சம்பாதிக்க
வேண்டும் எனும் மன அழுத்தம் முதலில் நசுக்கித் தள்ளுவது நம் தூக்கத்தைத்தான்.
'தூக்கம் என்ன தூக்கம்... ஒரு தூக்க மாத்திரை போட்டா தானாக சரி வரப்போகுது' எனும்
வகையை சேர்ந்தவர்களா நீங்கள்? உங்களுக்கான விசயம் தான் இது... 'தூக்க மாத்திரைகளே
கேன்சருக்குக் காரணமாகி நிரந்தரத் தூக்கத்தில் கொண்டு போய் நிறுத்திவிடலாம்' என
அதிர வைக்கிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு!
Sleep
disaster'... அதாவது 'தூக்கமின்மை நோய்' என்பது பெரிய சப்ஜெக்ட். இந்த பிரச்னைக்கு
தீர்வு காண பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் ஸ்பெஷலிஸ்ட்கள் இருக்கிறார்கள்.
ஆனால், இவர்கள் அதை ஒரு நோயாகவே பார்ப்பதில்லை. ஏதோ தலைவலி, காய்ச்சல் போல பொதுவாக
வைத்தியரிடம் மாத்திரையைக் கேட்டு எழுதி வாங்கி விட்டு போகின்றனர். அதுதான்
ஆபத்தாகும்!' என்கிறார் சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர்
கிருத்திகா.
நிம்மதியாகத்
தூங்குவதற்காக போடும் மாத்திரைகள் முதலில் வாய் உலர்தல், தலை சுற்றல்,
வயிற்றுப்போக்கு என சின்னச்சின்ன பக்க விளைவுகளைத் தரலாம். இரண்டு நாட்களில் இவை
சரியாகிவிடும். ஆனால், மாத்திரைகளையும் அந்த இரண்டு நாட்களோடு நிறுத்த வேண்டும்.
அப்படியில்லாமல் மாதக்கணக்காக மாத்திரை பயன்படுத்தினால், நாளாக ஆக ரத்த அழுத்தம்
குறைந்து, மூச்சுத் திணறல் ஏற்பட்டு இதய பாதிப்பு வரை ஏற்படலாம்.
இன்னொரு சீரியஸான
பாதிப்பு, நாம் அந்த மாத்திரைகளுக்கு அடிமையாகி விடுவது. ஒரு மாத்திரையில்
ஆரம்பித்து, பிறகு இரண்டு, நான்கு என அதிகமாகி மாதக்கணக்காக டாக்டர் அட்வைஸ்
இல்லாமலேயே நினைத்த நேரத்தில் போட வைக்கும். அது பெரிய ஆபத்து. கேன்சர் எச்சரிக்கை'
இப்படி தொடர்ந்து மாத்திரை எடுத்துக்கொண்டு இருப்பவர்களுக்குத்தான்.
தூக்க மாத்திரைகள்
போடும் சிலரிடம் நடந்த ஆய்வில் முதல்கட்டமாக இப்படிச் சொல்லியிருந்தாலும், இதை
உறுதிப்படுத்த இன்னும் சில நாள் ஆகலாம். ஆனால், இன்று இருக்கும் இளைஞர்களுக்கு இந்த
எச்சரிக்கை நல்ல பலனைத் தரும். ஏனெனில், முன்பெல்லாம் வயதானவர்கள் தான் தூக்கம்
வராமல் தவித்து, மாத்திரை வேணும் என கேட்பார்கள். இப்போது முப்பது வயதுப் பெண்களே
'தூக்கம் வரல' என எங்களிடம் வாறாங்க!' என்று அதிர்ச்சியைக் கூட்டினார்
கிருத்திகா.
தூக்கம் வரவில்லை
என்னும் சாதாரண பிரச்னை கேன்சரில் கொண்டு போய் விடுமா?' - நித்ரா இன்ஸ்டிட்யூட்
ஆஃப் ஸ்லீப் சயின்ஸ் நிறுவனர் டாக்டர் ராமகிருஷ்ணனிடம் கேட்டோம். 'மருந்து,
மாத்திரைகள் எல்லாவற்றிலுமே சிறிய அளவில் பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்யும்.
இருமலுக்குக் குடிக்கிற சிரப்லயே தூக்கம் வர வைக்கிற மருந்து இருக்கத்தானே
செய்யுது? தூக்க மாத்திரைகளைப் பொறுத்த வரைக்கும் டாக்டர்களோட பிரிஸ்கிரிப்ஷன்
இல்லாமல் யாரும் வாங்கிட முடியாது. மெடிக்கல்ல நிச்சயமா டாக்டர் துண்டு இல்லாமல்
கொடுக்க மாட்டார்கள்.
ஒரே நேரத்தில்
அதிகமான தூக்க மாத்திரைகளை எடுப்பதற்கு அப்பால் அது உடலில் பாதிப்பை உண்டாக்குவது.
அதுகூட உயிரைப் பறிக்கும் அளவு போகாது என்பது தான் என் கருத்து. தூக்க
மாத்திரைகளால் கேன்சர் எனும் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவி்ல்லை. அதனால்
யாரும் பீதியடையத் தேவையில்லை.
அதே நேரம்
மாத்திரைகள் எடுக்கும் போது பக்க விளைவுகளுக்குப் பயப்படுபவர்கள், உடம்பிற்கு
தேவையான தூக்கம் கிடைக்காத போது ஏற்படும் விளைவுகளையும் பார்க்க வேண்டும். சரியான
தூக்கம் இல்லாவிடின், மன அழுத்தத்தோடு, கல்லீரல், சிறுநீரகம் கூட பாதிக்கப்படலாம்'
என்றவர், 'மாத்திரைகளைத் தாண்டி, சில சிகிச்சைகள், உடற்பயிற்சிகள் மூலமாவும்
தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபட முடியும்' என்கிற ஆறுதல் தகவலும்
தருகிறார்.
பொதுவாக மனிதனை
சிறிய அளவிலான மயக்க நிலைக்குக் கொண்டு போவதற்கான மருந்துகளே தூக்க மாத்திரைகளில்
இருக்கும். நரம்பு மண்டலத்தில் லேசான பாதிப்பை ஏற்படுத்தவல்ல அந்த மருந்துகள்...
கேன்சருக்குப் பாதை அமைத்துக் கொடுப்பதை மருத்துவ உலகம் அனுமதிக்காது என்று
நம்புவோம்!
ka,
.thedipaar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக