சிகரெட் மற்றும் புகையிலையினால் ஏற்படும் தீமைகள்

*சிகரெட் மற்றும் புகையிலையில் 4,000 வகையான வேதிப்பொருள்கள் உள்ளன
* இதில் 400 வகை உயிரை பறிக்கவல்லது.
* வாய் துர்நாற்றம் ஏற்படுதல்.
* பற்களில் காரை மற்றும் கரைகள் ஏற்படுதல்.
* பற்களில் எனாமல் சிதைவு ஏற்படுவதால் பற்களில் பற்சொத்தைகள் உண்டாகின்றன.
* சிகரெட் மற்றும் புகையிலை தொடர்ந்து பிடிப்பதினால் வாயினுள் ஈறு, உதடுகள் மற்றும் கன்னப்பகுதிகளில் வாய் புற்றுநோய் ஏற்படுகின்றன.
* வாய் புற்றுநோயினால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமானது.
* இவைகளினால் நுரையீரல் புற்றுநோய்களும் ஏற்படுகின்றன.
* வாய்புற்றுநோயினால் உயிர் இழப்போர் எண்ணிக்கை நமது மாநிலத்தில் அதிகம்.
THE BEST TIME TO QUIT SMOKING IS NOW
SMOKING IS SUICIDE QUIT TODAY
விளைவுகளை தவிர்க்க சில வழிகள்
* புகைபிடிக்க மற்றும் புகையிலை உண்ண நினைக்கும் போது தண்ணீர் குடிப்பது அல்லது பபுள்காம் மற்றும் கேரட் போன்ற பொருட்களை உண்பதினால் புகை பிடிக்கும் எண்ணத்தை மாற்றலாம்.
* நாம் செய்யும் வேலையை மிகவும் ஆர்வத்துடன் திறமையுடன் செய்யும்பொழுது புகை பிடிப்பதில் இருந்து நம் எண்ணங்களை மாற்றலாம்.
* புகைபிடிக்கும் உங்கள் நண்பர்களிடம் இருந்து விலகி இருக்கவும் ( புகை பிடிக்கும் நேரங்களில் மட்டும் )
* தகுந்த மருத்துவர்களிடம் காண்பித்து ஆலோசனையும் பெற்று இதனை தவிர்க்கலாம்.
பொதுமக்கள் நலன் கருதி வெளியிடுவோர்
இந்திய பல் மருத்துவர்கள் சங்கம்,
மதுரை கிளை.
தவிர்ப்போம் புகையிலை ! நீட்டிப்போம் ஆயுளை !!
இரண்டாம் நிலை புகைபிடிப்பவர்கள்
பொது இடங்களில் புகைபிடிப்பது
தடைசெய்யப்பட்டுள்ள காலம் இது. காலதாமதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றாலும்
மிகச்சரியான நடவடிக்கை இது. மாண்ட்ரீயல் பல்கலைக்கழக பேராசிரியரின் அண்மைக்கால
ஆய்வு முடிவுகள் புகைபிடிப்பவர்களுக்கு அருகில் உள்ள குழந்தைகள் புகையிலை
நச்சுப்புகையால் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை வெளிச்சத்திற்கு
கொண்டுவந்திருக்கின்றது.
கியூபெக்கில் 29 பள்ளிக்கூடங்களில் இருந்து 1,800 பிள்ளைகளை இந்த ஆய்வுக்கு உட்படுத்தினர். 10 முதல் 12 வயதிற்குட்பட்ட இந்த குழந்தைகள் வாழ்க்கையின் அனைத்து பிரிவிலிருந்தும் பொறுக்கி எடுத்து ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர்.
புகைபிடிக்காதவர்களுக்கு நிக்கோட்டின் நஞ்சினால் பாதிப்பு இல்லை என்கிற கருத்து இதுவரை நிலவி வந்தது. ஆனால் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட 5 சதவீத குழந்தைகளுக்கு புகைபிடிக்கும் பழக்கம் இல்லாமல் இருந்தாலும் அவர்கள் நிக்கோட்டின் நஞ்சினால் ஏற்படும் தீமைகளுக்கு ஆளாகியிருந்தனர். குழந்தைகள் செய்த தவறெல்லாம் புகைபிடிப்பவர்களின் அருகில் இருந்து சுவாசித்ததுதான். இது குழந்தைகளின் தவறா அல்லது பெற்றவர்களின் தவறா என்பதை உங்களின் சிந்தனைக்கே விட்டு விடுவோம்.
இந்தக்குழந்தைகளை இரண்டாம் நிலை புகைபிடிப்பவர்கள் என நாம் குறிப்பிடுவதில் தவறில்லை. மனச்சோர்வு, தூக்கமின்மை, நெஞ்சு எரிச்சல், கவலை, படபடப்பு, பசியின்மை ஆகிய கோளாறுகளால் இந்தக் குழந்தைகள் அவதிப்பட்டது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
வீடுகளிலும், கார்களிலும் குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு புகைபிடிப்பதால் புகைபிடிப்பவர்களுக்கு ஏற்படும் அதே பாதிப்புகள், இரண்டாம் நிலை புகைபிடிப்பவர்களுக்கும் கடத்தப்படுகிறது என்பதுதான் இன்றைய அறிவியல் செய்தி.
நன்றி-கீற்று.காம்
Read
more...

புகைப்பழக்கத்தை நிறுத்த
இன்று மாணவர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை
புகைப்பழக்கத்தின் பிடியில் சிக்கியுள்ளனர். இந்தியாவில் ஆண்டுக்கு 2 கோடிச்
சிறுவர்கள் புகைபிடிப்பதைப் பழகிவருகிறார்கள் என்கிறது புள்ளி விவரம். உலகளவில்
சுமார் 120கோடிக்கும் அதிகமான மக்கள் புகை பழக்கத்திற்கு உட்பட்டுள்ளனர். தினமும்
11,000 பேர் புகைப்பழக்கத்தால் மரணமடைகின்றனர். இவர்களில் 2200 பேர் (ஐந்தில்
ஒருவர்) இந்தியர்.
புகைபழக்கத்தால் வரும் பாதிப்புகள் ஒன்றல்ல! இரண்டல்ல! புகையிலையில் சுமார் 4000க்கும் மேலான ரசாயனப் பொருட்கள் உள்ளன. இவற்றில் கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் சையனைடு, நிக்கோடின், தார் போன்றவை பயங்கரக் கெடுதி நிறைந்தவை. ஹைட்ரஜன் சயனைடு ரத்தநாளங்களை தடிமனாக்குகிறது. கார்பன் மோனாக்சைடு தார் நுரையீரல் உட்பகுதி வரை ஊடுருவி புற்று நோயை உருவாக்குகிறது. மேலும் மார்ச்சளி, ஒவ்வாமை இருமல், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, இருதயநோய்கள், குடல்புண்கள், ஜீரண நோய்கள், நரம்பியல் நோய்கள் என எண்ணற்ற உடல்நலக்கேடுகள் ஏற்படுகின்றன. புகைப்பவர்கள் வெளிவிடும் புகையால் மனைவிமார்கள், குழந்தைகள், உறவினர்கள், பணியாளர்கள், இதர மனிதர்கள் போன்றவர்களையும் இந்நோய்கள் தாக்குகின்றன.
புகைப்பழக்கம் வெறும் கெட்டபழக்கம் என்றளவில் சுருக்கிவிடமுடியாது. இது மீளமுடியாத போதைப் பழக்கம். இதனை நிகோடின் போதைஅடிமைநோய் என்று மருத்துவ உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
புகைப்பழக்கத்தை நிறுத்த... முதலில் புகைப்பதால் வரும் உடல்நலப் பாதிப்புகளையும் வீண் செலவுகளையும் எண்ணிப்பாருங்கள். மீதி வாழ்க்கையை ஆரோக்கியமாக வாழ உறுதியான முடிவு எடுங்கள்.
புகையடிமைத்தனத்திலிருந்து மீளவும் புகையிலைப் பொருட்களால் புகைப்பழக்கத்தால் ஏற்படும் பலவிதப் பாதிப்புகளுக்கும் ஹோமியோபதி, மலர்மருத்துவம், திசுமருத்துவம், அக்குபங்சர் போன்ற மாற்று மருத்துவச் சிகிச்சைகள் மூலம் நல்ல நிவாரணமும், நலமும் பெறமுடியும். அருகிலுள்ள ஹோமியோபதி & மாற்றுமருத்துவ நிபுணர்களை தாமதமின்றி அணுகுங்கள்.
புகை பிடிப்பதை விடமுடியாது, டென்சனை குறைக்கும் என்பதெல்லாம் சும்மா கப்ஸா. நான் எனது புகை நட்பை விரோதியாக்கி இர்ண்டு வருடம் ஓடிவிட்டது. நம்மால் முடியும்.முயற்சியுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக