சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி
தரக்கூடிய முக்கியமான கிழங்கு காய்கறி உணவுப் பொருள் உருளைக் கிழங்கு ஆகும். அதே
நேரத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய தன்மையையும் உருளைக்கிழங்கு பெற்றுள்ளது.
மேலும் பல்வேறு வழிகளில் சமைத்து உண்ணத்தக்க
வகையில் அமைந்துள்ளது இந்தக் கிழங்கு மட்டுமே.
இதை அவித்தோ, சுட்டோ, வேகவைத்தோ,
வறுத்தோ பயன்படுத்தினாலும் கிழங்கின் மருத்துவக் குணமும் மாறாமல் இருப்பது
இக்கிழங்கின் சிறப்பம்சமாகும்.
100 கிராம் உருளைக் கிழங்கில்
கிடைக்கும் கலோரி 97 ஆகும். இதில் ஈரப்பதம் 75%ம், புரதம் 2%ம், கொழுப்பு 0.1%ம்,
தாது உப்புக்கள் 0.61% ம், நார்ச்சத்து 0.41% ம் மீதி கார்போஹைடிரேட்டும்
ஆகும்.
இவை தவிர வைட்டமின் சி 17 மில்லிகிராமும், கல்சியம்
10 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 40 மில்லிகிராமும், வைட்டமின் ‘ஏ’யும் வைட்டமின் ‘பி’
முதலியனவையும் உள்ளன. சோடா உப்பு, பொட்டாசியம் முதலியனவும் அதிக
அளவில் உள்ளன.
ஒரு மனிதன் தினமும் பாலும் உருளைக்கிழங்கும்
மட்டும் சாப்பிட்டால் போதும். அவன் உடலுக்குத் தேவையான அனைத்தும் கிடைத்துவிடும்.
அந்த அளவுக்கு கார்போஹைடிரேட்டுகள் மாவுப்பொருளும் சர்க்கரையும் உருளைக்கிழங்கில்
அபரிதமாய் உள்ளன.
வேகவைத்தோ, பொரித்து வறுவலாகவோ,
நீண்ட நாட்களுக்கு வைத்திருந்தோ சாப்பிடப் பயன்படும் காய்கறி இதுதான்.
மத்திய அமெரிக்கப் பழங்குடிகள் 5000 ஆண்டுகளுக்கு
முன்பு நூறு வகையான உருளைக் கிழங்கு வகைகளைப் பயிர்செய்து தினமும் இதை மட்டுமே
சாப்பிட்டு வந்தனர். சிலி நாட்டிலிருந்து ஈக்குவடோர் நாடு வரை ஆய்வுப் பயணம் செய்த
ஸ்பானியர்களின் மூலமே உருளைக் கிழங்கு எல்லாக் கண்டங்களுக்கும் கி.பி.
16ஆம் நூற்றாண்டில் பரவியது.
அரிசி, கோதுமைக்கு அடுத்து அதிகம்
சாப்பிடப்படுவது
உருளைக்கிழங்கு. எல்லா தட்பவெப்ப நிலைகளிலும்
விளையக்கூடியது என்பதால், உலகின் மிக முக்கியமான வியாபாரப் பொருளாகவும் இது
இருக்கிறது. எல்லா நாட்டு மக்களின் உணவுத் தட்டிலும் இதைப்
பார்க்கலாம்.
சொந்தமாகத் தனிப்பட்ட எந்த ஒரு சுவையையும்
பெற்றிராத இந்தக் கிழங்கு இயற்கையிலேயே முறைப்படியாக உணவு ஊட்டத்துடன் வளர்ச்சி
பெற்று நமக்குக் கிடைக்கிறது என்று கூறிச் சத்துணவு நிபுணர்களும், விஞ்ஞானிகளும்
வியக்கின்றனர். தண்ணீராலும் மாவுப் பொருளாலும் பருத்திருக்கும் ஒரே காய்கறி
இதுதான்.
உருளைக் கிழங்கைச் சாப்பிட்டதும்,
அதில் உள்ள ஓர் இரசாயனப் பொருள் உடனடியாக உடலுக்குச் சக்தியைத் தருகிறது.
தரவரிசைப்படி ஒழுங்குபடுத்தினால் பால், முட்டை, ரொட்டி, பிஸ்கட், கோழி
ஆகியவற்றிற்கும் முதலில் இருப்பது உருளைக்கிழங்குதான்.
சாதாரண அளவில் உள்ள ஓர் உருளைக் கிழங்கில் 3.2
கிராம் அளவுகூட புரதச்சத்து கிடைக்கிறது.
பாலைவிடப் புரதச் சத்து இதில்
அதிகமாய் இருக்கிறது. பாலுக்குப் பதிலாக உருளைக் கிழங்கு மசியலைக் குழந்தைகளுக்குக்
கொடுத்தால், அது இரவில் திடீர் திடீர் என்று பசியினால் அலறாது நிம்மதியாகத்
தூங்கும்.
அரிசி, கோதுமை, சவ்வரிசி
முதலியவற்றை நாம் சமைத்துச் சாப்பிடும் போ,து அவற்றில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துகள்
அழிந்த நிலையில்தான் கிடைக்கின்றன. உருளைக்கிழங்கு மாவுப்பொருள். அதனால் இதில் உள்ள
எந்தச் சத்தும் அழியாமல் கிடைக்கிறது. கைக்குத்தல் அரிசிக்கு இணையான சக்தி தோலுடன்
சாப்பிடப்படும் உருளைக்கிழங்கில கிடைக்கிறது.
உருளைக் கிழங்கில் தோலுக்கு அருகில்தான் அதிக அளவு
ஊட்டச்சத்தும், புரதச்சத்தும், தாது உப்புகளும் உள்ளன. எனவே, தோலுடன் வேக வைத்தே
சாப்பிட்டால் உருளைக்கிழங்கில் உள்ள அனைத்துச் சத்துணவையும்
மருத்துவக் குணங்களையும் முழுமையாகப் பெறலாம்.
உருளைக் கிழங்கைச் சாப்பிட்டால் நீண்ட நேரம்
பசியைப் பொறுத்துக்கொள்ள முடியும்.
உலகில் பல்வேறு காலகட்டங்களில் பஞ்ச காலத்தில்
பட்டினி¨யைத் தவிர்த்துக், கோதுமைக்குப் பதிலாக உருளைக்கிழங்கைச் சாப்பிட்ட
வரலாறும் உண்டு. புரதம், மாவுப்பொருள், சக்கரை என அனைத்து
சத்துணவும் இதிலேயே கிடைத்துவிடுவதால் தான் பசியைப் பொறுத்துக்கொள்ள முடிகிறது.
வாயுப் பொருள் என்று ஒதுக்காமல் எண்ணெயில்
வறுத்துச் சாப்பிடாமல் மற்ற வகைகளில் உருளைக்கிழங்கை சமைத்துச் சாப்பிட்டு
ஆரோக்கியமான வாழ்வைத் தொடர்ந்து பெறுங்கள்.
நன்றி-தினகரன்
chittarkottai. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக