியம் மற்றும் வேதிப் பொருட்களின் சமநிலை பாதிக்கப்பட்டு, உடலின் அக, புற அமைப்பில் மாற்றங்கள் உண்டாகும். மூச்சுத் திணறல், நினைவிழத்தல் இரத்தக் கொதிப்பு ஆகியவை உண்டாகும்.

சிறுநீரகம் சரியாக செயல்படாததால் ஏற்படும் அறிகுறிகள்:  யூரியா மற்றும் வேதிப் பொருட்கள் அதிகளவில் இரத்தத்தில் கலந்துவிடுவதால் சிறுநீர் சரியாக பிரியாது. சிறுநீர் சரிவர பிரியாததால் மூச்சுத் திணறல், அதிக இருமல், நெஞ்சுவலி, சளியில் இரத்தம் வருதல், விக்கல், பசியின்மை, இரத்த வாந்தி, நினைவிழத்தல், குழப்பம், கை நடுக்கம், நரம்பு தளர்ச்சி, தோல் வறண்டு அரிப்பு ஏற்படுதல் போன்ற ஒருசில அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

சிறுநீரகம் யாருக்கு அதிகம் பாதிப்படையும்: சிலருக்கு பிறக்கும்போதே சிறுநீரகம் சிறுத்து காணப்படும். பரம்பரையாகவும், பாதிக்கப் படலாம். இரத்தக் கொதிப்பு, பாம்புக்கடி, கதண்டு வண்டுக்கடி, மலேரியா, உயிர்க்கொல்லி மருந்து உட்கொண்டவர்கள், வயிற்றுப் போக்கு அடிக்கடி உள்ளவர்கள், பிரசவ காலங்களில் உண்டாகும் இரத்தப்போக்கு, அடிக்கடி கருக்கலைப்பு செய்பவர்களுக்கும், நீர் அதிகம் அருந்தாதவர் களுக்கும், மது போதை பொருட்கள் உட் கொள்பவர்களுக்கும், அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்துபவர்களுக்கும், உடல் பயிற்சியில்லாதவர்களுக்கும் சிறுநீரகம் பாதிக்க வாய்ப்புண்டு.

சிறுநீரகத்தைக் காக்க:
*  உடல் பருமன் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

*  புகைப் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். மது, போதை பழக்கம் இருக்கக் கூடாது.

*  அடிக்கடி வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

*   எளிதில் சீரணமாகும் உணவுகளை உட் கொள்வது நல்லது. சிறுநீரை அடக்குதல் கூடாது.

*   தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நல்லது.

*   வாழைத்தண்டு, முள்ளங்கி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பொதுவாக வாழைத்தண்டு, 3 விரலளவு எடுத்து அதனுடன் சின்ன வெங்காயம் 4, சீரகம் 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி, நல்ல மிளகு 4, பூண்டு பல் 4, கொத்துமல்லி இலை தேவையான அளவு, கறிவேப்பிலை 20 இலை, இலவங்கப்பட்டை 2 கிராம் எடுத்து 3 குவளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 1 குவளை அளவு வந்தபின் எடுத்து காலை மாலை இருவேளை என வாரத்தில் 2 நாட்கள் அருந்தி வந்தால் சிறுநீரகக் கோளாறுகளை தவிர்க்கலாம். இது பக்க விளைவில்லாத மருந்தாகும். கழிவு நீக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் சிறுநீரகங்களை பாதுகாக்க மேற்கண்ட நடை முறைகளை பின்பற்றுவது நல்லது.
-உஸ்மான்-

Jun 15, 2011

எலுமிச்சை பழம் அதிசய சக்திகளை கொண்ட மூலிகை மருந்து!!

எலுமிச்சம் பழத்தின் தாயகம் இந்தியா. எலுமிச்சம் பழத்தை அன்றாட உணவோடு ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வந்தால் ஜீரண சக்தி அதிகமாகும். நல்ல பசியும் எடுக்கும். விரல் முனையில் தோன்றும் உகிர் சுற்று நோய்க்கு எலுமிச்சம் பழத்தை விரல் முனையில் செருகி வைப்பதுண்டு.

முற்றிய சொறி, கரப்பான் நோய்களுக்கு எலுமிச்சம் பழத்தைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல குணம் தெரியும். எலுமிச்சை ஊறுகாய் மண்ணீரல் வீக்கத்துக்கு நல்லது. காய்ச்சல், அழற்சி, கீல் வாதம், சீத பேதி, வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் இது மருந்தாக உதவுகிறது.

எலுமிச்சையைக் கொண்டு பல அழகு சாதனைங்களைத் தயாரிக்கலாம். எலுமிச்சைத் தோல் மாடுகளுக்கான சத்துள்ள தீவனமாகவும் உபயோகிக்கப்படுகிறது. எலுமிச்சம் பழம் மூலம் வைட்டமின்சி சத்தினை எளிதாகப் பெறமுடியும் என்று அறிந்த மேலை நாட்டு மக்கள் அன்றாடம் ஏதாவது ஒரு விதத்தில் எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

எலுமிச்சம்பழத்தை எந்தப் பருவத்தில் எந்த நேரத்தில் சாப்பிட்டாலும் உடலுக்கு ஒத்துகொள்ளும் தன்மை உடையாது அதனால்தான் வெளிநாடுகளில் இதை மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். பச்சைக் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் மேலை நாட்டில் இருந்து வருகிறது. அதிகரித்தும் வருகிறது. பச்சைக் காய்கறிகளுக்கு ருசியூட்ட எலுமிச்சம் பழ ரசம் சிறப்பாகப் பயன்படுகிறது.

சாதாரணமாக பேரீச்சம் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் என்று கூறுவர். அதைவிட அதிகமாக எலுமிச்சம் பழத்தில் உள்ளது.  நமது நாட்டில் காபி, தேநீர் போன்ற பானங்கள் அருந்தும் பழக்கமே அதிகம் இருந்து வருகிறது. காபி, தேநீர் போன்றவை உடல் நலத்திற்குக் கேடு விளைவிப்பவையாக இருக்கின்றன. ஆகவே காப்பி, தேநீர் பழக்கத்தை விட்டுவிட்டு எலுமிச்சை ரசபான வகைகளை அருந்தும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

எலுமிச்சம் பழச்சாற்றைத் தனியாக அருந்தக்கூடாது. எலுமிச்சம் பழச் சாற்றிலுள்ள சிட்ரிக் ஆசிட் சாற்றை அப்படியே அருந்தும்போது பலவிதமான உல் கேடுகளை உண்டாக்கக் கூடும். எலுமிச்சைச் சாற்றைத் தனியாக அருந்தினால் பற்களின் எனாமல் கரைந்து பற்களைக் கூசச் செய்வதுடன் பற்களையே நாளடைவில் இழக்க வேண்டி வரும்.

எலுமிச்சம் பழச்சாற்றை வேறு கலப்பு இல்லாமல் தனியாக அருந்தினால் தொண்டை, மார்பு ஆகியவை பாதிக்கப்பட்டு பலவிதமான தொல்லைகளுக்கு இலக்காக வேண்டி வரும். எலுமிச்சம் பழ ரசத்தைத் தண்ணீர், வெந்நீர், தேன் போன்ற ஏதாவது ஒரு பொருளுடன் சேர்த்து உண்ணலாம். அத்தோடு உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து அதன் புளிப்புச் சுவையைக் குறைத்த பிறகு குடிப்பது நலம். பச்சைக் காய்கறிகள், வேறு ஏதாவது பழங்களின் ரசம் ஆகியவற்றில் எலுமிச்சம் பழ ரசத்தைச் சேர்த்தும் அருந்தலாம்.

சிலர் பருப்புக்கூட்டு போன்றவற்றில் எலுமிச்சம் சாற்றைப் பிழிந்து உண்ணுவார்கள். இது நன்மைக்குப் பதில் தீங்கையே விளைவிக்கும்.
எலுமிச்சம் பழ ரசத்தைக் கோடை நாளில் அருந்தினால் உடல் இயற்கையாகவே குளிர்ச்சி பெறும். சூரிய வெப்பத்தினால் ஏற்படும் ஆயாசம் குறைந்து சுறுசுறுப்பாகச் செயற்பட முடியும். எலுமிச்சம் பழச்சாற்றை எப்போதுமே வெறும் வயிற்றில் அருந்தக்கூடாது. அப்படிச் செய்தால் இரைப்பை பெருமளவு பாதிக்கப்பட்டு இரைப்பை புண் போன்ற குறைபாடுகள் ஏற்பட்டு அவதியுற நேரிடும்.

எலுமிச்சை ரசத்தில் சிட்ரிக் ஆசிட் இருப்பதனால் மண், கண்ணாடி, பீங்கான் ஆகிய பாத்திரங்களில் மட்டுந்தான் அதனை ஊற்றி வைக்கலாம். இவ்வாறு செயதால் ரசம் கெட்டுப் போகாமல் இருக்கும். வேறு பாத்திரங்களில் ஊற்றி வைத்தால் ரசத்தின் இயல்பு கெட்டு நச்சுத்தன்மை கொண்டதாக ஆகிவிடும்.எலுமிச்சம் பழத்தைச் சாறு பிழியும் நோக்கத்துடன் அறுப்பதாக இருந்தால் அறுப்பதற்கு முன்னதாகப் பழத்தை வெந்நீரில் போட்டு எடுத்தால் அதிக அளவு சாறு கிடைக்கும்.

எலுமிச்சம் பழம் உடல் வெப்பத்தைக் குறைக்கும். புளிப்பை அகற்றும். உடலைத் தூய்மைப்படுத்தும். உடல் உறுப்புகள் இயல்பாக இயங்குவதற்குத் தூண்டுதல் அளிக்கும். மூளையின் வளர்ச்சியையும் இயக்கத்தையும் மேம்படுத்தும். வாய்க்கசப்பை அகற்றும். கபத்தைக் கட்டுப்படுத்தும். வாதத்தை விலக்கும். இருமல், தொண்டை நோய்களைக் குணப்படுத்தும். காச நோய்க்கு நல்ல கூட்டு மருந்தாக உதவும். மூலத்தைக் கரைக்கும். விஷங்களை முறிக்கும். பொதுவாக உடல் நலம் தொடர்பாக இது ஆற்றும் உதவிக்கு ஈடாக வேறு எந்தக் கனியையும் கூற முடியாது.

உடலின் நரம்பு மண்டலத்திற்கு வலிமையை ஊட்டமளிக்கக்கூடிய ஆற்றல் எலுமிச்சம் பழத்திலுள்ள பாஸ்பரஸ் என்ற ரசாயனப் பொருளுக்கு உண்டு. இது மட்டுமின்றி நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியையும் தெம்பையும் அளிக்கிறது. எலுமிச்சம் பழத்தில் உள்ள மற்றொரு ரசாயனப் பொருளான 'பொட்டாசியம்' இரத்தத்தின் அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் நரம்புத் தளர்ச்சியடையாமல் காக்கிறது. மற்ற எந்தப் பழத்தையுட விட எலுமிச்சம் பழந்தான் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பிணிகளுக்குச் சரியான மருந்தாக உதவுகிறது.
      ...உஸ்மான்...

Jun 6, 2011

உயிர்கொல்லி பாக்டீரியா! இந்தியா முழுவதும் உசார்!!

புதுடெல்லி, ஜூன் 6,  உலகை அச்சுறுத்தி வரும் இ-கோலி பாக்டீரியாவால்,  ஐரோப்பாவில் பிரச்னை கிளம்பியுள்ளது. இதுவரை 17 பேரை பலி வாங்கியுள்ள இந்த பாக்டீரியாவால், உலக நாடுகளிடையே அதிருப்தி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இ.கோலி பாக்டீரியா இந்தியாவில் பரவாமல் தடுக்க உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.  இ.கோலி எனப்படும் உயிர்கொல்லி பாக்டீரியா நோய் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வரும் இந்நோய்க்கு இதுவரை 1700 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

உணவு பொருட்கள் மூலமாக பரவும் இந்த பாக்டீரியா ஹீமோலிடிக் எரெமிக் சின்ட்ரோம் எனும் சிறுநீரக கோளாறை ஏற்படுத்துகிறது.
இதனையடுத்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் உணவு தரக்கட்டுப்பாட்டுத் துறையானது எச்சரிக்கை குறிப்பு விடுத்துளது.

நாட்டின் 5 பெரிய துறைமுகங்கள் மற்றும் 4 முக்கிய விமான நிலையங்களில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்து இறங்கும் காய்கறி, பழங்கள் போன்ற பொருட்கள் ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா, ஹல்டியா, மும்பை, சென்னை துறைமுகங்கள், டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா விமான நிலையங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்நோய்க் கிருமி பாதிப்பால் ஐரோப்பாவில் 17 பேர் இறந்துள்ளனர்.

இ.கோலி பாக்டீரியா காஸ்ட்ரோகுன்டஸ்டைனல் டிராக்டில் இருக்கும் ஒரு ரக பாக்டீரியா. ஆனால் இந்த கிருமி உற்பத்தி செய்யும் ஒரு வித நச்சு காரணமாக உடலில் பெரும் பாதிப்பு ஏற்படும் சுத்திகரிக்கப்படாத தண்ணீ­ர், தரமற்ற உணவு ஆகியனவற்றை உண்பதால் இந்நோய் தாக்கக்கூடும் என தெரிகிறது.

எனவே இந்நோய் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் முன் தடுப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆஸ்திரியா, டென்மார்க், பிரான்ஸ், நெதர்லாந்து,  நார்வே,  ஸ்பெயின், ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாட்டு மக்களும், இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பாக்டீரியா அதிக ஆபத்தில்லாதது எனக் கூறப்படுகிறது. ஆனால், இது உமிழும் எச்சம் குடலின் உட்பகுதியில் படிந்து, விசத்தைப் பரப்பி, உடலை பாதிக்கிறது. இதை நீக்க, இன்னும் மருந்து கண்டறியப்படவில்லை.

ஐரோப்பாவில் இந்நோய் பரவி இருப்பதையடுத்து ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து,  பச்சைக் காய்கறிகளை,  குறிப்பாக வெள்ளரிக்காயை இறக்குமதி செய்ய, ரஷ்யா தடை விதித்துள்ளது. இதற்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

May 30, 2011

நல்லெண்ணையும் அதன் மருத்துவ குணமும்!!

*  நல்லெண்ணைய், சற்றுக் கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது.

எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.

*  நல்லெண்ணைய், சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது.

*  நல்லெண்ணைய்யை, 'இயற்கை நமக்கு அளித்த கொடை' என்று தாராளமாகச் சொல்லலாம். அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே அதற்குக் காரணம்.

நல்லெண்ணைய், புத்திக்குத் தெளிவு, விழிகளுக்குக் குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றைத் தருகிறது. கண் நோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவற்றைத் தணிக்கிறது.

*  நல்லெண்ணைய்யை தினமும் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும். கோழிமுட்டை வெண்கருவுடன் நல்லெண்ணைய் கலந்து பருக்களின் மீது பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும்.

*  நல்லெண்ணைய் தேய்த்துக் குளித்து வந்தால், கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல், மண்டைக் குத்தல் போன்றவை நீங்கும் என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.

May 9, 2011

ஆண்மை குறைவை போக்க அரும் மருந்து!!

* முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.

* முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

* முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குணமாகி கர்ப்பப்பை வலுப்பெறும்.

* முருங்கை மலர்கள் சிறுநீர்ப் போக்கினைத் தூண்டுபவை. பித்தநீர் சுரப்பினை அதிகரிக்கும்.

* முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில் வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை பெருகும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நரம்புகள் பலப்படும், உடல் வலுப்பெறும். உடல் சூடு தணியும்.இதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம்.

May 5, 2011

முருங்கை மரமும் அதன் மருத்துவ குணமும்!!

May 6, வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து வந்தால் குடும்பத்தில் ஆரோக்கியத்திற்கு குறைவு இருக்காது.

முருங்கையின் இலைகள், வேர், கனி மற்றும் விதை எண்ணெய் என முருங்கையின் அனைத்து பாகங்களுமே மருத்துவக் குணம் கொண்டவை.

முருங்கை இலையில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நீங்கும். முருங்கைக் கீரையை சமைத்து உண்டு வந்தால் உடல் வலுப்பெறும்.

இரத்தம் சுத்தமடையும், மெலிந்த உடல் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும்.

இலையின் சாறு விக்கல் போக்கும், அதிக அளவில் வாந்தி தூண்டும். சமைத்த இலைகள் சத்துள்ளவை. ஃபுளு காய்ச்சல் மற்றும் சளி போக்கும்.

கண் நோய்களுக்கு சாறுடன் தேன் கலந்து இமையில் தடவப்படுகிறது. கழலை வீக்கங்களுக்கு இலைப்பசை பற்றாக கட்டப்படுகிறது.

பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்க முருங்கைக்கீரை சிறந்த நிவாரணி. தாய்ப்பாலை ஊறவைக்கும்.

வாரம் இரு முறையாவது பெண்கள் கண்டிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுப்புண்ணை ஆற்றும்.

அஜீரணக் கோளாறுகளை நீக்கி மலச்சிக்கலைப் போக்கும். இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை பிரித்து வெளியேற்றும். நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு போன்ற வற்றைப் போக்கும்.

உடல்சூட்டைத் தணிக்கும் இதனால் கண்சூடு குறைந்து, பார்வை நரம்புகள் வலுப் பெறும். பித்தத்தைக் குறைக்கும். இளநரையைப் போக்கும். சருமத்தைப் பளபளக்கச் செய்யும். முருங்கைக் கீரை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.

* நாவின் சுவையின்மையை மாற்றும் தன்மை கொண்டது. முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். பித்த நீர் குறையும். வாத, பித்த, கபத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.

* முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும்.

* முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

* முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.

* முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

* முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

* முருங்கைப் பிஞ்சை எடுத்து சிறிதாக நறுக்கி நெய்யில் வதக்கி அதனை உண்டு வந்தால் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும். இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

* முருங்கை பிஞ்சில் அதிக கால்சியம் சத்து இருப்பதால் எலும்பு களுக்கு ஊட்டம் கிடைக்கும். எலும்பு மஞ்ஜைகளை பலப் படுத்தி இரத்தத்தைஅதிகம் உற்பத்தி செய்யும். ஆண்மை சக்தியைத் தூண்டும்.

* ஆஸ்துமா, கல்லீரல் மற்றும் கணையங்களின் வீக்கம், ஆகியவற்றை போக்க வல்லது. வேரின் கசாயம் தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டை புண் ஆற்றுகிறது.

* முருங்கைப் பட்டையைச் சிதைத்து சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால் வீக்கம் குறையும். பட்டையின் சாறுடன் வெல்லப்பாகு கலந்து தலைவலிக்கு மருந்தாக உட்கொள்ளப்படுகிறது.

* வேரின் சாற்றுடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் விக்கல், இரைப்பு, முதுகுவலி நீங்கும். வேர், பட்டை, மற்றும் மரப்பிசின் கருச்சிதைவு விளைவிக்கக்கூடியது. முருங்கைப் பிசின் விந்துவைப் பெருக்கும். சிறுநீரைத் தெளிய வைக்கும்.

* சிலர் முருங்கைக்கீரை சமைக்கும் போது அதன் காம்புகளை குப்பையில் போட்டு விடுவார்கள். ஆனால் இந்த காம்பிலும் அதிக மருத்துவக் குணம் உள்ளது. முருங்கை இலைக்காம்புகளை சிறிதாக நறுக்கி அவற்றுடன் கறிவேப்பிலை, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, மிளகு இவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால், நரம்புகள் வலுப் பெறும். தலையில் கோர்த்துள்ள நீர்கள் வெளியேறும். வறட்டு இருமல் நீங்கும். இரு பாலாருக்கும் நல்ல உடல் வலிமையைத் தரக்கூடியது.

ஆரஞ்சை போல் 7 மடங்கு வைட்டமின் சி அடங்கியது . பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது. காரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது. வாழை பழத்தை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது. தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது. இரும்பு சத்து அமரிமிதமாக உள்ளது. எந்த கீரையையும் விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம்.

May 4, 2011

உடல் எடையை குறைக்க, நோயில்லாமல் வாழ!

May 5, உடற்பருமன் உள்ளவர்கள் எடையைக் குறைக்க தலைகீழாக நின்று பார்க்கிறார்கள். ஆனால் இறுதியில் மிஞ்சுவது என்பது எடைக்குறைப்பில் ஏமாற்றமே!. உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி மட்டுமே போதுமா? போதாது. உணவை உண்பதில் கவனம் தேவை.

கலோரி கூடிய உணவுகளான இனிப்பு, காரம், மற்றும் எண்ணெய், பண்டங்கள் மற்றும் நொறுக்குத்தீனிகள் இருக்கக்கூடாது. பழங்கள் அதிகம் சாப்பிடவேண்டும், கேரட், வெங்காயம், தக்காளி, கீரைவகைகள் இவைகளை பச்சையாக சாப்பிடவேண்டும்.

மேலும் தேவையற்ற உணவுகளான கொழுப்பு நிறைந்த உணவுகள், மாமிசம், முட்டை, பால், பால் சார்ந்த உணவுகள், தவிடு நீக்கப்பட்ட தானிய உணவுகள் போன்ற உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.

காலை உணவை ஒன்பது அல்லது பத்து மணி என்று தாமதமாக உண்ண வேண்டும். இரவு உணவை ஆறு அலலது ஏழு மணி என்று சீக்கிரம் முடித்துவிடவேண்டும். அப்போது உண்ணும் உணவின் அளவும் குறையும். உடல் எடையும் குறையும்.

காலை உணவில் பழ ஜூஸ், மற்றும் பப்பாளி, ஆப்பிள் என்று சாப்பிடலாம். நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், கீரைகள் என தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும்.

உணவை எத்தனை நேரம் வாயில் வைத்து மெல்ல முடியுமோ அத்தனை நேரம் வாயில் வைத்து நன்கு மென்று அதன்பின் உணவை உள்ளே இறக்கவேண்டும். இதனால் உண்ட உணவு நன்கு செரிமானம் ஆகும்.

மணி அடித்தால் சாப்பாடு என்பது போல உண்ணும் நேரம் வந்துவிட்டதே என சாப்பிட உட்கார்ந்து விட கூடாது. நல்ல பசி வரும் வரை உணவைத் தொடக்கூடாது. பசி வந்தபின் இரண்டு டம்ளர் நீர் அருந்தவேண்டும்.

அதன்பின் அரைமணி நேரம் சென்ற பின் உணவை உண்ண வேண்டும். அப்போதும் அரைவயிறு உண்டபின் எழுந்துவிட வேண்டும். பசியை முழுவதுமாக சாகடிக்கக் கூடாது. பசியை முழுவதுமாக கொன்றுவிட்டால் உடலும், மூளையும் சோர்வான நிலையில் மந்தமாக இருக்கும். எனவே லேசான பசி இருக்கும் போதே சாப்பாட்டை முடித்துவிட வேண்டும்.

சாம்பார் நன்றாக ருசிக்கிறதே என்ற ஆசையோடு அதிக இட்லியை உண்ணக்கூடாது. அப்படி சாம்பாரின் சுவைக்கு அடிமையாகிவிட்டால் அந்த சாம்பாரை மட்டும் கொஞ்சம் எடுத்து ரசித்து குடித்து ஆசையைத் தீர்த்துக் கொள்ளலாம். அப்போது அதிகப்படியாக இரண்டு இட்லி உள்ளே செல்வது குறையும்.

உணவைக் குறைப்போம், உடல் நலம் காப்போம். எனவே நல்ல மிளகு, இஞ்சி, வெள்ளைப்பூண்டு போன்ற மருத்துவ குணம் உள்ள பொருட்கள் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

உடற்பயிற்சி மூலம் நாம் கண்டிப்பாக ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம். ஒரு மைல் நடந்தோமானால் சர்க்கரை, பருமன் குறையும். உடற்பயிற்சியில் இரண்டு வகைகள் உள்ளன, ஏரோபிக்ஸ், அன் ஏரோபிக்ஸ். இதில் ஏரோபிக்ஸ் என்பது சுறுசுறுப்பாக நடப்பது, ஓடுவது, நீச்சல் பயிற்சி போன்றவை இதில் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுகின்றன.

மற்றது அன் ஏரோபிக்ஸ் என்பது எடை தூக்குதல், ஜிம்னாடிக்ஸ் போன்றவை. இங்கே குறைந்த அளவிலேயே கலோரிகள் எரிக்கப்படுகின்றன. அதனால் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சிகளே நீரிழிவு உள்ளவர்களுக்கும், வர வாய்ப்புள்ளவர்களுக்கும் நல்லது.

நீங்கள் கேட்கலாம், 40-50 வயதுகளில் ஓடமுடியுமா? நீச்சல் அடிக்க முடியுமா? என்று நடைபயிற்சியே சிறந்த உடற்பயிற்சி என்பதே எங்கள் பதில். நடப்பதற்கு வயது வரம்பு தேவையில்லை. இருபாலரும் நடக்கலாம். தவிர உபகரணப் பொருட்களும் தேவையில்லை. செலவும் இல்லை. சாலையில் இறங்கி நடக்க வேண்டியதுதான் பாக்கி.

சராசரியாக ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை நடைப்பயிற்சி செய்யலாம். அந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே 4 - 5 கிலோ மீட்டர் வரை நடக்கலாம். பொறுமையாக வேகத்தை அதிகரித்தீரானால் 5 கிலோமீட்டர் என்பது ஒரு பொருட்டே அல்ல. எடை நோய்களுக்கு தடை.

Apr 26, 2011

கேன் வாட்டர் குடிப்பவரா உசார் !!!

சென்னை:ஏப்ரல் 26, வீடுகளுக்கு வரும் ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது.

இதுபோன்ற தரமற்ற தண்ணீரை குடித்தால், நிமோனியா தொற்று ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

கோடை காலம் தொடங்கி விட்டதால், தண்ணீர் தாகமும் அதிகரிக்கும். தாகம் ஏற்படும்போது கிடைக்கும் தண்ணீரை குடிப்பது, கடைகளில் குளிர்பானம், மோர் என்று இதமாக சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது.

சாலை ஓரங்களில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படும் குளிர்பானம், மோர் வாங்கி குடிப்பதால் வெயில் காலங்களில் பலருக்கு தொண்டையில் கரகரப்பு, இருமல், சளி ஏற்பட்டு கஷ்டப்படுகிறார்கள்.

வெயில் காலங்களில் ஏற்படும் இதுபோன்ற தொண்டை பிரச்னைகளை தடுப்பது குறித்து இந்திய பொது சுகாதார சங்கத்தின் தமிழக கிளையின் தலைவரும், முன்னாள் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குனருமான டாக்டர் இளங்கோ கூறியதாவது:

தமிழகம் முழுவதும் குறிப்பாக நகர்ப்புறங்களில் குடிநீருக்காக 20 லிட்டர் கொண்ட ‘வாட்டன் கேன்’களை பயன்படுத்துகிறார்கள். கேன்களில் குடிநீர் வாங்கினால் அது சுகாதாரமாகத்தான் இருக்கும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அது முற்றிலும் தவறு. உதாரணத்துக்கு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்துதான் வாட்டர் கேன் சப்ளையாகிறது. இதில் ஒரு சில கம்பெனிகளில் தவிர பல கம்பெனிகளில் ஐஎஸ்ஐ முத்திரை குத்திய லேபிள் இருக்குமே தவிர, உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள தரத்துடன் தண்ணீர் சப்ளை செய்யப்படுவதில்லை.

உண்மையில் 100 சதவீத ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது.
இதுபோன்ற தரமற்ற வாட்டர் கேன் தண்ணீரை தொடர்ந்து குடித்து வருவதால் நமது உடம்பும் குறிப்பிட்ட தண்ணீரை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்துக்கு மாறிவிடும்.

ஆனால் திடீரென கோடை வெயிலில் சுற்றி விட்டு ஏதாவது ஒரு இடத்தில் அல்லது உறவினர், நண்பர்கள் வீடுகளில் போர் மற்றும் கிணற்று தண்ணீரால் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள், மோர், ஐஸ் கிரீம் சாப்பிடும்போது தொண்டையில் அலர்ஜி ஏற்படுகிறது.

இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொண்டை கரகரப்பு, சளி, காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கிறார்கள். இது நிமோனியா தொற்றாக மாறி நுரையீரலையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.

நுரையீரல் தொற்று காரணமாக ஏற்படும் நிமோனியா எந்த மருந்துக்கும் கட்டுப்படாத கிருமியாக உருவாகி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

மேலும் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இறந்தவர்களில் அதிகமானோர் சுவாச மண்டல தொற்று நோய் காரணமாக இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

நுரையீரலை பாதிக்கும் நிமோனியாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள குளிர் மற்றும் கோடை காலம் என எந்த சீசனிலும் குடிதண்ணீரை காய்ச்சி குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

தொண்டை கரகரப்பு பிரச்னையால் பாதிக்கப்படுபவர்கள் காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இவ்வாறு டாக்டர் இளங்கோ கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக