* இரும்பு பொருட்கள் மற்றும் கத்திகள் போன்றவை விரைவில் துருப்பிடித்துவிடும். துருபிடிப்பதற்கு பெரும் காரணம், மெட்டல் பாத்திரங்களை நீரில் அலசி விட்டு, அதில் உள்ள நீர் சரியாக வெளியேறாமல் இருப்பதே ஆகும். ஆகவே அவ்வாறு துருபிடிக்கும் போது, அந்த பாத்திரத்தை உருளைக்கிழங்கு துண்டுகளை வைத்து தேய்த்தால், துரு நீங்கிவிடும். ஏனெனில் உருளைக்கிழங்கில் ஆக்ஸாலிக் ஆசிட் இருக்கிறது. அது துருவை எளிதில் நீக்கிவிடும். இல்லையெனில் உருளைக்கிழங்கு துண்டை சோப்பு நீரில் நனைத்தோ அல்லது பேக்கிங் சோடாவைத் தொட்டோ, துரு உள்ள இடத்தில் தேய்த்தால் எளிதில் போய்விடும்.
* டம்ளர்களில் அழுக்குகள் எளிதில் வந்துவிடும். அவற்றை நீக்க நிறைய முறைகளை செய்திருப்போம். ஆனால் எதுவுமே அதில் உள்ள அழுக்குகளை நீக்கியிருக்காது. அத்தகைய அழுக்குகளை எளிதில் நீக்க உருளைக்கிழங்கு போதும். அதற்கு உருளைக்கிழங்கின் ஒரு துண்டை எடுத்து, அழுக்கு உள்ள இடத்தில் தேய்த்து, பின் சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். இதனால் அழுக்குகள் சீக்கிரம் நீங்கிவிடும்.
* வீட்டில் கண்ணாடி பொருட்கள் உடைந்துவிட்டால், சிறிய துண்டுகளை எளிதில் எடுக்க முடியாது. அவ்வாறு இல்லை என்று நினைத்து, சாராதணமாக விட்டுவிட்டால், சிறிது நேரம் கழித்து கால்களில் அந்த கண்ணாடித்துண்டுகள் குத், இரத்தம் வரும். அவ்வாறு கண்ணாடிப் பொருட்கள் குத்திவிட்டால், சிலசமயங்களில் அது செப்டிக் ஆகிவிடும். ஆகவே அந்த நிலை ஏற்படாமல் இருக்க, கண்ணாடிப் பொருட்கள் உடைந்து இடத்தில் உருளைக்கிழங்கின் துண்டுகளை வைத்து துடைக்க வேண்டும். இதனால் அங்கு கண்ணாடி துகள்கள் இருந்தால், அவை உருளைக்கிழங்கில் வந்துவிடும்.
* வீட்டில் பூ ஜாடி வைத்திருந்தால், அதில் பூக்களை வைக்கும் போது பூக்கள் நிற்காவிட்டால், அப்போது அந்த ஜாடியின் அடியில் உருளைக்கிழகை பாதியாக நறுக்கி அதில் பூக்களின் தண்டுகளை வைத்துவிட்டால், பூக்கள் கீழே விழாமல் அழகாக இருக்கும்.
* வெள்ளிப் பொருட்கள் வீட்டில் இருந்தால், அவை சிறிது நாட்களில் நிறம் மாறுவது போல் இருக்கும். அப்போது அதில் உள்ள கறைகளை நீக்க, டூத் பேஸ்ட் அல்லது எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடா வைத்து தான் கழுவுவோம். இப்போது உருளைக்கிழங்கை வைத்து தேய்த்தாலும், கறைகள் நீங்கி, பளிச்சென்று பொலிவோடு காணப்படும். வேண்டுமென்றால் உருளைக்கிழங்கை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரில் வெள்ளிப் பொருட்களை ஊற வைத்தும் கழுவலாம். இதனால் வெள்ளிப் பொருட்கள் அழகாக காணப்படும்.
ஆகவே உங்கள் வீட்டில் உள்ள பொருட்களில் ஏதேனும் அழுக்கு இருந்தால், மேற்கூறியவற்றையெல்லாம் நினைவில் கொண்டு உருளைக்கிழங்கை வைத்து சுத்தப்படுத்துங்கள்.
yarlminnal. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக