WELCOME TO OUR HOME PAGE அப்பாக்குட்டி மருத்துவம் <>தற்போதைய செய்திகள்:........சூடாக ஒரு கப் டீ<><>கருசிதைவு சில அறிகுறிகள்<><>இயற்கை வயாகரா முருங்கை பற்றி உங்களுக்கு தெரிந்ததும்... தெரியாததும்.<><>கர்ப்பப் பை பலம் அடைய உழுத்தங்களி சாப்பிடுங்க..!<><>பெண்கள் பயன்படுத்தும் “நாப்கின்” ஆல் உடல் நலத்திற்கு கேடு! ஆய்வில் அதிர்ச்சி தகவல்! »<><>குளிர் நீரை விட சுடு நீர் தான் பெஸ்ட்! லேட்டஸ்ட் தகவல்!<><>அதுல கிரேட்டா இருக்கணுமா? சில உணவுகளை சாப்பிடாதீங்க!<><>தூக்கம் குறைந்தால் கேன்சர் தாக்கும் : டாக்டர்கள் எச்சரிக்கை<><>மன உளைச்சலா, மாரடைப்பா? தலைமுடியை ஆராய்ந்தால் உடல்கண்டிஷன்தெரியும்<><>ஆஸ்டியோபொரோசிஸ் எனும் அசுரப் பிரச்னை<><>பக்கவாதம் என்றும் பாhpசவாயு என்றும் கூறப்படும் கை, கால், முகம், வாய் போன்றவற்றின் செயலிழப்பு எல்லா வயதினரையும்...;குட்டீஸ்க்கு மூக்கில் ஒழுகுதா? வீட்டு மருந்து கொடுங்க!<><>பெண்களுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துணவுகள்!<><>பட்டினி கிடந்தா உடல் மெலியாதா?<><>வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்<><>;ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு <><>இதயத்துக்கு ஏற்ற ஆலிவ் எண்ணெய்‏<><>தொண்டையில் கழலை இல்லை, தைரொயிட் நோயா ?<><>நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்<><>ஹாய் நலமா-2 மூட்டு வலிகளா?‏<><>முட்டையின் மகத்துவம் - ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு<><>தூக்கம் இல்லாத பிரச்சனைக்கு சிறந்த மருந்து சப்போட்டா பழம்! <><>17 குணங்கள் கொண்ட‌ வெற்றிலை<><>குழந்தை மருத்துவம்: 3 முதல் 8 வயது வரை..<><>உடற்பயிற்சியின்றி அதிகரிக்கும் மரணங்கள்.<><>அல்சரை குறைக்க மன அமைதி தேவை.<><>புற்றுநோய் என்ன செய்யும்?, மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது? : 3டி அனிமேஷனின் பதில் <><>பசுவின் பால், குழந்தைகளுக்கு நல்லதல்ல - அதிர்ச்சி தகவல்<><>தூக்கம் இன்றி 15 கோடி இளைஞர்கள் தவிப்பு<><>முகப்பரு மறைய<><>தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க!<><>சிறுநீரகக்கல் இருக்கா? கவலையை விடுங்க...<><>ஏலக்காய்’ல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா!! <><>ஹீமோகுளோபின் அதிகரிக்க வழிகள்<><>மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி!<><>தைராய்டு பற்றிய விழிப்புணர்வும் அவற்றுக்கான தீர்வும்!<><>வயாக்கிராவுக்கு பதில் மாதுளம்பழம்!<><> உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் வெள்ளரிக்காய்<><>தைரியமாக சொல்லுங்க: ”தொட்டுக்க ஒரு டபுள் ஆம்லெட் போடுங்க.. மனையாளே!”<><>புற்று நோய் பற்றிய விழிப்புணர்வும் விரிவான தகவல்களும்!<><>விஷ ஜந்துக்கள் கடித்து விட்ட‌தா? என்ன முதலுதவி செய்யலாம்? தெரிந்து கொள்ளுங்கள்…<><>மாரடைப்பைத் தடுக்கும் ரத்தப் பரிசோதனை <><>பகலில் தூங்காதீங்க மன அழுத்தம் வரும் – ஆய்வில் தகவல் <><>சிறு தானியங்களின் மருத்துவக் குணங்கள்!<><>சீரகத்தின் குணங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.<><>மன அழுத்தத்தை போக்கும் வாழை இலை! <><>ரத்த சோகையை தடுக்கும் வழிகள்<><>தூங்காமல அவதிப் படுகிறீர்களா! <><>இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு அபாயம் அதிகம்! ஆய்வு தகவல்!<><>குழந்தை பெற்ற பின்னும் உடல் சிக்கென்று இருக்க<><>மார்பகப் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு தரும் வைட்டமின் C! <><>கிராம்பின் மருத்துவ குணங்கள்! <><> இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பு தருகிறது வேர்க்கடலை<><>அல்சர் இருக்கா கவனம் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்! <><>புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களா நீங்கள்? நிறுத்த 7 வழிகள்!<><>அதிகாலையில் தண்ணீர் பருகுங்கள் பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும்.<><>நீரிழிவை ஏற்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள்!!<><>பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்குமாம்... உங்களுக்குத் தெரியுமா?<><>குழந்தை வேண்டுமா? மணல்தக்காளி சாப்பிடுங்கள்!<><>சில நோய்களுக்கான அறிகுறிகளும் தப்பிக்கும் வழிகளும்.. <><>நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செக்ஸ் : ஆய்வில் நிரூபணம்<><>செக்ஸ் வாழ்க்கையில ஈடுபட முடியலையே!<><>மாரடைப்பு <>

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

பலம் குறைக்கும் எலும்பு புரை நோய்



Sunday  16  December  2012  
பலம் குறைக்கும் எலும்பு புரை நோய்
பொதுவாக வயது அதிகரிக்கும் போது காணப்படும் நோய், இது எலும்பு புரை நோய் என்றும் கூறப்படுகிறது. இவ்வகை நோய் சார்ந்த பொதுமக்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு ராமகிருஷ்ணா மருத்துவமனை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் லியோ பெர்னால்டு பதிலளிக்கிறார்.


எலும்பு புரை நோய் என்பது என்ன? இதன் பாதிப்பு அனைவருக்கும் வருமா?
எலும்புகளில் போதிய பலம் இல்லை என்றால் நம்மால் அன்றாடம் செய்யப்படும் வேலைகளை கூட சரியாக செய்ய முடியாமல் போய்விடும். எலும்பு உருக்கி மற்றும் எலும்பு புரை நோய் என்பது எலும்பின் பலம் குறைவது தான். அதாவது எலும்பில் தாது அடர்த்தி குறைந்து அதன் பலத்தை குறைத்துவிடும். இந்த பாதிப்பு அனைவருக்கும் வரும் என்று கூற முடியாது. ஆனால் இதில் ஆண்களை காட்டிலும் பெண்கள் விரைவாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நோய் வருவதற்கான பொதுவான காரணங்கள் என்ன?

பொதுவாக பிறப்பு முதல் 30 வயது வரை எலும்பின் தாது உற்பத்தியும், வளர்ச்சியும் அதிகமாக இருப்பதால் எலும்பு பலத்துடன் தான் இருக்கும். அதுவே 30 முதல் 40 வயது வரை தாது உற்பத்தி மற்றும் வளர்ச்சி ஒரே அளவில் இருக்கும். 45 வயதுக்கு மேல் தாது உற்பத்தி குறைந்து எலும்பின் பலம் குறையும். வயது, சர்க்கரை, தைராய்டு, உடற்பயிற்சி இல்லாமை, உடல் பருமன் என்று இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. காரணங்கள் குறிப்பிட்டு சொல்ல இயலாது. பரம்பரை காரணமாகவும் ஏற்படலாம்.

என் மகள் 12ம் வகுப்பு படிக்கிறாள், உடல் உருவத்திற்கு மேல் அதிக எடை இருக்கின்றது. தற்போது மூட்டு வலியால் மிகவும் பாதிக்கப்படுகின்றாள். இதற்கு எலும்பு புரை நோயாக இருக்குமோ? இந்த வயதில் இதுபோன்ற பாதிப்பு அவளின் எதிர்காலத்தை பாதித்து விடுமா என்று பயமாக உள்ளது?

பள்ளி பருவத்தில் எலும்பு புரை நோய் வருவதற்கு வாய்ப்பு என்பது இல்லை. இதற்காக பயப்பட தேவையில்லை. உங்கள் மகள் உடல் பருமனாக இருப்பதால் அதிக எடை காரணமாக கால் வலி ஏற்படலாம் அதனை முட்டி வலி என்று நினைத்து இருப்பீர்கள். உடல் பருமன் குறைப்பதற்கு தேவையானவற்றை செய்யுங்கள். உடல் பருமன் என்பது பல நோய்களுக்கு அடித்தளமாக உள்ளது. வருமுன் காப்பதே நல்லது. மூட்டு வலி என்றால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து தெளிவுபெறுங்கள்.

எலும்பு உருக்கி நோயினால் எதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும்?
எலும்பு அதன் பலத்தை இழக்கும் பொழுது அது எளிதாக முறிந்துவிடும். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தடுக்கி மெதுவாக கீழே விழுந்தாலும் முதுகெலும்பு, இடுப்பு எலும்பு, மணிக்கட்டு உடைந்து விடும். உடைந்த எலும்புகள் மீண்டும் கூடுவதற்கு அதிக நாட்கள் தேவைப்படும். எலும்பு முறியும் அபாயம் இந்நோயில் அதிக அளவில் உள்ளது.

என் தாத்தா, தந்தை இருவருக்கும் எலும்பு உருக்கி நோய் இருந்தது. அடிக்கடி எலும்பு முறிவு ஏற்பட்டு மிகுந்த சிரமப்பட்டார்கள் தற்போது எனக்கு வயது 40 தாண்டிவிட்டது. நடக்கும் போதும், பேருந்துகளில் பயணம் செய்யும் போதும் ஒரு வித பயத்துடனே இருக்கின்றேன்? நான் என்ன செய்வது ?

நீங்கள் சொல்வது சரிதான். இதற்கு பயந்து பயனில்லை. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்ளுங்கள். டெக்ஸா ஸ்கேன் எடுத்து பார்ப்பதன் மூலம் எலும்பின் உறுதி தன்மை. வயதிற்கு தக்க உறுதி உள்ளதா? பாதிப்பு எந்த அளவில் உள்ளது என்று தெரிந்து விடும். அதன் பிறகு நீங்கள் தேவைப்பட்டால் கால்சியம், வைட்டமின் டி மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொள்ளலாம்.

நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் முதியோர் இல்லம் ஒன்றை நடத்தி வருகின்றேன். இங்கு
அடிக்கடி முதியவர்கள் எலும்பு முறிவு பாதிப்பால் சிரமப்படுகின்றனர்.

சரியான கேள்வி, பெரும்பாலும் முதியவர்களின் எலும்புகளில் பலம் இருக்காது. சிறிய அடி பட்டாலும் எலும்புகள் அதிகமாக பாதிக்கப்படும். முதியவர்கள் இருக்கும் இல்லம் மட்டும் அல்ல வீடுகளிலும் அவர்களுக்கு தகுந்த படி வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும். கழிவறைகள் அவர்களுக்கு தகுந்தவாறும், மாடிபடிகளில் கைப்பிடிகள், அவர்கள் அதிகமாக பயன்படுத்தும் இடங்களில் கைப்பிடி அமைக்கவேண்டும், கழிவறைகளில் அதிகம் வலுக்காத டைல்ஸ் பயன்படுத்த வேண்டும், இரவு நேரங்களில் விளக்குகளை போடுவதற்கு அவர்களுக்கு எளிதான இடத்தில் வைக்கலாம். அதே போன்று தேவையற்ற பொருட்களை அவர்கள் செல்லும் வழிதடத்தில் இருந்து அகற்றிவிடலாம்.

nk
.thedipaar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக