தூக்கமின்மை, உடல் வறட்சி போன்றவை முக்கியமானவை.
அவ்வாறு தாய்ப்பால் அதிகமாக சுரப்பதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன வெந்தயத்தில் அதிகமான அளவு இரும்புச்சத்து, வைட்டமின், கால்சியம் மற்றும் கனிமச்சத்துக்கள் இருக்கின்றன.
இவற்றை சாப்பிட்டால் உடலில் இருக்கும் தாய்ப்பாலின் அளவு அதிமாகும். அதற்காக இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், உடலில் வறட்சி ஏற்பட்டுவிடும். இதனை அப்படியே சாப்பிடுவதை விட, சமைக்கும் போது உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம்.
காய்கறிகளில் சுரைக்காய், பூசணிக்காய், புடலங்காய் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டாலும் தாய்ப்பால் அதிகமாகும். ஏனெனில் அதில் வைட்டமின், கனிமச்சத்து போன்றவை உள்ளது. அதுவும் இதனை சமைத்து சாப்பிடும் போது, குறைந்த அளவு காரத்தை சேர்த்து சாப்பிட வேண்டும். இல்லையென்றால் அது எளிதில் செரிமானமடையாமல் இருக்கும்.
பூண்டை பாலில் சேர்த்து சாப்பிட்டாலும் தாய்ப்பால் அதிமாக சுரக்கும். மேலும் அதனை அப்படி சாப்பிட பிடிக்காதவர்கள், தினமும் உண்ணும் உணவுகளில் சேர்த்து சாப்பிட வேண்டும்.
கீரைகள் மற்றும் சிவப்பு காய்களில் அதிகமாக நார்ச்சத்துக்கள் இருக்கும். அதிலும் பசலைக்கீரை, பீன்ஸ், உருளைக்கிழங்கு மற்றும் பீட்ரூட் போன்றவற்றில் அதிகமான அளவு நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. அதற்கு தான் மருத்துவர்கள் தினமும் ஒரு காய்களையாவது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்கின்றனர்.
yarlminnal. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக