- Monday, 23 July 2012 13:04
இந்த உணவுப் பொருட்க ளெல்லாம் சாப்பிட்டா வாய்வு உண்டாகும். அதனால
இதெல்லாம் சாப்பிடா தீர்கள் என்று ஒரு பக்கம். இந்த உணவுப் பொருட்க ளெல்லாம்
சாப்பிட்டா உடம்புக்கு நல்லது. ஆனா வாய்வுப் பிரச்சினை உண்டாகும். அதனால் பார்த்து
சாப்பிடுங்கள்என்று இன்னொரு பக்கம். இப்படி சொல்லும் போது எதைச் சாப்பிடுவது? எதைச்
சாப்பிடக் கூடாது ? எது சாப்பிட்டால் வாய்வு உண்டாகும்? எதை சாப்பிடாமல்
இருந்தால் வாய்வு உண்டாகாது? என்ற குழப்பம் பாதிபபேருக்கு வரத்தானே செய்யும்?
கட்டுப்பாடில்லாத ஒழுங்கில்லாத சாப்பாட்டு விடயங்கள் தான் நமக்கு வாய்வு பிரச்சினையை அதிகமாக உண்டு பண்ணி அதிக பிரச்சினையை ஏற்படுத்தி விடுகிறது. நம்மை அறியாமலேயே நாம் செய்யும் சில சின்னச் சின்ன விடயங்கள் கூட வயிற்றில் வாய்வை அதிகமாக சேர்க்கக் கூடிய நிலைக்குக் கொண்டு வந்து விடுகின்றது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் நாம் சாப்பிடும் விடயம். சில பேர் இரண்டு நிமிடத்தில் சாப்பிட்டு முடித்து விடுகிறார்கள். சில பேர் இருபது நிமிடங்களுக்கும் மேல் கூட சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். முதலில் வேக வேகமாக அள்ளிப் போடுவதை நிறுத்த வேண்டும். வயிற்றில் அதிகமான வாய்வு சேருவதற்கு முக்கிய காரணம் , வாய் வழியாக காற்றை விழுங்குவது தான். சாப்பிடுவதற்கு கொஞ்சம் அதிக நேரம் எடுத்துக் கொண்டு மெதுவாக சாப்பிட்டால் மெதுவாக தண்ணீர் குடித்தால் வாய் வழியாக விழுங்கும் காற்றை குறைக்கலாம். இதைத்தான் அந்தக் காலத்தில் நம் தாத்தா , பாட்டிகள், சாப்பாட்டை சுவைத்து மென்று மெதுவாக சாப்பிடு. கவளம் கவளமாக அப்படியே விழுங்காதே என்று சொன்னார்கள்.
காலை , மதியம் , இரவு என்று மூன்று வேளைகளாக சாப்பாட்டை அதிகம், அதிகமாக சாப்பிடுவதற்கு பதிலாக ஐந்து வேளைகளாகப் பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுங்கள். இந்த மாதிரி பிரித்து சாப்பிடும் போது ஜீரணம் ஆவதற்கு சுலபமாக இருக்கும். வாய்வுப் பிரச்சினையும் ஏற்படாது.
சூயிங்கம் போன்றவற்றை வாயில் போட்டு நீண்ட நேரம் மென்று கொண்டிருப்பது, இளைஞர்களுக்குப் பிடித்தமான ஒரு விடயம். அதே மாதிரி வெறும் வாயை மெல்லுவதென்பது வயதானவர்கள் அதிகமா செய்யும் ஒரு விடயம். இந்த மாதிரி சூயிங்கம் மெல்லுவது வெறும் வாயை மெல்லுவது மற்றும் இனிப்பு , ஐஸ்கிரீம் ஆகியவைகளை சாப்பிடுவதன் மூலமும் காற்று வயிற்றுக்குள் போக அதிக வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே மேற்கூறிய விடயங்களைத் தவிர்த்தால் ,வயிற்றில் வாய்வு சேருவதைக் குறைக்கலாம். மேலும் போத்தல் மற்றும் கேன்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் கார்பன் டை ஓக்ஸை சம்பந்தப்பட்ட வாய்ப்பு கலந்திருப்பதால் அவைகளும் வாய்வை அதிகமாக்கும். எனவே இவைகளையும் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
சிகரெட் புகையை உள்ளிழுக்கும் போது புகையோடு சேர்ந்து காற்றையும் நிறைய உள்ளிழுக்கிறீர்கள். எனவே சிகரெட் பிரியர்களே, சிகரெட்டை குறையுங்கள். உங்கள் வயிற்றில் அதிக வாய்வு உண்டாவது குறைந்து விடும்.
சார்பிடால் என்ற பொருள் சீனிக்குப் பதிலாக இனிப்புக்காகச் சேர்க்கப்படும் ஒரு பொருளாகும். இந்த சார்பிடால் பக்கெட்டில் அடைக்கப்பட்டு சில உணவுப் பொருட்களில் சேர்க்கப்பட்டிருக்கும். இந்த சார்பிடால் சேர்க்கப்பட்ட உ ணவை நாம் அதிகமாக சாப்பிட்டால் வயிற்றில் அதிகமாக வாய்வு உண்டாகும். வயிற்றிலுள்ள பக்டீரியாக்களுடன் இந்த சார்பிடால் சேர்ந்து வாய்வு உண்டகிறது. அதனால் சார்பிடால் சேர்ந்த உணவுப் பொருட்களை குறையுங்கள் . சீனிச் சத்து மற்றும் நார்ச்சத்து நிரம்பிய உணவுப் பொருட்கள் வாய்வை அதிகமாக உண்டாக்கக் கூடிய உணவுப் பொருட்களாகும். அதிலும் குறிப்பாக ப்ரக்டோஸ், லேக்டோஸ், ரேபினோஸ், சார்பிடால் ஆகியவை கலந்திருக்கிற இனிப்புப் பொருட்கள் என்றால் கேட்கவே வேண்டாம். கண்டிப்பாக அதிகமாக வாய்வை உண்டு பண்ணத் தான் செய்யும். எனவே இனிப்புப் பொருட்களை அதிகம் சாப்பிடாதீர்கள்.
சார்பிடால் பட்டினி கிடந்தால் வயிற்றில் வாய்வு அதிகமாக உருவாவதைத் தடுக்கலாம். அதற்காக பட்டினி கிடக்க முடியுமா ? காய்கறிகளில் முட்டைகோஸ்,கொத்தவரை, கரட் , காலிபிளவர், வெங்காயம், உருளைக் கிழங்கு , முள்ளங்கி, பட்டாணி முதலியவைகள் வாய்வை அதிகமாக உண்டு பண்ணும் தன்மை வாய்ந்தவை. பழங்களில் அப்பிள், வாழைப்பழம், ஓரேஞ் , பேரிக்காய் முதலியவைகள் வாய்வை அதிகமாக உண்டு பண்ணும். பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் பாலாடைக்கட்டி, ஐஸ்கிரீம், பால், பதப்படுத்தப்பட்ட பாலில் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் முதலியவைகள் வாய்வை அதிகமாக உண்டு பண்ணும். பியர், டயட் சோடா, பழ ஜூஸ், வைன் முதலியவைகள் வாய்வு அதிகமாக உண்டு பண்ணும் முக்கால்வாசி குளிர்பானங்களில் ப்ரக்டோஸ், சார்பிடால் இருப்பதால் இவைகள் எல்லாமே வாய்வை உற்பத்தி பண்ணும். நொறுக்குத் தீனிகள் அனைத்துமே வாய்வை உண்டு பண்ணும்.
வாய்வை குறைவாக உண்டு பண்ணும், சில உணவுப் பொருட்களைப் பார்ப்போம். யோகர்ட், வெண்ணெய், தயிர், சீனி சேர்க்காத வடிகட்டிய பழ ஜூஸ்கள், வெள்ளை சாதம், பிசைந்து நன்றாக வெந்த உருளைக் கிழங்கு, முட்டை, மீன், கொழுப்பு நீக்கப்பட்ட கோழி இறைச்சி, கரட், மரக்கறி சூப் ஆகியவை குறைவான வாய்வை உண்டு பண்ணும் உணவுப் பொருள்களாகும்.
பெரும்பாலும் உணவுப் பொருட்களுடன் நேரடியாக சீனி சேர்த்து சாப்பிடாதீர்கள். இது வாய்வை அதிகப்படுத்தும். சாப்பிட்ட பின் முடிந்தால் மெதுவாக சுமார் அரை கிலோ மீற்றர் நடந்து விட்டு வாருங்கள். வாய்வை அதிகம் உண்டாவதை தடுக்கும்.
சிகரெட் புகைப்பதை குறையுங்கள். குளிர்பானங்கள் குடிக்கும் போது ஸ்ட்ரோ இல்லாமல் குடித்துப் பாருங்கள். ஸ்ட்ரோ போட்டுக் குடிப்பது சுகாதாரம் தான். ஆனால் ஸ்ட்ரோ உபயோகப்படுத்தி குடிக்கும் போது காற்று வயிற்றுக்குள் போகிறது. மன அழுத்தம் கூட வாய்வை அதிகப்படுத்தும். எனவே ஆறுதலாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
thinakkural. thanks

a good advise to those who suffer with Gastric problems.
பதிலளிநீக்கு