இது பொதுவாக கருப்பையின் மேற்பகுதியிலேயே ஒட்டிக்
கொண்டிருக்கும். இது கருப்பையின் கீழ்ப் பகுதியில்அமைவது ஆபத்தாகும். கருப்பையின்
கீழ்ப் பகுதியில் நச்சுக் கொடி காணப்படுவதே Placenta previa ( நச்சுக் கொடி
இறக்கம்) எனப்படும்.
எந்தளவிற்கு கருப்பையின் கீழ்ப் பகுதியில் இது
இருக்கிறது என்பதைப் பொறுத்து இந்த நோயின் தீவிரங்கள் தீர்மானிக்கப்படும்.
முற்றாக கீழ் பகுதியில் நச்சுக் கொடி அமையும் போது
குழந்தை பிறக்கும் கருப்பை வாயிலை மூடிக் கொண்டிருக்கும்.இது மிகவும் தீவிரமான
நிலையாகும். இந்த நிலையில் சீசர் செய்வதைவிட வேறு வழியில்லை.
இந்த நோயின் அறிகுறி :
கர்ப்பம் தரித்து ஆறு மாத காலமளவில் பிறப்புறுப்பு
வழியே சிறிதளவு இரத்தம் போகுதல்.இதன் போது எந்தவிதமான வலியும்ஏற்படாது.இது
எச்சரிக்கைக் குறியாக எடுத்துக் கொள்ளப்படும்(warning bleeding).அதாவது கர்ப்பம்
தரித்து 5 மதத்திற்குப் பிறகு சிறிதளவு ரத்தக் கசிவு ஏற்பட்டாலேயே உடனடியாக வைத்திய
சாலைக்குச் செல்ல வேண்டும். அதைத் தவற விடும் பட்சத்தில் அடுத்தமுறை இரத்தப்போக்கு
ஏற்பட்டால் அது தீவிரமானதாக இருக்கும். அதற்கு முன்னமே வைத்திய சாலைக்கு சென்று
முற்பாதுகாப்பு எடுத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.

இந்த நோயை உறுதிப் படுத்திக் கொள்ள ஒரே வழி ஸ்கேன் செய்வதே. அநேகமான நாடுகில் எல்லா கர்ப்பிணிகளுக்கும் ஸ்கேன் செய்து இந்த நோய் உள்ளதா என்று அறிகுறிகள் ஏற்படுவதற்கு முன்னமே பார்க்கப்படும். இருந்தாலும் நம் நாட்டில் போதிய வசதி இல்லாதபடியால் எல்லாக் கர்ப்பிணிகளுக்கும் அந்த ஸ்கேன் செய்யப்படுவதில்லை. ஆனாலும் இரத்தம் போகிறவர்களுக்கு கட்டாயாமாக ஸ்கேன் செய்தே ஆக வேண்டும்..
இந்த நோயை உறுதிப் படுத்திக் கொள்ள ஒரே வழி ஸ்கேன் செய்வதே. அநேகமான நாடுகில் எல்லா கர்ப்பிணிகளுக்கும் ஸ்கேன் செய்து இந்த நோய் உள்ளதா என்று அறிகுறிகள் ஏற்படுவதற்கு முன்னமே பார்க்கப்படும். இருந்தாலும் நம் நாட்டில் போதிய வசதி இல்லாதபடியால் எல்லாக் கர்ப்பிணிகளுக்கும் அந்த ஸ்கேன் செய்யப்படுவதில்லை. ஆனாலும் இரத்தம் போகிறவர்களுக்கு கட்டாயாமாக ஸ்கேன் செய்தே ஆக வேண்டும்..
இந்த நோய் உள்ளது உறுதிப் படுத்தப்பட்ட பின்பு அந்த
நோயின் தீவிரத்தைப் பொறுத்து அதற்கான சிகிச்சை தீர்மானிக்கப்படும்.
நச்சுக்கொடி பெருமளவில் கருப்பையின் கீழ் பகுதியில்
இருந்தால் அந்த நோயாளி குழந்தை பெறும் வரை வைத்திய சாலையில் நீண்ட நாட்களுக்கு
இருக்க வேண்டி வரலாம். மேலும் முன்னேற்பாடாக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தினத்திற்கு
முன்னமே சீசர் செய்யப்படும்.
சிறிதளவான அளவில் நச்சுக் கொடி கீழே இருப்பவர்கள்
வீட்டிற்கு அனுப்பப்படலாம். ஆனாலும் அடிக்கடி வைத்தய்சாலைக்கு செல்லவேண்டியதுடன்
சகல வசதிகளும் கொண்ட ஒரு வைத்திய சாலையிலேயே குழந்தைப் பிறப்பு மேற்கொள்ள
வேண்டும்.அவர்கள் சாதாரணமான முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.
இது எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும்
:
இந்த நோயினால் குழந்தைக்கு எந்தவிதமான பாதிப்பும்
ஏற்படாது. ஆனால் அதிகமான ரத்தப் போக்கு ஏற்பட்டு அம்மாவின் உயிரைப் பறித்து
விடக்கூடியது. ரத்தப் போக்கு குழந்தை பெறுவதற்கு முன் ஏற்படலாம் அல்லது குழந்தை
பிறந்த பின் ஏற்படலாம்.
சீசர் செய்த பின்பு கூட இவர்களுக்கு அதிகமாக ரத்தப்
போக்கு ஏற்படலாம். அதனால் நான்கு பைண்ட்ஸ் இரத்தம் தயாராக வைத்துக் கொண்டே
அவர்களுக்கு சீசர் செய்யப்படும்.
அதேபோல சாதாரண குழந்தைப் பேரின் பின்னும்
இரத்தப்போக்கு அதிகமாகப் போகலாம்.
அதனால் இந்த நிலையை சமாளிக்கும் வசதிகளாக இரத்த
வங்கி ,சத்திர சிகிச்சை கூடம் உள்ள வைத்திய சாலைகளிலே குழந்தைப் பேறு மேற்கொள்ள
வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக