|
|
கொடுப்பது பெண்கள் தான். அவ்வாறு தங்களை அழகுப்படுத்த அவர்கள்
கெமிக்கல் கலந்த செயற்கை முறையில் தயாரிக்கும் பொருட்களை பயன்படுத்துகின்றனர்.
அதிலும் அதிகம் பயன்படுத்துவது நெயில் பாலிஷ் மற்றும் ஹேர் ஸ்ப்ரே தான். அவ்வாறு
அதிகம் பயன்படுத்துவதால் நீரிழிவு வரும் என்று தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அந்த ஆய்வில் பெண்களில் அதிகம் நெயில் பாலிஷ் மற்றும் ஹேர் ஸ்ப்ரே
பயன்படுத்துப்வர்களுக்கு அதிக அளவில் நீரிழிவு ஏற்படும் என்று கூறுகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள பிரிகாம் மகளிர் மருத்துவமனையில் உள்ள பாஸ்டன் என்பவர்
ப்தலேட்ஸ் (phthalates) கெமிக்கல் மற்றும் மெட்டபாலிக் நோய்களுக்கும் இடையே
மேற்கொண்ட ஆய்வில், அது தெரியவந்துள்ளது. அப்போது உடலில் குறைந்த அளவு அழகில்
ஆர்வம் காட்டி அழகுப் பொருட்கள் பயன்படுத்துபவர்களை விட அழகுக்காக அதிக அளவு
கெமிக்கல் கலந்த அழகுப் பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு இரண்டு மடங்கு அதிகமாக
நீரிழிவு நோய் ஏற்படுகிறது என்றும் நிரூபித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அவர்கள் பெண்களிடம், ப்தலேட்ஸ் மற்றும் இன்சுலின் குறைவுக்கும்
ஒரு இணைப்பு உள்ளது என்றும் கண்டுபிடித்துள்ளனர். அதில் ப்தலேட்ஸ் கலந்துள்ள அழகுப்
பொருட்களான நெயில் பாலிஷ், ஷாம்பு மற்றும் சோப்புகள் அதிகமாக பெண்கள் உபயோகிப்பதால்
அவர்களுக்கு, உடலில் சுரக்கும் ஹார்மோனின் சுரப்பியில் வித்தியாசமானது
பிரதிபலிக்கிறது.
அதற்காக அவர்கள் அமெரிக்காவில் 20 முதல் 80 வயது நிரம்பிய பெண்களை
பரிசோதித்தனர். அதில் அவர்களது சிறுநீரைப் பரிசோதித்ததில் 217 பேருக்கு நீரிழிவு
வந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
மேலும் பெண்களது உடலில் இரண்டு கெமிக்கல்கள் அதிகமாக உள்ளன. அது
மோனோ-ஐசோபியூடைல் ப்தலேட் மற்றும் மோனோ-பென்சைல் ப்தலேட். இந்த கெமிக்கல்கள்
சிறுநீரில் சாதாரணமாக குறைந்த அளவு அழகுப் பொருட்களை பயன்படுத்தியவர்களை விட இரு
மடங்கு அதிகமாக அதிக அளவு பயன்படுத்துபவர்களுக்கு நீரிழிவு ஏற்படுத்துகிறது என்றும்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆகவே பெண்கள் சிறுநீரை பரிசோதிப்பது போல இரத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும்
அடிக்கடி பரிசோதிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். மேலும் அதிக அளவு
மோனோ-n-பியூட்டைல் ப்தலேட் மற்றும் டை-2-எத்தில்ஹெக்சைல் ப்தலேட் இருந்தால் 70%
நீரிழிவு வரும் என்றும் ஏற்படும் என்றும் கூறுகிறார்.
.viyapu. thanks
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக