தொண்டையிலே
'கிச்கிச்'... இது பலருக்கு அடிக்கடி ஏற்படுகிறது. அவர்களும் தாங்களாகவே சுய
வைத்தியம் பார்த்துக் கொள்கிறார்கள். சிலர் மருந்து கடைக்குச் சென்று நோயின் தன்மை
பற்றி கூறுவார்கள். கடையில் உள்ள மருந்து விற்பனையாளர் தனது அனுபவத்திற்கேற்ப ஏதோ
ஒரு மருந்தை பொடுப்பார்.
கிருமியின்
தாக்கம் குறைவாக இருந்தால் நோய் குணமாகிவிடும். இல்லையேல் கண்டிப்பாக
ஆஸ்பத்திரிக்கு செல்லும் நிலை ஏற்படும். உரிய சிகிச்சைக்கு பின்னரே நோய் குணமாகும்.
சுய மருத்துவம் செய்யக்கூடாது என்று எத்தனை முறை எடுத்துச்சொன்னாலும் யாரும் காதில்
வாங்கிக் கொள்வதில்லை.
தொண்டை பாதிப்பை
ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால் அது தொண்டை வீக்க நோய்க்கு காரணமாக அமைந்து
விடுகிறது. தொண்டை வீக்க நோய் என்பது பாக்டீரியா அல்லது ஸ்றெப்டோ கோக்கஸ் என்று
அழைக்கப்படும் கிருமிகளால் உண்டாகிறது. இதனுடைய முக்கிய அறிகுறிகள் காய்ச்சல்
மற்றும் தொண்டை எரிச்சல் ஆகும்.
தொண்டை வீக்க நோய்
4 முதல் 8 வயது குழந்தைகளுக்கு மிகவும் சாதாரணமாகவும், 2 வயதுக்குட்பட்ட
குழந்தைகளுக்கு அபூர்வமாகவும் ஏற்படும். ஹீமொலைட்டிக் ஸ்றெப்டோகோக்கஸ் மூலம்
உண்டாகும் ஒரு வகை தொண்டை வீக்க நோய் உடலின் மற்ற பாகங்களிலும் சிக்கலை
உண்டாக்கும்.
மற்ற வகை தொண்டை
வீக்க நோய்கள் இந்த சிக்கல்களை உண்டாக்காது. தொண்டை நோயை ஆரம்பத்திலேயே கவனித்து
உரிய சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் வேறு சில சிக்கல்களும் உண்டாகலாம். அப்படிப்பட்ட
ஒரு சிக்கல் வாதக்காய்ச்சலாகும். இதனால் தோல், மூட்டுகள், இதயம் மற்றும் மூளையும்
பாதிக்கப்படலாம். மூட்டு வீக்கம் மற்றும் சிறுநீரக வீக்கம் ஆகியவையும்
ஏற்படும்.
அதே போல்
தொண்டைப்புண் ஏற்பட்டு நீண்ட காலம் கவனிக்காமல் இருந்தால் அது புற்று நோயாக
மாறக்கூடிய வாய்ப்பும் உள்ளது என்று கூறுகிறார் கோவை அரசு ஆஸ்பத்திரி ஆர்.எம்.ஓ.
டாக்டர் சிவப்பிரகாசம்.
சிகிச்சை.........
காய்ச்சலை
கண்காணிக்க வேண்டும். ஆண்டிபயாடிக்ஸ் மருந்து கொடுக்க வேண்டும். மருந்து கொடுக்க
ஆரம்பித்த 3 நாட்களுக்குள் காய்ச்சல் மற்றும் தொண்டை வலி குறைய ஆரம்பிக்கும். நோய்
திரும்பவும் வராதிருக்கவும், ஆண்டிபயாடிக் எதிர்ப்பு சக்தியை இழக்காமலிருக்கவும்,
நோயின் சிக்கல்களை தவிர்ப்பதற்காகவும் ஆண்டிபயாடிக் மருந்துகள் முழுவதையும்
உபயோகிப்பது முக்கியம்.
காய்ச்சல் மற்றும்
வலிக்காக குழந்தைகளுக்கு அசெட்டமினோபைன் அல்லது ஜபியூபுரோபென் கொடுக்கலாம். அசெடில்
சாலிசிலிக் அசிட் அல்லது அஸ்பிரின் கொடுக்க கூடாது.
அறிகுறிகள்.........
தொண்டை எரிச்சல்,
காய்ச்சல் காரணமாக குழந்தைகள் உணவு உண்ணவோ அல்லது பானங்களை குடிக்கவோ மறுக்கலாம்.
ஏனென்றால் குழந்தைக்கு உணவுகளை விழுங்குவதில் கஷ்டம் இருக்கும். உள்நாக்கு
பெரியதாகி சிவந்திருக்கும். சில குழந்தைகளுக்கு தலைவலி, குமட்டல், வாந்தி, அடி
வயிற்றில் வலி மற்றும் தசை வலி போன்ற வேறு அறிகுறிகளும் இருக்கலாம்.
உணவுகள்.........
மென்மையான உணவுகள்
மற்றும் நீராகார உணவு கொடுக்கலாம். தொண்டை வீக்க நோயுள்ளவர்களுக்கு உணவு உண்பது
மற்றும் பானங்கள் குடிப்பது வேதனையை கொடுக்கலாம். குழந்தைகள் உணவு விழுங்குவதற்கு
கஷ்டப்பட்டால் விழுங்குவதற்கு எளிதான சூப், ஐஸ்கிரீம் போன்ற மென்மையான உணவுகளை
கொடுக்கலாம். அதிகளவு நீராகாரங்கள் கொடுக்கவும்.
1 வயதுக்கு
மேற்பட்டவர்களுக்கு தொண்டையை இதமாக்குவதற்கும் மற்றும் இருமலை குறைப்பதற்கும்
பாஸ்சுரைஸ்ட் செய்யப்பட்ட தேன் 1 முதல் 2 தேக்கரண்டி (5 முதல் 10 மில்லி)
கொடுக்கலாம். வளர்ந்த பிள்ளைகள் சூடான உப்பு நீரால் வாயைக்
கொப்பளிக்கலாம்.
ஐஸ் கட்டிகள்
மற்றும் தொண்டைக்கு இதமளிக்கும் இனிப்பு வகைகள் 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு
கொஞ்சம் நிவாரணமளிக்கலாம். சிறு குழந்தைகளுக்கு அவற்றைக் கொடுக்க வேண்டாம்.
ஏனென்றால் அவை அவர்களின் தொண்டையில் சிக்கக்கூடும் ஆபத்துள்ளது.
தொண்டை அலர்ஜியை
தடுக்கும் வழி முறைகள்...........
வீட்டில் தினசரி
குடிக்கும் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். கேன் வாட்டர்களில் 60
சதவீதம் தண்ணீர் தரமற்றது என தெரிய வருவதால் அந்த நீரையும் கொதிக்க வைத்து குடிக்க
வேண்டும். வெயிலில் அலைபவராக இருந்தால் வீட்டில் இருந்தே தண்ணீரை தினசரி எடுத்துச்
செல்வது நல்லது.
அதே போன்று உறவினர்
வீடுகளுக்கு செல்லும் போது அங்கேயும் காய்ச்சிய குடிநீரையே வாங்கி பருக வேண்டும்.
கடைகளில் வாங்கப்படும் குளிர் பானங்கள், ஐஸ்கிரீம், மோர் போன்றவைகளை தவிர்ப்பது
நல்லது. சாலையோரங்களில் சுகாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படும் குளிர் பானங்கள்,
தர்பூசணி, பப்பாளி போன்ற பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகள் முதல்
பெரியவர்கள் வரை வெயிலுக்கு இதமான பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். மிதமான சூடுள்ள
சோப்பு நீரில் அல்லது அல்ஹோல் சேர்ந்த ஹானட்நப் கொண்டு கைகளை கழுவ
வேண்டும்.
குடிக்கும் டம்ளர்
அல்லது உணவு உண்ணும் பாத்திரங்களை உங்கள் நண்பர்களுடன் அல்லது சக மாணவர்களுடன்
பகிர்ந்து கொள்ள வேண்டாம். உணவு உண்ணும் பாத்திரங்கள் மற்றும் குடிக்கும் டம்ளர்களை
சூடான சோப்பு நீரில் கழுவ வேண்டும்.
ka.
இந்த ப திவு thedipaar.com நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக