பளபளன்னு ஜொலிக்க முடியும்னு நம்பிக்கைய்யா..நம்பிக்கை - உண்மை.
உடற்பயிற்சி குறித்து பலரும்
பலவிதமாக கூறுகின்றனர். எதை பின்பற்றுவது? எதை விடுவது என்பதில் பலருக்கு குழப்பம்
இருக்கும். குறிப்பாக உடல் எடை குறைப்பது பற்றி வெளியாகும் விளம்பரங்களும்,
உணவுமுறைகளும், உடற்பயிற்சி சாதனங்களும் ஒருவித அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
உடற்பயிற்சி குறித்த நம்பிக்கைகளும், அதற்கான விளக்கங்களையும் தெரிவித்துள்ளனர்
உடற்பயிற்சி வல்லுநர்கள்.
நம்பிக்கை - 1
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு, நாம் ரசித்துச் சாப்பிடும் அனைத்து உணவுகளையும் துறக்க வேண்டும்.
உண்மை : சரியான உணவுமுறை என்பது உடலை சிறப்பாக்கும். பிடித்த உணவை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டியதில்லை. உணவில் கட்டுப்பாடும், அளவும்தான் முக்கியம். முறையாகவும், மிதமாகவும் சாப்பிட்டால் எந்த உணவும், யாரையும் குண்டாக்காது. விருப்பமற்ற உணவை கட்டாயமாக சாப்பிட்டால் மன ஆரோக்கியம் குறையும்.
நம்பிக்கை - 2 அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதே நல்லது.
உண்மை: நேரத்தை விட பயிற்சிதான் முக்கியம். பகல் வேளையில் வசதியான எந்த நேரத்திலும் பயிற்சி செய்யலாம்.
நம்பிக்கை - 3
காலைச் சிற்றுண்டியைத் தியாகம் செய்யலாம். விரைவாக எடையைக் குறைக்க பட்டினி கிடப்பதே சிறந்த வழி.
உண்மை: தசைகளின் தினசரிப் பராமரிப்புக்கு ஊட்டச்சத்துகள் அவசியம். கலோரி நிறைந்த உணவுகளை சாப்பிடுகிறவர்கள்தான் அதிக எடை போடுகிறார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமும் குறையும்.
நம்பிக்கை - 4
எல்லா உடற்பயிற்சிக் கருவிகளும் நம் உடம்புக்கு ஏற்றவைதான்.
உண்மை: வீட்டில் வைத்து உபயோகப்படுத்தும் சில உடற்பயிற்சிக் கருவிகள் நன்றாக அமைக்கப்பட்டிருக்கவில்லை. அதில் பயிற்சி செய்யும் போது, உங்களுக்கு ஏற்கனவே உடல்ரீதியான பாதிப்புகள் இருந்தால் அவை மேலும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும். ஒரு குறிப்பிட்ட உடற்பயிற்சிக் கருவியில் பயிற்சி செய்யும்முன், உடற்பயிற்சி வல்லுநரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது சிறந்தது.
நம்பிக்கை - 5
உடல் நல்ல வடிவம் பெறுவதற்குச் சிறந்த வழி, ஓட்டம்.
உண்மை: ஓட்டமும், மெல்லோட்டமும் நல்ல உடற்பயிற்சிகள்தான். ஆனால் அவை கால் மூட்டுகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். ஒருவர் நீச்சல், நடை, சைக்கிளிங் போன்றவைகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவேண்டும். அதன் மூலம், தான் சாப்பிட்டதை விட அதிக கலோரிகளை எரிக்க முடிந்தால் அது சிறந்த உடற்பயிற்சிதான்.
நம்பிக்கை - 6
வலியில்லாத உடற்பயிற்சிகளால் பெரிதாக நன்மை இல்லை.
உண்மை: `ஜிம்’ பயிற்சியின்போது தசைகளில் வலி எடுக்காவிட்டால் அதனால் பிரயோஜனமில்லை என்று பொதுவாகப் பலரும் கருதுகிறார்கள். தீவிர உடற்பயிற்சியின்போது சிறிது கஷ்டம் ஏற்படலாம். ஆனால் நல்ல உடற்பயிற்சிக்கு வலிதான் அடையாளம் என்பதில்லை. தசை சோர்வு அல்லது தசைநார் கிழிந்திருப்பதையும் வலி சுட்டிக்காட்டலாம்.
நம்பிக்கை - 7
உடம்பின் ஒரு பகுதிக்கு மட்டும் தொடர்ந்து பயிற்சி செய்தால் அந்த பகுதியில் வலிமை அதிகரிக்கும்.
உண்மை:மனித மனதுக்கு ஓய்வும், சவாலும் தேவை. அதுபோல் உடற்பயிற்சியிலும் ஓய்வும் தேவை. தொடர்ச்சியான செயல்பாடும் தேவை.
நம்பிக்கை – 8
வயது முதிர்ந்தவர்களும், மிகவும் இள வயதினரும் உடற்பயிற்சி செய்யத் தேவையில்லை.
உண்மை : உடற்பயிற்சி செய்யும் முதியவர்களுக்கு `ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ்’ அறிகுறி குறையும். மூட்டு நிலைத்தன்மை அதிகரிக்கும். தவறி விழுந்தால் எலும்பு முறிவைத் தடுக்கும் வகையில் எலும்பு அடர்த்தி பராமரிக்கப்படும். ஆனால் மிக இளவயதினருக்கு, உடற்பயிற்சி அவசியம். அது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
நம்பிக்கை - 9
கனமான பொருட்களைத் தூக்குவது தசைகளை வலுப்படுத்தும். எனவே ஒரு பெண், பெண்மையுடன் திகழ எடை குறைந்த எடையுள்ள பொருட்களையே தூக்க வேண்டும்.
உண்மை : கனமான பொருட்களைத் தூக்குவது ஒரு பெண்ணை, தசைகள் திரண்ட அழகி ஆக்கிவிடாது. ஆரோக்கியமானவர்களாகவும், பலமானவர்களாகவும் மாற்றும்.
விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு
பக்கத்து நாட்டுல இருந்து வந்த புள்ளைக்கு தெரிந்த சூட்சமம் நம்ம ஊரு புள்ளைக்கு தெரியாம நெஞ்சில குத்திகிட்டு (டாடூசை) திரியுது.

பளபளக்கும் டாட்டூஸ்க்கு ஏத்த
இடம்தான்யா....அப்பத்தான் பீல்டில் ஜொலிக்க முடியும்னு நம்பிக்கைய்யா..நம்பிக்கை. |
Saturday, February 11, 2012
இலியானா..... இடுப்பு வேணுமா!? வேணும்னா எதை எல்லாம் செய்யக்கூடாது
உடல் பருமன்
என்பது இன்றைக்கு அதிகம் பேசப்படக்கூடிய விசயமாக உள்ளது. எடை குறைப்பு விளம்பரங்கள்
ஒரு பக்கம் காசை கறக்க போட்டி போட்டுக்கொண்டிருக்கையில் தாங்களாகவே எடையை
குறைக்கிறேன் பேர்வழி என்று சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர் பலர். உடல் எடையை
குறைக்க என்ன செய்யலாம் என்பதை விட எதை செய்யக்கூடாது என்று கூறியுள்ளனர் உணவியல்
வல்லுநர்கள்.
காலை உணவுக்கு கட் கூடாது
எடை குறைப்பு முயற்சிக்கு முதலில் செய்வது உணவை தவிர்ப்பது. அதுவும் பெரும்பாலோனோர் காலை உணவை கட் செய்துவிட்டு அலுவலகம் செல்கின்றனர். இது தவறான பழக்கம் என்கின்றனர் உணவியலாளர்கள்., இரவில் உண்ட உணவு ஜீரணமாகி உடலானது சக்தியை எதிர்நோக்கி காத்திருக்கும் போது அதற்கு தேவையான ஆகாரத்தை அளிக்க வேண்டும். அப்பொழுதுதான் உடல் ஆரோக்கியமாக திகழும். எனவே காலை நேரத்தில் அதிக அளவில் உணவுகளை உண்ணாமல் ஜூஸ், பழங்கள் போன்றவற்றை உண்ணலாம். இதனால் சரிவிகித சக்தி கிடைக்கும்.
மாவுச்சத்து உணவுகள்
உடல் எடைக்கு மாவுச்சத்துள்ள உணவுகள்தான் எதிரி என்று நினைத்துக் கொண்டு அனைத்துவகையான கார்போஹைட்ரேட் உணவுகளையும் தவிர்த்து விடுவர். இது தவறானது என்கின்றனர் வல்லுநர்கள். ஏனெனில் கார்போ ஹைடிரேட்தான் நமது இயக்கத்திற்கு தேவையான சக்தியைத் தருகிறது. அதேசமயம் உடலுக்கு தீங்கு விளைக்கு விளைக்கும் சோடா, குளிர்பானங்கள் போன்றவைகளை தவிர்க்கலாம். அதேசமயம் புருக்கோலி, உருளைக்கிழங்கு, உள்ளிட்ட காய்கறிகள், மேலும் பழங்களில் உள்ள கார்போ ஹைட்ரேட் பொருட்களை சேர்த்துக்கொள்ளவேண்டும். மேலும் ஐஸ் கிரீம் உள்ளிட்டவைகளை உட்கொண்டால் உடல் எடைக் கூடும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.
ஜங்க் ஃபுட், நொறுக்குத்தீனி
உடல் எடையை குறைப்பதற்காக மாலை 6 மணிக்கு மேல் உணவைத் தவிர்ப்பவர்கள் பலர் உண்டு. அதேசமயம் தொலைக்காட்சி பார்க்கும் சாக்கிலோ, திரைப்படம் பார்க்கும் போதோ கிலோ கணக்கில் சிப்ஸ், பர்க்கர், உள்ளிட்ட ஜங்க் ஃபுட்களை உள்ளே தள்ளுவார்கள். இதுவும் உடல் நலத்திற்கு தீங்கானது என்கின்றனர் ஆய்வாளர்கள். சாதமாக உட்கொள்ள முடியாதவர்கள் காய்கறி சாலட்ஸ், பழங்கள் போன்றவைகளை உட்கொள்ளலாம் இது உடல் எடையை குறைக்கும்.
சரிவிகித கலோரி
அதிக கலோரி தரும் உணவுகளை தவிர்க்கிறேன் பேர்வலி என்று எதையாவது உண்ணக்கூடாது. பாதாம் பருப்பு, மூன்று ஆப்பிள் பழங்களை உண்ணும் போது கிடைக்கும் கலோரி சீஸ்பர்கரும், கோக் குடிப்பதன் மூலமும் ஏற்படும். எனவே எந்த விகிதத்தில் கலோரி உணவுகளை உட்கொள்கிறோம் என்பது முக்கியம் என்கின்றனர் உணவியலாளர்கள்.
எடைக் குறைப்பு சாதனங்கள்
உடல் எடையை குறைப்பதற்காக விற்பனை செய்யப்படும் சாதனங்கள் , மாத்திரைகள் போன்றவைகளைப் பயன்படுத்தினால் உடல் எடை குறையும் என்பது அனைவரின் நம்பிக்கை. இந்த பொருட்கள் உடல் எடைக்குறைப்பிற்கு உதவி புரியுமே தவிர முழுவதுமாக அவற்றை மட்டுமே நம்பக்கூடாது என்கின்றனர் உணவியலாளர்கள். நமது உடலை கட்டுப்பாட்டிற்குள் வைக்க நாம் சரிவிகித சத்துள்ள உணவுகளை உட்கொண்டு உடல் எடையை குறைக்கலாம் என்பதே அவர்களின் அறிவுரை.
விஸ்கி : ஜொள்ளு & லொள்ளு
பதிவின் தலைப்புக்கு ஹி..ஹி...ஹி....ஹி |
Thursday, February 9, 2012
ஓவர் கொழுப்பு ஒடம்புக்கு ஆகாது
இந்திய உணவுகளில் மஞ்சளுக்கு தனி மகத்துவம் உண்டு. மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் கொழுப்பு சத்தை குறைக்க வல்லது. கெட்ட கொழுப்பினை குறைத்து உடல் பருமனில் இருந்து உடலை பாதுகாக்கிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட மஞ்சள் கொழுப்பு சக்தியை குறைப்பதில் முக்கிய பங்குவகிக்கிறது. இதனால் இதயநோய் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.
கொத்தமல்லி
உடலின் கொழுப்பை குறைப்பதில் கொத்தமல்லிக்கு சிறந்த பங்கு உண்டு. உண்ட உணவை ஜீரணப்பதில் கொத்தமல்லி சிறந்த மூலிகையாக செயல்படுகிறது. உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை எரித்து உடலை ஸ்லிம் ஆக்குகிறது.
கறிவேப்பிலை
உடலின் கொழுப்பை குறைப்பதில் கறிவேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது. கறிவேப்பிலையில் டாக்ஸின்கள் உள்ளன. தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலைகளை உட்கொண்டால் கொழுப்பு படிப்படியாக குறையும். மோர், காய்கறி சாலட், போன்றவைகளில் தினமும் சேர்த்துக்கொள்ளலாம்.
வெள்ளைப்பூண்டு
கொழுப்பை எரிப்பதில் வெள்ளைப்பூண்டுக்கு முக்கிய பங்குண்டு. இது கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது. எனவே இது உடலின் கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கடுகு எண்ணெய்
சமையல் எண்ணெயானது உடலில் கொழுப்பு சேருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே குறைப்பு கொழுப்பு அமிலங்கள் உள்ள எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும். கடுகு எண்ணெயில் ஆண்டி ஆக்ஸிடென்ஸ்,வைட்டமின்கள் போன்றவை காணப்படுகின்றன. இது இதயத்திற்கு இதமானது.
முட்டைக்கோஸ்
உடல் கொழுப்பை கட்டுப்படுத்தும் உணவுகளில் முட்டைக்கோஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் குறைப்பில் சாலட் வகைகளில் முட்டைக்கோஸ் பயன்படுத்தப்படுகிறது. முட்டைக்கோஸ் உடலில் கொழுப்பு, சர்கரை போன்றவற்றை சரிசமமாக தக்கவைக்கிறது.
பாசிப்பருப்பு
பாசிப்பருப்பில் ஏ,பி,சி, மற்றும் ஈ வைட்டமின்கள் உள்ளன. இதில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், உள்ளிட்ட தாது உப்புகள் உள்ளன. இது குறைந்த கொழுப்பு சத்துள்ள உணவு. உணவியல் நிபுணர்கள் உடல்குறைப்பு தொடர்பான உணவாக பாசிப்பருப்பினை பரிந்துரைக்கின்றனர். இது உயர் ரகமான நார்ச்சத்து கொண்டுள்ளது. உடலில் ரத்த அழுத்தம் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது.
தேன்
உடல்பருமனை குறைப்பதில் தேனின் பங்கு முக்கியம்மானது. தினமும் காலை நேரத்தில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் உடல் பருமன் குறையும்.
மோர்
உடலுக்கு தேர்வையான நீர் சத்தை அளித்து, கொழுப்பை குறைப்பதில் மோர் முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையான கலோரிகளை மட்டுமே அளிக்கும் தன்மையுடையது என்பதால் தேவையற்ற கொழுப்பை உடலில் தங்கவிடாது.
சிறு தானியங்கள்
நார்ச்சத்து நிறைந்த கம்பு, சோளம், ராகி, தினை போன்றவை உடம்பில் கொழுப்பை ஏற விடாது. விலைகுறைவானதும் சத்து நிறைந்த்துமான இந்த தானிய உணவுகளையே பண்டைய காலத்தில் உணவாக உட்கொண்டனர்.
பட்டை, கிராம்பு
விஸ்கி: லொள்ளு & ஜொள்ளு
இவுக யாருன்னு தெரயுதுங்களா? சுருதிஹாசன் |
Monday, February 6, 2012
உடலுக்கு நல்லதாம்...
நம் உடலில் அதிகமாய் உள்ள
புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப்
பாதுகாப்பதில் உருளைக்கிழங்குக்கு முக்கிய பங்குண்டு. நாம் உண்ணும் உணவு எளிதில்
ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம்
வளர்த்துவிடுகிறது.
இதனிடையே தினந்தோறும் இருமுறை உருளைக்கிழங்கு சாப்பிடுபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தநோய் குறையும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இதனால் இதயநோய் பாதிப்பும் ஏற்படாது என்றும் உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
உருளைக்கிழங்கை வெண்ணெய் அல்லது எண்ணெய் போட்டு சாப்பிடுவதை விட வேக வைத்து உண்ணவேண்டும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் இந்த ஆய்விற்கு பயன்படுத்தப்பட்டனர். ஆய்வின் போது மதிய உணவு நேரத்தில் தினமும் 100 கிராம் அளவு உருளைக்கிழங்கு கொடுக்கப்பட்டது. அதேபோன்று இரவு நேரத்திலும் கொடுக்கப்பட்டது. ஒருமாதம் தொடர்ந்து உருளைக்கிழங்கு கொடுக்கப்பட்டது. பின்னர் அவர்களின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. அப்போது அவர்களின் உயர்ரத்த அழுத்தம் குறைந்திருந்தது. அவர்களின் உடல் எடையும் அதிகரிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது.
உடல் எடை அதிகரிக்காதது மற்றும் உயர் ரத்த அழுத்தம் குறைந்தது உள்ளிட்ட காரணங்களினால் உருளைக்கிழங்கானது உடல் எடையை குறைக்கும் என்று ஆய்வாளர்கள் தங்களது ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

Tuesday, January 3, 2012
சமைக்க சோம்பேறித்தனம் கொண்டவர்களுக்காகவா? ஃப்ரிட்ஜ்.
உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகாமல் பதுகாப்பாக வைத்திருக்க கண்டுபிடிக்கப்பட்டதே ஃப்ரிட்ஜ். ஆனால் சமைக்க சோம்பேறித்தனம் கொண்டவர்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட சாதனம் போல் ஆகிவிட்டது ஃப்ரிட்ஜ். நம்மவர்களில் பலருக்கு எது எதையெல்லாம் வைப்பது என்றே வரைமுறையே கிடையாது. எதையும் வீணாக்காமல் சிக்கனமாக இருக்கிறோம் என்ற நினைப்பில் முந்தா நாள் சாம்பார், போனவாரம் வைத்த ரசம், புளித்து போன இட்லி மாவு, பால், காய்கறி,முட்டை, இறைச்சி, குளிர்பானங்கள், என சகலத்தையும் உள்ளே வைத்து ஃபிரிட்ஜை கதற அடித்துவிடுவார்கள். இது மிகவும் தவறானது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
காய்கறி,கீரை மற்றும் இறைச்சி, இட்லி மாவு போன்றவற்றை வார கணக்கில் பிரிட்ஜில் வைத்திருக்காமல் கூடிய வரை ஃபிரஷ்ஷாக பயன்படுத்துவதே நல்லது என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். குறிப்பாக ஃபிரிட்ஜில் வைத்த இறைச்சியை பயன்படுத்துவது வேண்டவே வேண்டாம் என்பதுதான் அவர்களின் முக்கிய அறிவுரை.
நீண்ட நாட்கள் ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் மாமிசத்தில் பாக்டீரியா உருவாகிவிடும் .அத்தகைய இறைச்சியை சரிவர சமைக்காமல் உண்டுவிட்டால், இரைப்பையில் நோய் தாக்கிவிடும். இதுபோன்ற இறைச்சியை உண்பதினால் இரைப்பை தொடர்பான நோய்கள் ஏற்படுவதோடு மட்டுமல்லாது, ஈரல், சிறு நீரகம் மற்றும் மூளையின் செயல்பாடு ஆகியவற்றின் செயல்பாட்டை பாதிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
விஷமாகும் உணவு
இறைச்சியை உடனடியாக கடைகளில் வாங்கிய உடனே வெட்டி வாங்கி சமையலுக்கு பயன்படுத்தினால்தான் அதில் உள்ள புரத சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். அவ்வாறு இல்லாமல் வார கணக்கில் இறைச்சியை ஃபிரிட்ஜில் வைத்து எடுத்து, பின்னர் அதனை சமைப்பதினால் அதிலுள்ள புரத சத்துக்கள் அழிந்துவிடுவதோடு மட்டுமல்லாது, அதன் தூய்மையும் பாதிக்கப்பட்டு, சமயங்களில் அது விஷ உணவாக மாறவும் வாய்ப்புண்டு என்கின்றனர்
உணவியல் வல்லுநர்கள். மொத்தத்தில் ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளில் பெரும்பாலும் ஃபிரிட்ஜில் வைத்த இறைச்சியே சமைக்கப்படுவதால், ஓட்டல்கள், சிற்றுண்டியகங்கள் மற்றும் திறந்தவெளி உணவகங்களில் வழக்கமாக சாப்பிடும் பழக்கத்தை கைவிடுவதே நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்!
எளிதில் நோய் தாக்கும்
அதேபோன்று நோய் தாக்கிய ஆடு, மாடு அல்லது கோழி போன்ற இறைச்சியில் வைட்டமின், புரத சத்துக்கள் சிதைந்து போயிருக்கலாம். எனவே இத்தகைய இறைச்சியை ஃப்ரிட்ஜில் வைத்து உண்பதனால் நோய் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது என்பதே மருத்துவர்களின் எச்சரிக்கை.
அதேபோல் நாட்கணக்கில் சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்த உணவை பின்னர் அடிக்கடி எடுத்து சூடு செய்து சாப்பிடுவதை நோய்களை நாமே காசு கொடுத்து அழைப்பதற்கு சமம். எனவே உணவுகளை தினசரி சமைத்து உண்பதே ஆரோக்கியம் என்பது உணவியல் வல்லுநர்களின் அறிவுரையாகும்.
Saturday, December 3, 2011
பேரிக்காயின் மருத்துவம்
பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது உண்மையிலேயே பழம் தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள்.
வெளித்தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம் தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில் விளையக்கூடியது.
பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள்.
சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2 என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து கணிசமான அளவு உள்ளது.
வளரும் குழந்தைகளுக்கு: வளரும் குழந்தைகளுக்கு சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன.
பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது. பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் வீதம் சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவார்கள்.
இதயப் படபடப்பு நீங்க: இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு: கருவில் வளரும் குழந்தை நன்கு வளர பேரிக்காய் பெரிதும் உதவுகிறது. கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெற பேரிக்காய் சிறந்த மருந்து.
தாய்ப்பால் சுரக்க: பிறந்த இளம் குழந்தைக்கு தாய்ப்பாலே சிறந்த ஊட்டச் சத்து மிகுந்த உணவாகும். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். குழந்தை பிறந்தது முதல் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம்.
ஆனால் தற்போது தாய்ப்பால் கொடுப்பது குறைந்து வருகிறது. சில பெண்களுக்கு தாய்ப்பால் சரியாக சுரப்பதில்லை. இவர்கள் காலையிலும் மாலையிலும் 1 பேரிக்காய் வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
வாய்ப்புண் குணமாக: வயிற்றில் புண் இருந்தால்தான் வாயில் புண் ஏற்படும். இந்த வாய்ப் புண்ணையும், வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் சக்தி பேரிக்காய்க்கு உண்டு. தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.
வயிற்றுப் போக்கு: உண்ணும் உணவின் அலர்ஜி காரணமாக சிலருக்கு வயிற்றுப் போக்கு உண்டாகும். மேலும் சிலருக்கு பாக்டீரியாக்களால் வயிற்றுப் போக்கு உண்டாகும். தினமும் பேரிக்காய் ஒன்று சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு நீங்கும்.
சிறுநீரக கல்லடைப்பு நீங்க: இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றைப் உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது
Monday, November 21, 2011
டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க!
எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்துடன் எதையும் டேக் ஈசியாக எடுத்துக்கொள்பவர்கள் ஒரு ரகம். எதற்கெடுத்தாலும் டென்சன் ஆகி கத்தித் தீர்ப்பவர்கள் ஒரு ரகம்.
டேக் இட் ஈசி ரக ஆட்கள் என்றைக்கும் ஒரே மாதிரி இருப்பார்கள். அவர்களின் அழகு என்றைக்குமே மாறாது. உடல்நலத்திற்கும் எந்த தீங்கும் ஏற்படாது.
காரணம் அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பதுதான். ஆனால் டென்சன் பார்ட்டிகள் அழுது வடிந்து கொண்டு, வயதான தோற்றத்திற்கு தள்ளப்பட்டுவிடுவார்கள்.
நோயும் எளிதில் தாக்கத் தொடங்கிவிடும். அதற்குக் காரணம் அவர்களின் டென்சன்தான் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்தது.
பியூட்டி ப்ரெஸ் யாருக்கு?
இயற்கையான அழகு யாருக்கு கிடைக்கும்? என்கிற கோணத்தில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள்.
500க்கும் மேற்பட்ட இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம், தினமும் அவர்கள் மேற்கொள்ளும் செயல்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.
ஆய்வின் முடிவில் அடிக்கடி டென்ஷனாகஇருப்பவர்களைக் காட்டிலும் டென்ஷன் ஆகாமல் எதையும் டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்பவர்கள் `ப்ரெஷ்’ ஆகவும், அழகாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அழகிற்கும் மனதிற்கும் தொடர்பு
அழகுக்கும் மனதிற்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது. அந்த மனதை இயற்கையாக அதாவது, டென்ஷன் இன்றி வைத்துக்கொண்டால் முகமும் அழகாக இருக்கும்; உடலும் ஆரோக்கியமாக இருக்கும்’ என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனால் நம் முன்னோர்கள் மனதை அமைதியாக வைத்துக்கொண்டால் முதுமை நம்மை அண்டாது என்று தெரிவித்துள்ளனர்.
என்ன டென்சன் பார்ட்டிகளே நடப்பது நடந்துதான் தீரும். எனவே உங்கள் டென்சனை தூக்கிப்போடுங்கள் அழகாக மாறுங்கள்.
Sunday, November 20, 2011
இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு
சோறு, தண்ணீர் போல தூக்கமும் மிகமிக அவசியமானது. போதுமான அளவு
தூக்கம் இல்லாவிட்டால் இயல்பு நிலை பாதிக்கப்படும்.
இந்த பாதிப்பை இன்சோம்னியா என்கிறது மருத்துவ உலகம். இந்த பாதிப்பில் இருந்து விடுபட உலகம் முழுவதும் தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு ஏராளமான பரிந்துரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இங்கிலாந்தின் நார்த்அம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் இதுதொடர்பான ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. நன்கு தூக்கம் வருவதற்கு ஆராய்ச்சியாளர்கள் தரும் அறிவுரை இது: கடின உழைப்புக்கு பின்பு இரவில் உறக்கம் இன்றி அவதிப்படுவது அடுத்த நாளின் இயல்பு வேலைகளை பாதிக்கும்.
இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும்போது மன உளைச்சல் ஏற்பட்டு நோயாளியாக மாறும் நிலை ஏற்படும் சாத்தியங்களும் அதிகம். தூக்கமின்மை என்பது சாதாரணமாக விடக்கூடியது அல்ல. அதை உடனே சரிசெய்ய வேண்டும்.
நமது உணவு, பழக்க வழக்கங்கள் காரணமாக தூக்கம் பாதிக்கப்படலாம். இதற்கு மருந்து, மாத்திரைதான் சாப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை. படுக்கைக்கு செல்லும் முன்பு தினமும் ஒரு கிளாஸ் செர்ரி பழச்சாறு குடித்தால் நன்கு தூக்கம் வரும் என்று கண்டறியப்பட்டுள்ளது. செர்ரி ஜூஸ் குடித்தவர்கள் கூடுதலாக 25 நிமிடம் தூங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Saturday, November 19, 2011
மாரடைப்பைத் தடுக்கும் ஸ்டெம் செல்கள்!
இதய நோயாளிகளின் ஸ்டெம் செல்களை எடுத்து
அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருப் பதாக
அமெரிக்காவின் லூயிஸ்வில்லா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மாரடைப்பால் மோசமாகப் பாதிக்கப்பட்ட 16 நோயாளிகளுக்கு அவர்களின் ஸ்டெம் செல்களை
எடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஓராண்டுக்குப் பின்னர் அவர்களின் இதய செயல்பாடு
12 சதவிகிதம் வரை மேம்பட்டிருந்தது. இந்த ஆராய்ச்சி இப்போது ஆரம்பநிலையில் உள்ளது.
தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற்கொள் வதன் மூலம் குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தை எட்ட
முடியும்' என்று லூயிஸ்வில்லா பல்கலைக்கழக விஞ்ஞானி ராபர்டோ போலி தெரிவித்தார்.
நோயாளிகளிடமிருந்து ஸ்டெம் செல்களை எடுத்து அவற்றை 4 மாதங்கள் ஆய்வகத்தில்
வளர்க்கிறோம். அதன் பின்னர் தனிச் சிறப்புக்கருவி மூலம் அவற்றை நோயாளியின்
பாதிக்கப்பட்ட இதயப் பகுதியில் செலுத்துகிறோம். இந்தச் சிகிச்சை மருத்துவத்
துறையில் மிகச் சாதனையாக இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
இந்தியாவில் 10 கோடி
இதய நோயாளிகள் இருப்பதாகவும், உலக இதய நோயாளிகளில் 60 சதவிகிதம் பேர் இந்தியர்கள்
என்றும் அண்மையில் வெளியான ஓர் ஆய்வறிக்கையில் எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டிருப்பது
நினைவுகூரத்தக்கது.
Sunday, October 30, 2011
வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்
வெங்காயம் இல்லாமல் உணவுப் பண்டங்கள் சுவையாக இருக்காது. வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் இருக்கும் எமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது.
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், விட்டமின்கள் என்பன உடம்புக்கு ஊட்டச்சத்தினைத் தருகிறது. வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை பார்ப்போம்.
நான்கைந்து வெங்காயத்தின் தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர பித்தம் குறையும்.
வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில் விடுவதால் காது இரைச்சல் நீங்கும்.
வெங்காயத்தைத் துண்டுகளாக வெட்டி சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து அதனுடன் சேர்த்து சிறியளவு கற்கண்டுடன் பாலைச் சேர்த்து அருந்திவர எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
வெங்காயச் சாற்றையும், சுடுநீரையும் கலந்து வாய் கொப்பளித்து வரலாம் அல்லது வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.
வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும்.
பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும். வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.
பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் சாப்பிட வேண்டும். இதனால் விஷம் இறங்கும்.
தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.
தேள்கடித்த இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும். வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.
Saturday, October 29, 2011
செயற்கை ரத்தம் விஞ்ஞானிகள் சாதனை
அனைத்து வகையான அறுவை சிகிச்சைகளுக்கும் ரத்தம் தேவைப்படுகிறது. அவசர
தேவையின் போது உடனடியாக ரத்தம் கிடைக்காததால் பலர் உயிரிழக்கும் அபாயம்
ஏற்பட்டுள்ளது. அதை தடுக்க தற்போது இங்கிலாந்து விஞ்ஞானிகள் செயற்கை முறையில்
ரத்தம் தயாரித்துள்ளனர். இவற்றை “ஸ்டெம் செல்”களில் இருந்து தயாரித்து இருக்கின்றனர்.
இங்கிலாந்தின் எடின்பர்க் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்
இதற்கான ஆய்வை மேற்கொண்டனர்.“ஸ்டெம்செல்”களில் இருந்து ஆயிரக்கணக்கான மில்லியன் சிவப்பு அணுக்களை உருவாக்கினர். அதை
பரிசோதனை கூடத்தில் வைத்து செயற்கை ரத்தத்தை
உருவாக்கினர்.
இந்த ரத்தம் 25 லட்சம் சிவப்பு அணுக்களை கொண்டது. இவற்றை மனித உடலில்
செலுத்த முடியும். எந்தவிதமான நோய் தொற்றும் ஏற்படாது.இவை இன்னும் 2 ஆண்டுகளில்
பயன்பாட்டுக்கு வருகிறது. இவற்றை இருதய ஆபரேசன், இருதய மாற்று ஆபரேசன் மற்றும் புற்று நோய் பாதித்தவர்களும் பயன்படுத்தலாம்.
இதன் மூலம் லட்சக்கணக்கான மக்களின் உயிர் பாதுகாக்கப்படும் என டாக்டர்கள்
கருதுகின்றனர்
Tuesday, October 25, 2011
பீர் குடித்தால் எலும்பு வலுவடையும்
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஊட்டச்சத்து
மற்றும் ஆரோக்கியம் குறித்த ஆய்வு பிரிவினர் ஜொனாத்தன் போவெல் தலைமையில் மேற்கொண்ட
ஆய்வில் முதுமையில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் பாதிப்பில் இருந்து
பெண்களுக்கு பீர் பாதுகாப்பு அளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
எலும்பின் உறுதிக்கு பீரின் பங்களிப்பு குறித்து
ஆராயப்பட்டது. பீரில் உள்ள எத்தனால் எலும்புக்கு உறுதி அளிப்பதுடன் புதிய
எலும்புகளின் பேரில் வளர்ச்சிக்கு உதவுவதும் தெரியவந்துள்ளது. இது குறித்து
வெளியிடப்பட்டுள்ள தகவல் வருமாறு:
மதுபானத்தை மருந்தாக எடுத்துக் கொண்டால் உடல் நலமாக இருக்கும் என்பதை பல தொடர் ஆய்வுகள் வலியுறுத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில், பீரில் உள்ள சத்துகள் எலும்புக்கு வலு சேர்ப்பது உறுதியாகி உள்ளது. குறிப்பாக வயதான காலத்தில் பெண்களை தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பில் இருந்து பீர் பாதுகாக்கிறதாம்.
பீரில் உள்ள எத்தனால் மற்றும் சிலிகான் பெரும்பாலான தாவர பயிர்களிலும் காணப்படுவதாகும். குறிப்பாக அவரை, மொச்சை உள்ளிட்ட தானியங்களில் அதிக அளவில் இந்த சத்து உள்ளது. இது எலும்பு தேய்மானத்தை தடுப்பதுடன் புதிய எலும்புகள் வலுவாக வளரவும் உதவும்.
பெண்களின் ஈஸ்ட்ரோஜன் சுரப்பியில் சிலிகான் கலப்பு இருக்கும். ஈஸ்ட்ரோஜன் அளவு மாதவிடாய் காலங்களில் பாதிப்படையும். அந்த நேரத்தில் மாத்திரை, மருந்துகள் வாயிலாக இந்த சுரப்பியின் குறைபாட்டை ஈடுசெய்வது மிகமிக அவசியம். கவனிக்காமல் விடும் பட்சத்தில் எலும்புகள் நலிவடைந்து ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இத்தகைய சமயங்களில் பீரை தினமும் சிறிதளவு மருந்தாக எடுத்துக் கொள்ளலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
உணவுகளில் இருந்து கிடைக்கும் சிலிகான் அளவைவிட பன்மடங்கு அதிகமாக பீரில் இருந்து கிடைப்பதே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பெண்களுக்கு தினமும் 8 மில்லிகிராம் அளவு சிலிகான் அவசியமாகிறது. இந்த தேவை குறைந்த அளவு பீரில் இருந்து எளிதாக கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் பெண்களுக்கு இது ஒரு வாய்ப்பு என்றே கூறலாம். அவர்கள் தினமும் ஒரு டீஸ்பூன் என்ற அளவில் பீர் அருந்துவது எலும்புகளுக்கு வலு சேர்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூக்கமின்மையால் சர்க்கரை நோய்
சர்க்கரை சுவைத்தான்
இனிக்கிறது. சர்க்கரையின் பெயரை கேட்டதுமே, நாவில் எச்சில் ஊறுகிறது. ஆனால்,
ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு அதிகமாகிவிட்டால் கசக்கிறது.
ஏன்?
நாட்டில் இருக்கும் அத்தனை வியாதிகளுக்கும் மூல வியாதி சர்க்கரை நோய் என்றே சொல்லலாம். ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் காரணமாக இருதய நோய் வரலாம். புற்று நோய் வந்தால், அது உடலில் ஏதாவது ஒரு பகுதியை பாதிக்கும். ஆர்த்தோ மற்றும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் வந்தாலும், அதற்கு தீர்வுகளும் இருக்கின்றன.
ஆனால், ஒரு முறை சர்க்கரை வந்தால்... அவ்வளவுதான். மேலே சொன்ன அத்தனை வியாதிகளும் வந்துக் கொண்டே இருக்கும். சர்க்கரை நோய் கண்ணை பாதிக்கும். கொழுப்பை அதிகரிக்கச் செய்து, ரத்த அழுத்தத்தை உருவாக்கும். இதனால், இருதய நோய் வர வாய்ப்புண்டு. நரம்பு மண்டலத்தை பாதித்து, கோமா நிலைக்கு தள்ளிவிடும். நாள் பட்ட சர்க்கரை வியாதிக்காக மருந்துகளை தொடர்ந்து எடுப்பதால், புற்று நோயும் வர ஆபத்து அதிகம். அதையெல்லாம் விட, நினைத்ததை சாப்பிட முடியாது. அளவோடு சாப்பிட வேண்டும். நேரத்துக்கு சாப்பிட வேண்டும். குறைந்த அளவு உணவு மட்டுமில்லாமல், இத்தனை மணி நேரம் தூங்கியாக வேண்டும்.
என்னடா... இத்தனை தொல்லை. ஏன் இந்த சர்க்கரை நோய் வருகிறது. முதலில் சர்க்கரை நோயை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.
ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைச் சரியாக வைத்திருக்க உதவுவது இன்சுலின். வயிற்றில் இருக்கும் கணையம் என்ற உறுப்பு, இந்த இன்சுலினைப் போதுமான அளவு சுரக்கிறது. இந்தக் கணையத்தின் இயக்கம் பழுதின்றி நடக்கும் வரை எந்தப் பிரச்னையும் தோன்றுவதில்லை. கணையம் பழுதடையும் போதுதான் பிரச்னையே ஆரம்பமாகிறது. காரணம், இன்சுலினைப் போதுமான அளவு சுரக்கும் தன்மையை அது இழந்துவிடுகிறது. அதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாகி விடுகிறது. இந்த நிலையைத் தான் சர்க்கரை நோய் அல்லது நீரழிவு அல்லது டயாபடீஸ் என்று குறிப்பிடுகிறோம்.
இந்த சர்க்கரை நோய் எதனால் வருகிறது. குடும்பத்தில் தாய், தந்தை ஆகிய யாராவது ஒருவருக்கு அல்லது தாத்தா, பாட்டிக்கு சர்க்கரை இருந்தாலும் பரம்பரை வியாதியாக வரும் நிலை இருக்கிறது. உணவுக் கட்டுப்பாடின்றி இருக்கும் நபர்களை சர்க்கரை தாக்கும். இதில் எதுவுமே இல்லாமலும் கணையம் பழுதுபட்டால், சர்க்கரை நோய் வரும்.
இதெல்லாம் கூட பரவாயில்லை. ஸ்டெரஸ் அதாவது மன அழுத்தம் காரணமாக கூட சர்க்கரை வருகிறதாம். டாக்டர்கள் சொல்கிறார்கள். இதுமட்டுமா, குறைந்த நேரமே தூங்கிக் கொண்டிருக்கும் நபர்களுக்கும் சர்க்கரை நோய் தாக்குவது தான் கொடுமை.
சமீப காலங்களில் 30 முதல் 45 வயதுக்குள் சர்க்கரை நோய் தாக்கும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக டாக்டர்கள் கூறுவது, தூக்கமின்மை. அடுத்து மன அழுத்தம்.
மனிதர்களுடைய தினசரிச் செயல்களில் தூக்கம் மிக முக்கிய இடத்தை பெறுகிறது. ஒருநாளைக்கு 6 மணி நேரமாவது நல்ல தூக்கத்தில் இருக்க வேண்டியது அவசியம். களைத்துப்போன உடலுக்கும் மனதிற்கும் நல்ல தூக்கத்தால்தான் புத்துணர்ச்சி தரமுடியும். குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்குப் போவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கி, ஓய்வெடுக்காமல் இருந்தால் மறுநாள் மனிதனால் ஒழுங்காக வேலை செய்ய முடியாது. நாள் முழுவதும் உழைக்கிற நம்முடைய உடல் உறுப்புகள் ஓய்வெடுக்கத் தான் இந்தத் தூக்கம் அவசியமாகிறது.
எனவே ஒவ்வொருவருக்கும் தூக்கம் கொள்வது மிக முக்கியமானது. சாப்பிடாமல் கூட சில நாட்களுக்கு உயிரோடு இருந்து விடலாம். ஆனால் தூக்கம் கொள்ளாது விழித்திருக்க முடியாது. ஒருவேளை தூக்கம் கொள்ள முடியலை என்றால் என்ன நடக்கும்?
சில நாட்களுக்கு மனிதன் நித்திரை கொள்ளாமல் இருந்தால் மனித ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைவடைந்து நோய் எதிர்ப்புத் தன்மையும் குறையும். தசைகளின் வலிமை குறையும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்காது. உடல் வெப்பநிலை மாறுபடும். இதுமாதிரி உடலுக்குச் சிக்கலை தூக்கப் பிரச்னை ஏற்படுத்தும். உள்ளத்துக்கும் சிக்கலை ஏற்படுத்தும். தூக்கமின்மையால், ரத்தச் சோகை ஏற்படும். மலச்சிக்கலும் வரும். மேலும் தூக்கமின்மையால் ரத்தத்தில் இருக்கும் மன அழுத்தத்துக்கு காரணமான கார்ட்டிசோல் என்கிற ரசாயனத்தின் அளவு அதிகரிக்கும்.
இதனால் ஞாபகசக்தி குறைவு, வேலைகளில் தவறுகள் போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். உடலையும், மனதையும் ஒருசேர பாதிக்கிற ஆற்றல் தூக்கமின்மைக்கு உண்டு. எனவே தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்

Monday, October 24, 2011
நூறு வயதுக்கு மேலும் வாழணுமா?!
நூறு வயதுவரை வாழ்வதற்கு யாருக்குத் தான் ஆசை இருக்காது. ஆனால் அதற்கான நடைமுறைகளை செயற்படுத்துவதில் தான் பலர் தோற்றுப் போகின்றனர்.
ஆயுளை அதிகரிக்க கடினமான சில விஷயங்களை செயற்படுத்தி ஓர் இரு தினங்களிலேயே அவற்றை கைவிட்டவர்களே அதிகம்.
ஆனால் இங்கு குறிப்பிடும் ஏழு நடைமுறைக் குறிப்புக்களையும் கடைப்பிடித்து பாருங்கள். உங்கள் உடல் நிலையில் மாற்றம் ஏற்படும்.
எடையைக்குறைத்தல்
புகைத்தலைத் தவிர்த்தல்
உணவில் கொழுப்புச் சத்தைக் குறைத்தல்
ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளல்
நீரிழிவு கட்டுப்பாடு
சுறுசுறுப்பான வாழ்க்கை
பழங்களை அதிகம் உண்ணுதல்
அன்றாட வாழ்க்கையில் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் இதனை சாதிக்கலாம் என வைத்திய நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.
Saturday, October 22, 2011
வயிற்றைக் காப்பது எப்படி?
வயிற்றின் தன்மை அறிந்து அதற்கேற்றாற் போல் சாப்பிட்டால் அது வயிற்றுக்கும் நன்மையே.
அப்படிப்பட்ட வயிற்றுக்கு உகந்த சில பொருட்கள் எவை? ஒத்துவராதவைகள் எவை என்பதனைப் பார்ப்போம்.
சாப்பிட்ட உடனேயே எளிதில் சக்தி தரக்கூடியவை நீர் வகைகள். அதில், பசும்பால், மோர், சூப் வகைகள், தண்ணீர், பழரசம் போன்றவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஜீரணமாகி உடலிற்குச் சக்தியளிக்கக் கூடியவை.
நல்ல வெய்யில் நேரத்தில் குளிர்ந்த பானங்களையோ அல்லது உணவு வகைகளையோ சாப்பிட்டால் வயிற்றில், குறிப்பாக இரைப்பையில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
உணவு சாப்பிட்டு முடிந்தவுடன் நீர் மோர் நிறைய குடிக்கக்கூடாது. இது உடல் வெப்பத்தை திடீர் என்று அதிகரிக்கும்.
சாப்பிடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்துவது நல்லது. ஆனால், சாப்பிடுவதற்கு உட்காருவதற்கு முன் அதிக அளவில் தண்ணீர் அருந்தக்கூடாது.
சாப்பிடும் போது இடையிடையே சிறிது தண்ணீர் அருந்தலாம். ஆனால் அதிக அளவில் தண்ணீர் அருந்தக்கூடாது.
சாப்பிட்டு முடிந்தவுடன் நிறைய தண்ணீர் குடித்தால் உண்ட உணவு செரிப்பதில் பல சிக்கல்கள் தோன்றக்கூடும்.
சாப்பாட்டில் தயிர் கலந்து சாப்பிடும் போது அதிக அடர்த்தியாக இல்லாமல் தண்ணீர்விட்டு மோர் பதத்தில் சாப்பிடுவதே வயிற்றுக்கு நல்லது.
பரங்கிக்காய், பெரிய காராமணி, கத்தரிக்காய், அகத்திக்கீரை போன்றப் பொருட்களை மற்ற பதார்த்தங்கள் இன்றி தனியாகச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கை உண்டாக்கும். எனவே, இவற்றை பிற பதார்த்தங்களுடன் சேர்த்து சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லது.
ஏதாவது ஒரு காரணத்தால் திடீரென்று வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் தயிர் அல்லது தயிர் கலந்த சோறு கொடுத்தால் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும்.
மூளையை பாதிக்கும்
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும்.
இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளை அழிவுக்குக் காரணமாகும்.
அதிகளவாகச் சாப்பிடுவதனால் மூளையில் இருக்கும் இரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
புகை பிடிப்பதனால் மூளை சுருங்கவும், அல்ரஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. நிறைய இனிப்புச் சாப்பிடுவதனால் புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதனால் நமக்குத் தேவையான ஆக்சிஜனை பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்சிஜன் செல்லா விட்டால் மூளை பாதிப்படையும்.
நல்ல உறக்கம் இல்லாமையால் மூளைக்கு ஓய்வு இல்லாமல் போகின்றது. தேவையான அளவு தூங்காமலிருப்பது நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
தலையை மூடிக்கொண்டு நித்திரை செய்வதனால் போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்சிஜனை குறைக்கிறது.
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆன பிற்பாடு மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால் மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது. அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக