Viru News, Monday 23 July 2012, 15:26 GMT
நீங்கள் முட்டை சாப்பிடுவதில் விருப்பம் உடையவரா? உங்கள் டைனிங் டேபிளில்,
கொலஸ்ட்ரோல் அதிகம் என்று கூறி முட்டை உணவுகளுக்கு தடா போடப்பட்டுள்ளதா? உங்களுக்கு
ஒரு சுவாரசியமான செய்தி.
லண்டனில் இன்று வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை, தற்போதைய முட்டைகள் முன்பு இருந்த அளவுக்கு மோசமில்லை என்கிறது. அத்துடன் முன்பைவிட 70% அதிக வைட்டமின்-டி, மற்றும் 100% அதிக செலனியம் தற்போதைய முட்டைகளில் உள்ளனவாம்.
முன்பு என்று இவர்கள் குறிப்பிடுவது, 30 ஆண்டுகளுக்கு முன் இருந்த ஆய்வு முடிவை!
பிரிட்டனில் இதுவரை புழக்கத்தில் இருந்த முட்டை தொடர்பான அதிகாரபூர்வ புள்ளிவிபரங்கள், 30 ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட ஆய்வுகளில் இருந்து கிடைத்தவை. அந்த புள்ளிவிபரங்களுக்கும், தற்போதைய புள்ளி விபரத்துக்கும் இடையே முட்டை அபிமானிகளுக்கு சுவாரசியமான சில வேறுபாடுகள் உள்ளன.
• இன்றைய முட்டைகள், முன்பைவிட 20% குறைவான கொழுப்பு சத்து கொண்டவை.
• Saturated fat-ன் அளவும், சுமார் 20% குறைவாக உள்ளது.
• முன்பைவிட 13% குறைவான கலோரி உள்ளது.
• 10% குறைந்த அளவு கொலஸ்ட்ரோல் தற்போதைய முட்டையில் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
கலோரி அளவு பார்த்து முட்டை சாப்பிடுபவரா நீங்கள்? இன்றைய மீடியம் சைஸ் முட்டை ஒன்றில் 66 கலோரிகளும், லார்ஜ் சைஸ் முட்டையில் 77 கலோரிகளும் உள்ளன என்கிறது இவர்களது கணிப்பு.
இந்த தரவுகள், பிரிட்டிஷ் ஹெல்த் டிபார்ட்மென்ட் நிதியுதவியில் இயங்கும், UK Foodcomp project consortium வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் உள்ளன.
“அறிக்கை தயார் செஞ்ச சாருக்கு ஒரு டபுள் ஆம்லெட் பார்சல்ல்ல்…”
Source: British Egg Information Service
viruvirupu. thanks

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக