இதில் இந்தியாவில் வசிப்போரில் 74 சதவீதம் பேருக்கு இதய நோய் பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது. மொத்தம் 12 முக்கிய நகரங்களில் 1.02 லட்சம் பேரிடம் இந்த சர்வே நடத்தப்பட்டது. இதில் 40 முதல் 44 வயதுக்குட்பட்ட பெண்கள் 72 சதவீதம் பேருக்கு இதய நாள பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அதே போல 30 முதல் 34 வயதான 57 சதவீதம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எல்லா நகரங்களிலும் இந்நோயின் தாக்கம் ஒரே மாதிரியாக இல்லை. பெங்களூர்,டெல்லி, மும்பை, அகமதாபாத், சண்டிகர் போன்ற நகரங்களில் வசிப்போர் அதிக கொலஸ்ட்ரால் மற்றும் உடல் பருமனால் இதயநோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 57 சதவீத பெண்களுக்கு 30 வயதிலேயே பாதிப்புகள் காணப்படுகின்றன.
சென்னை மாநகரை பொறுத்தவரை 23 சதவீதம் பேர் இதய நாள நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்களுக்கே இந்நோய் அதிகளவில் உள்ளது. தவிர 17 சதவீதம் பேர் சர்க்கரை நோயால்பாதிக்கப்பட்டுள்ளனர் . உணவுப்பழக்கங்கள், தவறான சில பழக்கங்களே இதய நோய் பாதிப்புக்கு காரணம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
.myoor thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக