மருத்துவம் என்றாலே அது சோற்றுக்கற்றாழைதான். சோற்றுக்கற்றாழையின் பங்கு அந்தக் கால மருத்துவத்தில் அதிகம். அந்தக் கால பாட்டி வைத்தியம் செய்பவர்கள் முதல் சித்த வைத்தியர்கள் வரை இந்த சோற்றுக்கற்றாழையின் மகிமையை அறிந்து வைத்திருந்தனர். தக்க சமயத்தில் இது பல நோய்களைக் குணப்படும் அருமருந்தாகப் பயன்படுகிறது. நவீன மருத்துவத்திலும் இதன் பங்கு அளப்பரியது.
கிட்டதட்ட அனைத்து வகையான மருந்துப்பொருட்களிலும் இந்தக் கற்றாழையின் பங்கு இருக்கும். இது ஒரு கசப்புத் தன்மையைக் கொண்டதால் கூடுதல் பலன் அளிக்கும் இயற்கை மருந்துப்பொருளாக உள்ளது. இந்தக் கற்றாழையின் மூலம் குணமாகும் நோய்கள் என்ன? எந்தெந்த மருந்து வகைகளில் இதைச் சேர்த்து மருந்து தயாரிக்கப்படுகிறது? இதன் தன்மைகள் என்ன என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
சிறு கற்றாழை |
சாதாரணமாக கிராமப்புறங்களில் இந்தக் கற்றாழைகள் வேலியோரப் புதர்களில் வளர்ந்திருக்கும்.
இக் கற்றாழையானது உலகம் எங்கும் 17ம் நூற்றாண்டு முதல் காஸ்மெட்டிக்(cosmetic) பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும்(medicine) பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சோற்றுக் கற்றாலையை சிறு கற்றாழை என்றும் அழைப்பார்கள்.
சோற்றுக் கற்றாழை மடல்களைப் பிளந்து நுங்குச் சுளைப் போல உள்ள சதைப் பகுதியை, சின்னச் சிறு துண்டுகளாக வெட்டி தூய தண்ணீரில் 7 முதல் 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்தவேண்டும். கற்றாழையக் கையால் தொட்டால் வாய் கசக்கும். எனவே நன்றாக கழுவிச் சுத்தம் செய்தால், கற்றாழையின் கசப்புத் தன்மையும், குமட்டுதலும் குறைந்துவிடும்.
கற்றாழை குணப்படுத்தும் நோய்கள்:
(Aloe vera can cure diseases)
- தீராத வயிற்றுப் புண்கள் குணப்படுத்துகிறது..
- சிறுநீர் குழாய்களிலும், பிறப்பு உறுப்புக்களிலுமுள்ள நோய்களை சோற்றுக் கற்றாழை நன்கு செயல்பட்டு முழுமையாக நிவர்த்தி செய்கிறது...
- வயிற்றின் சூட்டைத் தணிக்க...
- வாய்வுத் தொல்லைகளை நீக்க...
- நீடித்த மலச்சிக்கலைப் போக்க..
(Method of preparing a drug)
கழுவிச் சுத்தம் செய்த சோற்றுக் கற்றாழையை அரைக்கிலோ எடுத்துக்கொள்ளுங்கள். இதில் விளக்கெண்ணெய் ஒரு கிலோவும், பனங்கற்கண்டு அரைக்கிலோவும், வெள்ளை வெங்காயச் சாறு கால் கிலோவும் சேர்த்து, ஒரு பாத்திரத்தில் வைத்து அடுப்பில் சிறு தீயாக(Light flame) எரிக்க வேண்டும்.
சாறுகள் சுண்டியபின் இந்த நெய்யை எடுத்து வதக்கிக்கொண்டு, நோயாளிகள் ஒரு தேக்கரண்டி(tea spoon) வீதம், காலை, மாலை சாப்பிட்டு வந்தால், தீராத வயிற்று வலியும், வயிற்றுப் புண்ணும்(Peptic ulcer), சூன்மக் கட்டிகளும் குணமாகும்.
பெருங் கற்றாழை |
ஜீரண சக்தியை அதிகரிக்கும்(Increases the digestive power). பசியை உண்டாக்கும் தன்மைப் பெற்றது.
இந்த மருந்து பால்வினை நோய்களில்(Sexually transmitted disease) ஒன்றான கனோரியா நோயை முழுமையாகக் குணமாக்கிவிடும். கனோரியாவை நீக்குவதில் மிகவும் சக்தி வாய்ந்தது. நம்பிக்கையானது. வெட்டை நோய்களையும் குணப்படுத்தும். கனோரியா நோயினால் ஏற்படும் எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்க்கசியும் கிரந்தி, அரிப்பு, தினவு, நிறம் மாறிய சிறுநீர் வெளியேறுதல். இந்திரிய ஒழுக்கு, அரையாப்பு, ஜனன உறுப்பில் உள்ளுக்கும், வெளியிலும் புண் ஏற்பட்ட நிலை, சீழ் பிடித்தல், வெள்ளை வெட்டை நோய்கள் ஆகியன பூரணமாகக் குணமாகும். மருந்து சாப்பிடும் காலங்களில் காரத்தையும், புளியையும் சேர்க்காமல் உணவு உட்கொள்ள வேண்டும்.
சோற்றுக் கற்றாழை மடல் சுத்தம் செய்து எடுத்து, இதில் சிறிது படிக்காரத்தூளைத்(Alum) தூவினால் நீர்த்து தண்ணீராகிவிடும். இதில் வெண்ணெய், கற்கண்டு, வால் மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட்டால் மூத்திரக் கிரிச்சரம், மேக நோயால் ஏற்பட்ட வெட்ட நோய் நீங்கிவிடும்.கழுவிச் சுத்தம் செய்த சோற்றுக்கற்றாழை ஒரு கப் சேகரம் செய்துகொண்டு, இதில் சிறிய வெங்காயம் ஒரு கப் நறுக்கிச் சேர்த்து விளக்கெண்ணெய் 300 கிராம், பனங்கற்கண்டு 300 கிராம் இவை யாவையும் ஒன்று சேர்த்து, அடுப்பில் வைத்து சிறு தீயாக லேகிய பதம் வரும் வரை எரித்து எடுத்துக்கொண்டு காலை, மாலை, ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் அனைத்து வகையான வயிற்று வலியும், வயிற்றுப் புண்களும் குணமாகும்.
சிறுநீர் எளிதில் வெளியேற...
(In the urine to exit easily)
கழுவி எடுத்த சோற்றுக் கற்றாழையில் ஒரு மடல் அளவு கற்றாழைத் துண்டுகள் நீர் ஆகாரத்தில் கலந்து குடிக்க வேண்டும். மடல் துண்டுகள் ஐந்து தேக்கரண்டிக்குக் குறையக் கூடாது இதை, காலையில் ஒருவேளை சாப்பிட வேண்டும். மூன்று நாள் உபயோகத்தில் சிறுநீரில் இரத்தம் கலந்து வருதல் நின்று விடும். இதே முறையில், மூன்று தினங்கள் சாப்பிட்டால் நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். கழுவிச் சுத்தம் செய்த கற்றாழைத் துண்டு ஒரு கப் எடுத்துக் கொண்டு, இதில் சின்ன வெங்காயம் சுட்டுப்பொடியாக்கிய ஐந்து வெங்காயத்துக்குக் குறையாமல் சேர்த்துக் கொண்டு, இதைக் கற்றாழைச் சோற்றில் கலந்து, கடுக்காய் பொடிகள் மூன்று கடுக்காயில் சேகரித்து, எல்லாவற்றையும் ஒன்றாக்கி சிறிது தண்ணீர் விட்டு மூடி வைத்தால், கால் மணி நேரத்தில் நீர்த்து தண்ணீராகிவிடும். இந்தத் தண்ணீரை வடிகட்டிச் சாப்பிட்டால் அரை மணி நேரத்தில் சிறுநீர்க்கட்டு நீங்கிவிடும். தாராளமாக சிறுநீர் வெளியேறிவிடும்.புண்கள் ஆற:
(Heal ulcers )
கழுவி எடுத்த கற்றாழைச்சோறு 25 - 50 கிராம் பசும் பாலில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் பத்து தினங்களில் மூலச் சூடு தணியும். சொறி, அரிப்பு நீங்கும். விந்து உற்பத்தி அதிகரிக்கும். பால்வினை நோயான சொருக்கு நோய் வந்தவர்களின் ஆண் உறுப்பில் புண்கள் உண்டாகும். இதனால் வீக்கமும், புண்ணும் இருக்கும். கழுவி எடுத்த சோற்றுக் கற்றாழையை பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும். இரவு படுக்கும்போது இப்படிச் செய்து கொள்ளலாம். இவ்வாறு சில தினங்கள் கட்டி வந்தால், புண்கள் ஆறிவிடும். வீக்கம் வடிந்துவிடும்.
பெண்களின் வெள்ளைப்படுதல்(LEUCORRHEA) நோய் குணமாக:
பெரிய கற்றாழை மடலை நீளவாக்கில் கீறிப் பிளந்து இதில் மூன்று தேக்கரண்டியளவு வெந்தயத்தைப் பதித்து மூடி, நூலால் கட்டி இரவு கூரைமேல் வைத்து எடுத்தால், மூன்றாவது நாளில் பிரித்துப் பார்க்கும் போது வெந்தயம் முளை கட்டியிருக்கும். இந்த வெந்தயத்தை மூன்று பாகமாக்கி மூன்று தினங்கள் சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்பட்ட வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.
தாம்பத்திய உறவு மேம்பட:
(Improve sexual)
சோற்றுக் கற்றாழை வேர்களை வெட்டி, சிறிய துண்டுகளாகச் செய்து சுத்தம் செய்து, இட்லிப் பானையில் பால்விட்டு வேர்களைத் தட்டில் வைத்துப் பால் ஆவியில் வேகவைத்து எடுத்து, நன்கு காயவைத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு, தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், தாம்பத்திய உறவு மேம்படும். தாம்பத்திய உறவுக்கு நிகரற்ற மருந்தாகும்.
கூந்தல் வளர(Hair grow):
சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வைத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.
கண்களில் அடிபட்டால் செய்ய வேண்டியது:
கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும். கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து, ஒரு துணியில் முடிச்சுக் கட்டி, தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செய்து எடுத்துக்கொண்டு, இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால், கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும்.
குளிர்ச்சி தரும் குளியலுக்கு:
(To cold baths)
மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க, சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை அரைக்கிலோ தயாரித்து, அதில் ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 நாட்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும். இதில் தேவையான வாசனையைக் கலந்து வைத்துக் கொண்டு, குளியலுக்குப் பயன்படுத்தலாம். வாசனை திரவியம் இதில் கலந்திருப்பதால் இது நல்ல இயற்கையான குளிர்ச்சி தரும் குளியல் எண்ணையாக பயன்படுத்த முடியும்.
அழகு சாதனப் பொருளில்(cosmetics) கற்றாழை முக்கியப் பொருளாகச் சேர்த்து தயாரிக்கப்படும் ஜெல்(gel) சருமத்தின் பாதுகாவலனாகச் செயல்படுகிறது. சருமத்தின் ஈரப்பசையைப் பாதுகாக்கிறது. சரும நோய்களுக்குச்(skin diseases) சிறந்த மருந்தாகிறது. கற்றாழை மடல் சாறு பயன்படுத்தப்படுவதால், சூரிய வெப்பமாக்குதல் குறைகிறது. எக்ஸ்ரே கதிர் வீச்சின் கடுமையைத் தடுத்து பாகாப்பு அளிக்கிறது. ஆக மருத்துவ உலகின் முடி சூடா ராணியாக கற்றாழை வலம் வருகிறது. கற்றாழையின் மகத்துவத்தைப் புரிந்துகொண்டோமானால் வாழ்நாளில் பெருமளவு நோய்கள் நம்மை அண்டாமல் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
தற்போது ஆங்கில மருத்துவ முறைகளே அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இந்த அவசரகால உலகத்தில் இத்தகைய மருத்துவமுறைகளைப் பின்பற்றுவது என்பது கடினம்தான். என்றாலும் இதில் கூறப்பட்டுள்ள மருத்துவமுறைகள் நம் முன்னோர்கள் காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. படித்ததில் பிடித்திருந்த கட்டுரையை பகிர்ந்திருக்கிறேன்.
ஆதாரம்: இந்த பதிவில் வரும் பெரும்பாலான மருத்துவ குறிப்புகள் இயற்கை மூலிகைகளும், நோய் தீர்க்கும் முறைகளும் என்ற நூலிலிருந்து எடுத்தாளப்பட்டது. நன்றி நண்பர்களே..!!!
thangampalani thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக