கிராம்பில்
கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள்,
மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கல்சியம், பொஸ்பரஸ், டயமின், ரிபோ
பிளேவின், நயாசின், விற்றமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு,
இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.
* கிராம்பில்
பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல்
உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக்
காற்றேhட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.
* உடலைப் பருமடையச்
செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த
ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.
* ஜீரண
உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள்
நீங்குகின்றன.
* கிராம்புப்
பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.
கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை
விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.
* நான்கு கிராம்
கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க
வைத்துப் பருகினால் கொலரா குணமடையும்.
* சிறிது சமையல்
உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை
சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச்
சிறந்தது.
* கிராம்பு எண்ணெய்
மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப்
போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி
சரியாகும்.
* முப்பது மில்லி
நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து
குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.
* கிராம்புப்
பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி
ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம்
கிடைக்கும்.
* 3-5 துளி
நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால்
சுகம் கிடைக்கும்.
* தசைப்பிடிப்புள்ள
இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.
* கிராம்பு மற்றும்
உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும்.
தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம்
கிடைக்கிறது.
* கண் இமைகளில்
ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால்
குணம் கிடைக்கும்.
* சமையலுக்கும்,
கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம்.
வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.
ka.
thedipaar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக