முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் உடலுக்கு எவ்வாறு சிறந்ததோ, அவ்வாறே
அதன் இலைகளும் மிகவும் சிறப்பான மருத்துவ குணம் வாய்ந்தது. வாழைப்பழத்தை நாம்
சாப்பிட்டால் உடலின் உட்பகுதிக்கு சிறந்தது. ஆனால் அதன் இலைகளை உடலின்
வெளிப்புறத்திற்கு, அதாவது சருமத்தில் ஏற்படும் பல காயங்கள் மற்றும் சருமத்திற்கு
மெருகேற்ற, இது ஒரு சிறந்த அழகுப்பொருளும் கூட.
இப்போது அந்த வாழை
இலையை எப்படி பயன்படுத்தினால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை படித்து தெரிந்து
கொள்ளுங்களேன்.
வாழை இலையின்
நன்மைகள்
..
* அழகை கெடுக்கும்
வகையில், சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் மற்ற சரும பிரச்சனைகளான பொடுகுத்
தொல்லை, சொறி, சிரங்கு மற்றும் தீப்புண் போன்றவற்றிற்கு மிகவும் சிறந்தது. இதன்
புதிய இலைகளில் இருந்து கிடைக்கும் ஜூஸை, பாதிக்கப்பட்ட இடங்களில் தடவினால், அந்த
பிரச்சனையானது முற்றிலும் சரியாகிவிடும். மேலும் இதன் இலையை தீக்காயங்கள் ஏற்பட்ட
இடத்தின் மேல் வைத்தால் குளிர்ச்சியாக இருக்கும்.
* வாழை இலையில் பல
மருத்துவ பொருட்கள் இருப்பதால், இவை விஷமிக்க பூச்சிக்கடித்தல், தேனீக்கடி,
சருமத்தில் அரிப்புகள் போன்றவற்றிற்கு மிகவும் ஏற்றது. சொல்லப்போனால், இத்தகைய
சிறப்பால் இதனை ஒரு இயற்கை அளிப்பான் என்றும் சொல்வார்கள்.
* அழகுப்
பொருட்களான கிரீம் மற்றும் லோசனில் இருக்கும் அலன்டாயின் (Allantoin) என்னும்
பொருள், இந்த சிறப்புமிக்க வாழை இலையில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த
பொருள் கிருமிகளை அழிப்பதோடு, விரைவில் எந்த ஒரு பிரச்சனையையும் சரிசெய்யும்.
மேலும் இது புதிய செல்கள் வளரவும் வழிவகுக்கும்.
* குழந்தைகளுக்கு
டயாஃபர் அணிவதால் வரும் அரிப்பு, கொசு கடி போன்றவற்றில் இருந்து காப்பாற்ற,
வீட்டிலேயே இயற்கையாக மருந்துகளை வாழை இலைகளைப் பயன்படுத்தி தயாரிக்கலாம். அதற்கு
வாழை இலைச்சாற்றுடன், சிறித ஆலிவ் ஆயில், சிறிது தேன் மெழுகு கலந்து, அதனை
பயன்படுத்த வேண்டும்.
* மன அழுத்தம்
போவதற்கும் மற்றும் மென்மையான சருமத்தை பெறுவதற்கும், வாழை இலையில் ஐஸ் கட்டிகளை
வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.
இவ்வாறெல்லாம்
செய்தால், சருமமானது மென்மையடைவதோடு, எந்த ஒரு நோயும் சருமத்தில் அண்டாமல்
பார்த்துக் கொள்ளலாம்.
ka.
thedipaar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக